இந்த கேரக்டரை புரிந்துகொள்ள – இந்த ஒரு பயணம் போதுமானது…!!!


பாதுகாப்பு கண்காட்சி நிகழ்ச்சியின்போது
பேச முடியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உரையின்போது,
அதற்கான வாய்ப்பு இருந்தது….

ஒரே ஒரு நிமிடம் போதுமானதாக இருந்தது ….

———–

” தமிழக மக்களின் கவலை எனக்கு புரிகிறது.
மத்திய அரசு எல்லாருக்கும் பொதுவானது.
எந்தவித பாரபட்சமும் இல்லாமல் உச்சநீதி மன்றத்தின்
தீர்ப்பு இயன்ற அளவு விரைவாக செயல்படுத்தப்படும்….”

———-

இதைச்சொல்லி இருந்தால் போதும்….
அத்தனை அமளிகளும் அடங்கி இருக்கும் / அடங்கி விடும்….

சொன்னாரா…?
இல்லையே…?

ஏன்…?

————

தமிழ் தெரியாத என் நண்பர்கள் சிலருக்கு ஒரு வார்த்தையை
ஆங்கிலத்தில் புரிய வைக்க வேண்டி இருக்கிறது…
தமிழ்-ஆங்கில அகராதியில் போட்டு, அதற்கான
சரியான ஆங்கில வார்த்தையை நான் வலையில் தேடினேன்…
உம்… ஹூம்… பலன் இல்லை…

நான் போட்ட வார்த்தையும், கிடைத்த விளக்கமும் கீழே –

There are no results for: கல்லுளி மங்கன்,
but we are adding new words daily.

——————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இந்த கேரக்டரை புரிந்துகொள்ள – இந்த ஒரு பயணம் போதுமானது…!!!

 1. Ram சொல்கிறார்:

  கடைசி வரி அற்புதம்.
  சரியான defenition.

 2. Pingback: இந்த கேரக்டரை புரிந்துகொள்ள – இந்த ஒரு பயணம் போதுமானது…!!! – TamilBlogs

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஒரு நண்பரிடமிருந்து என் பெர்சனல் மெயிலுக்கு வந்திருப்பதை
  இங்கே நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்….

  ———————————————

  kaamai aiya,

  Namathu vimarisanam vaasagan naan.
  Irukkum soozhnilaiku oru chinna kavidhai.

  Nalla manidharidam share seiya aasai.
  Ungal gnabagam vanthathu. padithu parungal.

  காவிரியை கையடக்கி
  தமிழ்வெறியை தூண்டுகிறாய்!
  என்சங்கை அறுத்துவிட்டு
  உன்சங்கை ஊதாதே!
  ஏர்பிடிக்கும் விவசாயி
  ஏனென்று கேள்வி கேட்டால்!
  ஏரோபிலேனில் வந்து சென்று
  ஏரெடுத்து பார்க்க மறுத்தாய்!
  ஏகாதிபத்தியம் எல்லாம்
  எலக்ஷ்ன் வரை மட்டுமே!
  எங்களோட காலம் வரும்
  கைகட்டி பதில் சொல்வாய்!!!!

  Anbudan
  Indrillavittalum.

 4. jksm raja சொல்கிறார்:

  கவிதை மிகவும் நன்றாக இருக்கின்றது முதல் இரண்டு வரி முற்றிலும் உண்மை

 5. அறிவழகு சொல்கிறார்:

  கல்லுளி மங்கன்= Kallulimangan.
  Def: கல்லை போன்றவன். எந்த உணர்வும் பந்த பாசமும் அற்றவன்.

  இப்படியே ஆங்கில அகராதியில் சேர்த்து விடலாம்.

 6. அறிவழகு சொல்கிறார்:

  1. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர். செங்கரும், அவரது சகோதரர் அனில் சிங்கும் தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதனால் பெண்ணின் தந்தை பப்புவை குல்தீப் சிங்கும் அனில் சிங்கும் தாக்கியதாகத் தெரிகிறது. ஆனால் அங்கு வந்த போலீஸார், பப்புவை கைது செய்தனர்.

  இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  2. ஜம்முகாஷ்மீரின் 8 வயது ஆசிஃபா என்ற சிறுமியை வெறியர்கள் கோவிலில் வைத்து சீரழித்து கொன்றுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  இடுகைக்கு சம்பந்தம் இல்லை. என்றாலும்…

  இந்த இரண்டு சம்பவங்கள் சம்பந்தமாக பாஜக வெறியர்களிடம் ஒரு கேள்வி.

  இதை நீங்கள் நிச்சயம் ஆதரிப்பீர்களா உங்கள் வீட்டு பெண்களை இந்த மாதிரி கயவர்கள் சின்னா பின்னமாக்கி இருந்தால்…?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அறிவழகு,

   உங்களின் இந்த பின்னூட்டத்தையே அடிப்படையாகக் கொண்டு, ஒரு இடுகை வெளியிடப்பட்டிருக்கிறது… பார்க்கவும்.

   -காவிரிமைந்தன்

   • அறிவழகு சொல்கிறார்:

    நன்றி ஐயா.

    ஆனால், என்ன கேட்டாலும் பாஜக வெறியர்கள் அசைந்து கொடுக்கமாட்டார்கள்.

 7. tamilmani சொல்கிறார்:

  bjp is never going to win any seats in Tamilnadu for sure, that they themselves know, but they want to test their luck in Karnataka where elections are due So that is the reason for the delay in obeying Supreme Court order . But once they are defeated in Karnataka they have no choice but to establish kaveri management board. There is no going back on that. If they dont do it then the whole structure of federalsim is in question.

  • புதியவன் சொல்கிறார்:

   உங்கள் பாயின்ட் சரி. ஆனால் பாஜக, எதை வைத்து தாங்கள் காங்கிரசைவிட மேலானவர்கள் என்று சொல்லமுடியும்? காங்கும் வாக்கு அரசியலுக்காக மக்களைப் பிரித்தது பிரிக்கிறது. காங் தலைமையும் பாஜக தலைமையும் சேர்ந்து இந்த விஷயத்தை அரசியலாக்க முடியாது, இது உச்ச நீதிமன்ற ஆணை என்னு சொன்னால் இந்தியா ஜனநாயக நாடு. இப்போது இரண்டு கட்சிகளும் நாட்டைப் பிடித்த கேடு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.