டெல்லி டிவிக்களின் இருட்டடிப்பு….!!!


வழக்கமாக, சூடாக என்ன செய்தி கிடைக்கும்
என்று Breaking News -க்காக கிடந்து அலையும்
டெல்லி தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும்,
செம தீனி கிடைத்தும் – தமிழக செய்திகளை இன்று
சுத்தமாக boycot / black out செய்து விட்டன….

திருவிடந்தையில் பிரதமர் பாதுகாப்புத்துறை கண்காட்சியை
திறந்து வைத்து உரையாற்றியது மட்டும், டெல்லி தொலைக்காட்சி
சேனல்களில் நேரடியாக, லைவ்’வாக காட்டப்பட்டன….

ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து பெரிய அளவில் நடந்து வரும் –

கருப்புக்கொடி, எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றியும்,
புறா, கருப்பு பலூன் விடுதல் குறித்தும்,
உயரமான பேனர்கள் மீது துணிந்து ஏறி எதிர்ப்பு காட்டியவர்கள்,
ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுவது பற்றியும் –
தமிழகத்தைப்பற்றிய வேறு எந்த செய்தியுமே டெல்லியில்
இதுவரை (மதியம் 1.30 மணி ) வெளிவரவில்லை….

பாஜக தலைவர் அமித் ஷா, ஹூப்ளியில் இன்று நடைபெற்றுவரும்
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குகொண்டுள்ள
செய்தி கூட முக்கியத்துவம் பெற்றிருக்கிறது……

ஆனால், உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருவதாக கூறப்படும்
” கோ பேக் ” ஹாஷ்டேக் பற்றியும் இதுவரை எந்த டெல்லி
தொலைக்காட்சி சேனலும் “மூச்” கூட விடவில்லை…

எங்கிருந்து, யார் போட்ட உத்திரவு…???
அவர்கள் வாயை அடைத்தது யார்…???

இரவுநேர “விவாத தலைப்பிற்கு” தமிழ் செய்தி
தொலைக்காட்சி சேனல்கள் இன்றிரவு ஏன் இந்த தலைப்பையே
விவாதிக்க எடுத்துக் கொள்ளக்கூடாது…….?

(தங்கள் டெல்லி “சகோதர” சேனல்களின் மௌனவிரதத்திற்கு
யார் காரணம், எது காரணம் என்று கூட (ரகசியமாக) கேட்டறிந்து
சஸ்பென்சை உடைக்கலாமே …!!! )

———————————————————————————

பின் குறிப்பு – ( இரவு 08.30 மணி )

ஒரு டெக்னிகல் பிரச்சினை காரணமாக இதற்கு முன்னால் மதியம்
பதிவேற்றிய அதே இடுகையை வேறு தலைப்புடன் மீண்டும் பதிப்பிக்கிறேன்.
பின்னூட்டங்களை இங்கேயே எழுதலாம்….

இப்போது இரவு 08.30 மணி….
இதுவரையிலும் டெல்லி தொலைக்காட்சிகள் தமிழ்நாட்டை கண்டுகொள்ள்வில்லை.. அதாவது இன்று முழுவதுமே,நாட்டின் தலைநகர
தொலைக்காட்சிகள் நம்மை “இருட்டடிப்பு” செய்து விட்டன….

காரணம்…????????????????????????????????????????????????????????????

அடேயப்பா மீடியாக்களுக்குத்தான் எவ்வளவு சுதந்திரம்
கொடுக்கப்பட்டிருக்கிறது ….!!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to டெல்லி டிவிக்களின் இருட்டடிப்பு….!!!

 1. அறிவழகு சொல்கிறார்:

  காவிரிப் போராளிகளை வணங்குவோம்: சத்யராஜ்

  http://www.kamadenu.in/news/tamilnadu/1794-sathyaraj-hails-cauvery-protesters.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner

  இந்த போராளிகளை வாழ்த்தவோ வணங்கவோ மனமில்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களை கொச்சை படுத்தாமல் இருந்து தங்கள் எஜமான விசுவாசத்தை தனிமையில் ……….வெளிப்படுத்திக்கொள்ளட்டும்.

 2. BVS சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது போல் இந்த விஷயம் விசித்திரமாகத்தான் இருக்கிறது.
  எப்படி அத்தனை டெல்லி டிவிக்களும் இதை இயல்பாக தவிர்த்திருக்க முடியும் ?
  ஏதோ கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
  கொஞ்சம் பொறுத்தால் விஷயம் தானாகவே வெளியே வரும்.

 3. புதியவன் சொல்கிறார்:

  பொதுவாக வட மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாடுமேல் தமிழர்கள்மேல் வெறுப்பு உண்டு. 2ஜி, 200 கோடி தொலைக்காட்சி ஊழல் போன்றவற்றில் காட்டும் அதீத ஆர்வத்தை தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் காட்டுவதில்லை. பாஜக மேலிடக் கட்டளையும் காரணமாக இருக்கக்கூடும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.