அரசியல் பிழைத்தோர்க்கு “அறம்” கூற்றாகும்… மதுரையில் நீதிமன்ற உத்திரவு ….!!!


“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்…”
18 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் கூறிச்சென்றது இன்று மீண்டும் மதுரையில் அரங்கேறியுள்ளது…….

( அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம் )

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுதல், துப்பாக்கிச்சூடு ஆகியவை குறித்து -சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை இன்று மிக முக்கியமான
வரவேற்கத்தக்க சில உத்திரவுகளை பிறப்பித்துள்ளது….

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும்,
ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்றும்,
கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் –

இன்னும் சில கோரிக்கைகளையும் முன்வைத்து பல வழக்குகள்
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்டிருந்தன.
அவை இன்று விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்குகளில் அரசுத் தரப்பில் –
தூத்துக்குடியில் அமைதி திரும்பியுள்ளதாகவும்
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு நிவாரணமாக
20 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டிருப்பதாகவும்
ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

– அரசாணையை படித்துப் பார்த்த நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது
அடங்கிய அமர்வு-

இந்த அரசாணை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு போதுமானதாக இல்லை. அரசு கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடுவதாக அறிவித்தால் மட்டுமே அது நிரந்தரமானதாக இருக்குமென்று தெரிவித்திருக்கின்றது.

மேலும், இந்த ஆலையிடமிருந்து 100 கோடி ரூபாயை வசூலித்து அதை வைப்பு நிதியில் வைக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த அளவுக்கு ஆலை சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி இருக்கின்றனர்.

“மனித உயிர்களுக்கு விலை நிர்ணயிக்க முடியுமா..?
மனித உயிரின் மதிப்பு 20 லட்ச ரூபாய்தானா? ” என்றும் நீதிபதிகள்
கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.

( ஆதாரம் – சற்று முன் வெளியான தொலைக்காட்சி செய்தி….)

வழக்கு 22-ந்தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது…..

இன்று காலையில் சென்னை உயர்நீதிமன்றம் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த சாட்டையடி பற்றி இந்த தளத்தில் எழுதியிருந்தோம்..
இப்போது மாலையில் – மற்றுமோர் சாட்டையடி …. இந்த முறை அது “அரசியல் பிழைத்தோர்க்கு….”

மலிவான அரசியல்வாதிகள் நிறைந்து விட்ட நிலையில் –
நீதிமன்றம் ஒன்று தான் மக்களுக்கு புகலிடம்.

அந்த நீதியும் விரைவாக கிடைத்தால் –
மக்களுக்கு அதுவே மிகுந்த ஆறுதல்…!
மற்ற கோரிக்கைகளிலும் உரிய நீதி விரைவில் கிடைக்குமென்று
நம்புவோம்…வேண்டுவோம்.

.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அரசியல் பிழைத்தோர்க்கு “அறம்” கூற்றாகும்… மதுரையில் நீதிமன்ற உத்திரவு ….!!!

 1. Pingback: அரசியல் பிழைத்தோர்க்கு “அறம்” கூற்றாகும்… மதுரையில் நீதிமன்ற உத்திரவு ….!!! – TamilBlogs

 2. Selvarajan சொல்கிறார்:

  காேவை சிறுமுகையில் பவானி ஆற்றை ஒட்டி இருந்த ஒரு விஸ்காேஸ் ஆயைையும் அது நிரந்தரமாக மூடப்பட்டதையும் மறந்திருக்க வாய்ப்பில்லை …
  இதனால்
  பவானி ஆறும் நாசமானது.
  நோய் தாக்கம்,சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, பவானி ஆறு மாசுபாடு என்று தொடர்ந்து விஸ்கோஸ் ஆலைமீது புகார்கள் எழுந்தன. … இந்த ஆலைக்கு எதிராக மக்கள் 13 ஆண்டு கால தொடர் போராட்டத்துக்குப் பிறகு 2001-ம் ஆண்டு விஸ்கோஸ் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.

  இந்த ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திலும் ஸ்டெரிலைட்டில் தற்பாேது நிகழ்ந்தது பாேலவே கலவரம் ..தடியடி… துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. என்பது குறிப்படதக்கது … இந்த விஸ்காேஸ் ஆலை அரசின் காெள்கை முடிவுப்படி மூடியதைப் பாேல
  ஸ்டெரிலைட்டையும் மூடுமா இந்த அரசுகள் …? இல்லை நீதிமன்றம் கூறியவாறு // இந்த அரசாணை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு போதுமானதாக இல்லை. // என்பதால் ” அனில் ” மீண்டும் மரத்தில் ஏறிக்குமா …?

 3. அறிவழகு சொல்கிறார்:

  //இந்த அரசாணை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு போதுமானதாக இல்லை. அரசு கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடுவதாக அறிவித்தால் மட்டுமே அது நிரந்தரமானதாக இருக்குமென்று தெரிவித்திருக்கின்றது.///

  என்று நீதிமன்றமே சொல்லியிருக்கு. இது கட்டளையா? அல்ல வெறும் சுட்டிகாட்டலா?

  அல்லது இது மாதிரி நீதிமன்ற சுட்டிகாட்டலை எதிர்பார்த்து அரசின் நகர்வா?

  எதுவாக இருந்தாலும் அரசு இனிமேலும் நாடகமாட முடியாது. எதிர் மனுதாரர் வாளாயிருக்கமாட்டார். கூடவே மக்களும்.

  பார்க்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.