விண்ட் பவர் ரிசார்ட் … யார் கணக்கு சரியாக இருக்கும் …..?


Wind power resort பார்த்திருக்கிறீர்களா…? பாண்டிச்சேரி, அரியாங்குப்பம் கடற்கரை அருகே….!!!


குறைந்த பட்சம் 30 பேரை ரிசார்ட்டுக்கு கொண்டு வந்து
விட்டால் – மிரட்டியே இப்போதைய ஆட்சியை பணிய
வைக்கலாம் – அல்லது சொன்னபடி கேட்கக்கூடிய
திரு தனபாலை போட்டி முதல்வராக முன் நிறுத்தலாம் –
– திருவாளர் தினகரனின் கணக்கு….?

திருவாளர் தினகரனுடன் ஒத்துப்போவது என்று தீர்மானித்து
விட்டால் – தேர்தல் வராமலே முதலமைச்சராகி விடலாம்….
– திரு.ஸ்டாலின் அவர்களின் கணக்கு…..?

சும்மா பயமுறுத்திக் கொண்டே இருப்பாரே தவிர,
ஆட்சியை கவிழ்க்கும் அளவிற்கு துணிய மாட்டார் –
– திருவாளர் ஓபிஎஸ் அவர்களின் கணக்கு….?

19 பேரில் 10 பேரை தூக்கி விடலாம் –
– திருவாளர் எடப்பாடி அவர்களின் கணக்கு…?

அவர் போடும் கணக்கொன்று –
இவர் போடும் கணக்கொன்று –

அவர், இவர், எவர் போடும் கணக்கென்றாலும் –
எல்லாமே தவறாகலாம்….

இறுதியில் டெல்லி போடும்
கணக்குக்கு நிகராகுமா….. ??? 🙂 🙂 🙂

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to விண்ட் பவர் ரிசார்ட் … யார் கணக்கு சரியாக இருக்கும் …..?

 1. தமிழன் சொல்கிறார்:

  “யார் போடும் கணக்கு சரியாக இருக்கும்?” என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஆவலாகப் பார்க்கவந்தால், எங்களைக் கேள்வி கேட்கிறீர்களே.

  எனக்கு ஸ்டாலின் அறிக்கையைப் பார்த்தால் கொஞ்ச நஞ்ச எரிச்சல் இல்லை. நீட் கொண்டுவந்தபோது ‘2ஜி கொள்ளையைப் பதுக்க’ ஆதரவு தந்துவிட்டு, மீத்தேன் வாயுக்கு, அது பூவிலிருந்து எடுக்கற தேன் என்று நினைத்துக்கொண்டு கையெழுத்து போட்டுவிட்டு, இப்போ பதவி வெறில, ‘உடனே நீ விலகு, எனக்கு சீட்டைக் கொடு’ என்று புலம்புவதைப் பார்த்தால், இருக்கற கொள்ளைக் கும்பல் போய் இந்தக் கொள்ளையர்கள் வந்துடப்போறாங்களேன்னு யோசிக்கறேன்.

  தினகரனுக்கு இப்போ கட்சி தங்கள் பிடில இருக்கணும். இல்லைனா, முதலுக்கே மோசம். அவங்க இப்போ அதிமுக ஆட்சியைத் தொடரவைக்க எந்தக் காரணமும் இல்லை. ஏன்னா, பதவி ஆசைல, சம்பாதிக்கற ஆசைல, கூட இருக்கற 20 எம்.எல்.ஏக்களுமே எடப்பாடி ஆதரவாளர்களாக மாறிடுவாங்க (இரட்டை இலையும் ஆட்சிக்கு வந்து சேர்ந்துடுச்சுன்னா, மன்னார்குடி கொள்ளையர்கள் காலிதான்). அதனால நிச்சயம் ஆட்சியைக் கவிழ்க்கப் பார்ப்பார்கள். அவர்கள் எடப்பாடிக்கு நேரம் கொடுக்கக் கொடுக்க மன்னார்குடி கும்பலின் கைகளிலிருந்து கட்சி போய்விடும்.

  20-25 பேர், அதிமுக கட்சியிலிருந்து பிரிந்து தனிக் குழுவாக இயங்க முடியாது (கட்சித் தாவல் தடைச் சட்டம் மூன்றிலொரு பங்கு வேணும்னு சொல்லுது). அதனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்வதுதான் ஒரே வழி.

  அப்படி நடந்தால், திமுகவுக்கு இந்த 20-30 பேர் ஆதரவு தெரிவிக்கமுடியாது (அதாவது கவர்னர் ஸ்டாலினை அழைக்கமுடியாது. ஏனென்றால், பெரிய கட்சி எடப்பாடி அதிமுகதான்). கவர்னர் கையில் முடிவு செல்லும். அப்போ பாஜக யாருக்கு மறைமுகமா ஆதரவாக இருக்கோ அவங்களுக்குத்தான் நல்ல செய்தி கிட்டும்.

  ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம்’ கொண்டுவரவேண்டும் என்று எல்லாக் கட்சிகளும்-ராமதாஸ், திருமா, வி.காந்த், கம்யூனிஸ்ட் போன்ற அனைத்து உதிரிக்கட்சிகளும் (ஏன்னா அவங்கள்ள பெரும்பான்மையிடம் எம்.எல்.ஏக்களே இல்லை. திரும்ப தேர்தல் வந்தா, வந்தவரை லாபம்தானே) இப்போ கூச்சலிடும். பார்க்கலாம்.. இப்போதைக்கு நல்ல திரைப்படம்தான் வரலை. இந்த நாடகங்களையாவது பார்த்து ரசிப்போம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   // “யார் போடும் கணக்கு சரியாக இருக்கும்?” என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஆவலாகப் பார்க்கவந்தால், எங்களைக் கேள்வி கேட்கிறீர்களே.//

   முதலில் சட்டபூர்வமான நிலையை சொல்லி விடுகிறேன்…
   பிறகு என் கருத்து –

   19 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் சட்டமன்ற
   தலைவர் (முதலமைச்சர்) மீது நம்பிக்கை இல்லை. சரி….
   அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்…?

   சட்டமன்ற அதிமுக உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டவைத்து, அதில் தங்கள் எண்ணத்தை சொல்ல வேண்டும்… பெரும்பான்மை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால், எல்லாரும் சேர்ந்து புதிய தலைவரை (முதலமைச்சரை) தேர்ந்தெடுக்கலாம்.

   மாறாக, அவர்களின் கோரிக்கை பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டு, மெஜாரிடி மெம்பர்கள் இப்போதிருக்கும் தலைமையே தொடர வேண்டுமென்று தீர்மானித்தால் –

   இவர்கள் மரியாதையாக அந்த முடிவை ஏற்க வேண்டும்… அல்லது தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும்….

   ஒருவேளை மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை அவர்களால் திரட்ட முடிந்தால், கட்சியை பிளந்து, தனியே ஒரு பிரிவாக சட்டபூர்வமாக அமரலாம்…. பின்னர் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்தும் செயல்படலாம். இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் உண்டு.

   இது தான் சட்டபூர்வமான நிலைமை.
   இதில் கவர்னருக்கு எந்த சம்பந்தமோ, வேலையோ இல்லை. திருவாளர் தினகரன் குழுவினர், கவர்னரிடம் மனு கொடுத்தது வெறுமனே திசை திருப்பும் வேலை… நாடகம்…!!!

   இந்த இடத்தில் என் கருத்தையும் சொல்லி விடுகிறேன்…

   உண்மையிலேயே, வருமான வரி இலாகாவும், அமலாக்கப்பிரிவும் உடனடியாக செயல்பட வேண்டிய ஒரு தருணம் இது….

   இங்கு எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது…? இந்த செலவுகளுக்கான பணம் யாரிடமிருந்து,
   எந்த கணக்கிலிருந்து வருகிறது…? அந்த செலவினங்களின் பின்னணி என்ன, யார்…?
   என்பதை கண்டறிந்து அதிரடி நடவடிக்கைகளை இந்த ஏஜென்சிக்கள் எடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

   பாஜக தலையீடு என்பதையெல்லாம் தனியாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த மாதிரி அரசாங்க கஜானாவை கொள்ளையடித்து, அந்த பணத்தையே செலவழித்து ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களின் மீது உடனடி நடவடிக்கை அவசியம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    திரு.ஸ்டாலின் அவர்கள், எடப்பாடி அரசை, நம்பிக்கை ஓட்டு கோருமாறு கேட்பதை விட…

    தானே சட்டமன்றத்தில், எடப்பாடி அவர்களின் அரசின் மீது ஒரு “நம்பிக்கை இல்லா தீர்மானம்” கொண்டு வரலாம். ஆனால், அது திரு.தினகரன் குழுவினரின் ஆதரவை பெற்றால் தான் நிறைவேறும். இதைச் செய்வதில் இவர்கள் எல்லாருக்குமே சில சிக்கல்கள் இருக்கின்றன….

    தினகரன் கூட்டத்துடன் கூட்டு சேர்ந்தார் ஸ்டாலின் என்கிற இமேஜ் திரு.ஸ்டாலினுக்கு ஏற்பட்டால் – அவர் எதிர்காலம் அவ்வளவு தான்…!

    அதே போல், தினகரன் கூட்டமும், முதலமைச்சரை மாற்றி, தாங்கள் சொல்வதை கேட்கும் ஒருவரை முதல்வராக்கி அதிமுக ஆட்சி தொடர்வதை தான் விரும்புமே தவிர, ஆட்சியை கவிழ்த்து விட்டு – அனைவருமே வீட்டுக்கு போவதை அல்ல…!!!

    மேன்மை தாங்கிய கவர்னர் அவர்களுக்கு மும்பையில் எவ்வளவோ வேலைகள்….!!! எனவே, அவர் இப்போதைக்கு இந்த பக்கம் எட்டிக்கூட
    பார்க்க மாட்டார்…( டெல்லியிலிருந்து தாக்கீது வந்தாலொழிய ) –

    எனவே எல்லாரும் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நாடகம்
    ஆடிக்கொண்டு தான் இருப்பார்கள்…

    டிவி காரர்களுக்கு வேட்டை… தீனி கிடைத்துக் கொண்டே இருக்கும்…

    நாம், எரிச்சலை அடக்கிக்கொண்டு நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதைத்தவிர வேறு வழி இல்லை.

    பொறுமை எருமையை விடச்சிறந்தது –
    வளர்த்துக் கொள்ளுங்கள்…!!!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 2. D. Chandramouli சொல்கிறார்:

  It is unfortunate that Jayalalitha has left behind a legacy of Mannargudi family like an albatross around the neck of Tamils. What a mess in TN politics! Whichever way it takes a turn, it is like between a devil and a deep ocean. Bigg Business!!

 3. Thirumalachari thiruvengadam சொல்கிறார்:

  The only solution is to recommend the dissolution of the assembly and provide an opportunity to the people either accept a group which is less corrupt or produce a new setup.Unfortunately thirumangalam formula and BJP,s territorial ambition will only prolong this downright political chicanery in the name of democracy.Thiruvengadam

 4. MANI சொல்கிறார்:

  dinakaran is convicted in FERA and COFFEPOSA cases and the sword
  is hanging over his head . If the final judgement is delivered he cannot
  be in active politics.His projection of Dhanapal is to play the dalit card
  and confuse the MLAs. Governor should not budge for his tantrums.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.