( பகுதி-2 ) கோட்டைகள், கொத்தளங்கள் – அரண்மனைகள்


கோல்கொண்டா கோட்டை –

golconda fort-4

 

தமிழ் நாட்டிலுள்ள கோட்டைகளில் வேலூர் கோட்டை
பெரியது. சமதளத்தில் உள்ளது. அது பாதுகாப்பிற்காக
அதைச் சுற்றி இருக்கும் நீரகழியையே நம்பியிருந்தது.
வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில், விஜயநகர
அரச வம்சத்தால் (நாயக்கர் வம்சம் ) கட்டப்பட்டது. பின்னர்
அது பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், கர்னாடக நவாப் என்று
கைமாறி கடைசியில் பிரிட்டிஷார் வசம் வந்தது.
திப்பு
சுல்தான் இந்த கோட்டையில் தான் பிரிட்டிஷாரால்
சிறை வைக்கப்பட்டிருந்தார். முதல் இந்திய
சுதந்திரப்போரில் (சிப்பாய்க்கலகம் ….) இந்த கோட்டைக்கு
முக்கிய பங்குண்டு.

செஞ்சியும், கிருஷ்ணகிரியும் – சிறிய மலைகளின்
உச்சியில் கட்டப்பட்டவை. கோட்டையின் உச்சியிலிருந்து,
சுற்றிலும் 10-15 கிலோமீட்டர் தூரம் வரையிலும்
படைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வசதி இருக்கிறது.

செஞ்சிக் கோட்டையை 12வது நூற்றாண்டிலேயே கோனார்
வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அமைத்தனர். ஆனால்
செஞ்சிக்கோட்டை சிவாஜியின் கையில் வந்த பிறகு தான்
முழு உருவம் பெற்று தென்னகத்திலேயே மிகச்சிறந்த
கோட்டையானது.

16வது நூற்றாண்டில் -மராட்டிய வீரன் சத்ரபதி
சிவாஜி செஞ்சியிலிருந்து சுமார் 1200 கிலோமீட்டர் தூரம்
தொலைவில் இருந்த புனேயில் இருந்து கொண்டே இந்த
கோட்டையை வலுப்படுத்தினார்.

தரங்கம்பாடியில் உள்ள டச்சு கோட்டையை – நான் நேரில்
பார்த்திருக்கிறேன்… இதை கோட்டை என்றே சொல்ல
முடியாது – அவ்வளவு சிறியது.
ஆனால் மிக அழகானது. கடற்கரையில் அதைப்
பார்க்கும்போது, காம்பவுண்ட் சுவருக்கு உள்ளே இருக்கும்
ஒரு பண்டகசாலை போலத்தான் தோற்றமளிக்கும்.

தமிழர்களின் கனவுத் தலைநகரம்
காவிரிப் பூம்பட்டினம் இதையொட்டியே இருக்கிறது.

காவிரிப் பூம்பட்டினம், முற்றிலுமாக கவனிப்பாரற்ற
நிலையில் கிடக்கிறது…

தமிழ்நாட்டில் வலுவான அரசர்களின் ஆட்சியும்,
பெரிய -பெரிய போர்களும் – எல்லாம் –
சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சியுடன் –
11- 12வது நூற்றாண்டுகளிலேயே முடிந்து விட்டன.

எனவே இங்கு சொல்லிக்கொள்கிறாப்போல்
பெரிய கோட்டைகளுமில்லை – அரண்மனைகளும் இல்லை.
சிறிய அளவில் (புதுக்கோட்டை அருகே திருமயம்
போல்) 25 கோட்டைகள் வரை தமிழ் நாட்டில் இருக்கின்றன.

தென்னிந்தியாவில் பெரிய கோட்டை என்று சொல்வதாக
இருந்தால், ஹைதராபாத் அருகேயுள்ள
‘கோல்கொண்டா’ கோட்டையைச் சொல்லலாம். அதன்
உயரமும், அழகும், கம்பீரமும் -நேரில் பார்த்தபோது அசந்து
விட்டேன்.

பெரிய அரண்மனை என்று சொன்னால், மைசூரில்
இருக்கும் லலித் மஹால் பேலசை சொல்லலாம்.

மற்றபடி – மராட்டிய மாவீரர் சிவாஜி அற்புதமான
கோட்டை ஒன்றை பிரதாப் கர் என்னுமிடத்தில் கட்டினார்.


சிவாஜி சிறிதும் பெரிதுமாக கிட்டத்தட்ட 350
கோட்டைகளை தன் வசம் வைத்திருந்தார்.
ஒரு பக்கம் மொகலாய மன்னன் ஔரங்கசீப்,
மற்றொரு பக்கம் பாமினி சுல்தான்கள் – யுத்த
நோக்கில் சிவாஜிக்கு மிகவும் முக்கியமாக அமைந்தன
அவரது கோட்டைகள்.

மேற்கு கடற்கரை ஓரம், மலைச்சிகரங்களில்
அமைந்த, அவரது சில கோட்டைகள்
திகிலளிக்கக்கூடிய தோற்றமுடையவை.

இந்த கோட்டைகளை அணுகுவதே மிகவும் சிரமம்.
பிறகு அங்கே சென்று போர் புரிவது எப்படி …..?
வெல்ல முடியாதவை சிவாஜியின் கோட்டைகள்.
(சிவாஜியின் கோட்டைகள் சிலவற்றை நான் நேரில்
பார்த்திருக்கிறேன் ..!!)

ராஜஸ்தானில் ஏகப்பட்ட அரச வம்சங்கள் இருந்தன.
எனவே, பெரிய பெரிய அளவில் ஏகப்பட்ட அரண்மனைகள்
– கோட்டைகள் எல்லாம் உண்டு. அத்தனையும்
அவர்களது செல்வச்செழிப்பை பிரதிபலிக்கக்கூடியவை.
இந்த கோட்டைகள், அரண்மனைகள் எல்லாமே-
அநேகமாக, கடந்த 3-4 நூற்றாண்டுகளில் உருவானவை.
இன்றும் நல்ல நிலையில் உள்ளவை.

எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம். இந்த
கோட்டைகளின் பின்னணிக் கதைகளை எழுதப்போனால்
– சாண்டில்யன் கதை போல் இடுகை மிகவும் நீண்டு
விடும். எனவே இத்துடன் நிறுத்திக்கொண்டு, அருமையான
சில புகைப்படங்களை கீழே பதிவிடுகிறேன்.

மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் கோட்டைகள் சில –

pratap garh - sivaji -built by 1656

pratap garh - sivaji -built by 1656-2

sindudurg- shivaji

sinhagad-shivaji

sinhagad-2

murud-janjira-fort

aguada

டெல்லி செங்கோட்டை –

Red Fort -delhi

 

ஆக்ரா கோட்டை –

agra fort-1

 

ஆம்பர் கோட்டை –

amber fort-2

 

சித்தோர்கர் கோட்டை –

chittorgarh fort-3

 

க்வாலியர் கோட்டை –

gwalior -5

 

மெஹ்ராங் கர் கோட்டை –

mehrangarh fort-6

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ( பகுதி-2 ) கோட்டைகள், கொத்தளங்கள் – அரண்மனைகள்

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! பாண்டி — சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம் என்ற கடலையொட்டிய இடம் பண்டைய காலத்தில் துறைமுக நகரமாக விளங்கியது — இங்கிருந்து ” சரிகை துணிகள் — நெய் — பக்கத்திலுள்ள உப்பங்கழிகளில் தயாரிக்கும் உப்பு ” போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டது …17 -ம் நூற்றாண்டில் மொகலாய அரசரால் இங்கே ஒரு கோட்டை செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் 30 ஏக்கர் பரப்பில் 10 அடி அகல சுவர்களை கொண்டு கட்டப்பட்டது . அதன் பெயர் ” ஆலம்பரை கோட்டை “….

  இந்தகோட்டையில் கண்காணிப்பு கோபுரம் மற்றும் சரக்குகளை ஏற்றி – இறக்க 330 அடிக்கு படகு துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது .. அங்கேயே நாணயம் அச்சிடும் நாணய சாலையும் இருந்ததாகவும் ” ஆலம்பரை காசு — ஆலம்பரை வராகன் போன்றவை அச்சிடப்பட்டது — நவாப்களின் கட்டுப்பாட்டில் இருந்து பிரெஞ்சு தளபதி டூப்ளே க்கு பரிசாக அளிக்கப்பட்டு பின் ஆங்கிலேயர் போர் மூலம் தகர்க்கப்பட்டு அவர்கள் வசமானது … தொடர்ந்து நடந்த பல போர்களினால் பெரும் பகுதி சிதைக்கப்பட்டது என்பது வரலாறு …

  சுனாமியினால் மேலும் பல பாகங்கள் வீணாகி தற்போது சுற்று சுவர் 20 அடி உயரத்திற்கு படிக்கட்டுகளுடன் தற்போது உள்ளது . அதன் வழியே ஏறி சென்றால் கோட்டையின் இடிந்த சுவர்கள் மற்றும் இயற்கை காட்சிகளை காணலாம் … வருடத்திற்கு சுமார் 30000 பேர்கள் வெளிநாட்டினர் உட்பட வந்து கண்டு களிக்கின்றனர் .. விடுமுறை தினங்களில் அதிமான நபர்கள் வருவதும் — படகில் சென்று சுற்றிபார்ப்பதும் தற்போது நடைமுறையில் இருக்கிறது … கால மாற்றங்களினால் சிதையுண்டு — சுவர்களில் பல வித மரங்கள் முளைத்து மேலும் வீணாகி கொண்டு இருப்பதை — கண்டுகொள்ள அரசுக்கு மனம் இல்லை … இதைப்போல பல அபூர்வ கட்டடங்களை பாதுகாக்கணும் — வரலாற்று சுவடுகள் அழியாமல் இருக்கணும் என்கிற உணர்ச்சியே இன்றி இருக்கும் ஆள்பவர்கள் எப்போது மாறுவார்கள் … ? பல தமிழ்ப்படங்களில் தலைகாட்டிய — ஆலம்பரை கோட்டையின் மீதியுள்ளவைகள் காக்கப்படுமா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் சொல்வது போல், மிகவும் பழையதாக இல்லாவிட்டாலும் கூட,
   ஓரளவு புராதன மதிப்பு உள்ள heritage sites/buildings இப்போதும்
   நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றன.
   அவற்றில் மிகச்சிலவே பாதுகாக்கப்படுகின்றன. பலவற்றை அரசாங்கம்
   கண்டுகொள்வதே இல்லை.
   இதற்கெல்லாம் மத்திய அரசை துணைக்கு கூப்பிடாமல், தமிழக அரசே
   அக்கறைகொண்டு பாதுகாக்க முன்வர வேண்டும். இவையெல்லாம்
   சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்பதை கருத்தில் கொண்டாவது,
   அரசு கவனிக்க வேண்டும்.
   பேசாமல், புதிய கல்வித்துறை செயலாளரிடம் இந்த பொறுப்பை
   ஒப்படைத்து விடலாம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.