தமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது….?


யூதர்கள் மிகப்பெரும்பாலான துறைகளில்
உலகிலேயே அதி சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்று
சொல்வதுண்டு….

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம், நீர் மேலாண்மை,
சொட்டுநீர்ப்பாசனம், ஆயுத தயாரிப்பு என்று பல
துறைகளிலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்…..

உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே
உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப்
பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும்
பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.

இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ
மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக தங்க வேண்டியிருந்த
Dr. Stephen Carr Leon என்பவர் எழுதிய ஒரு ஆராய்ச்சி
கட்டுரையை ( நன்றிகள் பல : தமிழாக்கத்திற்காக திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு )ஒரு வலைத்தளத்தில்
( http://nerudal.com/nerudal.58575.html ) படித்தேன். அதிலிருந்து சில தகவல்கள் –

—————————————–

யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்
என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.

ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக்
கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது
ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில்
ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த
திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி பண்ணிக் கொள்ள
முடியுமா? இந்தக் கேள்விகள் எனது 2-ஆம் ஆண்டில்
அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர
இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.

எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு,
கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார்
செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும்
ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள்
பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு
பார்க்க முடிவு செய்தேன்.

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக
இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி
முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள்.

அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக்
கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான
கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான்
போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச்
செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட
உதவி செய்வேன்.

அப்போது அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?”
என்று கேட்பேன். “ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி
கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?”
என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை
விடுவித்துக் கொண்டே இருப்பாள்.

( நமது மஹாபாரதத்தில், அர்ஜுனனின் மகன் அபிமன்யு
தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, சக்கரவியூகத்தின் உள்ளே
எப்படி நுழைவது என்கிற தந்திரத்தை கேட்டு தெரிந்து கொண்டது ஞாபகத்திற்கு வருகிறதா…? )

கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு
முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும்
கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட
மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும்
(nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை (salads)
ஆகியவற்றை உண்ணுகிறாள்.

மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று
நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு
நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய்
உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.

மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத
பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி
சாப்பிடுவதில்லை. இறைச்சி, மீன் இரண்டையும் ஒன்றாக
சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது
என்று நம்புகிறார்கள்..

உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள்.
முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம்
வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள்
சரிவர புரியாது என்கிறார்கள்.

புகை பிடிப்பவர்களின் கவனத்திற்கு!

சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின்
முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA
வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை
அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும்
உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட்
புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில்
மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின்
மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.

முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய்
என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு
உட்கொள்ளுகிரார்கள்.

என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் – ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் –
அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து
பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத்
தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு கட்டாயம்
இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ
(intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள்
ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன்
திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே
மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.

முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள்
வணிகக் கணிதவியலை படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம்
முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும்
யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா
குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று
சொல்லலாம்..

யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய
உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள்.

இவ்விரண்டு விளையாட்டுக்களும் மனதை ஒருமுகப்படுத்தி
துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.

உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க
அதிகம் விழைகிறார்கள்.

போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம்
ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள்
செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில்
தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத்
திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப
கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.

வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு முன்னுரிமை
கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள்
கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை
நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்; 10 பேர்கள்
அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை
திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால்
தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும்
மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற
லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக
வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business
and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து
இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப்
பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை
தூண்டிவிடப்பட்டு மூளைக்கு அதிக ஆக்ஸிஜன்
கிடைக்குமாம்.

நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக
நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது.

யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால்
வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம்
தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே
ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY,
ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள்
மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது
ஆதரவில் நடை பெறுகின்றன.

யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும்
யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப்
பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால்
நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில்
போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.

2005-ல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை
வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை
சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய
பழக்கம் என்று கருதப்படுகிறது. ஒரு சிகரெட் பெட்டியின்
விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு
அரசாங்கம் போலவேதான். சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு;
மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த
பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.

இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின்
விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும்
மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்?

லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு
எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்;

பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ,
தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்!
அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது.
ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப்
படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான்.

சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை
அறிவற்றதாகத்தான் இருக்கும்.

——————————————————————

தேவைப்பட்டால், இந்த இடுகையை மீண்டும்
மேலேயிருந்து ஒரு தடவை
வேண்டுமானாலும் படித்துப் பாருங்கள்….

இவற்றில் – நம்மால் செய்ய முடியாத விஷயம் என்று
எதுவுமே இல்லை.

நம் குழந்தைகளை அதி சாமர்த்தியக்காரர்களாக
உருவாக்க வேண்டும் என்கிற விருப்பத்தை முதலில் நம்
மனதில் ஆழப்பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்….

திட்டமிட வேண்டும்…
தாயின் கர்ப்பத்திலிருந்தே இதை துவங்க வேண்டும்…

குழந்தைகள், சிறுவர்/சிறுமியர் வளர்ப்பில்
விசேஷ அக்கறையும், கவனிப்பும் வேண்டும்…
அவர்களின் உணவில், ரசனையில், படிப்பில்,
விளையாட்டில், யோசிக்கும் விஷயங்களில்….

( சாராயம், சிகரெட் – இரண்டும்
அவர்கள் கண்களிலேயே படக் கூடாது…)

– கவனம் செலுத்தினோமானால் அடுத்த தலைமுறை
தமிழர்களை யூதர்களை விட சிறந்தவர்களாக நம்மால்
உருவாக்க முடியும்.

ஏன் – ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,
மிகச்சிறந்த இனமாக இருந்தவர்கள் தானே நாம்…?

தொடர்ந்து 700-800 ஆண்டுகளாக – அந்நியர் வசம்
அடிமைப்பட்டு கிடந்ததால், நம் பெருமை அனைத்தையும்,
மறந்து, தன்னம்பிக்கை இழந்து கிடக்கிறோம் நாம்.


தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்யவில்லையா…?
கிரேக்க, ரோம, நைல்நதி வாசிகளுடன் பழகவில்லையா..?
பருவக்காற்றின் போக்கை கண்டுபிடித்து,
கிழக்கு நாடுகளுக்கு சென்று
சீனம் வரை வர்த்தகம் செய்யவில்லையா…?
வம்புக்கு வந்த கடற்கொள்ளையரை அடக்க,
ஜாவா, சுமத்திரா, இந்தோனேஷியா, கொரியா நாடுகளில்
தமிழ்க்கொடியை நாட்டவில்லையா…?

முதிய தலைமுறையை விட்டு விடுங்கள்…
இன்றைய இளைஞர்கள் அக்கறை எடுத்துக் கொண்டால்,
அவர்கள் தங்கள் வாரிசுகளை விஞ்ஞான பூர்வமாக
வளர்க்கத் துவங்கினால் –
அடுத்த தலைமுறை தமிழர்கள் யூதர்களைத் தாண்டியும்
சிறப்பாக வளர்வார்கள்…!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to தமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது….?

 1. இளங்கோ சொல்கிறார்:

  // ( சாராயம், சிகரெட் – இரண்டும்
  அவர்கள் கண்களிலேயே படக் கூடாது…) //

  கே.எம்.சார்,
  பெரும்பாலான தமிழர்கள் (வசதியற்றவர்கள் ) டாஸ்மாக்,
  (வசதியுள்ள, ஐ.டி. இளைஞர்கள் ) பப்களின் துணை இல்லாமல்
  உயிர்வாழ முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது
  உங்கள் நினைவு, கனவாகத்தானே இருக்க முடியும் ?
  எப்படியாவது பணம் கொடுத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில்
  அட்மிஷன் வாங்கி விட்டால் தங்கள் கடமை முடிந்து
  விட்டதாகத் தானே நினைக்கிறார்கள் ?

 2. peace சொல்கிறார்:

  நல்ல பதிவு. இது தொடர்பாக நிறைய எழுத ஆசை. குழந்தைகளின் வளர்ச்சி குறித்த ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டில் தொடங்கியது. பல அறிவியலாளர்கள் இதை பல கோணத்தில் அணுகினார்கள். இவர்களுடைய
  ஆய்வு முடிவுகள் பள்ளி பாடத்திட்டங்களில் உள் வாங்கப்பட்டது. பள்ளி செல்லும் முன்னரே குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறித்து அறிவியல் பேசத் தொடங்கியது. முதல் மூன்று வருடங்கள் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு முக்கியமானது. சராசரி பெற்றோரால் என்ன செய்ய முடியும்? நிறைய செய்யலாம். குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்தலாம். முதல் மூன்று வயதை தவற விட்டாலும் பள்ளி செல்லும் ஆரம்ப காலமும் மிகவும் முக்கியமானது. இதை பல கோணங்களில் அணுகலாம் என்பதால் ஒன்றை மட்டும் சொல்கிறேன். புதிர்களை விடுவிப்பது குறித்து அறிவியல் சொல்வது. எந்த ஒரு சூழலை அணுகும் போதும் அதை பகுதிகளை புரிந்து கொண்டு அணுகுவது. ஆரம்ப கால பயிற்சி பிற்காலத்ததிலும் உதவுகிறது.
  ஒரு விளையாட்டு. இப்பபோது கணினியிலும் வந்து விட்டது. ஒரு உருவத்தை geometric shapes கொண்டு உருவாக்குவது. Tangram என்பது பெயர். ஓரு சதுரம். அது ஏழு பகுதிகளால் உருவானது. சதுரமாக பார்க்கும் போது அந்த ஏழு பகுதிகளும் மறைகிறது. அந்த ஏழு பகுதிகளைக் கொண்டு சதுரத்தை உருவாக்க வேண்டும். இந்த விளயாட்டில், சதுரம் மட்டுமில்லை. பல் வேறு உருவங்களையும் உருவாக்கலாம்.

  ஆய்வுகள் எப்படி நடை முறைப்படுத்தப்பட்டது என்பதற்கு இன்னொரு உதாரணம், ஒவ்வொரு குடியிருப்பிலும் உருவக்கப்பட்ட குழந்தைகளுக்கான விளயாடுமிடங்கள்.

 3. peace சொல்கிறார்:

 4. Srini சொல்கிறார்:

  KM sir, When my wife was carrying my second child, we attended a program called “infant siddha program”. The basic concept of this program is to teach the child when in womb itself. Mostly pregnant ladies with their husbands attend this program and the main center is in Mumbai and program is conducted in many other cities. Parent starts talking to the child when in womb and also tell every day that he/she shd come as normal delivery without complications. Very interesting program, thought of sharing here so it will benefit others. Regards, Srini

 5. SENTHIL சொல்கிறார்:


  They are not that much intelligent as claimed.

  • peace சொல்கிறார்:

   “The Nobel Prize is an annual, international prize first awarded in 1901 for achievements in Physics, Chemistry, Physiology or Medicine, Literature, and Peace. An associated prize in Economics has been awarded since 1969.[1] Nobel Prizes have been awarded to 881 individuals,[2] of whom 197 – 22.4% – were Jewish or people of Jewish descent,[Note 1] although Jews and people of Jewish descent comprise less than 0.2% of the world’s population.[3] – Wiki” .
   யுதர்களை புகழ்வதற்கான கட்டுரையாகப் பார்க்கவில்ல. ஆய்வுகளின் நோக்கம், என்ன கற்றுக் கொள்ளலாம் என்பதே. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளே. ஓரு நாட்டின் விதியை மாற்றுவதற்கு மனித மன வளம் முக்கியமானது.

 6. N S. Raman சொல்கிறார்:

  Self discipline is a key for their success.

  Diet is more of individuals choice and more important is good and positive thoughts.

  Our present day education and society developed selfish and narrow minded individuals.

  We need more broad minded next generation Indians.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப N S. Raman,

   // Diet is more of individuals choice //

   உங்கள் கவலை எனக்கு புரிகிறது.
   நானும் வெஜிடேரியன் தான்….!!!

   சகலவித சத்துக்களும் சைவ உணவில் இருக்கின்றன…
   எனவே நான்-வெஜிடேரியன் உணவு சாப்பிடுவது என்பது
   அவரவர் பழக்க வழக்கங்களை பொறுத்தது தானே தவிர,
   அவசியம் அல்ல என்பது என் கருத்தும் கூட.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. peace சொல்கிறார்:

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப peace,

   நீங்கள் தரும் பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. புதியவன் சொல்கிறார்:

  இன்றைய உலகின் தேவை, ‘வணிகம்’, ‘வணிகம்’, அதன்மூலம் பொருளீட்டுதல். அதில் நாம் பின்’தங்கியிருக்கிறோம். அதனால் ‘யூத’ இனம் மட்டும்தான் அறிவுசார் இனம் என்று சொல்லமுடியாது. ஒன்றும் தெரியாமலா, இலக்கியத்தில் பொதுமறையாக நம்மால் சிந்திக்கமுடிந்தது? எந்த வசதியும் இல்லாத ஒருவர்தானே, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று எழுதியது. தஞ்சை மற்றும் எல்லா இடங்களிலும் அந்தக்காலத்தில் பாசன வசதி, நீரைக் கொண்டுசெல்லும் வசதி என்று பொறியியலிலும் நாம் பெரும் புகழ் பெற்றவர்கள்தாம்.

  அடுத்தவேளை சோறில்லாத நிலையிலும், புதிது புதிதாகச் சிந்தித்து வியாபார சாம்ராஜ்யத்தை நிறுவிய வி.ஜி.பி, சரவணபவன் ராஜகோபால், ‘வசந்த் & கோ’ போன்று பல்வேறு மூளைக்காரர்களை நாமும் சொல்லமுடியும். அதற்குத் தேவை, ‘உழைப்பு’, ‘உழைப்பு’ மட்டும்தான்.

  எல்லோரிடமும் இந்த விழிப்புணர்வு இல்லை என்பதும் உண்மைதான். பிரிட்டிஷ் மக்கள், கடற் பிரயாணங்களில் தலை சிறந்தவர்கள், யூதர்கள் வியாபாரத்தில் தலைசிறந்தவர்கள், ஜப்பானியர், செய் நேர்த்தியில் தலை சிறந்தவர்கள், ‘உடனடி காப்பி, குறைந்த விலையில் பொருட்கள்’ இதில் சைனா மக்கள் தலைசிறந்தவர்கள்.

  உணவுக்கும் ‘தலைசிறந்த வியாபாரிகள்’ ஆவதற்கும் சம்பந்தமில்லை. பொதுவா, ‘அஹிம்சையைப் பரப்ப நினைப்பவர்கள்’ புலால் உண்ணாது இருத்தல் வேண்டும். வியாபாரத்துக்கும், தொழில் சார்ந்த அறிவுக்கும் உணவுப்பழக்கம் இன்றியமையாதது அல்ல.

 9. M.Thevesh சொல்கிறார்:

  பலஅறிஞர்கள், துறைசார் நிபுணர்கள் தாவர உணகளின் நன்மைகளையும் அதனால் ஏற்படும் பலாபலன்களை அறுதியிட்டுக்
  கூறினாலும் புலால் உணவை விரும்பி உண்பவர்களால் தாவர உணவு சம்பந்தமான உண்மைகளை ஏற்க அவர்கள் தயாராக இல்லை என்பது கவலைக்குரிய விடயமே.

  • தமிழன் சொல்கிறார்:

   தவேஷ்-தாவர உணவுகளின்…. அறுதியிட்டுக்கூறினாலும் – இதில் உண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பார்வையாளனாக எனக்குப் படுவது, ‘அசைவ உணவு’ சுத்தமாக அதை உண்பவர்களிடம் வந்து சேருகிறதா என்பதுதான். மற்றபடி, இதுதான் சரியான உணவு என்பது, நாம் வளர்ந்த விதத்தைப் பொருத்தது.

   எனக்கு பூண்டு வெங்காயம் சேர்ப்பது நல்லதில்லை என்று தோன்றலாம். இன்னொருவருக்கு, தாவர உணவு எதைச் சேர்த்தாலும் அது சைவ உணவு என்று தோன்றலாம். இன்னொருவருக்கு, புலாலை எடுத்துவிட்டால், மீதி இருப்பது சைவம்தான் என்றும் தோன்றலாம் (எனக்குத் தெரிந்த குஜராத்தி சுத்த சைவ உணவு சாப்பிடுபவர், சிக்கன் குருமாவிலிருந்து சிக்கனை எடுத்துவிட்டு, மீதி சைவம்தான் என்று சொல்லிச் சாப்பிட்டார்). இது தனிப்பட்ட எண்ணங்களாலானது.

   இதில் இன்னொரு விஷயம் நான் படித்தது. ‘சைவம்’ (அறு மதங்களில் ஒன்று) என்பதே ‘புலாலுண்ணாமையை’க் கடைபிடித்த மதம். (அதனால்தான் சைவ உணவு, அசைவ உணவு என்று தமிழில் பெயர் வந்தது). காலப்போக்கில் மாறிவிட்டது. (புத்தமதம் ‘அஹிம்சை’யை வற்புறுத்திய, அந்தக் கொள்கையால் கட்டமைக்கப்பட்ட மதம். அதைப் பின்பற்றுபவர்களில் பெரும்பான்மை, அசைவ உணவு உண்பவர்கள்தான்)

   • இளங்கோ சொல்கிறார்:

    தமிழன் சார்,

    இந்த அசைவு உணவு ஓட்டல்களுக்கு
    “மிலிடரி ஓட்டல்” என்று பெயர் வந்தது எப்படி ?

 10. DeathBirthRaceR சொல்கிறார்:

  இதுவும் ஏந்தும் தமிழே தலைமை தயவு தமிழர்க்கே என்று ஆராய்ச்சி விஞ்ஞானம் பௌதீகம் சாற்றும் நாள் கற்றறிந்த அறிவியலாளர்கள் சான்றாய் தாங்கள் அறிவுறுத்திய மேற்கோளும் சுயமாய் கற்றதே என அடிப்படை அறிவாய் உலகனைத்துக்கும் முன்னோடி தமிழரே என புகழாதிருப்பினும் அறிவிப்பார்கள் காலம் திரும்பாது ஆனால் சுயசார்பாய் தமிழர் (சுமேரியர் ஆரியர் திராவிடர் நதி நாகரீகம் இத்யாதி …..) வாழ்வு தீரம் வீரம் தயவு போற்றிய இனமே அரவணைத்த திருவருள் வழங்கிய தமிழினம் லெமூரியா அணைத்த சொச்ச தமிழே இத்தனையா என எண்ணி ஆராய நாம் அன்று இருப்போமா …..! வாழ்க தங்கள் முயற்சி தேச பக்தி : ஆகினும் தமிழே எத்தனை என காலத்தை கேட்க தமிழே காலத்தை கேட்கும் பெருமை ஏற்காது தூணாய் திரிசூலமாய் எக்காலமாயிகினும் தம்பெருமை பேசாதது தமிழ் தன்னகத்தே கொண்ட அனைத்திலும் நாம் பெற்றது சொச்சமே மிச்சம் நம் வருங்கால சந்ததிக்கு அவ்வளவு அற்புதம் அனைத்தும் அளவிலா நிலைக்கு மேலானது தமிழும் இனமாய் யாவும் அரவணைக்கும் தமிழினம்…..
  தாங்கள் வளர்ச்சிக்கு தற்கால மேற்கோள் குறிப்பு பல்லுயிர் வளர்சிதை மாற்றத்தின் திறவு கோளா ~ இருப்பின் வாழ்க …..
  வாழ்க உலகம் ~ வரலாறு ஏதோ அறிவித்த முதல் தமிழே ஆராயும் வருங்காலம் அப்போது இது தாங்கள் மேற்கோள் காட்டிய இனத்துக்கே முன்னோடி தமிழ்என்பார்…..
  யூத முன்னோடிகளுக்கு சிறு தேச பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தாங்கள் காட்டிய தேச நலனுக்கு நன்றிகள் கோடி காவிரிமைந்தன் அவர்களே…..

  ஒரு புனைப்பெயரை கூட பதிவுலக ரசிகரும் தேசநலம் போற்றவேண்டுமென சிந்திக்கும் அறிவுக்கு தமிழராய் எத்திக்கும் உலகாளும் எண்ணத்தின் அற்புத திறமாய் இருக்கிறார் என நல் நெம்பு கோள் தங்களும் தங்கள் எழுத்தும் வாழ்க தேச நலம் …..

  தங்கள் நிலைக்கு நான் இன்றும் தூசி ஆனாலும் உலகு கற்க மறவேன் இனம் மொழி நிலை அப்பாற்பட்டது நம் ஆதி இனம் அரவணைத்த ஆர்பரித்த அற்புத பரமபதம் நம் இனம் ஒன்றே…..

  ஏழையாய் எளிமையாய் ஏதுமாய் அறிய அறிவுறுத்த நான் தமிழுக்காய் மொழி இனம் கடந்திருப்பேன் என்றும் கற்பேன் தாய் தமிழை நானிறக்கும் வரை கற்றுக்கொண்டே இருப்பேன் மூச்சாய் தமிழாய் அறியார் அறிவிப்பார் அப்போது தமிழ் தொன்மை புரியும் ~ காலம் காக்கும் அதுவரை …..

  தேச பக்தி ஆன்ம பக்தி உலகபக்தி உங்கள் பதிவுகள் ஆதி வாசிப்பால் கண்டவன் என்தால் சொன்னேன் நன்றி …..

  • தமிழன் சொல்கிறார்:

   என்னுடைய புரிதலுக்காக உங்களைக் கேட்கிறேன். இந்த மொழியில் எப்படி எழுதுகிறீர்கள்? கூகிள் டிரான்ஸ்லேஷன் செய்கிறீர்களா? புரிந்துகொள்வதற்காகப் படித்தால், உண்மையில் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

   • DeathBirthRaceR சொல்கிறார்:

    கொஞ்சம் நெஞ்சம் கேட்க தமிழே நீ பெரும் பழமை மாறாதது ஏன் என்று தங்கள் சந்ததி கேட்க விரவும் உறவே பல இடம் காணும் …..

    உங்க தாத்தா பாட்டி முதலே சந்ததி வழி தேடி பார்க்க அவர்கள் பரவி இருக்கும் புவிக்கு யாராவது தமிழ்மூச்சாய் ஏதாவது தமிழுக்கு செய்திருப்பார்கள் அப்படி வந்த வழி தான் தாங்கள் “தமிழன்” என பெயர் சூட்டி வலையுலகில் வளம் வருகிறீர் வாழ்த்த அது போலவே அனைத்தும் கற்க கற்றுக்கொண்டே பதிய “காவிரிமைந்தன் அவர்கள்” பெயரும் ~ தமிழை நாம் அறியவே நமக்கு காலமில்லை அவ்வளவு பணிவாழ்வு சூழல் சுற்றி நம் பிறப்பு இறப்பில் ஆதலால் நம்மை தேட சுயமாய் ஆராய நம்மனமே மனிதம் என ஆதி தேட தெவிட்டாது தூய அருட்சுவை அப்போது ஒரு மனம் சந்ததி அல்லது நம் தலைமுறை பல கடந்து ஆராயும் அலசி அன்று “தமிழ்” புரிவிக்கும் என என் நடையில் இனம் மொழி கடந்த உயிரின் அரணாய் (காக்கும் ஆதி தமிழ்) ஏதோ சொன்னேன் …..

    பதிவுகள் வலைகள் கணிணி அல்லது கைப்பேசி வழி இணையம் நாம் கற்க தமிழ் தெவிட்டாது என பரமபதமாய் நானும் தமிழனே என தள்ளி நின்று சொன்னேன் …..

   • இளங்கோ சொல்கிறார்:

    தமிழன் சார்,

    உங்களுக்கு பதில் விளக்கம் வந்து விட்டது.
    நீங்களும் வாழ்க வளமுடன்
    பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்.

 11. இளங்கோ சொல்கிறார்:

  அய்யா DeathBirthRaceR,

  நீவிர் வாழ்க வளமுடன்
  பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்.

 12. peace சொல்கிறார்:

  Hope our Rulers will take notice. We just need one Chief Minister to begin something like this.
  _____________________________________________________________________________

  “Learning begins in the first days of life. Scientists are now discovering how young children develop emotionally and intellectually from their very first days, and how important it is for parents to begin immediately talking, singing, even reading to their infants….We already know we should start teaching children before they start school.”
  On April 17, 1997, the President and First Lady hosted The White House Conference on Early Childhood Development and Learning: What New Research on the Brain Tells Us About Our Youngest Children. The day-long conference highlighted new scientific findings on brain development in very young children and pointed to the importance of children’s earliest experiences in helping them get off to a strong and healthy start.

  Applying New Findings on Brain Development in the Earliest Years. New scientific research shows that experiences after birth — particularly in the first three years of life — have a dramatic impact on brain development. That means that nurturing, talking to, singing to and reading to our youngest children will improve their ability to learn and develop throughout their lives. The White House Conference focused on the practical applications of the latest scientific research on the brain, particularly for parents and caregivers. The conference was also a call to action to all members of society — including the health, business, media and faith communities, child care providers and government — to use this information to strengthen America’s families.

  Clinton Administration Commitment to Young Children. The conference built on the Clinton Administration’s investment in children and families. The Administration has invested heavily in research to help us better understand the importance of the first few years of life to child development and learning. Between 1993 and 1997, funding for NIH children’s research increased 25%, from $1.3 billion to $1.6 billion.

  President Clinton has also strengthened efforts to support families with young children. To take just a few examples, the Administration raised funding for Head Start — providing low-income children and their families with comprehensive education, health services, and nutrition — by 43% over the last four years and created the Early Head Start program to support families with children ages zero to three. The President’s FY 1998 Budget further increases participation to reach 122,000 more children in FY 1998 than when he took office. The Administration also dramatically increased participation in the WIC Supplemental Nutrition Program, providing 7.4 million pregnant women, infants, and children with nutrition packages and information and health referrals — 1.7 million more than when President Clinton took office. And his FY 1998 Budget would achieve his goal of full participation in the WIC program by the end of FY 1998.

  Conference Program and Participants. During the morning session of the conference, leading researchers and child development experts discussed the new research and what it means for parents and caregivers. The panelists for that session were: Dr. David Hamburg, Carnegie Corporation of New York (moderator); Dr. Carla Shatz, University of California, Berkeley; Dr. Donald Cohen, Yale Child Study Center; Dr. Patricia Kuhl, University of Washington; Dr. Ezra Davidson, Drew University of Medicine, Dr. T. Berry Brazelton, Harvard University; and Dr. Deborah Phillips, National Research Council. The afternoon session highlighted model community efforts to support parents and enhance early childhood development. The panelists included: Avance Family Support and Education Program, San Antonio, TX; the CEO and Chairman of the Board, The Kellogg Company, Battle Creek Michigan; and Ounce of Prevention, Chicago, IL.

  Broad Participation Across the Country. The morning session of the conference was by satellite to nearly 100 locations across the country. The satellite conferences were co-hosted by regional federal agencies, local officials, and children’s and other organizations.

 13. ranjani135 சொல்கிறார்:

  இன்று தான் இந்தப் பதிவைப் பார்த்தேன். முயன்றால் நிச்சயம் நம் குழந்தைகளையும் அதி சாமர்த்தியசாலிகள் ஆக்கலாம். ஆனால் இப்போது கைகுழந்தையிடம் கூட ஸ்மார்ட் போனைக் கொடுத்துவிட்டு தாய்மார்கள் வேடிக்கைப் பார்க்கிறார்களே! இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல?

  என்னைக் கேட்காமலேயே என் பதிவை அவர்கள் அந்த தளத்தில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என் பெயரையாவது போட்டார்களே என்று சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக திருமதி ரஞ்சனி,

   எதேச்சையாகத்தான் அந்த பதிவை பார்த்தேன். அப்போதே நினைத்தேன்… இதுபற்றி உங்களுக்கு எழுத வேண்டுமென்று….

   இதெல்லாம் எல்லாராலும் முடியாது….
   இந்த மாதிரி விஷயங்களில் ஒரு ஆர்வம், திறமை, அனுபவம் எல்லாம் வேண்டும்…. உங்களிடம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது… இதுபோல் பொது தலைப்புகளில் வேறு எதாவது விசேஷமாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்களா…?

   மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நம்ம ஊர்களில் இப்போதெல்லாம், பெற்றோர்கள் பிள்ளைகளின்
   தொல்லைகளிலிருந்து தப்பிக்க, செல்போனின் உதவியைத்தான்
   நாடுகிறார்கள்… 5 வயது குழந்தையிலிருந்து இது ஆரம்பித்து விடுகிறது.
   ஒரு போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு, இவர்கள் எஸ்கேப்
   ஆகி விடுகிறார்கள்.

   சிறுவர்/சிறுமிகளுக்கு – செல்போன் பயன்பாடு என்னும் “போதை”
   ஏற்பட பெற்றோரே முக்கிய காரணம்.

   14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளிடம் செல்போனை கொடுக்க
   கூடாது என்பதை ஒரு “பெரிய பிரச்சாரமாக” இன்று எடுத்துச்செல்ல
   வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

   நீங்கள் தந்திருக்கும் தகவல்களுக்கு நன்றி நண்பரே.
   இந்த செய்திக்கு இங்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 14. Peace சொல்கிறார்:

  https://youtu.be/AIEeakeXvMM குழந்தைகள் பெற்றோரிடம் நேரத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள்:-)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப Peace,

   புத்தகம், விளையாட்டு, பாட்டு, நடனம் –
   இவை ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும்.
   ஆனால், முக்கியமான விஷயம், பெற்றோர்கள்
   குழந்தைகளுடன் செலவிடும் நேரம்.

   சரி தானே…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.