வித்தியாசமான, நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு மசூதி cum தேவாலயம்…!!!
இந்த புகைப்படங்கள் ஸ்பெயின், கார்டோபாவிலுள்ள
மசூதி – கதீட்ரல் என்று அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான
இடத்தினுடையவை…..

எப்படி வித்தியாசம்…?

துவக்க காலத்தில், எட்டாம் நூற்றாண்டு வரை, இது ஒரு சிறிய
கிறிஸ்தவ தேவாலயமாக இருந்தது. ( Catholic Basilica of
Saint Vincent of Lérins )

கி.பி.784-ஆம் ஆண்டில், இஸ்லாமிய (அப்துல் ரெஹ்மான்-I) கால
கட்டத்தில் இது ஒரு மிக பிரம்மாண்டமான மசூதியாக விரிவாக்கம்
செய்யப்பட்டது.

இந்த மசூதி, 16-வது நூற்றாண்டில், கிருஸ்தவர்களின் ஆட்சி காலத்தில்
மீண்டும் ஒரு ரோமன் கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றப்பட்டது.

இந்த மசூதி – கதீட்ரலின் விசேஷம் என்ன….?

இப்போதும் தொழுகை நேரத்தில் தன்னந்தனியாக ஒரு இஸ்லாமியர்
வந்து இந்த தளத்தில் பாங்கும் தொழுகையும் நடத்துகிறார்.

அவரை தொழுகையில் ஈடுபட அனுமதித்து –
அந்த நேரத்தில், கிறிஸ்தவர்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள்.

அவர் வந்து சென்றபிறகு மீண்டும் தங்கள் பிரார்த்தனையை
தொடர்கிறார்கள்…

உலகில் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.

மத நல்லிணக்கம் அதில் மிக முக்கியமானது – அமைதியான,
நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது…..!!!

ஒரு அற்புதமான வீடியோ அனுபவத்திற்கு தயாராகுங்கள் –

—————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to வித்தியாசமான, நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு மசூதி cum தேவாலயம்…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… பகிர்வு நன்றாக இருந்தது. நல்ல அதற்குரிய Bபாவத்தில் பாங்கு ஓதும்போது, நம்மை சிலிர்க்கவைக்கும் தன்மை அதற்கு உண்டு. நல்ல ‘பாங்கை’ நான் துபாய் ஏர்போர்ட்டில் பலமுறை கேட்டிருக்கிறேன். எல்லோராலும் அந்த உணர்வைக் கொண்டுவர இயலாது. மனித நேயத்தைப் பாராட்டுகின்ற வேளையில் ஓரிரு செய்திகள் சொல்லலாம் என நினைக்கிறேன் (பலருக்குத் தெரிந்திருக்கலாம்).

  1. இஸ்லாம், கிறித்துவத்தை, தன் முன்னோடியாக ஏற்றுக்கொள்கிறது. அதாவது கிறித்துவர்களும் இஸ்லாமியர்கள்தான், ஆனால், அவர்கள் ‘நபியான ஈசாவை’ ஏசுகிறிஸ்து என்று கடவுளாக வழிபடுவதன்மூலம் இஸ்லாமிய நெறிமுறைகளிலிருந்து விலகிச்சென்றவர்கள் என்பது அதன் கருத்து. கிறித்துவர்களும் உருவ வழிபாடு (ஏசுகிறிஸ்துவுக்கு, மேரி மாதாவுக்கு உருவம் கொடுப்பதன்மூலம்) செய்பவர்கள். இருந்தபோதும் இஸ்லாமியர்கள், கிறித்துவப் பெண்களை மணந்துகொள்வதற்கு, மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ( நான் அறிந்த வரையில்)

  2. இங்கு ‘பாங்கு’ ஓதும்போது நின்ற இசை/ப்ரேயர், பாங்கு ஓதியபின் (இது எல்லோரையும் தொழுவதற்காக வாருங்கள், அதற்கான நேரம் இது என்று சொல்லுவது. அதுவும் குரானின் வரிகள்தான்) அந்தப் பெரியவர் தொழ முற்படும்போது, இசை தொடர்கிறது. இது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

  3. மற்ற கடவுள்களின் உருவப் படங்கள் இருக்கும் இடம் தொழுவதற்கு உகந்த இடமல்ல. இது ஆசார இஸ்லாமியர்களின் நெறிமுறைக்கு மாறானது.

  ஆனாலும் காணொளி மனதை நெகிழ்விப்பதாக இருந்தது.

  • Sundar Raman சொல்கிறார்:

   I had been to Spain and to their musuems , they themselves portray so many art, drawings of their past , war, history etc., – they literally killed so many people in the earlier wars , ( they almost finished the local population and culture in America ) – on that night , I was talking to a English man , I still remember his words , he was saying that …thank god that English people came to India and not the Spanish , had it been, they would have just finished India totally , no culture , no past would have survived their onslaught .

   So I was little amused to see your video , yours look like a musical program with the church as a background or stage .

   And this is what the Wikipedia says “Since the early 2000s, Spanish Muslims have lobbied the Roman Catholic Church to allow them to pray in the cathedral.[16][17] This Muslim campaign has been rejected on multiple occasions, both by the church authorities in Spain and by the Vatican.[16][18]”
   https://en.wikipedia.org/wiki/Mosque%E2%80%93Cathedral_of_C%C3%B3rdoba

   now a days you can’t believe Wikipedia , I hope your video is true.

 2. தமிழன் சொல்கிறார்:

  கா.மை சார்…. இந்த ‘வாராக் கடன்’ பற்றி எழுதுங்களேன். வாராக் கடனால் வங்கிகள் கஷ்டப்படுவதால் (?) 2.2 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்குக் கொடுக்கப்படுகிறதாம். யார் இந்த வாராக் கடனுக்குக் காரணம்? ஏழை விவசாயிகளும், ஏழை மாணவர்களுமா அல்லது அரசியல்வாதிகளும் இந்த so called தொழிலதிபர்களுமா?

 3. பிரனீஷ் சொல்கிறார்:

  இந்த பதிவு ” மனமிருந்தால் மார்க்கமுண்டு ” என்று கூறுவதற்கு – ஒரு எடுத்துக்காட்டு .
  //அவதாரங்களில் மிகச் சிறந்தவராகிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செல்கிறார்.:– “எந்த மனிதரிடமாவது அசாதாரண ஆன்மீக சக்தி வெளிப்படுமானால் அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்” // என்று …. இதைவிட மத நல்லிணக்கத்திற்கு வேறு யாரால் கூற முடியும் …. ! ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதை தற்காலத்தில் கடைபிடித்தால் வேற்றுமைகள் களையப்படும் …. !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.