…
…

..
இந்திய சினிமாக்கள் முதலில் பேசாப்படங்களாக (ஊமைப் படங்கள்)
இருந்தன… ஒளியையும், ஒலியையும் ஃபிலிம் சுருளில் இணைக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படாத காலம் அது.
பின்னர் பேசும் படங்கள் வந்தபோது, தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை அவை பாடும் படங்களாகவே இருந்தன…
ஆம்…படத்துக்கு படம் போட்டி போட்டுக்கொண்டு 30 பாடல்கள், 40 பாடல்கள் என்று அதிகரித்துக் கொண்டே வந்தன… ஒரு சமயம் 53 இனிய பாடல்கள் நிறைந்த படம் என்று ஒரு தமிழ்ப்பட விளம்பரத்தையே பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது.
ஒளியையும், ஒலியையும் தனித்தனியே பதிவு செய்யும் தொழில் நுணுக்கம் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. நல்ல குரல்வளம் உடைய, பாடிக்கொண்டே நடிக்கத் தெரிந்தவர்கள் தான், தமிழ் சினிமாக்களில் இடம் பிடிக்க முடிந்தது. தோற்றம், நடிப்பு – எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
பின்னர், ஒளியையும், ஒலியையும் தனித்தனியே பதிவு செய்யும் தொழில் நுட்பம் வந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக பாடலுக்கான தேவைகள் குறைந்தன… மக்களின் ரசனைகள் மாறின… நடிகர்களுக்கு பிறர் பின்னணி குரல் கொடுப்பதை/ பாடுவதை ஏற்றுக் கொள்ளத் துவங்கினார்கள். ஆனால், அப்போதுகூட, நடிகர்களின் குரலுடன் ஒத்துப்போகக்கூடியவர்கள் பின்னணியில் பாடினால் மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள். எனவே, இந்த நடிகருக்கு – இந்த பின்னணி பாடகர் என்று தேர்ந்தெடுக்கத் துவங்கினார்கள்…..
அப்போது தான் ஏ.எம்.ராஜா- ஜெமினி கணேசனுக்கென்றே பிறந்தவர் போல், கண்டு பிடிக்கப்பட்டார். அவர் பாடினால், ஜெமினி கணேசனே பாடுவது போல் தோன்றும். ஜெமினிக்காக அவர் பாடிய பாடல்கள் அத்தனையும் ஹிட் ஆகத் துவங்கின….(பின்னால் பி.பி.ஸ்ரீநிவாசும் இதில் சேர்ந்து கொண்டார்…)
இதில் விதிவிலக்காக இருந்தவர் டி.எம்.சௌந்திரராஜன் மட்டும் தான்.
எம்.ஜி.ஆர், சிவாஜி – இரண்டு டாப் ஹீரோக்களுக்கும் அவர் குரல்
அற்புதமாக பொருந்தியது.
முதலில் பின்னணி பாடல்களில் மட்டும் ஈடுபாடு காட்டி வந்த ஏ.எம்.ராஜா, பின்னர் – தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்தார். ஸ்ரீதரின் கல்யாண பரிசு தான் அவர் இசையமைத்த முதல் படம் என்று நினைக்கிறேன்…
இன்றைய என் விருப்பத்தில், ஏ.எம்.ராஜா – பாடிய மற்றும் இசையமைத்த – எனக்கு மிகவும் பிடித்த சில தமிழ்ப்பட பாடல்கள் கீழே…
லிஸ்ட் கொஞ்சம் (..!) பெரியது தான்…அனைத்தையும் பார்க்க நேரம்
கிடைக்காதவர்கள் – தவணை முறையில் பாருங்கள்… !!!
—————————
ஏ.எம்.ராஜா இசையமைத்த படம் -ஆடிப்பெருக்கு….
தென்றல் உறங்கிய போதும் – பெற்ற மகனை விற்ற அன்னை-
கீழேயுள்ள பாடலை ரசிக்க வேண்டுமென்றால்
இதையடுத்துள்ள பாடலையும் கூடவே கேட்க வேண்டும் –
சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது
மயக்கும் மாலைப்பொழுதே -குலேபகாவலி
நிலவும் மலரும் பாடுது –
பார்த்திபன் கனவு –
ஏ.எம்.ராஜா இசையமைத்த படம் – கல்யாண பரிசு
வாடிக்கை மறந்ததும் ஏனோ?
மீண்ட சொர்க்கம்- காலையும் நீயே
மீண்ட சொர்க்கம் – துயிலாத பெண்ணொன்று
தெரிந்து கொள்ளணும் பெண்ணே -மிஸ்ஸியம்மா
ராஜா-ராணி – திரை போட்டு நாமே
.
————————————————————————————————————–



பிங்குபாக்: என் விருப்பம் – 20 – மெலடிக்கென்றே பிறந்த ராஜா….. – TamilBlogs
A.M. Raja’s songs were the most melodious. For instance, take the movie ‘Then Nilavu’ – the beats that start in the song ‘Paattu Padava’ were so enchanting and pleasing that one gets into a trancelike. It is sad that Raja passed away at a young age. He was indeed the King of Melody.
*that one gets into trance-like mood.
KM, your selection of songs were absolutely marvelous! Every song is a gem. Gemini and Vijayanthimala look beautiful in Parthiban kanavu!!
Thank you Mr.Chandramouli.
-with all best wishes,
Kavirimainthan
தலைப்பை பார்த்தவுடன் எங்கே இளையராஜா பற்றி எழுதிவிடுவீர்களோ என்று நினைத்தேன். A.M. ராஜாவின் அத்தனை பாடல்களும் தேன் !
இசைஞானிப் பற்றிய பதிவென்று ஓடி வந்தேன்.
AM ராஜா அவர்களும் எனக்குப்பிடித்த இடையமைப்பாளர் மற்றும் பாடகரே!