மெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – !!!


எப்பேற்பட்ட realistic -( நிதரிசனமான ) தலைமை
கிடைத்திருக்கிறது இந்த நாட்டிற்கு….!!!

“சாப்பிட ரொட்டி இல்லை” என்று தெருவுக்கு வந்து
போராடிய ஃப்ரெஞ்சு மக்களிடம்
” ரொட்டி இல்லையென்றல் ‘கேக்’ சாப்பிட
வேண்டியது தானே ” என்று கேட்டாளே ஒரு மகாராணி….
அதை நினைவுறுத்தவில்லை இந்த காட்சி…?

பத்து வருடம் கழித்து, பத்து பேருக்கு “கேக்”
கிடைக்கும் என்கிறார்கள் – சரி…. “மகிழ்ச்சி”…

ஆனால், அதையே சொல்லிக்கொண்டு,
இன்று அகோரப் பசியால் தவித்துக் கொண்டிருக்கும்
லட்சக்கணக்கானவர்களின் அவசரத் தீர்வுக்கு
“ரொட்டி” கூட கிடையாது என்றால் எப்படி…?

( டெல்லிக்கு மிக அருகே – உத்திர பிரதேச எல்லையில்…
உள்ள “காஜியாபாத்” ஸ்டேஷனையொட்டியுள்ள
“நோலி” ரெயில் நிலைத்தில் எடுக்கப்பட்டு,
இன்று வெளியாகி இருக்கிறது இந்த வயிற்றெரிச்சல் புகைப்படம்…!!! )

இதைப்பார்க்கும்போது சட்டென்று ஒரு சந்தேகம் வந்து விடுகிறது…
நாம் இருப்பது ஒருவேளை ஆப்பிரிக்க கண்டத்திலோ என்று…

Jpeg

.
———————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – !!!

 1. Pingback: மெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – !!! – TamilBlogs

 2. அறிவழகு சொல்கிறார்:

  சார் இதற்கெல்லாம் காங்கிரஸ் தான் காரணம்.

 3. Mani சொல்கிறார்:

  எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டிடுங்க !

 4. புதியவன் சொல்கிறார்:

  இதில் வயிற்றெரிச்சலுக்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை கா.மை சார். வட நாட்டில் சட்டத்தை மதிக்காமல், டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வது பல காலங்களாக இருந்துவருகிறது. அதற்கு வெறும் வறுமை என்பதைக் காரணமாகச் சொல்லமுடியாது. அந்தக் காசைச் சேர்த்து குட்கா சாப்பிடுவார்களோ என்னவோ. இதை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தவேண்டும். பணம் இல்லாதவர்களுக்குத்தான் ரேஷன் என்று ஒன்று இருக்கிறதே, அதைச் சரியாக செயல்படுத்தினால் போதாதா?

  பொதுவாகவே இந்தியர்களுக்கு ஓசிக்கு எதைக்கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளும் பழக்கம் உண்டு (90%க்கும் மேலே). தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன.

  ஆனால் இதைமட்டும் கருத்தில்கொண்டு வளர்ச்சிக்குப் பணம் செலவழிக்காமல் இருக்கமுடியுமா? அது ஒரு புறம், இது ஒரு புறம். அத்தகைய ரயிலில் (இப்போதைய மெட்ரோ ரயில் போன்று) ஓசி டிக்கெட் உள்ளே நுழைய முடியாது.

 5. Raghavendra சொல்கிறார்:

  கூட்டம் அதிகமாக இருக்கும் தடங்களில், இன்னும் 4 ரெயில்களை
  கூடுதலாக விடுவதை யார் தடுத்தது? மோடிஜியின் தொகுதிக்கு 20,000 கோடி ரூபாய் செலவழிக்கும்போது, நியாயமான இந்த தேவைகளை கவனிக்ககூடாதா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.