பாஜக ஆதரவாளர்களுக்கு ஒரு கேள்வி ….


நான் இந்த இடுகையை கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில்
எழுதத்தொடங்கிய நேரத்தில் –

” இந்த கேரக்டரை புரிந்துகொள்ள – இந்த ஒரு பயணம்
போதுமானது…!!!” – என்கிற இதற்கு முந்தைய இடுகையில் –
நண்பர் அறிவழகு எழுதிய ஒரு பின்னூட்டம் வந்து சேர்ந்தது …

எனவே, நண்பர் அறிவழகு அவர்களின் பின்னூட்டத்திலிருந்தே
சில பகுதிகளை முன்வைத்து இதை எழுதுகிறேன்….
( இதற்கு பின்னால், இந்த சம்பவம் தொடர்பாக வேறு சில நிகழ்வுகள்
ஏற்பட்டிருக்கின்றன…அதை பின்னர், தனியாக பேசலாம்…)

இந்த இடுகை, நண்பர் அறிவழகுவின் பின்னூட்டத்தை அடிப்படையாக
கொண்டது….

—————————–
அறிவழகு’வின் பின்னூட்டத்திலிருந்து –

1. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ்
தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர். செங்கரும், அவரது
சகோதரர் அனில் சிங்கும் தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது
இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனால் பெண்ணின் தந்தை பப்புவை குல்தீப் சிங்கும் அனில் சிங்கும்
தாக்கியதாகத் தெரிகிறது. ஆனால் அங்கு வந்த போலீஸார், பப்புவை
(சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக பொய்யான புகாரில்)
கைது செய்து சிறையில் அடைத்தனர்…

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்பு கடந்த சில
நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம்
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

( போஸ்ட் மார்டம் அறிக்கையில், அவரது உடலில் காயங்கள்
இருந்ததும், அவரது வயிற்றில் விஷம் கலந்த உணவு இருந்ததும் கண்டு
பிடிக்கப்பட்டிருக்கிறது…)

2. ஜம்மு-காஷ்மீரின் 8 வயது ஆசிஃபா என்ற சிறுமியை சில வெறியர்கள்
கோவிலில் வைத்து சீரழித்து கொன்றுள்ள சம்பவம் நாடு முழுவதும்
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

————————————
( விமரிசனம் )
இந்த கொலை நடந்து பல நாட்கள் கடந்தும் சரியான விசாரணை
இல்லை…. இறுதியாக இந்த கற்பழிப்பு-கொலை சம்பவத்தில்
சம்பந்தப்பட்டு இருந்ததாக உறுதி செய்யப்பட்டு சிலர் கைது
செய்யப்பட்டபோது –

உள்ளூர் பாஜக பிரமுகர்களும், ஜம்மு-காஷ்மீர், பாஜக-மஃப்டி
கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் 2 பாஜக அமைச்சர்களும்
மிகத்தீவிரமாக அதை எதிர்த்து, பெரும் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு
போலீஸ் ஸ்டேஷனுக்கு ஊர்வலமாக போய், கைது
செய்யப்பட்டவர்களை ( பாஜகவினர்…) விடுவிக்கக் கோரி போராட்டம்
நடத்தி, போலீசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்….

இந்த நாட்டின் பிரதமர் இதுவரை, இந்த சம்பவங்களைப்பற்றி
வாய் திறக்கவில்லை…

கட்சித்தலைமை, இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டிக்கவில்லை…
தண்டிக்கவில்லை…கட்சியை விட்டு நீக்கவில்லை..
மாறாக அவர்களை தப்புவிக்க முயற்சி செய்கிறது

———————————
அறிவழகு -விமரிசனம்…..

இந்த இரண்டு சம்பவங்கள் சம்பந்தமாக, வழக்கமாக பாஜகவை
ஆதரித்து இந்த தளத்தில் மிகத்தீவிரமாக பின்னூட்டங்கள் எழுதும்
நண்பர்களுக்கு – ஒரு கேள்வி.

ஒருவேளை உங்கள் வீட்டு பெண்களை இந்த மாதிரி கயவர்கள்
சின்னா பின்னமாக்கி இருந்தால் ( இத்தகைய நிலை யாருக்குமே ஏற்பட
வேண்டாம் – இது ஒரு வாதத்திற்காக …) நீங்கள் என்ன செய்வீர்கள்…?

பாஜகவினரைப் பொருத்த வரையில் –
நியாயம், உண்மை, சமூக நலன் எல்லாவற்றையும் விட கட்சியும்,
ஆட்சியும் தானே பெரியது…கட்சித்தலைமை செய்வது தானே நியாயம்…
தலைமை சொல்வது தானே தெய்வவாக்கு….

கட்சியும், உங்கள் தலைவரும் செய்த எந்த தவறையாவது இதுவரை
நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா…? கண்டித்திருக்கிறீர்களா…?

மனசாட்சியை கட்சியிடம், தலைமையிடம் – அடகு வைத்து விட்டு –
அப்போதும், மோடிஜி தான் முக்கியம், கட்சி தான் முக்கியம்
என்று வழக்கம் போலவே அந்த விமரிசனத்தையும் எதிர்த்து
பின்னூட்டம் எழுதி இருப்பீர்களா…?

———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to பாஜக ஆதரவாளர்களுக்கு ஒரு கேள்வி ….

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  எந்த ஒரு சராசரி மனிதனும் கூட இத்தகைய கொடூர சம்பவங்களை
  பார்க்கும்போது, கதறிக் கண்ணீர் விடுவான்…

  அதே சமயம், இந்த கொடூர சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால், அதன் தலைவர்கள் பதறித்துடித்திருக்க
  வேண்டாமா…? உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தேடித்தந்திருக்க வேண்டாமா…? இயன்ற விதங்களில் எல்லாம் உதவியிருக்க வேண்டாமா…?

  இதில் சம்பந்தப்பட்ட விலங்குகளை, கட்சியிலிருந்து உடனடியாக வெளியேற்றி இருக்க வேண்டாமா…? உடனடியாக அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை தொடர உதவி இருக்க வேண்டாமா…?

  கட்சி இதற்காக வெட்கித்தலை குனிகிறது… இனி இந்த நாய்களுக்கும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது….அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவதை நாங்களும் உறுதி செய்வோம் என்று வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டாமா..?

  செய்யவில்லையே…?
  ஏன்….?

  இவர்களையெல்லாம் அந்தக் கடவுள் தான் கேட்க வேண்டும்…

  .
  -காவிரிமைந்தன்

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  *Justice_for_Asifa*

  மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ட்வீட்
  ஒரு சின்ன கற்பழிப்பு விசயம் டெல்லியோட மில்லியன் டாலர் சுற்றுலா வருமானம் போச்சாம்… சொல்றது நாட்டோட நிதி அமைச்சர்… கற்பழிச்சி ரோட்டுல வீசுனது சின்ன விசயமாம்… வருமானம் போனது பெரிய இழப்பாம்… எப்படி பட்ட புத்தி உள்ளவனுங்ககிட்ட நாட்டை கொடுத்து இருக்கோம் பாத்தீங்களா… பாரத்மாதாகி ஜே..!
  ..
  ..

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  சொல்லி விட்டார் –

  “சிறுமிகள் பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக
  இருந்தாலும் தப்ப முடியாது. நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும்.”

  எப்போது ….?

  காஷ்மீரின், 2 பாஜக மந்திரிகளை விலக்கிக் கொள்கிறீர்களா அல்லது
  கூட்டணியிலிருந்து விலகிக்கொள்ளலாமா என்று காஷ்மீர் முதல்வர்
  பளிச்சென்று கேட்ட பிறகு …

  உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ.வை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று அலஹாபாத் உயர்நீதிமன்றம் கேட்ட பிறகு….

  – ஆனால், இப்போதும் கட்சி அவர்களை இன்னமும் வெளியேற்றவில்லை…..

  • அறிவழகு சொல்கிறார்:

   மாட்டார்கள்.

   குஜராத் படுகொலை/கலவரங்களின் போதோ மாட்டுக்கறி வைத்திருந்ததாக அக்லாக் கொலையின் போதோ எழுத்தாளர் கல்புர்கி நரேந்திர தபோல்கர் கோவிந்த் பன்சாரே போன்றோரின் படுகொலைகளின் போதோ இன்ன பிற படுகொலைகளின் போதோ என்ன செய்துவிட்டார்கள்.

   இப்படி தலைமை தட்டி கொடுப்பதால் தான் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் ஆங்காரம் பிடித்து ஹிஸ்டீரியா நிலையில் அலைகிறார்கள்.

   இந்த நாடு இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறதோ.

   இறைவன் இருக்கிறான்.

 4. காட்டு பூனை சொல்கிறார்:

  இவர்களின் செயலால் இந்திய ஒன்றியத்தின் குடிமகன் என்பதை வெளியே சொல்ல வெட்கப்படுகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   காட்டுப்பூனை, அறிவழகு –

   சில பின்னூட்டங்களை நீக்கி இருக்கிறேன்.
   தயவுசெய்து வரம்பு மீறிய வார்த்தைகளை பயன்படுத்துவதை
   தவிர்க்கவும்.

   -காவிரிமைந்தன்

 5. புதியவன் சொல்கிறார்:

  இந்த விமர்சனங்கள் குறிப்பிடும் பெண் கற்பழிப்பு சம்பந்தமான எல்லாச் செய்திகளையும் படித்தேன். குழந்தையின்மீது பயங்கரவாதம் புரிந்தால் அவர்கள் பயங்கரவாதிகள். அவள் நம் குழந்தை என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும். என்ன கட்சி, என்ன மதம், என்ன ஜாதி, குற்றம் புரிந்தவன் எனக்கு வேண்டப்பட்டவனா என்ற கேள்விகள் நம் மனத்தில் எழுந்தாலே நாமும் அந்த பயங்கரவாத்த்துக்குத் துணை போனவர்கள்தான்.

  இந்த மாதிரியான, குற்றச் செயல், பயங்கரவாதம், பொருளாதார ஊழல்கள் இவற்றில் கட்சி அபிமானம், மதம், ஜாதி இவற்றைக் கொண்டுவரவே கூடாது. இவைகள் நடந்தால் மாநிலத் தலைவரும் (முதல்வர், கவர்னர்), மத்தியத் தலைமையும்தான் இந்த மாதிரி விஷயங்களில் கட்சி, மதம், ஜாதி அபிமானத்தைக் காட்டுவது ஆபத்தான போக்கு. What you do today will backfire on you tomorrow.

  இரண்டு தேசங்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது ஹோஸ்ட் தேசம் இன்னும் கேர்புல்லா தங்கள் வீர்ர்களின் நடத்தையில் இருப்பார்கள். பாஜக, தங்கள் கட்சி உறுப்பினரிடம் இதுபோல் நடந்துகொள்ளாத்தால் ஆட்சிபுரியும் கட்சி என்ற ஹோதாவில் நிறையபேர் (சமூக்க் களைகள்) அராஜகத்தில் இறங்குகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு பிரதமர் மற்றும் பாஜக தலைமைதான் பொறுப்பு.

 6. deen சொல்கிறார்:

  ஆசிபா & உன்னவ்,! பாலியல் வன்முறை நிகழ்வு மட்டும் இல்லை தொடர்ச்சியாக பிஜேபி அரசியல் தலைவர்கள் பாலியல் வன்முறை, கொலை’னு மாட்டி வருகிறார். தன்னை ஒரு தேசபக்தாளாக காட்டிக்கொண்டு “பாரத் மாதா கீ ஜேய்”, “ஜெய்ஹிந்த்”னு தினமும் கூவிக்கொள்கிறார்கள்,! கர்நாடகா தேர்தலுக்கு கூட பிஜேபி நிறுத்தி இருக்கும் வேட்பாளர்களில் நிறைய பேர் மிக கொடூரமான கிரிமினல் பின்னணியில் உள்ளவர்கள். கடந்த திரிபுரா தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்களில் பிஜேபி முதலிடம். (9 பேர் கொலை, கற்பழிப்பு, சிறுவர்கள் கடத்தல்) மேலும் கடந்த ரெண்டு வருடமா நடந்த அனைத்து தேர்தலிலும் பிஜேபி தான் அதிக கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்தினார்கள்.! மொத்த கிரிமினல் வேட்பாளர்களில் 65% பிஜேபி வேட்பாளர்கள்.! கடந்த 60 ஆண்டுகள் Mr மோடி வகையை ஆட்சி செய்து இருந்தால் நமது நாட்டின் நிலை,! இதற்கு துணிவு வந்ததுக்கு காரணம் அரசு ஆதரவு இருப்பாதுதான் இந்த நிகழ்வுக்கு வழங்கப்படும் தண்டனை தான் மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் ,!!

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  யாரும் நினைத்துக் கூட பார்க்காதபடி உள்ள ஒரு சம்பவம் நடந்திருக்கின்றது .
  எதற்காக ?
  இது மிரட்டல் .
  எது வேண்டுமானாலும் செய்வோம் .யாரும் ஒண்ணும் கேட்கக்கூடாது .
  அத்து மீறி செயல்பட்டாலும் ஒன்றும் பண்ண முடியாது .
  இதற்கு என்றே ஆள் வைத்து இருக்கிறார்கள் .
  அப்புறம் மேடையில் பேச ‘டீஜெண்டா ‘ வந்து நாங்கள் தேச பக்தர்கள் –
  எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்று ஒழுக்கம் பேசுவார்கள் .
  Iron hand in Velvet glove !

 8. yarlpavanan சொல்கிறார்:

  தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 9. M.Syed சொல்கிறார்:

  விமர்சனம் அருமை. சில BJP யினரின் நடவடிக்கைகள் மனித தன்மை அற்ற செயல். இதை கட்சி கண்டிக்காது குற்றவாளிகள் தப்புவிக்க முயற்சி. நாடு எங்கோ செல்கிறது. கேரளாவில் பிஜேபி காரர்கள் வாக்குகள் கேட்டு வீட்டிற்குள் வரவேண்டாம் இங்கு பெண்களும் 10வயதிற்கு கீழே உள்ள சிறுமிகளும் உள்ளனர் கோட்டிற்கு வெளியே நிற்கவும். என்று வீட்டின் முன்பு எழுதி யுள்ளனர் நிலமை அந்தளவு மோசமாக உள்ளது. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நம்மை எல்லாம்….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.