புடின்-ஜி…. மோடிஜி … ஒரு ஃபிட்னஸ் சாலஞ்ச்…!!!


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், 65 வயதிலும், உடல் ஃபிட்னஸ் குறித்து மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்பவர்…

அவ்வப்போது அவர் பங்குகொள்ளும் பலவிதமான ஃபிட்னஸ் விளையாட்டுகள் குறித்த வீடியோக்கள் வெளியாவதுண்டு.

இப்போது, லேட்டஸ்டாக, புடின், தனது அலுவலக வேலைகளை
முடித்துக்கொண்டு, தனது கார் நிற்கும் இடத்திற்கு நடந்து செல்வதை
(அதுவே அரை கிலோமீட்டர் தூரம் இருக்கும்போலிருக்கிறது…! )
ஒரு வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்…

ஏகப்பட்ட வளைவுகள், திருப்பங்களுடன் கூடிய, ஆளே இல்லாத அந்த பெரிய்ய்ய்ய்ய மாளிகையில் அவர் தன்னந்தனியே நடந்து செல்வது
மிக வித்தியாசமாக இருக்கிறது… quite interesting…!!!

ஆமாம் ….நமது பிரதமர் யோகா எக்சர்சைஸ் பண்ணுவதை எல்லாம்
வீடியோவாக எடுத்து வெளியிட்டார்களே…

அவர், மந்திரிகள் படை கூட சூழாமல்,
தனியே, தன்னந்தனியே நடந்து செல்லும் காட்சி எதாவது இதுவரை
வெளிவந்திருக்கிறதா…? ரஷ்ய ஜனாதிபதி செய்வதை நம் பிரதமரால்
செய்ய முடியாதா என்ன…?

இரண்டு தினுசு காட்சிகளை நினைத்துப் பார்க்கலாம்…

காட்சி ஒன்று – விளாடிமிர் புடின், நமது தர்மேந்திர பிரதான்,
அனந்தகுமார் போன்ற மந்திரிகள் கூட்டத்துடன், மோடிஜியைப்போல் நடந்து வரும் காட்சி….!!!

காட்சி இரண்டு – மோடிஜி, புடின் அவர்களைப்போல் அவ்வளவு
பெரிய மாளிகையில், அரை கிலோமீட்டர் தன்னந்தனியே
நடந்து வருவது…!!!

quite interesting to imagine … இல்லையா…:-) 🙂

கீழே, புடின்-ஜி நடக்கும் காட்சி….!!!

.
————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to புடின்-ஜி…. மோடிஜி … ஒரு ஃபிட்னஸ் சாலஞ்ச்…!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நான் இதை ஏற்கனவே பார்த்தேன். கொஞ்சம் அன்யூஷுவல் என்று தோன்றியது.

    ஒவ்வொரு காரிடாரில் முடிவிலும் ஒரு செக்யூரிட்டி இருந்தாலும், இது இமேஜ் பில்டப்க்குக்காக செய்தமாதிரி தோன்றியது.

    எத்தனையோ அறைகள் இருக்கின்றன. அதிலிருந்து யாருமே வரவில்லை, இருப்பதுபோலும் தெரியவில்லை. ஹோட்டர் காரிடார் மாதிரி இருக்கு.

    ரொம்ப நம்பிக்கையான காணொளிபோல் தெரியலை. எத்தனையோ திருப்பங்கள், திறந்த மண்டபம் போன்று (ரிசப்ஷன் ஏரியா, இவர் மேலிருந்து படியில் இறங்கிவருகிறார்) – எங்கேயும் பாதுகாப்புக்கான போலீசார் இல்லை. கொஞ்சம் நம்பமுடியாதுதான். இல்லை, இதை எடுப்பதற்காக ஒரு விடுமுறை நாளில் கடுமையான ஸ்வீப்பிங்குக்குப் பிறகு எடுத்ததாக இருக்கும் (பில்டப்புக்காக எடுத்திருந்தால்)

  2. பிங்குபாக்: புடின்-ஜி…. மோடிஜி … ஒரு ஃபிட்னஸ் சாலஞ்ச்…!!! – TamilBlogs

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    எவ்ளோ……..பெரிய மாளிகை…..!!!!!

    கடைசியில்……???

    ஆறடியோ இல்ல பத்தடியோ.

    வயிற்றெரிச்சல்ல சொல்லல உண்மைய சொன்னேன்.

    காப்பி ஒன்னு கூடிய சீக்கிரம் வரும். எதிர் பார்க்கலாம். அத விட வேற வேல….!?

  4. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    இது கிரெம்லின் செனட் . ரஷ்ய தலைவர் தாங்கும் மாளிகை .
    அங்கேயே அவர் அலுவலகமும் உண்டு .
    தன மாளிகையில் இருந்து பதவி ஏற்கச் செல்கிறார் .
    அதை RT (ரஷ்யன் டி வி) வீடியோ எடுத்து உள்ளார்கள் .

    Stayin’ alive என்ற BG பாட்டு யார் போட்டது ?
    ரஷ்யர்கள் BG கேட்கிறார்களா என்ன ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.