பொய் சொல்லும் (உ.பி.) “யோகி” … கலியுகத்தில் சகஜமோ – “சோ” அவர்கள் சொன்னது போல்…!!!ஒரு சமயம் துக்ளக் ஆசிரியர் “சோ” சொன்னார் – ” கலியுகத்தில்,
“ராஜாக்கள் திருடுவார்கள்…” ” சந்நியாசிகள் பொய் சொல்வார்கள் ” –

– உ.பி. முனிசிபாலிடி தேர்தல்களில் பாஜக வெற்றி பற்றி
முதலமைச்சர் “யோகி”-ஜி சொன்னதும் இதுபோல் தானோ…?

” Historic win, says Yogi, taunts Rahul for loss in amethi ” –

நானும் இரண்டு நாட்களாக கவனித்துப் பார்த்தேன். மீடியாக்கள்
அனைத்தும் ஒரே குரலில் ஒலிக்கின்றன – ( பாஜக தலைமையின்
“வாங்கும்” திறனை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்…!!!)

” bjp emerges victorious in up polls ”

” bjp wins big – shot in the arm of bjp ”

” BJP’s UP sweep likely to bolster its Gujarat campaign ”

—————————————————————–

ஆனால், உண்மையில் நடந்தது என்ன….?

மேயர் பதவிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் –
பாஜக வெற்றி பெற்றது உண்மை தான்… ஆனால் முழு தேர்தலையும்
கணக்கில் எடுத்துக் கொண்டால் ..?

அதிக வெற்றி கிட்டியது யாருக்கு…?
பாஜக விற்கா …?
மாயாவதி அவர்களின் பகுஜன் சமாஜ் கட்சிக்கா…?
சுயேச்சைகளுக்கா..?

புள்ளி விவரங்களை கீழே தருகிறேன்…
முடிவை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்…!!!

——————-

16 – ல் 14 மேயர் பதவிகளை தற்போது பாஜக வென்றிருக்கிறது…
( ஆனால், சென்ற – 2012-ல் நடந்த தேர்தலின்போது இருந்த மொத்த
இடங்கள் – 12; அதில் 10 இடங்களில், பாஜக ஏற்கெனவே
ஜெயித்திருந்தது – )

தற்போது முனிசிபல் சேர்மன் பதவிகளில் –
பாஜக பெற்றது – 69…
பாஜக அல்லாதவர்கள் பெற்றது -126

நகர பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளில் –
பாஜக பெற்றது – 100
பாஜக அல்லாதவர்கள் பெற்றது -338

நகர் பரிஷத் பதவிகளில் –
பாஜக பெற்றது – 596
பாஜக அல்லாதவர்கள் பெற்றது – 701

நகர் பாலிகா உறுப்பினர் பதவிகளில் –
பாஜக பெற்றது – 916
பாஜக அல்லாதவர்கள் பெற்றது – 4295

நகர் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளில் –
பாஜக பெற்றது – 663
பாஜக அல்லாதவர்கள் பெற்றது – 4715( பாஜக அல்லாதவர்கள் என்பதில், மாயாவதி அவர்களின் கட்சியான
பிஎஸ்பி, அகிலேஷ் யாதவின் எஸ்.பி., காங்கிரஸ், மற்றும்
சுயேச்சைகள் அடங்குவர்…)

பாஜகவின் பிரச்சார தந்திரம், பொய்யை மெய் போல் காட்டி,
விளம்பரம் செய்யும் சாமர்த்தியம், மீடியாக்களை கைவசப்படுத்தும்
அதிகார, பண பலம் – ஆகியவற்றை சமாளிக்கும் திறன் இன்று
இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லை என்பது தான் உண்மை.

” சத்யமேவ ஜெயதே ” – ”'””வாய்மையே வெல்லும்”””

————————————————————————————————————

பின் குறிப்பு –
ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத் தவறி விட்டேன்.
“யோகி” ஆதித்யநாத் அவர்களின் சொந்த தொகுதியான
“கோரக்பூர்”-ல் அவரது மடம் அமைந்திருக்கும் தொகுதியிலேயே
பாஜக தோற்று விட்டது. தன் சொந்த தொகுதியை தக்க வைத்துக்
கொள்ள முடியாதவர் தான்………………………..!!!

மொத்தமாக உள்ள, தேர்தல் நடந்த அனைத்து தொகுதிகளையும்
கணக்கில் எடுத்துக் கொண்டால், பாஜக சுமார் 28 சதவீதம் தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது….

இது தான் அதன் “இமாலய சாதனை” …!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to பொய் சொல்லும் (உ.பி.) “யோகி” … கலியுகத்தில் சகஜமோ – “சோ” அவர்கள் சொன்னது போல்…!!!

 1. நாக்கு இவர்களுக்கு எல்லா திசையிலும் சுழலும் போல…

 2. Avudaiappan Appan சொல்கிறார்:

  please confer with congreess and b j p

 3. பிரனீஷ் சொல்கிறார்:

  // ” கலியுகத்தில்,“ராஜாக்கள் திருடுவார்கள்…” ” சந்நியாசிகள் பொய் சொல்வார்கள் ” // இவைகள் மட்டுமின்றி :–
  கலியுகம் எப்படி இருக்கும் என்பதை அன்றே விளக்கியுள்ளது ஸ்ரீமத் பாகவத புராணப் பாடல்……. கலியுகத்தில் தருமம், சத்தியம், பொறாமை, தயை, அருள், ஆயுள் எல்லாம் குறைவுபடும். செல்வமுள்ளவனே சிறந்தவன், உயர்ந்தவன் எனப்படுவான். பலவான் சொல்லுவதே நீதி, தருமம். குல, மத, பேதமின்றி திருமணம் நடைபெறும். நாவன்மை உடையவனே பண்டிதர்….. பணக்காரன் வெல்லுவதும், ஏழை தோற்பதும் சாதாரணமாகும்.

  பலவான் மன்னனாவான். மக்கள் கொடியவராவர். மழையின்மை அதனால் பஞ்சம் ஏற்படும். ஆசார நியமங்கள் அருகும். தன் குடும்பத்திற்காகவே உழைத்தல், புகழுக்காகவே தானம், தருமம், பொய், திருட்டு, களவாடல். ஆசைகள் மலிந்துவிடும்.

  மக்கள் சிற்றின்பத்திலேயே உழல்வர். அற்ப குணம் பெற்று ஆண், பெண்கள் பழகுவர்…… கள்ள வியாபாரிகள், முதலாளி, தொழிலாளி, நாணயமின்மை, கிரகத்தர் யாசித்தல், ” துறவிகள் ” பொருளாசை முதலியன காண முடியும்.
  ஸ்ரீமத் பாகவத புராணம் என்றும் கூறியுள்ளது …. !!!
  .http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7534370.ece

 4. பிரனீஷ் சொல்கிறார்:

  // வீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் – (கலிநடப்பு – முடிவு) // http://www.siddharulagam.org/pramendra.php அய்யா …. ! இவர் கூறியுள்ளது தற்போது நடைமுறைக்கு வந்துகொண்டு இருப்பது — வியக்க வைக்கிறது … தாங்கள் விருப்பப்பட்டால் — பதிவிடுங்கள் … !!!

 5. புதியவன் சொல்கிறார்:

  கா.மை சார்… நீங்கள் சொல்லியிருக்கும் பாயின்ட் மறுக்க இயலாதது.

  ஆனால், அரசியல்ல இதுவெல்லாம் மிக சகஜம். ‘ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்படவேண்டும்’ என்று தமிழ்’நாடே விரும்புகிறது, என்பதுபோல்தான் அரசியல்வாதிகள் பேசுவார்கள். ‘எங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவேண்டும், இப்போது உள்ளவர்களைத் தூக்கி எறிய வேண்டும் என்று தமிழக வாக்காளர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றுதான் அரசியல்வாதிகள் பேசுவார்கள் (உதாரணத்துக்குச் சொன்னேன்). இதுபோன்ற அரசியல் ஸ்டேட்மென்ட்ஸ்ல முழு உண்மையெல்லாம் பார்க்கமுடியாது.

  ஏன் ‘ஊடகங்கள்’ இதை நம்பி, அப்படியே பிரச்சாரம் செய்கின்றன என்பது நல்ல கேள்வி. ‘கட்சி சாரா’ ஊடகம்னு ஒண்ணு இருக்கா?

 6. இளங்கோ சொல்கிறார்:

  புதியவன்,

  // ‘கட்சி சாரா’ ஊடகம்னு ஒண்ணு இருக்கா? //

  அப்ப இந்த ஊடகங்கள் எல்லாம் பாஜகவை சார்ந்து இருக்கின்றன என்பதை
  ஒப்புக்கொள்கிறீர்களா ?

  • புதியவன் சொல்கிறார்:

   இளங்கோ – உங்களுக்குத் தெரிந்ததற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

   மடியில் கனமிருப்பவனுக்கு மத்திய அரசைக் கண்டு பயம். அதனால்தான் பெரும்பாலான ஊடகங்கள், மத்திய அரசையும் மாநில அரசையும் பகைத்துக்கொள்வதில்லை. அதேபோல், கொள்ளையடித்த பணத்தைப் பதுக்குவதற்கும், தற்காத்துக்கொள்வதற்கும், அரசியல் கட்சி ஆரம்பிப்பதும், பத்திரிகை ஆரம்பிப்பது/விலைக்கு வாங்குவது, தொலைக்காட்சி ஆரம்பிப்பது என்று வழிமுறைகள் வந்து பலப் பல ஆண்டுகளாகிவிட்டன. சன் தொலைக்காட்ச்சி ஆரம்பித்து எத்தனை தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் நம்மிடையே உலவுகின்றன என்று பாருங்கள். இதில் ‘நடு நிலை’ என்று எந்த ஊடகத்தைச் சொல்வீர்கள்?

 7. ravikumar r சொல்கிறார்:

  This analysis is replica of Karunanidhi’s usual statement after his failure in elections of TN

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.