எது நல்ல நாடு…? எது நல்ல நிர்வாகம்…?


மக்களுக்கான அடிப்படை தேவைகள் என்னென்ன…?

இருக்க இடம்,
உடுக்க உடை,
உண்ண உணவு –
ஆரோக்கியமான, அமைதியான வாழ்க்கை.

மக்களுக்கு இவை கிடைக்க என்ன தேவை…?

விவசாயம் செழிப்பாக நடக்க அரசு திட்டமிட்டு
உதவ வேண்டும்.

பணக்காரன், மேலும் மேலும் பணக்காரனாகிக் கொண்டே
போவதும், ஏழைகள் மேலும் மேலும் ஏழையாவதும்
செல்வம் ஒரு சிலரிடையே குவிந்து கிடப்பதும் –
மக்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடிக்கிடப்பதும் –
தவிர்க்கப்பட வேண்டும்.

நாட்டின் வளங்கள் –
அனைவருக்கும் பொதுவாக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும்…
விரும்புவோருக்கு சுலபமாக உயர்கல்வி கிடைக்க
வேண்டும்…

அதற்கு கல்வியும், மருத்துவமும் அரசின் கட்டுப்பாட்டில்
கொண்டு வரப்பட வேண்டும்..

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவ வசதி –
இலவசமாக கிடைக்க வேண்டும்…

அத்தியாவசியமான உணவுப் பொருட்களை அனைவருக்கும்
அரசே விநியோகிக்க வேண்டும்…

உழைக்கும் சக்தியுள்ள அனைவருக்கும்
வேலை கிடைக்க அரசு வழி வகுக்க வேண்டும்…

நடக்கக்கூடிய காரியமா சார் இது ..? என்று கேட்கிறீர்களா…?
நடக்கும்… நல்ல தலைவர் தோன்றும் நாட்டில்…!!!

உலகில் எந்த நாட்டிலாவது இதுவெல்லாம் நடைமுறை
சாத்தியமாகி இருக்கிறதா….?

—————————————

முதலில் ஸ்பெயின் நாட்டிடமும்,
பின்னர் சுயநலவாத அரசியல்வாதிகளிடமும் சிக்கி,
சின்னாபின்னமாகி – இறுதியில் ஒரு நல்ல புரட்சியாளர் தன்
வசப்படுத்திய ஒரு நாடு.

அமெரிக்காவுக்கு மிக அருகாமையில் இருந்தாலும்,
முதலாளித்துவத்தின் சாயையே படாமல் இருக்கும் நாடு.

கிட்டத்தட்ட ஒரு கோடியே இருபது லட்சம் பேர்
ஜனத்தொகை கொண்ட நாடு … க்யூபா …!

இங்கே நான் க்யூபாவின் சரித்திரத்தை
சொல்லப்போவதில்லை – சில சாதனைகளை மட்டும்
சொல்ல விரும்புகிறேன்…

கரும்பு விளையும் பூமி…
சர்க்கரையும், புகையிலையும், காப்பியும்
நிறைய ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு.

கடைசியாக ஏற்றுமதி செய்வது டாக்டர்களை…!
ஆம் – உலகம் முழுவதும் மருத்துவ சேவை செய்ய
இங்கே நிரம்பிக் கிடக்கும் டாக்டர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

World Health Organisation சொல்கிறது…

Cuba is “known the world over for its ability to train excellent doctors and nurses who can then go out to help other countries in need”. As of September 2014, there are around 50,000 Cuban-trained
health care workers aiding 66 nations. Cuban physicians have played
a leading role in combating the Ebola virus epidemic in West Africa”

ஃபிடல் காஸ்ட்ரோ.. என்கிற நல்ல மனம் படைத்த
ஒரு சர்வாதிகாரியின் சாதனை இது….

——————————–

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா –
தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா-

எக்கச்சக்கமான மருத்துவ கல்லூரிகளை உண்டுபண்ணி,
அதன் மூலம், ஏகப்பட்ட தேர்ச்சி பெற்ற
மருத்துவர்களை உருவாக்கி –
இன்று தன் நாட்டோடு அவர்களை இருத்திக் கொள்ளாமல்,
உலகில் அநேக நாடுகளுக்கு சேவை செய்ய அனுப்புகிறது
க்யூபா.

6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.
12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்….

2010-லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு
சதவீதம் 99.8. இங்கே மக்கள் அனைவருக்கும் இலவசமாக
கல்வி தரும் பொறுப்பினை அரசே ஏற்றுள்ளது.

கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில்
70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான
சம்பளம்.

மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது.
தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.
‘உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு
க்யூபா’ என பிபிசி 2006-ல் அறிவித்தது.

மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம்
உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான்.

இன்றைய தினத்தில், க்யூபா குடிமக்கள் அனைவருக்கும்
சொந்தமாக வீடு உண்டு. அனைத்து மக்களும் தங்கள்
சொந்த வீடுகளில் வசிக்கிறார்கள். இது ஒரு உலக சாதனை.

இது எப்படி சாத்தியமானது…?
வீடு கட்டிக்கொள்ள, அரசாங்கம் தன் மக்களுக்கு
வட்டியே இன்றி கடன் கொடுத்தது.
யாருக்கும் சொத்து வரியும் கிடையாது.

விளைவு – 2015-ல் 95 சதவீதமாகி,
இன்று சொந்த வீடில்லாத க்யூபா குடிமகன் யாருமில்லை
என்கிற நிலையை அடைந்திருக்கிறது.

அது எந்த இஸமாக இருந்தால் என்ன…?
மக்கள் வளமாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக
வாழ வேண்டும்… அது தானே குறிக்கோள், தேவை
எல்லாமாக இருக்க முடியும் ?

சொந்த மக்களையே வதைக்கும் ஒரு அரசு,
கொடுத்த மான்யங்களை எல்லாம் ஒவ்வொன்றாக
பிடுங்கிக் கொள்ளும் ஒரு அரசு,
கல்வியை வியாபாரமாக்கும் ஒரு அரசு,
மருத்துவ, எஞ்சினீரிங்க் கல்வியை வைத்து
கொள்ளையடிக்கும் கும்பலோடு
கூட்டணி வைக்கும் ஒரு அரசு,
லஞ்ச ஊழலில் குளித்து முழுகி, அசிங்கச்சேற்றோடு
பவனி வரும் அமைச்சர்களை கொண்ட ஒரு அரசு –

– என்று மக்கள் விரோதமான அரசுகளையே பார்த்து வரும்
இந்த நாட்டு மக்களுக்கு – இவையெல்லாம் அதிசய
கனவாகத் தானே தோன்றும்….?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to எது நல்ல நாடு…? எது நல்ல நிர்வாகம்…?

 1. LVISS சொல்கிறார்:

  There is another side of Castro which is hidden from public –Castro escaped many attempts on his life —
  Inspite of all that good that is there in Cuba why Cubans migrated to the US? – Cuban Americans are the third largest immigrant community in US – In almost all states in US cubans can be found –70% of cuban Americans live in Florida —
  Coming to the question at the beginning of the previous paragraph The answer is FREEDOM to live the way one wants to live —
  Generally bad things about Communist and dictatorship countries dont come out–

  http://www.businessinsider.in/Cuban-Americans-have-taken-to-the-streets-of-Miami-to-celebrate-the-death-of-Fidel-Castro/articleshow/55640873.cms

  • புதியவன் சொல்கிறார்:

   இந்த இடுகையின் நோக்கம் என்ன? மக்களுக்காக அரசு இயங்கவேண்டும். எது மிக அவசியமோ, அதை அரசாங்கம் கொடுக்கவேண்டும். இதை பிடல் காஸ்ட்ரோ அரசு செய்திருக்கிறது. அதைப் பாராட்டியும், இன்னும் காஸ்ட்ரோ அவர்கள் அரசியல்ரீதியாகச் செய்ததையும் எழுதலாம் என நினைத்தேன். உங்கள் பின்னூட்டத்தினால், உங்களுக்குப் பதில் சொல்லும்படி ஆகிவிட்டது.

   எல்விஸ் – மதத்தை பற்றிப் பேசவில்லை. கிருஷ்ணர் உலகில் இருந்தபோதும், கிறிஸ்து உலகில் இருந்தபோதும் sizeable section did not like them. வரலாற்று நாயகர்கள் எவருமே குறைகள் இல்லாதவர்கள் கிடையாது. ஜனநாயக நாடான அமெரிக்காவில் பெரும்பான்மை தேர்ந்தெடுத்த அதிபர்கள், நல்லவர்கள் என்று இன்றும் சொல்லக்கூடியவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எல்லோருக்கும் பிடித்த மனிதன் இந்த உலகில் இல்லை. அதனால் பிடல் அவர்கள் மறைந்தபோது சிலர் சந்தோஷப்பட்டு ஆடினார்கள் என்பதனால் அவர் செய்த நல்லன மறையாது. உலகின் தலைசிறந்த ரேஷன் முறை சதாம் ஹுசேன் அவர்கள் ஆட்சியில் ஈராக்கில் செயல்பட்டது.

   Let us respect what Fidel had achieved. யானையின் மிதிக்கும் கால்களின் கீழ் சிறிய தேசத்தின் மக்களுக்கு கௌரவத்தைத் தேடித் தந்தவர் அவர். கடைசிவரை அமெரிக்காவின் அச்சுறுத்தும் கரங்களுக்குப் பணியாதவர் அவர்.

 2. இளங்கோ சொல்கிறார்:

  எல்விஸ் சார்,

  மேலே சொல்லி இருக்கும்
  இலவச உயர் கல்வி, இலவச மருத்துவம்,
  சொந்த வீடு, அவசியமான உணவுப்பொருட்கள்,
  உலக நாடுகளுக்கு மருத்துவ உதவி – போன்ற எதுவுமே உங்கள்
  கண்களில் படாமல், ஃபிடல் இறந்து போனதை கொண்டாடும்
  மனிதர்களின் விஷயத்தை மட்டும் தேடியெடுத்து இங்கே
  போடுகிறீர்கள். நல்ல ரசனை சார் உங்களுக்கு.

  • LVISS சொல்கிறார்:

   Mr Ilango and Mr Puthiyavan
   When I read this article two songs came to my mind 1) Naan pirantha nattirkendha nadu iniyadhu and 2) Sorgame enralum–
   On why I attached this link -Many leaders have died in our country –Have you heard of one instance of our people living abroad CELEBRATING it —
   My countrymen who live abroad did not run away from a repressive regime which snatched away all they had –These people can visit their home country at any time freely — Can you say the same thing about Cubans living in U S —

   As for corruption it is easy to do this in a regime where no one can raise a finger –Cuba is no better in this -It is ranked 67 th among corrupt states , slightly better than some Central American countries but well below established democracies of the western world—-
   Even a street vendor in our country earns more than what a Cuban earns in his country –An employee of a small company in our country earns twice or thrice as much — If you are eager to know how much a doctor earns in Cuba internet will provide the answer-

   • இளங்கோ சொல்கிறார்:

    எல்விஸ் சார்,

    கொஞ்சம் விட்டால் கதைத்துக்கொண்டே போகிறீர்களே ?
    ஒழுங்காக க்யூபாவின் சரித்திரத்தை முழுவதுமாக படித்திருந்தால் இப்படி
    எழுத மாட்டீர்கள்.
    எவன் ஃபிடல் காஸ்டிரோ இறந்தபோது அமெரிக்காவில் நடனம் ஆடினான்…? க்யூபாவில் நடந்த உள்நாட்டுப்போரில்
    தப்பித்து ஓடி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்களின் பரம்பரை தானே ?
    அவர்களின் விரோதி இறந்தார் என்று நினைத்து அவர்கள் கொண்டாடினார்கள். உள்நாட்டுப்போர் நடந்தால், ஜெயிப்பவர்களை தோற்றவர்கள் ஏசத்தான் செய்வார்கள். இதிலென்ன அதிசயம் கண்டு விட்டீர்கள் ?

    நான் முன்னால் கேட்டேனே அதற்கு ஒரு பதிலையும் காணோம்;

    இந்த நாட்டில் எத்தனை மக்களுக்கு ஒரு டாக்டர் இருக்கிறார் ?
    இந்த நாட்டில் எத்தனை மாணவர்களுக்கு ஒரு டீச்சர் இருக்கிறார் ?
    இந்த நாட்டில் எத்தனை பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள் ?
    எத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் ?
    அதெல்லாம் உங்களுக்கு உறைக்கவில்லையே ?
    ஃபிடல் இறந்ததை கொண்டாடியது தானே பெரிய விஷயமாக தோன்றூகிறது. இது உங்கள் taste ஐ பிரதிபலிக்கிறது.

   • புதியவன் சொல்கிறார்:

    எல்விஸ் – உங்கள் கருத்து ஏற்கத்தக்கது அல்ல.

    “On why I attached this link -Many leaders have died in our country –Have you heard of one instance of our people living abroad CELEBRATING it”

    நீங்கள் நம் நாட்டில் நடந்த பல விஷயங்களைப்பற்றிப் படித்திருக்கவில்லை. அதனால்தான் அது உங்களுக்குத் தெரியவில்லை. ஓரிரண்டு உதாரணமே போதும் (அது மற்றவர்களைக் காயப்படுத்தும், பழசை நினைக்கவைக்கும் என்ற போதும்)
    1. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது – அது ஒரு பெரிய விஷயமல்ல, கூட இருந்த, (தங்கள் கடமையைச் செய்யாத) போலீஸ்காரர்கள் இறந்தார்களே அதுதான் வருத்தம் – இந்தக் கருத்தைப் பல அரசியல்வாதிகள் சொல்லியிருக்கின்றனர். நம் தேசத் தலைவரைக் கொன்றவர்களைப் பாதுகாத்து லாரியில் ஏற்றி மறைத்து அனுப்பினர்.
    2. இந்திரா இறந்தபோது, அதனை பல சீக்கியர்கள், அதுவும் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் ‘பழி வாங்கிவிட்டோம்’ என்று சந்தோஷமாகக் கொண்டாடினர்.
    3. காந்தியை எப்படித் திட்டமிட்டுக் கொன்றோம் என்று தண்டனை அடைந்தபிறகும் வருத்தப்படாமல், கோபால் கோட்சே அவர்கள் விடுதலை பெற்றபிறகு, அதனை நடித்துக் காட்டிய காணொளி யூடியூபில் கிடைக்கிறது (த்தது)

    கருத்துச் சுதந்திரம் கம்யூனிச நாட்டில் கிடையாது. உங்களுக்கு சோவியத் யூனியன், சைனா, கியூபா போன்ற பல நாடுகளில் நடந்தது தெரியும். அதனால்தான் அந்த நாட்டிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் வாழ்பவர்கள், அந்த நாட்டைப் பற்றிக் குறைகள் சொல்வார்கள், அந்த நாட்டுத் தலைவர்கள் மறையும்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இது ஒரு பெரிய விஷயமே கிடையாது. எல்லோரும் போற்றும் மனிதன் என்று ஒருவனும் இவ் உலகில் பிறந்ததும் இல்லை, பிறக்கப்போவதும் இல்லை. அப்படி யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் ( நிச்சயமாக யாரும் கிடையாது)

    It is ranked 67 th among corrupt states – ஒரு நாடு மனிதர்களால் ஆனது. மனிதர்கள் ஒத்துழைப்பில்லாமல் ஒரு நாடு உயர்வு எய்த முடியாது. உலகில் லஞ்சமில்லாத நாடு என்று நியூசிலாந்து பெயர்பெற்றிருக்கிறது. லஞ்சப் பேய்கள் இருக்கும் நாடு, மக்களும் லஞ்சப்பயல்கள் என்று பார் முழுவதும் பாரத தேசம் பெயர்பெற்றிருக்கிறது. காரணம் தலைவன் இல்லை, மக்கள். ஏனென்றால் தலைவன் அந்த மக்கள் தேர்ந்தெடுத்துத்தான் வருகிறான். உங்களுக்குத் தெரியுமா, நம்ம ஏர்போர்ட்களில் ரூபாய் வாங்கிக்கொண்டு கஸ்டம்ஸ் இல்லாமல் பொருட்கள் எத்தனை போகின்றன என்று? இதுபோல் ஓரு லட்சம் உதாரணம் நம் நாட்டைப் பற்றிக் காட்டலாம்.

    Even a street vendor in our country earns more than what a Cuban earns in his country – இது ஒரு வாதமே கிடையாது. நம்ம ஊர் கவுன்சிலர், அமெரிக்க ஜனாதிபதியை விட அதிகமாகச் சம்பாதிக்கிறார். இது ஒரு பெருமையா? கியூபாவில், மக்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் இருக்கா? அதான் விஷயமே. நம்ம ஊர்ல, சட்டத்தை மதிக்கும் ஒரு நடைபாதை வியாபாரியைக் காண்பியுங்கள் பார்ப்போம்? ஒன்றுபட்ட சோவியத் யூனியனில், ஒரு குடும்பத்துக்கு 200 ஸ்கொயர் அடிகள்தான் வீடே (அதைவிடக் குறைவு என்று ஞாபகம். அதாவது 10க்கு 20 அடி. அதனுள்ளே கிச்சன், டாய்லெட், படுக்கை அறை எல்லாம் அமைந்துவிடும். இதைவிடக் குறைவுதான்). ஒருத்தன்/குடும்பம் படுக்க 7 அடிக்கு 5 அடி அறையே அதிகமல்லவா?

    • புதியவன் சொல்கிறார்:

     சோவியத் யூனியன் எப்படி இயங்கியது, அங்குள்ள அரசியல் சூழ்நிலை போன்றவற்றை நான் படித்திருக்கிறேன். எந்த அரசு அதிகாரியும் (தூதரோ அல்லது யாராயினும், அதாவது அதிபரைத் தவிர எல்லாருக்கும் இது பொருந்தும், அதிபருக்கும் நிறைய சமயங்களில் பொருந்தும்) வெளி’நாட்டுக்குப் போகும்போது, அவர்களது குடும்பம் முழுவதும் அரசாங்கப் பிடியில் இருக்கும். அதாவது அந்த வெளினாட்டுக்குப் பயணம் சென்றவர் திரும்பிவரும் வரை, பிணையக் கைதிகளாக இருப்பர். திரும்பி வரவில்லை என்றால், உடனே குடும்பம் முழுவதும் கொல்லப்படுவர். அங்கு, கணவன் மனைவிக்கு இடையில் ரகசியம்கூட பரிமாறிக்கொள்ள இயலாது (யார் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினர் என்பது தெரியாது) பெற்ற பிள்ளைகளுக்கும் இதே கதிதான். பிள்ளை, தாயையோ தந்தையையோ காட்டிக்கொடுப்பது சகஜம். காட்டிக்கொடுப்பவர்கள் பரிசும், சலுகையும் பெறுவதும் சகஜம்.

     இதே நிலைமை (கொஞ்சம் modified) சைனாவில் இப்போதும். வட கொரியாவில் அனேகமாக பழைய சோவியத் நிலைமைதான். (அதனால்தான் மாணவிகள், பெண்கள், வட கொரிய அதிபரை, அப்பா ஸ்தானத்தில் விளிப்பதும், பெருமையாகவும் பயத்துடனும் வெளியில் பேசுவதும் நடக்கிறது)

     இந்த மாதிரி முழுமையான ஆதிக்கம் இல்லாமல், கம்யூனிசம் வெற்றிபெறாது. (அல்லது மன்னராட்சி வெற்றிபெறாது. இதுதான் பல அரபுதேசங்களிலும் நடக்கிறது, குறிப்பாக சௌதியில்)

 3. selvarajan சொல்கிறார்:

  சகாப்த நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ வினவிய கேள்வி :— // நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? ‘உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினர் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?’ என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா? அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா? இவைகளைப் பற்றி எதுவும் அறியாமல், அவனைச் சிறையில் தள்ளி விடுகிறீர்கள்……

  ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளை அடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களையும் ஒரு நாள்கூட சிறையில் தள்ள மாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம்” – // என்று ஒரு வழக்குக்காக சிறையிலிருந்து கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து இப்படிக் கேட்கிறார்….. தன் மக்களுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனிநாட்டை வழி நடத்தியவரின் நாட்டில் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் இருப்பதில் ஏது ஆச்சர்யம் …. ?

  ” தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்! ” … என்று தான் கூறியதற்கேற்ப நடந்துக்க காட்டிய மா மனிதன் …. ஆனால் இருக்கின்ற ” ஜீவாதார உரிமைகளை ” ஒவ்வொன்றாக பறித்து மக்களை திண்டாட விட முனையும் மனிதர்களை ” ஆதர்ச புருஷர்களாகவும் — காக்க வந்த கடவுளாகவும் ” நினைத்து துதிப் பாடும் அவல நிலைகளும் உலகில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது …. ?

 4. Sundar Raman சொல்கிறார்:

  சபாஷ் , நான் உங்களை ஏன் இன்னும் … கேரளாவை பற்றியோ அல்லது மேற்கு வங்கம் , இடது சாரி பற்றி எழுதவில்லேயே என கேட்க நினைத்தேன் …ஆனால் நீங்கள் , வயதில் , அனுபவத்தில் மற்றும் எல்லாவற்றிலும் பெரியவர் .. முந்தி கொண்டீர்கள் . சுற்றி வளைத்து புரட்சி , மகிழ்ச்சி என எழுதுகிறீர்கள் . நிச்சயமாக எனக்கு கியூபாவின் வரலாறு தெரியாது , இப்போது தெரிந்து கொண்டேன் . பிளோரிடாவில் ( USA ) , நிறைய அந்த தேசத்து மக்களை பார்த்திருக்கிறேன் , அவ்வ்ளவு நல்ல , தேசத்தை விட்டு விட்டு , ஏன் அந்த வீணாய் போன அமெரிக்காவுக்கு படை எடுக்கிறார்கள் என தெரிய வில்லை . கியூபா நாடு மக்கள் , அமைதி விரும்பிகள் , நடனம் , இசை என ஈடுபாடு உள்ளவர்கள் என அறிகிறேன் . மற்ற படி இப்போதைக்கு அங்குள்ள நிலைமை என்னவென்று எனக்கு தெரியாது .

  அடுத்து பெரியார் பற்றி ஒரு பதிவு போடவேண்டியது தான் பாக்கி … அதையும் செய்து விடுங்கள் .

  • இளங்கோ சொல்கிறார்:

   Sundar Raman சார்,

   //பிளோரிடாவில் ( USA ) , நிறைய அந்த தேசத்து மக்களை பார்த்திருக்கிறேன் , அவ்வ்ளவு நல்ல , தேசத்தை விட்டு விட்டு , ஏன் அந்த வீணாய் போன அமெரிக்காவுக்கு படை எடுக்கிறார்கள் என தெரிய வில்லை .//
   சும்மா குதிக்காதீங்க சார்.
   நீங்கள் ஏன் தாயகம் பாரதத்தை விட்டு விட்டு புளோரிடாவிற்கு படையெடுத்தீர்களோ அதேஏஏஏஏ போன்ற காரணங்கள் அவர்களுக்கும் இருந்திருக்கும்.
   பாஜக / ஆர்.எஸ்.எஸ். அமெரிக்கா ஹெச்-1 விசா தவிர வேறு என்ன தெரியும் உங்களுக்கு ?

  • LVISS சொல்கிறார்:

   Mr Sundraraman I attached a video of life in Cuba– Some how it never appeared –If you are interested to know about life in Cuba search for” life in cuba ” in you tube from where I got the video–I see no hope of the video appearing here —

 5. Sundar Raman சொல்கிறார்:

  நான் சுற்றிப்பார்க்க தான் போனேன் ( அலுவலகத்தில் இருந்து ) … நான் தற்பொழுது வசிப்பதும் வெளிநாட்டில் தான் ( துபாய் ) . சத்தியமாக எனக்கு ஆர்.எஸ் எஸ் பற்றி தெரியாது … எப்போதாவது வெள்ளம் , புயல் , சுனாமி பற்றிய பதிவிகளில் அவர்களும் மற்ற அமைப்புகள் கூட பணியாற்றி இருக்கிறார்கள் என அறிகிறேன்.சென்னை வெள்ளத்தில் , திருவல்லிக்கேணி யில் இருந்து நிறைய இளைஞர்கள் , இஸ்லாமிய மக்கள் களத்தில் இறங்கி , மிக பெரிய சேவை செய்தார்கள் எனவும் அறிவேன் . அங்கு மட்டும் அல்ல , எங்கெல்லாம் அவசியமோ அங்கு சேவை செய்ய காத்திருக்கிறார்கள் . நான் வசிப்பது கேரளாவில் தான் ( அதாவது வருஷத்துக்கு ஒரு முறை ) , திருச்சியில் தோழர்கள் என்னவெல்லாம் செய்வார்கள், செய்தார்கள் என்று ஓரளவுக்கு தெரியும் ( சி.ஐ .டீ .யூ யூனியன் BHEL இல் மிகவும் பிரசித்தம் ) ..அதே தோழர்கள் , சொந்தமாக ஏதாவது தொழில் செய்தாலோ அல்லது கடை வைத்து இருந்தாலோ , ஊழியர்களை எப்படி நடத்துவார்கள் , எவ்வ்ளவு ஊதியம் கொடுப்பார்கள் என நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியது இல்லை

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சுந்தர் ராமன்,

   உங்களை விட வயதானவன், அனுபவம் உள்ளவன் என்கிற முறையில்
   ஒரு சின்ன அட்வைஸ்…

   பார்வையை, கோணத்தை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
   முழுமையான நியாயமோ, நூறு சதவீதம் நேர்மையோ – எந்த கட்சியிலும்,
   எந்த தலைவரிடமும் நிச்சயம் கிடையாது.
   கண்களை மூடிக்கொண்டு, நான் ஏற்கெனவே தீர்மானித்தது தான் சரி என்று
   நினைக்காமல், திறந்த மனதுடன் எந்த விஷயத்தையும், யார் சொல்லும்
   கருத்துக்களையும் கேளுங்கள். எல்லாவற்றையும் கேட்டு –
   பிறகு உங்களுக்குள் யோசித்து, நீங்களாகவே – எந்த வித pre-determined ideas -உம்
   இல்லாமல் ஒரு முடிவெடுங்கள்.

   ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவருக்கு ஆதரவாக முடிவெடுக்க நேர்ந்தால்,
   தயங்காதீர்கள்…. நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவரும் இல்லையென்றால்,
   நீங்கள் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும்,
   அதன் தன்மைக்கேற்ப தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்.நாம் எதற்காக அநாவசியமாக ஒரு கட்சிக்குள் நம்மை பந்தப்படுத்திக்கொண்டு நம் சுதந்திரத்தை இழக்க வேண்டும்…
   அநாவசியமாக அவர்கள் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து வக்காலத்து வாங்க வேண்டும்…? எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை தேர்தல் சமயத்தில் முடிவு செய்து கொண்டால் போதுமே… ஏன் எப்போதும் எதாவது ஒரு கட்சிக்கு அடிமையாக இருக்க வேண்டும்..? அது அரசியலையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு தானே பொருந்தும்,,, ?

   என்னை – பாஜகவிற்கு எதிரி என்று உங்களை போன்றவர்கள் கருதுவது தான்
   உங்களின் பெரும்பாலான பின்னூட்டங்களின் அடிப்படை.
   உங்கள் நினைப்பு தவறு. நான் பாஜகவிற்கு என்று தனியான எதிரி அல்ல.

   ஒவ்வொரு விஷயத்தையும், அந்தந்த விஷயத்தின் தன்மையை பொருத்து
   நான் சுதந்திரமாக, என் மனசாட்சி சொல்வதன் அடிப்படையில் முடிவெடுக்கிறேன்.

   இன்னொரு நாள் நான் மோடிஜியை ஆதரித்து எழுதியதை எல்லாம்
   நீங்கள் படித்ததில்லையா…?
   அந்தந்த சமயத்தில் எது சரி என்று தோன்றுகிறதோ, அதைத்தான் நான் எழுதுகிறேன்.
   பெரியாரைப் பற்றி எழுத வேண்டியது தான் பாக்கி என்று எனக்கு எழுதி இருக்கிறீர்கள்.
   அவசியம் நேர்ந்தால், அது குறித்தும் எழுதலாம் – இப்போது அதற்கான அவசியம் இல்லை.
   பெரியார் பிராம்மண துவேஷி என்று நீங்கள் நினைக்கலாம். அது உண்மையும் கூட.
   ஆனால், அதைத்தாண்டி அவர் செய்த சமூக சீர்திருத்தங்கள் எத்தனை எத்தனையோ – அதற்காக
   அவர் கொண்டாடப்பட வேண்டியவர் தான்.
   ஏனோ தெரியவில்லை – உங்களிடம் கொஞ்சம் விவரமாக பேச வேண்டும் என்று
   தோன்றியது. எழுதி விட்டேன். நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி – ஏளனப்படுத்தினாலும் சரி.

   எல்லாம் போகட்டும் அந்த கண்ணனுக்கே…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. selvarajan சொல்கிறார்:

  நல்லெண்ணம் — பரந்த மனது — நல்ல நிர்வாகத்தை பாராட்டும் மனப்பாங்கு — அந்த நாடு போல் எம் நாடும் மாறாதா என்கிற அங்கலாய்ப்பு — அந்த தலைவரைப் போல எம் நாட்டில் இருக்கின்ற தலைவர்கள் எப்போது மாறுவார்கள் — உருவாகுவார்கள் என்ற ஏக்கம் — எம் மக்களுக்கும் அது போன்ற வசதி வாய்ப்புகள் எப்போது கிடைக்கும் என நப்பாசை — போன்ற ஏதாவது ஒன்று இந்த இடுகையை { பதிவை } படித்தவர்கள் பலருக்கும் — ” ஆத்திரம் — கோபம் யாரையோ குத்திக் காட்டுவதாக நினைக்கும் எண்ணம் ” போன்றவை ஒரு சிலருக்கும் ஏற்படுத்திய — திரு .கா.மை அவர்களுக்கு ஒரு ” சலுயூட் ” என்ன ஒரு குறை என்றால் ….

  ஒரு நாள் முழுக்க இந்த பதிவில் உள்ள விபரங்களுக்கும் — அதில் குறிப்பிட்ட ‘ காஸ்ட்ரோ ” அவர்களை பற்றியும் ஏதாவது குறைகள் கிடைக்காதா என்று தேடோ – தேடு என்று பல விதங்களில் தேடியும் — உப்பு சப்பில்லாத ஒன்றிரண்டு கிடைத்தும் ஏதும் பலன் இல்லாமல் போனது தான் — சோகம் — மற்றும் வருத்தம் திரு . கா.மை . மீது … !!!

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  திரு.எல்விஸ்,

  ஊழல் அதிகாரிகளின் மீது மத்திய அரசு எடுத்து வரும் அதியற்புத
  நடவடிக்கைகளை பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் link –

  “லோக் பால்” சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றிய மறுகணமே
  இங்கு பிரசுரம் செய்யப்பட்டு விடும்.

  எனவே, நீங்கள் நெகிழ்ந்து, மகிழ்ந்து பாராட்டும் அரசை –
  உடனடியாக “லோக் பால்” சட்டத்தை நிறைவேற்றச் சொல்லுங்களேன்.
  ஊழலை ஒழிப்பது இன்னும் நிச்சயமாகும்.
  —————-

  “மட்டறுத்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது” என்றால் –
  waiting for approval என்று அர்த்தம்…!

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.