ஃபாசிஸம் என்றால் என்ன…..


காலையில், ” விநாச காலே – விபரீத புத்தி “…. என்கிற தலைப்பில்,
இந்த தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது.

அதற்கு பதிலாக, பல்வேறு கருத்துகளைத் தாங்கி, பல பின்னூட்டங்கள் வந்தன. இறுதியாக, நான் இந்த விஷயத்தை இயன்ற வரை தெளிவாக ஒரு பின்னூட்டத்தின் மூலம் விளக்க முயன்றேன்….

அந்த விளக்கம் பின்னூட்டத்தில் இருப்பதற்கு பதிலாக, தனியே ஒரு இடுகையாக வந்தால், அதிக நண்பர்களின் கவனத்திற்கு போகும் என்று
தோன்றியது.

எனவே, அந்த பின்னூட்டத்தில் கூறிய செய்திகளை இங்கே
தருகிறேன்.

—————————————————

சில விவரங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்….

1) இந்த சம்பவம் நடந்தபோது விமானம் பறந்து கொண்டிருக்கவில்லை.
தூத்துக்குடியை ஏற்கெனவே அடைந்து, நின்று, பயணிகள்
இறங்கி வெளியே போய்க்கொண்டிருந்தபோது நடந்தது. சில பயணிகள் ஏற்கெனவே வெளியேறி விட்டனர்.

2) அந்த பெண், தன் சீட்டை விட்டு நகரவே இல்லை. தபாஜக தலைவியைப் தனிப்பட்ட முறையில் திட்டவில்லை… பயமுறுத்தவில்லை. அவர் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. அவரைத்தொடவும் இல்லை.. அவரிடம் ஏதும் பேசவும் இல்லை.

3) தபாஜக அவரைக் கடந்து செல்லும்போது, பொதுவாக, “ஃபாசிச பாஜக அரசு ஒழிக” என்று கூறி இருக்கிறார். இது தபாஜக தலைவியை எப்படி பாதிக்கும்…? தபாஜக தலைவி தான் மத்திய பாஜக அரசா…?

4) கீழே இறங்கிச் சென்ற தபாஜக, இந்த பெண் வரும் வரையில் அங்கேயே காத்திருந்து, அவர் வந்தவுடன், அவரிடம் நீ எப்படிச் சொல்லலாம் என்று வாக்குவாதம் செய்திருக்கிறார்… பதிலுக்கு அந்தப்பெண் அப்படித்தான் சொல்வேன் என்று கூறி இருக்கிறார்…
இங்கே, பிரச்சினையை துவக்கியது யார்…?
இது குறித்த விவரமான வீடியோக்கள் தொலைக்காட்சிகளிலேயே
வெளிவந்தன… அவற்றை பார்த்தாலே விவரம் புரியும்.

5) விமானத்திற்குள் நடக்கும் எந்த சம்பவத்திற்கும்,
விமான கேப்டன் பைலட் தான் பொறுப்பு.
தவறாக எதாவது நடந்திருந்தால், அவர் தனது ஃப்ளைட்
ரிப்போர்ட்டில் கொடுத்திருக்க வேண்டும்…. அவர் எதையும் ரிப்போர்ட்
செய்யவில்லை…

6) நடந்த சம்பவம் விதிகளுக்கு முரணானது என்றால்,
விமான சிப்பந்திகளே முதலில் அந்தப் பெண்ணை
எச்சரிக்கை செய்திருப்பார்கள்…
அத்தகைய விபரீத சூழ்நிலை எதுவும் அங்கே இல்லை.
நடந்தது முக்கியத்துவம் ஏதும் இல்லாத ஒரு மிகச்சாதாரண சம்பவம்… தூத்துக்குடியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு தபாஜகவை கண்டதும் எல்லாவற்றிற்கும் இவர்கள் கட்சி தானே காரணம்
என்று மனக்குமுறல்…. just a ventilation –
அதை உரக்க வெளிப்படுத்தி இருக்கிறார்.

7) இந்த மாதிரி பல சம்பவங்கள் விமான பயணங்களில் நடக்கின்றன.
குடித்துவிட்டு, சக பயணிகளிடமும், விமான பணிப்பெண்களிடமும்
தவறாக நடந்துகொள்ளும் பயணிகள் கூட உண்டு. அத்தகையோரை, கடுமையாக எச்சரிப்பதும் உண்டு. அதற்கும் அடங்காதவர்களை, விமானம் தரையிறங்கியதும், விமான ஊழியர்களே, காவல் துறையிடம் ஒப்படைத்து விடுவதும் உண்டு.

சில சமயங்களில், விமானம் நின்ற பிறகு, லக்கேஜை எடுக்கும்போது,
சக பயணிகளுக்கிடையே கூட கடுமையான மோதல்களை நானே பார்த்திருக்கிறேன். விமான ஊழியர்கள் வந்து பிரித்து விடுவார்கள்.
இதற்கெல்லாம் police complaint கொடுத்தால், வேலைக்கு ஆகாது
என்று அவர்களுக்கே நடைமுறை அனுபவங்கள் உண்டு.

8) எனவே, தான் விமான ஊழியர்கள் இதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை…. ஆனால், தபாஜகவுக்கு ஈகோ பிரச்சினை. அவர்கள் ரிப்போர்ட் எதுவும் கொடுக்கவில்லை என்றதும், இப்போது பாஜக அந்த தனியார் விமான கம்பெனி மீதே DGCA -வுக்கு புகார் கொடுத்து அழுத்தம் கொடுத்திருக்கிறது…

9) இந்த சம்பவம், நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, இந்த
குற்றச்சாட்டுகள் எதுவும் நிற்காது….

10) ஆனால், அந்த பெண்ணுக்கு தவறு நிகழ்ந்ததை நீதிமன்ற விடுதலை சரி செய்து விட முடியாது.

11) அரசியலுக்கு வருபவர்கள் எல்லாரும் –
பொதுத்தொண்டு செய்யவா வருகிறார்கள்…?
பதவிக்காக வருபவர்கள் எத்தனை பேர்…?
புகழுக்காக வருபவர்கள் எத்தனை பேர்…?
பணத்திற்காக வருபவர்கள் எத்தனை பேர்..?
சுயலாபத்தை எதிர்பார்த்து அரசியலுக்கு வருபவர்கள் –
மக்கள் re-act செய்யும்போது பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

———————————————
இதை நண்பர் sharron மேலே தனது பின்னூட்டத்தில் மிகத்தெளிவாக
எடுத்துக் காட்டி இருக்கிறார் :-

In foreign countries when the politicians come to shopping centre, train stations,,,,,,,like the public places, every citizen has the right to question them or to yell at them to show their anger. Immediately the police will remove the person from there and the politician too will smile and go. That’s it. Politicians are human too. They are not Gods.
——————————————–

12) மத்திய அரசை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தால், அவர்கள்
கைது செய்யப்படுவார்கள்; சிறையில் தள்ளப்படுவார்கள் என்றால் –
அது ஃபாசிஸம் அல்லாமல் வேறு என்ன…?

13) நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. ஆனால், மத்திய அரசை பலமுறை விமரிசித்து இந்த வலைத்தளத்தில் நான் எழுதி இருக்கிறேன்…. அதற்காக – என்னை கைது செய்து சிறையில்
அடைத்தால் வாசக நண்பர்கள் அதனை ஏற்று, வரவேற்பீர்களா…?

14 இன்று நாம் அனுபவிப்பது, நம் முன்னோர்கள் அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரம்… எந்த விலை கொடுத்தாவது நாம் இந்த சுதந்திரத்தை காக்க வேண்டும்… அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அது கொண்டு செல்லப்பட வேண்டும்… அது நமது உரிமை… அது நமது பொறுப்பு.
அதை உணர்ந்து, ஆதரித்து எழுதிய நண்பர்களுக்கு என் நன்றியும், வாழ்த்துகளும்.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

————————————————————

பின்னுரை –

உண்மையில் இது ஒரு பிரச்சினையே இல்லை…
இப்படி out of proportion பெரியதானதற்கு காரணமே-

திருமதி தமிழிசையின் EGO தான் ….

ஒரு பக்குவமுள்ள தலைவராக இருந்திருந்தால்,
அந்த பெண் சொன்னதை IGNORE செய்து விட்டு ஒரு புன்னகையுடன் கடந்து சென்றிருப்பார். அப்படிச் செய்யாதது கட்சிக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் என்பதை பாஜகவினர் கொஞ்ச காலத்திற்கு பின்னர் உணர்வர்.

.
—————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

22 Responses to ஃபாசிஸம் என்றால் என்ன…..

 1. Kasi சொல்கிறார்:

  Hi,

  The below blog has different story for the same incident

  va. mu. murali –

  This blog says sophia has called out / commented during the flight (when plane is in air) as she sat next to (or near) tamilisai.
  How were you sure that the incident did not happen at air?
  Also, how much you were confident that sophia did not call out continuously?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   kasi,

   நீங்கள் இந்த உலகத்தின் எந்த பகுதியில் இருக்கிறீர்கள்…? தீவிர பாஜக ஆதரவாளரான வா.முரளியைத் தவிர, வேறு எந்த பக்கமும் பார்க்கவே மாட்டீர்களோ…?

   அல்லது அவர் சொல்லும் தீவிர பாஜக ஆதரவு கருத்துகள் மட்டும் தான் உங்களுக்கு பார்க்கப் பிடிக்கிறதா…?

   அவரது கட்டுரையில் அவர் சொல்லி இருக்கும் பல விஷயங்கள் சுயநல நோக்குடன், அவரது கட்சிக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள்..

   //How were you sure that the incident did not happen at air? Also, how much you were confident that sophia did not call out continuously?//

   – என்று என்னை வினவும் முன்னர், நீங்கள் எந்தெந்த நாளிதழ்களை படித்தீர்கள்…? எந்தெந்த தொலைக்காட்சி செய்திகளை பார்த்தீர்கள் என்று சொல்ல முடியுமா…? ( பாஜக தீவிரவாதி வா.முரளியைத் தவிர்த்து…)..
   வா.முரளி சொல்கிறபடி நடந்தது என்று எந்த ஊடகமாவது சொல்கிறதா..?

   நீங்கள் எத்தனை நாட்களாக இந்த விமரிசனம் தளத்தை படித்து வருகிறீர்கள்…? என் நிலையை அறியாதவரா நீங்கள்…?

   இதற்கு முன்னர், இந்த வலைத்தளத்தில் ஒருமுறை கூட பின்னூட்டம் எழுதாத நீங்கள் இன்று திடீரென்று இந்த ஒரு topic -க்காக வந்தது எப்படி…? தற்செயலா அல்லது தீவிர பாஜக ஆதரவு நிலையா…. ?

   நான் எந்த கட்சியையும் சேராதவன்…
   எவரிடமும் எதையும் எதிர்பார்க்கும் அவசியம் இல்லை…
   எந்த கட்சிக்கும், எந்த தலைவருக்கும் ஜால்ரா போட வேண்டிய
   அவசியம் எனக்கு இல்லை.
   நான் சுதந்திரமானவன்… என் மனசாட்சி சொல்வதை எழுதுபவன்.

   நீங்களும் பாஜக அபிமானி தான் என்றால் வெளிப்படையாக அதைச்சொல்லி விட்டு போங்கள்… ஏன் இந்த போர்வை….?

   இதுவரை எந்த அரசியல் கட்டுரையும் எழுதாத – கணிணி சம்பந்தப்பட்ட தொழில் நுணுக்கங்களை மட்டுமே எழுதி வரும் ‘சைபர் சிம்மன்’ எழுதியிருக்கும் இந்த கட்டுரையை நீங்கள் பார்த்தீர்களா…? அல்லது வா.முரளியைத்தவிர வேறு எதையும் வாசிக்கும் வழக்கம் இல்லையா…?

   ——————————————————–
   ( http://cybersimman.com/2018/09/04/sofia/ )

   ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு குரலை பதிவு செய்வதற்கான உரிமை தான் அது. இந்த உரிமை காக்கப்பட வேண்டியது மட்டும் அல்ல, கொண்டாடப்பட வேண்டியது என்பதையும் சமூக ஊடக விவாதங்கள் உணர்த்துகின்றன. நாடு முழுவதும் எதிர் குரல் நசுக்கப்படுவதாக கருத்து வலுப்பெற்று வரும் நிலையில் ஒரு சாமானிய மாணவி எழுப்பிய குரல், இங்கு பேசுபொருளாகி இருக்கிறது.

   பாஜக மாநிலை தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சொல்வது போல, மாணவி சோபியா திட்டமிட்டு இதைச்செய்தாரா அல்லது உணர்வெழுச்சியில் செய்தாரா? என்று தெரியவில்லை. அந்த விவாதமும் தேவையும் இல்லை. ஏனெனில் ஜனநாயக நாட்டில் ஒழிக கோஷம் போட எவருக்கும் உரிமை இருக்கிறது. இது பாஜகவுக்கு எதிராக எழுப்ப பட்டதால் ஆதரிக்க வேண்டும் என்றில்லை, யாரை எதிர்த்து, யார் கோஷம் போட்டிருந்தாலும் அதற்காக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அது தவறானது, அடக்குமுறைக்கு சமமானது என்பதை உரத்துச்சொல்வது சிவில் சமூகத்தின் கடமை. ஆறுதல் அளிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தமிழ் சமூகம் அதை செய்திருக்கிறது.   இந்த விவாதத்தில் சோபியாவின் மதம், சமூகம் எல்லாவற்றையும் இழுத்து கருத்து தெரிவிக்கும் பதிவுகளும் வெளியானாலும், பொதுவாக கருத்து தெரிவிக்கும், அதிலும் முக்கியமாக எதிர்ப்பு குரலை பதிவு செய்யும் உரிமையை பலரும் வலியுறுத்துவதை பார்க்க முடிகிறது. இந்தியா பெருமிதம் கொள்ளும் ஜனநாயக பண்பிற்கு இது முக்கியமானது.

   அதனால் தான் சோபியா கொண்டாடப்பட வேண்டியவராக இருக்கிறார். வலைப்பதிவாளரான சரவண கார்த்திகேயன் இதை அழகாக பதிவு செய்திருக்கிறார். சோபியா காட்டிய துணிச்சல் முக்கியமானது என அவர் கூறியுள்ளார். மேலும் தன் நாட்டைப்பற்றி கவலை கொண்டதால் அவர் ஒரு உதாரண ஆளுமை என்றும் பாராட்டியிருக்கிறார். : http://www.writercsk.com/2018/09/blog-post_4.html

   சமூக ஊடகம் மூலம் கவனத்தை ஈர்த்த ஒரு சாமானிய மாணவிக்கு அவர் முன்னிறுத்தும் துணிச்சல் மற்றும் கருத்துரிமை மிக்க செயலுக்காக ஒரு வலைப்பதிவாளர் மகுடம் சூட்டியிருப்பதும் பொருத்தமானதே. வாழ்க இணைய ஜனநாயகம்!

   ————————————————————————

   உங்களைப்போன்ற அதி தீவிர பாஜக ஆதரவாளர்களை convince பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை.

   இருந்தாலும், முதல் தடவையாக நீங்கள் இங்கே கேள்வி எழுப்பி இருப்பதால் இவ்வளவு விளக்கமாக பதில் எழுதுகிறேன்..

   எங்கிருந்தாலும் வாழ்க…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    காசி,

    ஒருவேளை நீங்கள் வா.முரளிக்கு பினாமியோ அல்லது அவரது வலைத்தளத்திற்கு இங்கு விளம்பரம்
    கொடுக்கும் முயற்சி இதுவோ என்று ஒரு சந்தேகம் ஏற்படுகிறது…. நீங்கள் இந்த பின்னூட்டத்தை எழுதிய பிறகு
    நடந்துள்ள சில சம்பவங்கள் அதை உறுதி செய்கின்றன.

    எனவே, நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க்கை இங்கிருந்து விலக்குகிறேன்…

    -காவிரிமைந்தன்

 2. Pingback: ஃபாசிஸம் என்றால் என்ன….. – TamilBlogs

 3. tamilmani சொல்கிறார்:

  Had the same thing happened to any other political leader in Tamilnadu especially any leader from
  DMK , the slogan shouter would have been roughed up and would have been sent to hospital. Raising a slogan against a central ruling party in the midst of its state president , that too in an
  aircraft needs guts. I think the girl has enoguh background to face the consequences of her action.
  As rightly pointed out by the Hon.Judge the girl’s parents should have stopped the girl doing
  this act. An aplogy from the girl would have solved the matter, but the girl is adamant and stood to her ground.

 4. venkat சொல்கிறார்:

  KM sir knows everything. He has intelligence report coming from everywhere!
  so don’t question him.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   வருக வெங்கட்,

   அதெப்படி கரெக்டா ஒங்க ஆசாமிங்களைப்பத்தி எழுதும்போது மட்டும் டக்கு’ன்னு வந்து குதிச்சுடறீங்க… !!!

   என்னை பிடிக்காட்டாலும், விமரிசனத்தை தொடர்ந்து படிச்சுட்டு வர்றீங்க போலேருக்கு.. அதுக்காகவாவது நான் நன்றி சொல்லியாகணும். உங்கள் கருத்துகளுக்கும், செயல்களுக்கும் மிக்க நன்றி வெங்கட்… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

  ஒரு விமானத்தில் பயணம் செய்யும் பொழுது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அந்த படித்த பெண் நிச்சயம் அறிந்திருப்பர். நிச்சயம் அதன் பின் விளைவுகளையும் சந்திக்கும் தைரியமும் அந்த படித்த பெண்ணிற்கும் , அவளை அருகில் இருந்த பொது அதை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கும் நிச்சயம் இருக்கும்.
  வீணாக அதை ஏன் நாம் பெரிதாக்க வேண்டும்.
  பெண்ணின் தந்தையின் பெட்டியை டிவி ல் பார்க்கும் பொழுது அவர் தன பெண்ணின் செயலை பற்றி பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை.ஒருவேளை அவர் அதை செய்திருந்தால் கூட நிச்சயம் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கலாம்.

  EGO நிச்சயம் வலியது தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .

   .
   ஆமாமாம்… நீங்கள் சொல்வது போல்….
   திருமதி தமிழிசையின் –
   // EGO நிச்சயம் வலியது தான் // 🙂 🙂

   .

 6. Selvarajan சொல்கிறார்:

  இன்று ஆசிரியர் தினம் …!
  வீட்டில் அன்பு சூழலில் வளர்ந்த பிள்ளை , வீட்டை விட்டு புது இடமான பள்ளிக்கு முதன் முதலில் வீட்டை விட்டு வரும் குழந்தைக்கு பயம் என்பது இல்லாமல் இருந்தால் மட்டுமே அந்த குழந்தை தொடர்ந்து வர விரும்பும் என்ற முக்கியத்துவத்தை அறிந்திருந்தவர்கள் ஆசிரியர்கள் ..!

  ஆரம்பக்கல்வியிலிருந்து உயர்நிலைக்கல்வி பின் கல்லூரியில் கல்வி என்று ஒவ்வாெரு படியாக நாம் அடி எடுத்து வைக்கும் பாேதெல்லாம் உள் மனதில் எழுகின்ற பயங்களை பாேக்கி நமக்கு கற்பித்த ஆசிரியர்களை வணங்குவாேம் …!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி செல்வராஜன்.

   இன்று செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் பிறந்த நாளும் கூட.
   இரண்டையும் சேர்த்தே வணங்குவோம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

  இதை போன்றே 2 மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி youtube ல் தமிழிசை அவர்களை மிக மிக ஆபாசமாக பேசி, அவரது பிறப்பை பற்றியும் , தாய் தந்தையை பற்றியும் அருவருக்க தக்க வகையில் பேசி ஒரு video வை பதிவேற்றிருந்தார். அவரது அந்த பதிவிற்கு நிறைய பேர் பாராட்டு தெரிவித்து , ஆதரித்து , உற்சாக மூட்டி கொண்டு இருந்தார்கள். அனால் கடைசியில் அந்த பதிவின் மூலம் அவர் காவல் துரையினரால் கைது செய்யப்பட்டார்.
  உற்சாகமூட்டுபவர்களை நம்பி அரசியல் வசதிகளுடன் பல பரிட்சையில் இறங்குவது மடத்தனம்.
  கடையில் பாதிக்க படுவது நாமாக மட்டுமே இருப்போம்.
  இந்த பெண்ணிற்கும் நிறையே பேர் உற்சாக மூடுவதை காண்கிறோம். அவர்களை நம்பி மேலும் இந்த பெண் இந்த செயல்களில் இறங்கி பாதிக்க பட கூடாது என்று வேண்டி கொள்வதை தவிர வேறு வலி இல்லை.

  • Mani சொல்கிறார்:

   மொதல்ல அவ்வளவு மோசமா அவரைப்பற்றி comments கொடுத்துட்டு –
   எவ்வளவு இரக்க குணம் :ஆனாலும் அந்த பெண்ணுக்காக ரொம்ப கவலைப்படறீங்க சார் நீங்க.

  • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

   இது ஒரு விதமான மிரட்டல் தொணியில் இருக்கிறது

   • indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

    இதில் என்ன மிரட்டல் தொனியை தாங்கள் கண்டுணர்ந்தீர்கள்.நமக்கு தைரியம் இருக்கும் பட்சத்தில் நாமே குறிப்பிட்ட அரசியல் வாதியை பற்றி திட்டி video வை வெளியிடலாம். அனால் நாம் அதை செய்யும் தைரியம் இன்றி, அடுத்தவர்களை உசுப்பேற்றி, அவர்களை பலிக்கடாவாக முயல்கிறோம். இதனால் சம்பந்தப்பட்டவர் பாதிக்க படும்பொழுது , முன்பு உற்சாகமூட்டிய அதே நாம் அவருக்கு உதவி செய்ய முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.
    நம் வீட்டு பெண்கள் இவ்வாறு பொது வெளியில் video வெளியிடும் அனுமதியை தாங்கள் தருவீர்களா?
    அடுத்த வீட்டு பெண் என்பதால் மட்டுமே அவருக்கு நமது ஆதரவை தருகிறோம். இதுவே நமது வீட்டு பெண்கள் இவாறு பொது வெளியில் நடந்து கொள்ளும் பொழுது , நாம் அவர்களுக்கு ஆதரவு தருவோமா?

    • Mani சொல்கிறார்:

     நீங்கள் செய்வது அப்பட்டமான மிரட்டலே தான்.
     ஆதரித்து எழுதாதே; மாட்டிக்கொள்வாய் என்று எழுதுபவர்களையும்
     ஆதரித்து பின்னூட்டம் போடுபவர்களையும் மிரட்டுகிறீர்கள்.
     அந்த பெண்ணை விமானத்தில் கோஷம் போடச்சொல்லி இங்கே யார்
     சொல்லிக் கொடுத்தார்கள் ? அவராகத்தான் முடிவெடுத்தார். அவ்வராகத்தான் செயல்புரிந்தார். அவர் துணிச்சலாக ஒரு செயலைப் புரிந்த பிறகு, அவரை பல இன்னல்கள் தொடர்கின்றன. அந்தசமயத்தில்,
     சோர்ந்து விடாதே. உனக்குத் துணையாக நிறைய பேர் இருக்கிறோம் என்று
     பலர் சொல்ல முன்வருகிறார்கள்.
     அந்த பெண் ஃபாசிஸ்ட் பாஜக என்று சொல்லி விட்ட்டாரேயென்று தான்
     உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம். அதே பெண் ஊழல் திமுக அல்லது அதிமுக ஒழிக என்று கோஷம் போட்டிருந்தால், மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு நீங்களும் பத்தி பத்தியாக ஆதரித்து எழுதி இருபீர்கள்.
     உங்கள் எழுத்துக்கள் சொல்கின்றனவே உங்களிடம் மறைந்திருக்கும் எண்ணங்களை.

    • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

     indian_thenn__tamilian@yahoo.com சரி தான் எனக்கு தான் தைரியமில்லை என்னால் அதிகார அமைப்பை கேள்வி கேட்க முடியவில்லை ஆனாலும் உள்ளுக்குள் ஒரு நமைச்சல் இருந்துகொண்டு தான் இருந்தாலும் வேடிக்கை பார்க்கிறேன் என்றே வைத்துக்கொள்வோம், நான் இப்படி இருப்பதற்காக நேர்மறையான விமர்சணத்தை பெண்னொருவர் வைக்கும் போது குறைந்த பட்சம் ஒரு மோரல் சப்போர்ட் கூடவா செய்யக்கூடாது, அந்த பெண் படித்தவர் அவர் மனதிற்கு சரியென்று பட்டதை அவர் பேசுவதற்காக சட்டம் அனுமதி தந்திருக்கிறது அது ஏற்கனவே 1995 வழக்கில் நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

     இது கிட்டத்தட்ட சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை பறிப்பதற்கு சமமாம இருக்கிறது.

 8. Mercy சொல்கிறார்:

  KM sir this girl Sophia studied a lot. She was in Germany and completed her masters degree there and then moved to Canada. There she finished another masters degree and now doing/ finished PhD. She was out of country for many years. I am not sure whether she has Canadian citizenship or not.

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  indian_thenn__tamilian,

  வருந்துகிறேன்… உள்ளத்தில் அசிங்கம் பிடித்த மனிதர் நீங்கள்… நீங்கள் வைத்துக்கொண்டுள்ள பெயருக்கும், உங்கள் செயலுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா…?

  உங்களை இந்த வலைத்தளத்தில் பின்னூட்டமிட அனுமதித்ததே தவறு… அந்த வீடியோவை எந்த தைரியத்தில் இங்கு வெளியிட்டீர்…? அத்தகைய வீடியோக்களை வெளியிடும் தளமா இது…? நான் அதை இங்கு அனுமதிப்பேன் என்று எப்படி நினைத்தீர்..? உங்கள் மட்டமான, கேவலமான – ரசனையை உங்களோடே வைத்துக் கொள்ளுங்கள்….

  நண்பர் மணி’க்கு பதில் சொல்கிற சாக்கில், அந்த அசிங்கமான வீடியோவை நீங்கள் எப்படி இங்கே வெளியிடலாம்…? உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது…?

  உங்கள் வீடியோ, நான் பார்க்கும் வரை – சில மணி நேரம் இந்த தளத்தில் இருந்ததே எனக்கு அவமானம்….
  உங்கள் பின்னூட்டத்தையும், வீடியோவையும் விலக்குகிறேன்.
  இனி இந்தப்பக்கம் தலைகாட்ட வேண்டாம்.

  .
  -காவிரிமைந்தன்

 10. Sanmath AK சொல்கிறார்:

  To all who supports BJP……

  When BJP’s Indian President and the Prime Minister of the country can utter the term “Congress-free” India, why not any other citizen of the country say “BJP down down”……

  Suppression should be suppressed by such sound voices……

 11. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Hope all of us would have seen the picture ‘Fareinheat 9/11’. When the picture was released, the American President was in power and he enjoyed it too.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.