வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் ……?


ஒரு நண்பர் கேள்வி கேட்டிருக்கிறார்…

“வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர் (தேர்தல் ) போன்றவர்கள்
துப்பாக்கி சூட்டிற்கு ஆணை இட முடியுமா ..?”

அதற்கான விளக்கம் அநேகமாக இதுவாகத்தானே இருக்க முடியும் –

—————

“அந்த சமயத்தில், அந்த இடத்தில் இருந்த
உயர்ந்த பட்ச அதிகாரம் கொண்ட அதிகாரி அவர் தான்….”
எனவே, அவர் ஆணையிட்டார்…!!!

( மற்ற உயர் அதிகாரிகள் எல்லாரும் ஓடி, ஒளிந்து கொண்டார்கள்
என்று புரிந்து கொள்ள வேண்டுமோ……? )

“சம்பவ இடத்தில் அவரை விட வேறு உயர்ந்த அதிகாரி
யாரும் இல்லையென்றால் –

ஒரு சாதாரண கான்ஸ்டபிள் கூட –
தனக்குத்தானே ஆணையிட்டுக் கொண்டு – சுடலாம்…!!! ”

இத்தகைய சந்தேகங்களுக்கு தீர்வு காணத்தான் நீதி விசாரணை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து யாருக்காவது சந்தேகம் இருந்தால், நீதி விசாரணை நடக்கும் இடத்தில்
முறையிடலாம்…..

———–

ஆறு, ஆறு மாதங்களாக நான்கைந்து முறைகள் நீட்டிக்கப்பட்டு,
இரண்டு வருடங்கள் கழித்து, அதன் ரிப்போர்ட் வரும்போது –

இந்த விஷயம் விசாரணைக்கமிஷனின் வரம்பிற்குட்பட்டதல்ல என்று
விளக்கம் கூட வரலாம்.

கேள்வி கேட்க வேண்டியவர்கள் –
ஊர் ஊராகச் சென்று திருமணங்கள் நடத்தி வைத்து –

கல்யாண சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது,
உமக்கு மட்டும் ஏனய்யா இந்த கவலை என்று
யாராவது பின்னூட்டத்தில் கேள்வியும் கேட்கலாம்…..

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், புளிய மரத்தில் தானே
குடித்தனம் செய்ய வேண்டும்…?

————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் ……?

 1. Pingback: வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் ……? – TamilBlogs

 2. அறிவழகு சொல்கிறார்:

  கேள்வி கேட்டால்…!?

  கடந்த காலம் அல்லது நாளை நம்மை அதே கேள்வி விரட்டுமே…!

  எல்லாம் ஒரு தற்காப்பு தான்.

 3. BVS சொல்கிறார்:

  // ஒரு சாதாரண கான்ஸ்டபிள் கூட –
  தனக்குத்தானே ஆணையிட்டுக் கொண்டு – சுடலாம்…!!! ” //
  நல்ல சூடு.

  மறக்காமல் அந்த கான்ஸ்டபிளுக்கு எக்சிகியூடிவ் மேஜிஸ்டிரேட் அல்லது மாவட்ட
  கலெக்டர் என்று தற்காலிகமாக பதவி உயர்வு தந்துவிட வேண்டும்.

  நமது துரதிருஷ்டம் – இவர்களை கேள்வி கேட்க வேண்டியவர்களும்
  முன்னாள் குற்றவாளிகளாக இருப்பது தான். அதான் 13 கொலைகள் நடந்த நிலையில் கல்யாணமும், விருந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 4. Selvarajan சொல்கிறார்:

  // ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையில் உள்நோக்கம்… ஸ்டாலின் // https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-says-that-there-is-motive-behind-sterlite-shut-down-321012.html …..நிரந்தரமாக மூட அரசாணை என்று செய்திகள் கூறுகின்றன …இவர் இப்படி கூறுகிறார் …!
  செத்தவர்கள் வீரர்கள் என்று செத்தவன் குடும்பம் அழுகிறது … சுட்டவர்கள் துராேகிகள் என்று சுட்டவன் குடும்பம் அழுகிறதா …?

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  👆👇
  *”கக்கூசை”* ஆய்வு செய்யப் போகும் கவர்னர் …!!!

  நடக்கும் *”கலவரத்தை”*
  ஆய்வு செய்ய *”ஏன்”* போகவில்லை ???….

  நடிகை💃யின் *”பிறந்த”* நாளுக்கு
  *ட்வீ🤝ட்* போடும் மோடி,…!!!!

  இத்தனை பேர் *”இறந்ததற்கு”* ஒரு *”இரங்கல்”* செய்தி கூட போடவில்லை ஏன் ???…

  திருடனை பிடிக்க ராஜஸ்தான் போன போது
  *”குறிபார்த்து”*
  சு🔫டத் *”தெரியாத”* போலீஸே …???

  தமிழ்மக்களை மட்டும் குறிபார்த்து
  *கழுத்தில் நெஞ்சில்*
  சுட🔫த் தெரியுது…???
  அது எப்படி..???

  தண்ணீருக்காக *”போராடினால்”*
  தடியடி👮 ,..!!!
  *”தனியாருக்கு”* எதிராக போராடினால்
  *குண்டடி😭🔫யா…??*

  இனி எவனாவது
  ஓட்டுக் கேட்டு எங்கள்
  *”வீ🏠ட்டு”* வாசல் வந்தால்
  இருக்குடி
  *”👉உங்களுக்கு👈”*
  இனி
  *”செரு👢👡👠👞ப்படி”..???*

  *“சப்ளையர்”* நிர்மலா
  தே👩விக்காக
  ஓடி🏃வந்து
  *”விசார🕵ணைக்கு”*
  உத்தரவிட்ட *”ஆய்வுப்”* புகழ் ஆளுநரே,
  தூத்துக்குடி *”துயரத்திற்கு”* *”கள்ள” மௌ😷🤐னம் ஏன் ???*…🤬

  பதில்
  *”தெ🙈🙉🙊ரியா”* *”கேள்விகள்”* இவை..???

  🤔😷🤒😭😨😱

 6. kalakarthik சொல்கிறார்:

  அண்ணா ,
  எந்த சந்தேகமும் கேட்கக் கூடாது.இன்னிக்கு காலையில் உதித்தது சந்திரன்தான் என்று சொன்னால் ” ”ஆமாமுங்க” என்று சொன்னால்தான் சரி.இல்லை என்றால் வழக்கு போட்டு சிறையில் அடைத்து …தேவையா
  karthik amma

 7. புதியவன் சொல்கிறார்:

  கா.மை சார்… உங்க நிலைப்பாடு இன்னும் சரியா எனக்குப் புரியலை. நான் புரிந்துகொள்வது (இந்தச் சம்பவத்தை), யாருமே இதில் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை (போராட்டக்காரர்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும்).

  எதுக்காக இந்த விஷயத்துக்கு இப்படிப்பட்ட துப்பாக்கிச்சூடு? அங்கு நடந்தது என்ன பெரிய கலவரமா அல்லது பயங்கரவாதத்தனமா?

  இப்போ நம் அரசியல் கட்சிகள் அனைத்தும், ‘காவிரி ஆணையத்தை’ மறந்துவிட்டு, ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு’ என்று பஜனை செய்கிறார்களே… இதற்குத்தானா இத்தனை நடந்தது? பதில் தெரியாத கேள்விகள்தான்.

 8. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  எதற்காக துப்பாக்கி சூடு நடைபெற்றது ?
  மக்கள் மத்தியில் ஒரு பயம் வர வேண்டும் என்று செய்திருக்கிறார்கள் .
  இதற்கென மெனக்கெட்டு ஒரு ஒய்வு பெற்ற ஐ பி எஸ் அதிகாரி
  வேற போய் ஸ்பாட் விசிட் செய்திருக்கிறார் .

  போராட்டம் செய்பவர்கள் நக்ஸல் , பிரிவினைவாதி , தீவிரவாதி .
  நாட்டு முன்னேற விடாமல் தடுக்கும் துரோகிகள் .
  வெளிநாட்டு பணம் வாங்கும் கைக்கூலிகள் .
  இனிமேல் யாரும் போராடக்கூடாது .அவர்களுக்கு இதான் கதி !

  இது தமிழ்நாடு – படித்தவர்கள் அதிகம் .தூத்துக்குடி வ உ சி இருந்த இடம்
  இங்கே உள்ள வக்கீல்கள் தாங்கள் யார் என்று காண்பித்தார்கள் .

  தமிழர்கள் இந்தியாவுக்கு வெளியேயும் இருக்கிறார்கள் .
  அவர்கள் எதிர்ப்பார்கள் என்று வேதாந்தாவுக்கு தெரியவில்லை .

  இப்ப ஒரு தாசில்தார் கூட கையெழுத்து போட தயாராக இல்லை !
  அரசு அதிகாரிகளுக்கு பற்றாது என்பது நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கிறது .

 9. நெல்லை பழனி சொல்கிறார்:

  சார் கலைக்டர் மட்டும் அன்று ஆபிசில் இருந்து ஊர்வலமாக வந்த மக்களை சந்தித்து மனுவை வணங்கி இருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.