அடேயப்பாவ்….. ” கனவுகளின் வியாபாரி “

..
..

சென்னைக்கு வந்த ஒரு கனவுகளின் வியாபாரி, தமிழக மக்களின்
கனவுகளை நனவாக்க பல லட்சம் கோடி ( repeat – பல லட்சம் கோடி)
செலவில் பல திட்டங்களை அறிவித்து விட்டு போயிருக்கிறார்.
2019 – மே மாதம் வரை தமிழக மக்கள் இந்த கனவுகளில் மிதந்து
மகிழ்ந்து கொண்டிருக்கலாம்…!!!

இவரது பெரும்பாலான திட்டங்களுக்கு / அறிவிப்புகளுக்கு –

திட்டக்கமிஷன் அதாவது நீதி ஆயோக் அனுமதி தேவையில்லை…
பட்ஜெட்டில் இடம் தேவை இல்லை…
நிதி ஒதுக்கீடும் தேவையில்லை…
மத்திய கேபினட் ஒப்புதலும் தேவையில்லை…

பின் என்ன… கனவு காண்பதற்கும், “கப்சா” விடுவதற்கும்….
யார் அனுமதி தேவை…?

சொல்வதையெல்லாம் நம்ப இளிச்சவாயர்கள் இருந்தால்…மதி…..!!!

——————————————————-

– கோதாவரியில் இருந்து 3 ஆயிரம் டிஎம்சி நீர் கடலில் கலக்கிறது…
எனவே, கோதாவரியிலிருந்து 300 டி.எம்.சி. தண்ணீர் கொண்டுவந்து,
கிருஷ்ணா ஆற்றில் விட்டு, பின்னர் அதிலிருந்து சோமசீலா

அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும் பிறகு,
சோசீலாவிலிருந்து 100 டி.எம்.சி. தண்ணீர் எடுத்து கர்நாடகத்துக்கும்
தமிழ்நாட்டுக்கும் பயன்படும் வகையில் காவிரியில் விடப்படும்…

———–

– ரூ.20 ஆயிரம் கோடியில் சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை
அமைக்கப்படும். ரூ.4 ஆயிரம் கோடியில் திருச்சி – சிதம்பரம், ரூ. 6
ஆயிரம் கோடியில் விழுப்புரம் – நாகை விரைவுச் சாலைகள்
அமைக்கப்படும். பாரத்மாலா திட்டத்தின்கீழ் நாகை – ராமநாதபுரம் –
தூத்துக்குடி வரை 355 கி.மீ., வெள்ளக்கோவில் – ஈரோடு – சங்ககிரி
வரை 71 கி.மீ. சாலைகள் அமைக்கப்படும்.

————–

– சாலைகளை மேம்படுத்த மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு
ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படும். தமிழகத்தில் 1,300 கி.மீ. மாநில
நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

————-

– விபத்து நடக்கும் இடங்கள் என 61 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அங்கு ரூ.2,300 கோடியில் விபத்து தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

————-

– தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடியில்
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

– விமான நிலையங்களில் உள்ளதுபோல நவீன வசதிகளுடன்
மதுரை, கோவை, சேலத்தில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

– பல ஆயிரம் கோடியில் சென்னையில் 3 உயர்மட்ட சாலை.. 6 மாதங்களில் பணி துவக்கம்..

-தேசிய நெடுஞ்சாலைகளின் அனைத்து டோல்கேட்களிலும்
கழிப்பறைகள் கட்டப்படும்…

————————–

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தாம்பரம் – வண்டலூர் இடையே
ரூ.22 கோடியிலும், வண்டலூர் – கூடுவாஞ்சேரி இடையே ரூ.50
கோடியிலும் சாலைகள் மேம்படுத்தப்படும். தாம்பரம் – செங்கல்பட்டு
இடையே ரூ.2,250 கோடியிலும், பூந்தமல்லி – மதுரவாயல் இடையே
ரூ.1,500 கோடியிலும், திருவள்ளூரில் ரூ.1,000 கோடியிலும் உயர்மட்ட
சாலைகள் அமைக்கப்படும்.

————————–

-துறைமுகம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளின் கீழ், இந்தியா
முழுவதும் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.

இதில், ரூ.1.20 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்யப்பட
உள்ளது. இதனால் தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு நேரடி
வேலைவாய்ப்பு கிடைக்கும்.

——————-

சென்னை, தாம்பரம் – வண்டலுார் – கூடுவாஞ்சேரி சாலையை, எட்டு
வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, 72.41 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

சென்னையை நோக்கி வரும், தாம்பரம் – செங்கை; பூந்தமல்லி –
கோயம்பேடு – வாலாஜாபேட்டை சாலை, ஆறுவழிச் சாலையாக்குதல்;

சென்னை – திருப்பதி; சென்னை – நெல்லுார் ஆகிய நெடுஞ்சாலைகள்,
1,000 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்படும்.

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, 2,250 கோடி ரூபாய்; பூந்தமல்லி –
மதுரவாயல் இடையே, 1,500 கோடி ரூபாய்; சென்னை – நெல்லுார்
இடையே, 1,000 கோடி ரூபாயில் மேம்பால சாலைகள் என, சென்னை
நோக்கி வரும் சாலைகளுக்கு, 5,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

20 ஆயிரம் கோடி

சென்னை – பெங்களூரு இடையே, 20 ஆயிரம் கோடி ரூபாயில், விரைவு
சாலை அமைக்கப்படஉள்ளது. தமிழக அரசு நிலம் ஒதுக்கிக்

கொடுத்ததும், பணிகள் துவக்கப்படும். கிருஷ்ணகிரி – திண்டிவனம்;
தேனி – குமுளி; சென்னை – திருப்பதி சாலை விரிவாக்கப் பணிக்கு நிதி
ஒதுக்கப்பட்டு விட்டது. சென்னை – திருப்பதி இடையே, திருவள்ளூரில்,
புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும்.

திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலை, 4,000 கோடி; விழுப்புரம் – நாகை,
6,000 கோடி; சென்னை – தடா, 500 கோடி மற்றும் பூந்தமல்லி –

கோயம்பேடு இடையே, 1,500 கோடி ரூபாயில் சாலைகளை விரிவாக்க,
நிதி தயாராக உள்ளது. நான்கு மாதங்களில், பணிகள் துவங்கும்.

நாகை – ராமநாதபுரம் – துாத்துக்குடி; முசிறி – நாமக்கல் மற்றும்
மதுரையில் இரு பகுதிகள் என, 1,300 கி.மீ., துாரத்துக்கு, வட்ட
சாலைகள் அமைக்கும் பணிகள், விரைவில் துவங்கும். பெரம்பலுார் –
மத்துார் – திண்டிவனம்; திருப்பூர் – ஒட்டன்சத்திரம்; கொடை ரோடு –
பழநி கொடை ரோடு உள்ளிட்ட சில சாலைகள், தேசிய
நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்.

2,000 கோடி ரூபாயில், திண்டுக்கல் –
கொட்டாம்பட்டி சாலைகள் என, இந்த சாலை திட்டங்கள், 60 ஆயிரம்
கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

துாத்துக்குடிக்கு ஜாக்பாட்

துாத்துக்குடி துறைமுகம், பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில்,
3,000 கோடி ரூபாயில் ஆழப்படுத்தப்படும். இந்த ஆண்டு அதற்கான,
‘டெண்டர்’ கோரப்படும். இது, தமிழக தொழில் வளர்ச்சிக்கு உதவும்;

துாத்துக்குடியில் இருந்து, அமெரிக்காவுக்கு நேரடியாக சரக்குகளை
அனுப்ப முடியும். இதனால், துறைமுகத்தில், ஆண்டுக்கு, 3 லட்சம் டன்
சரக்குகளை கூடுதலாக கையாள முடியும். சரக்கு கையாளும் செலவு,
50 சதவீதம் குறையும்.
—————–

மேலும், 300 ஏக்கரில், எண்ணுாரிலும்; 800 ஏக்கரில், துாத்துக்குடியிலும்,
கடலோர வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.பூம்புகாரில், 148
கோடி ரூபாய்;

சின்னமுட்டத்தில், 74 கோடி ரூபாயில், மீன்பிடி துறைமுகங்கள்
அமைக்கப்படும். தமிழக மீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும்
வகையில், தலா, 80 லட்சம் ரூபாயில், 250 படகுகள் வழங்கப்படும். இது,
மீனவர் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

– சென்னை அருகே, நெம்மேலி, மப்பேடு ஆகிய இடங்களில், இரு சரக்கு
தளவாட பூங்காக்கள் அமைக்கப்படும்.

————
கன்னியாகுமரி – ராமேஸ்வரம்; கன்னியாகுமரி – விழிஞ்ஞம் இடையே,
படகு போக்குவரத்து விரைவில் துவங்கப்படும்.

புதுச்சேரி இடையே, கடல்வழி சரக்கு போக்குவரத்து விரைவில்
துவங்கப்படும். அது, சென்னை போக்குவரத்து பிரச்னையை தீர்க்கும்.

-ரூ.200 கோடி முதலீட்டில் சென்னை- கன்னியாகுமரி-திருவனந்தபுரம்
இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

மத்திய அமைச்சரவை முடிவின் படி குளச்சல் துறைமுகம் திட்டத்தை
செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

– தமிழகத்தில் 12 நீர்வழி போக்குவரத்து வழிகளுக்கு ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது”

—————————
சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் கட்டமைப்புகளை மேம் படுத்த
ரூ.16 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். இதில், தமிழகத்தில் ரூ.2.50
லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

————————————

CLIMAX –
( மிக முக்கிய, திடுக்கிட வைக்கும் அறிவிப்பு….)

மும்பையில், பயணி படகு போக்குவரத்து விரைவில் துவங்கப்
படுகிறது.

பின், மும்பை – சென்னை இடையே, படகு போக்குவரத்து துவங்கப்படும்.
( மும்பை அரபிக்கடற்கரையில் இருக்கிறது…
சென்னை – வங்காள விரிகுடாவில்…!!! ஆக, இது கடல்கள்
இணைப்புத் திட்டம்….!!! )

—————————————————

பின் குறிப்பு – கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்த கனவு வியாபாரி
அறிவித்த திட்டங்களில் எவ்வளவு – தமிழகத்தில் –

நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று யாராவது கண்டுபிடித்து
சொன்னால் தேவலை…!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணைய தளம், இணையதளம். Bookmark the permalink.

14 Responses to அடேயப்பாவ்….. ” கனவுகளின் வியாபாரி “

 1. Amuthan சொல்கிறார்:

  சுசீந்திரம் பாலம் வேலை நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வந்து விட்டது
  கன்னியாகுமரி முதல் கேரளா வரையிலானா நான்கு வழிச் சாலை வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் தொடங்கி நடை பெற்றுக் கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு (2018) பயன் பாட்டுக்கு வரும்.
  நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்ததும் வகையில் மேம்பால வேலைகள் நடை பெற்றுக் கொண்டு வருகிறது.
  குளச்சல் துறைமுகத்திற்கான ஆரம்ப கட்ட உட் கட்டமைப்பு வேலைகள் நடை பெற்று வருகின்றது.
  ஆனால் இவை அனைத்தும் எந்த திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது எனத் தெரியவில்லை,
  இதற்கான புகைப் பட ஆதாரங்கள் உள்ளன, பகிர்வதற்கான வழிமுறையை கூறினால் பகிரலாம்.

  • Gopi சொல்கிறார்:

   ரொம்ப அவசரப்படறீங்க.. மந்திரி தன் தொகுதியை எப்படி கவனிச்சுப்பார்னு தான் தெரியுமே.
   மந்திரி தொகுதியை விட்டு கொஞ்சம் வெளியே வாங்க அமுதன்.

 2. இளங்கோ சொல்கிறார்:

  // கனவு காண்பதற்கும், “கப்சா” விடுவதற்கும்….
  யார் அனுமதி தேவை…?

  சொல்வதையெல்லாம் நம்ப இளிச்சவாயர்கள் இருந்தால்…மதி…..!!! //

  ஸூப்பர் பஞ்ச் சார்.

 3. Amuthan சொல்கிறார்:

  அவசரப்படவில்லை
  // பின் குறிப்பு – கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்த கனவு வியாபாரி
  அறிவித்த திட்டங்களில் எவ்வளவு – தமிழகத்தில் –//
  இதற்காகத் தான் குறிப்பிட்டு இருந்தேன்.
  அந்த தொகுதியும் தமிழ் நாட்டில் தானே இருக்கிறது???
  பல பேர் தன் தொகுதியை கூட கவனிப்பதில்லை. அவர்களுக்கு மத்தியில் இவ்வளவு விசயம் நடந்தது ஆச்சரியமே!…
  மேலும் கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.

  • நிமித்திகன் சொல்கிறார்:

   //பல பேர் தன் தொகுதியை கூட கவனிப்பதில்லை//
   உண்மைதான்.
   “குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்”

  • புது வசந்தம் சொல்கிறார்:

   நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடிந்ததா ? டோல் கேட் ல் காசு மட்டும் வாங்குகிறார்களே ?

  • இளங்கோ சொல்கிறார்:

   “குளச்சல் துறைமுகம்” சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்,
   தமிழக பாஜக மந்திரி, வெகு விரைவில் “சி.எம்.முன்னிலையில், பி.எம்.
   அடிக்கல் நாட்டுவார்” என்று சொன்னார். அந்த “வெகு விரைவில்”
   என்பதற்கு பாஜக டிக்ஷனரியில் என்ன அர்த்தமோ ?

   இதைத்தவிர ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கைக்கு கடலுக்கு உள்ளும்,
   மேலும் பாதை அமைக்கப்போவதாக வேறு “கப்சா” விட்டார். அது என்ன
   ஆயீற்று என்று தெரியவில்லை.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  அடேகப்பா, கண்ண கட்டுதே ….

 5. seshan சொல்கிறார்:

  The River connecting project looks viable. but no idea about the funding area.

  because i was in Rajmundry – nearly 2 year. Gothavary river bed, almost with the span on 2 km water 40 ft depth going to sea almost 8 months per year average.( 75 km away from sea)

  so many days thought about why we cannot take this water to our area like using veeranm pipe to tamilnadu by some project.

  if same time we start work for Gothavari to Krishna connection apart from existing one and Krishna to pennai river (somasila dam ) , we can fully utilize our krishna channel to get the water.

  it is practical possible project. if atleast we get 10 to 20 tmc every month, we can make tn like kerala with proper inner irrigation of tamilnadu. the good vision is there but mission ????

  – கோதாவரியில் இருந்து 3 ஆயிரம் டிஎம்சி நீர் கடலில் கலக்கிறது…
  எனவே, கோதாவரியிலிருந்து 300 டி.எம்.சி. தண்ணீர் கொண்டுவந்து,
  கிருஷ்ணா ஆற்றில் விட்டு, பின்னர் அதிலிருந்து சோமசீலா

  அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும் பிறகு,
  சோசீலாவிலிருந்து 100 டி.எம்.சி. தண்ணீர் எடுத்து கர்நாடகத்துக்கும்
  தமிழ்நாட்டுக்கும் பயன்படும் வகையில் காவிரியில் விடப்படும்…

 6. பிரனீஷ் சொல்கிறார்:

  ” படும் ” என்றே முடிகிறது …! தமிழகத்தின் உரிமையான காவிரி நீருக்கு வழி கூறாமல் .. காேதாவரி நீரை காெண்டு வரப் பாேகிறார் ….? ஆறுகளில் நீர் ? வழி பாேக்குவரத்து எனகிறார்… நீரிலும் … நிலத்திலும் ஓடும் கார் பாேட் விடுவாராே ….? ஏன் என்றால் தமிழக ஆறுகளில்.தண்ணீரை பார்ப்பதே ” கனவில் மட்டுமே ” … !!!

 7. bandhu சொல்கிறார்:

  மும்பையிலிருந்து சென்னைக்கு படகு போக்குவரத்தா? மத்திய ஆட்சியில் ஒரு செல்லூர் ராஜா!

 8. புதியவன் சொல்கிறார்:

  “கனவு காண்பதற்கும், “கப்சா” விடுவதற்கும்…. யார் அனுமதி தேவை…?”

  உண்மையாகவே சிரித்துவிட்டேன். யாரு இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதினாலோ, அல்லது இன்னும் 25 வருடத்துக்கான வரைவறிக்கையை இப்போதே வெளியிட்டாலும் யார் கண்டுகொள்ளப்போகிறார்கள் என்பதினாலோ, அமைச்சர் அவர்கள் இத்தனை திட்டங்களையும் சொல்லிவிட்டாரோ?

  “அறிவித்த திட்டங்களில் எவ்வளவு – தமிழகத்தில் –
  நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று யாராவது கண்டுபிடித்து
  சொன்னால் தேவலை…!!!”

  பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் அவருடைய தொகுதியில் பல வேலைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்று படித்தேன். அதைத் தவிர வேறு என்ன திட்டம் தமிழகம் முழுமைக்குமாக நடைபெற்றுள்ளது என்பது சந்தேகம்தான். (திட்டங்களைப் பற்றிக் கவலை கொள்ளும் அரசும் தமிழகத்தில் இல்லையே)

 9. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  வரும்ம்!!! ஆனா வராது!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.