புத்திசாலித்தனமான ‘மூவ்’…! ஆயுசு கெட்டி – எடப்பாடியார் அரசுக்கு…!!! ( இப்போதைக்கு…!!! )


தஞ்சாவூர் பொம்மையை எப்படி தள்ளி விட்டாலும், மீண்டும்
மீண்டும், நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்து விடும். அது போல் தான்
இருக்கிறது எடப்பாடி அவர்களின் அரசு.

எடப்பாடி / அதிமுக அரசு நீடிக்க வேண்டுமா, வேண்டாமா
என்கிற பிரச்சினைக்குள்ளேயே இப்போது போகவில்லை.

கொலை, கொள்ளை, கடத்தல், என்று எதற்கும் துணிந்த,
மன்னார்குடி மாஃபியா கும்பல், எந்த காரணத்தை முன்னிட்டும்
இந்த விஷயத்தில் ஜெயித்து விடக்கூடாது.

இந்த சக்திகள் ஜெயித்தால், தமிழகமே நாசமாகி விடும்.
எனவே, இந்த கும்பல் தோற்கடிக்கப்படுவது,
அழித்து ஒழிக்கப்படுவது மிக மிக அவசியம் என்கிற ஒரே
பார்வையில் மட்டும் தான் இந்த விஷயம் அலசப்படுகிறது.

19 சட்டமன்ற உறுப்பினர்களை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது
என்று கேட்டு, ஒரு வாரத்திற்குள் விளக்கம்
தருமாறு, சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.

கவர்னரிடம் மனு கொடுத்தது கட்சித்தாவல் கிடையாது என்று அவர்கள் வாதாடலாம்… இன்னும் என்னென்னவோ
எதிர்கேள்விகளும் கேட்கலாம்.

முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை –
வேறு முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று தான்
நாங்கள் மனு கொடுத்தோம் – அது கட்சித்தாவல் அல்ல என்று
அவர்கள் வாதாடலாம்.

ஆனால், அதைச் செய்ய அவர்கள் போக வேண்டிய இடம்,
பெட்டிஷன் கொடுக்க வேண்டிய இடம் ராஜ்பவன் அல்ல…

முதலமைச்சரை, அதாவது ஆளும்கட்சியின் சட்டமன்ற
தலைவரை, மாற்ற வேண்டுமானால் அவர்கள் போக
வேண்டியதும் மனு கொடுக்க வேண்டியதும் கவர்னரிடம் அல்ல.

அது உள்கட்சி பிரச்சினை…. அதற்கு, அவர்கள் செய்ய
வேண்டியது, சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி,
வேறு ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முயற்சிப்பது
தான். அதைச்செய்ய அவர்களிடம் போதிய மெஜாரிடி
உறுப்பினர்கள் இல்லையென்றால், மரியாதையாக மெஜாரிடி
உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பவரை ஏற்றுக் கொள்ள வேண்டியது
தான்.

135 எம்.எல்.ஏ.க்களில், 19 பேர் மட்டும் தனியாக இயங்க
நினைத்தால், அது கட்சி விரோத செயல் தான்….
கட்சி விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை, தகுதி நீக்கம்
செய்ய வேண்டுமென்று கோருவதற்கு கொரடாவிற்கு
சட்டப்படி உரிமை இருக்கிறது.

விளக்கம் கேட்கவும், பதில், திருப்திகரமாக இல்லா விட்டால்
தகுதி இழப்பு செய்யவும், சபாநாயகருக்கும் அதிகாரம் இருக்கிறது.

சபாநாயகர், அவர்களை தகுதி இழப்பு செய்ய கட்சி விரோத
செயல் என்கிற அந்த ஒரே ஒரு காரணம் போதும்…

இனி அவர்கள் ரிசார்ட்டில் ஆட்டம் போடவும் முடியாது…
மேற்கொண்டு எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும் முடியாது.

ஒரு வாரத்திற்குள் சபாநாயகரிடம் சரண்டர் ஆகிறவர்கள்
தப்பிப்பார்கள். மற்றவர்கள் நிச்சயமாக எம்.எல்.ஏ. பதவியை
இழக்க நேரிடும்.

( இந்த உத்திரவை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றம்
செல்லலாம் என்பது வேறு விஷயம்…
இப்போதைக்கு அவர்களை நீக்குவதை தடுக்க முடியாது….
நீக்கிய பிறகு செல்லலாம்… செல்லட்டுமே…!!!

பிப்ரவரியில் நடைபெற்ற “நம்பிக்கை ஓட்டு
தீர்மானம்” பற்றிய வழக்கு என்ன கதி ஆனது…? அதன்
வரிசையில் இதுவும் போய் நின்று கொள்ளும்…!!!…
நிற்கட்டுமே…!!! )

233 உறுப்பினர்கள் உள்ள சட்டமன்றத்தில், இந்த 19 பேரை நீக்கி
விட்டால், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக
குறைந்து விடும்…. இதில் 107+1 ஆக 108 உறுப்பினர்கள்
இருந்தால், ஆளும் கட்சி தப்பி விடும்… தற்போதைய நிலவரப்படி
ஆளும் கட்சியில் 135-(19+3) 22 = 113 உறுப்பினர்களுக்கு
குறையாமல் இருப்பார்கள்…

எனவே, எடப்பாடி அவர்களின் அரசுக்கு இப்போதைக்கு
ஆபத்து இல்லை என்று தான் கொள்ள வேண்டும்.
இந்த மாஃபியா கும்பலின் அட்டகாசம் இத்துடனாவது ஒழிந்தால்
தேவலை… தமிழகத்தின் மற்ற பிரச்சினைகளை தனியே
பார்த்துக் கொள்ளலாம். இப்போதைய தலையாய பிரச்சினை – இவர்களை அடக்குவது தான்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to புத்திசாலித்தனமான ‘மூவ்’…! ஆயுசு கெட்டி – எடப்பாடியார் அரசுக்கு…!!! ( இப்போதைக்கு…!!! )

 1. D. Chandramouli சொல்கிறார்:

  “இப்போதைய தலையாய பிரச்சினை – இவர்களை அடக்குவது தான்.” Period.

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  விளக்கம் கேட்கவும் , தகுதி நீக்கம்செய்யவும் அதிகாரம் உள்ள சபாநாயகரை முதல்வராக்கினால் பிரச்சனை இல்லையென்றும் … சமரசத்திற்கும் தயார் என்று அவர்கள் கூறுவது … தரு.தனபால் மற்றுமுள்ள முப்பது ” தலித் ” எம்.எல.ஏ.க்களை தங்கள பக்கம் இழுக்கும் எண்ணமாக இருக்குமாே …? இவ்வளவு கேலிக்கூத்துக்களையும் …. பார்த்துக் காெண்டு இருக்கும் ஊழலற்ற நாடாக்க முயலும் சூத்திரதாரிக்கு … ஏற்புடையதா …?

 3. MANI சொல்கிறார்:

  I am not saying that edapaadi is a clean man or
  ops is a good man but one thing i want to say is that i dont
  want sasikala and her relatives getting any leverage
  in this situation and it shoud be avoided at any cost.
  their efforts shoud be nipped in bud. but one thing is
  sure if the govt is toppled by dinakaran then his own
  members will not be elected in the election if there is any.
  this those ninteen mlas also know.

 4. இளங்கோ சொல்கிறார்:

  ஸ்டாலின் செய்தியாளர்களிடம் சொல்வது :

  இந்த ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென பித்தம் பிடித்தவாறு அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இதையெல்லாம் நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். முதல்வர் நம்பிக்கை ஓட்டெடுப்பு
  நடத்த வேண்டுமென்று கவர்னரை வற்புறுத்துவோம். அவர் தாமதித்தால், ஜனாதிபதியிடம் செல்வோம்.

  முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை மாற்ற வேண்டுமென 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் எழுதி கொடுத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தமட்டில் நாங்கள் சொல்ல விரும்புவது, இந்த ஆட்சி இனியும் தொடரக்கூடாது என்பதே.

  நான் கேட்பது :
  மற்றவர்களையும், கவர்னரையும், கோர்ட்டையும் கெஞ்சிக் கொண்டிருப்பதை விட, நேரடியாக ஸ்டாலின் ஏன் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு
  வரக்கூடாது ?? அவர் ஏன் இதைச் செய்ய மாட்டேனெங்கிறார் ?

  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் கே.எம்.சார்?

  • தமிழன் சொல்கிறார்:

   ஸ்டாலின் ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம்’ கொண்டுவந்து அரசு கவிழ்வது சந்தேகம். அதற்கு தினகரன் கும்பல் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும். அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிமுக அரசை எதற்குக் கவிழ்க்கவேண்டும்? அரசு கவிழ்ந்தால், திமுக ஆட்சியமைக்க அழைக்கப்படுவதும் சுலபமல்ல. ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தி 6 மாதங்கள் வரை பாஜக ஆட்சி செய்யமுடியும். இவை எதுவும் தினகரனுக்கும் திமுகவுக்கும் நல்லதல்ல. தினகரனுக்கு இப்போது ஆட்சியினால் ஒரு லாபமும் இல்லை (சாராய வருமானத்தைத் தவிர). ஆனால் கட்சி போய்விடக்கூடாது, அது தங்க முட்டையிடும் வாத்து. அதற்காகத்தான் திவாகரன் கும்பல், தினகரன் கும்பல், சசிகலா கும்பல் போன்ற மன்னார்குடி மாஃபியாக்கள் ஒன்றுசேர்ந்திருக்கின்றன.

   ஸ்டாலின் எதிர்பார்ப்பது, இன்னும் 4 வருடம் காத்திருக்காமல், இப்போதே அரசு கவிழ்ந்து, நாளைக்கே திரும்பவும் எலெக்ஷன் வந்தால், நிறையபேரைக் கூடச்சேர்த்துக்கொண்டு தான் திரும்பவும் திமுக அரசாட்சியைக் கொண்டுவந்துவிடலாம், முதலமைச்சராகிவிடலாம், கூடவே உதயனிதியை இளைஞரணித் தலைவராகக் கொண்டுவந்துவிடலாம் என்பது. துரைமுருகனுக்குத் தன் பையன் அரசியல்வாதியாக வந்துவிடவேண்டும், எம்.எல்.ஏவாகிவிடவேண்டும் என்பது. இதைப்போன்ற ஆசைதான் பிறருக்கும்.

   எல்லோரும் பாஜக உள்ளே நுழைகிறது, அதிமுகவை தலையாட்டிப் பொம்மையாக்குகிறது என்ற எண்ணம். வேறு என்ன ஆப்ஷன் எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இருக்கிறது? மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் எதையும் அவர்களால் தமிழகத்துக்குச் செய்யமுடிவது கடினம். நாளை அவர்கள்தான் அதிமுக என்ற நிலையும், மக்கள் ஆதரவும் இருந்தால், ஒருவேளை ஜெ.வின் வழியில் அவர்கள் தொடர முயலலாம், பாஜகவுக்கும் தமிழகத்தின் தாங்கள் விரும்பிய ஆதரவு மக்களிடம் கிடைக்காது என்று புரியலாம்.

   பார்க்கலாம்… என்ன நடக்கப்போகிறது என்பதை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.