பாஜக’வின் – ” காங்கிரஸ் முக்த் பாரத் “


– இது பாஜகவின் 2014 பாராளுமன்ற
தேர்தலுக்கான “ஸ்லோகன்” ஆக இருந்தது…

அதாவது காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதை
தனது லட்சியம் என்று பாஜக 2014 தேர்தலின்போது
சொல்லியது….

அப்போது, யாருமே அது நிஜத்தில் நடக்குமென்று
நம்பவில்லை… அதிக பட்சம், காங்கிரஸ் கட்சி தேர்தலில்
தோற்கடிக்கப்படலாம்.. ஆனால் காங்கிரசை இல்லாமல்
ஒழிப்பது இயலாத காரியம் என்றே நினைத்தார்கள்…!

ஆனால், இப்போது மக்கள் நம்புகிறார்கள்…
நடக்குமென்று நம்புகிறார்கள்…
பாஜக அதை செயலாக்கிக் கொண்டிருக்கிறதே…!!!கோவா ஆயிற்று, மணிப்பூர் ஆயிற்று,
ஹிமாசல் ஆயிற்று….
இப்போது குஜராத், உ.பி.ஆகிக் கொண்டிருக்கிறது…

என்ன – காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள்
மந்திரிகள், மாநிலத் தலைவர்கள் – என்று வரிசையாக எல்லாரையும் பாஜகவில் சேர்த்துக்கொண்டால் –
தீர்ந்தது காங்கிரஸ்…
” காங்கிரஸ் முக்த் பாரத்…!!!”

பாஜகவின் கனவுத்திட்டம் “காங்கிரஸ் இல்லாத இந்தியா”
( அதாவது அத்தனை காங்கிரஸ்காரர்களையும் பாஜகவில்
இணைத்துக் கொள்ளும் திட்டம் ) …!!!

நிறைவேறி விடும் – கூடிய சீக்கிரத்தில்…!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to பாஜக’வின் – ” காங்கிரஸ் முக்த் பாரத் “

 1. தமிழன் சொல்கிறார்:

  இதற்கு முதல் காரணம், காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு ராகுல் அவர்கள் தலைமை மீது நம்பிக்கை இல்லாதது. அதுவும்தவிர, சோனியா அவர்களின் உடல் நலமின்மை. அரசியல் தலைமை, ஆட்சியில் இல்லாதபோதும், பிற்காலத்தில் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையைத் தன் கட்சிக்காரர்களிடம் தோற்றுவிக்கும் ஆளுமை.

  பாஜக, இந்தக் கட்சி மாறிகளால், குறுகிய காலப் பலனைப் பெறலாம். ஆனால் அவர்களின் முதுகெலும்பு, ஆர்.எஸ்.எஸ். என்றுதான் நான் நினைக்கிறேன். ‘வகேலா’, ‘எஸ்.எம்.கிருஷ்ணா’ போன்ற இத்துப்போன அரசியல்வாதிகள் பாஜகவின் பலமாக இருக்க முடியாது.

  • இளங்கோ சொல்கிறார்:

   காங்கிரசில் இருந்த கழிசடைகளை எல்லாம் பாஜகவில்
   வெற்றிலை பாக்கு வைத்து (தச்சணையும் கொடுத்து)
   இழுத்துக் கொள்கிறார்கள். So இவர்கள் வாதப்படி ஏற்கெனவே
   பாஜக புனிதக்கட்சியாக இருந்தாலும் கூட, இந்த கழிசடைகளை
   இழுத்துக் கொண்ட பிறகும் அது எப்படி இனியும் புனிதமாக
   இருக்க முடியும் ?
   அத்தனையும் அரசியல் கழிசடைகள் தான்.
   அங்கே இருக்கும்போது காங்கிரஸ் என்றூ பெயர்
   இங்கே வந்து விட்டால் பாஜக என்று பெயர்.
   கடவுளை எந்த பெயர் சொல்லி வேண்டுமானாலும் அழைக்கலாம்
   என்று கே.எம்.சார் சொன்ன மாதிரி, இந்த கழிசடைகளையும்
   என்ன பெயர் சொல்லி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
   இரண்டும் ஒன்று தான்.
   நண்பர் டுடேஅண்ட்மீ சொன்ன மாதிரி
   காங்கிரஸ் பினாமி – .பாஜக சுனாமி.
   வால்க ஜனநாயகம்.

   • தமிழன் சொல்கிறார்:

    “காங்கிரசில் இருந்த கழிசடைகளை எல்லாம் பாஜகவில்”

    இளங்கோ. அரசியலில் 5% நல்லவர்கள் இருந்தாலே அதிகம் என்பது என் எண்ணம். இதில் கட்சி வித்தியாசம் என்ன?

    நாம் எல்லோரும், இந்தக் கட்சி நல்லது செய்யும் என்று ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் மனதில் நினைத்து, அதனை மனதளவில் ஆதரிக்கிறோம். ஆனாலும், எல்லாக் கட்சிகளும், மக்கள் நலன் என்று வரும்போது, அதன் பக்கம் நிற்பதில்லை என்பது உண்மைதானே.

    பொதுவா விமரிசனம் எழுதும் நாம், எந்தக் கட்சியின் கழிசடை வேலைகளையும் ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை. அது, மீத்தேன் வாயு எடுக்க மறந்துபோய் கையெழுத்துபோட்ட ஸ்டாலினாகட்டும், எதிர்கட்சியைப் பிளந்து நெறிமுறையில்லாமல் ஆட்சி அமைத்த பாஜகவாக ஆகட்டும், திடுமென்று கிடைத்த புதையலை அபகரிக்க நினைக்கும் அதிமுகவாகட்டும் (ஜெ. மறைவின் பின், திருடர்கள் வசம் கட்சி வந்துவிட்டது, தலைமை மறைந்துவிட்டது), வேறு வழியில்லாமல், கூட்டணி சேர்ந்தபின், அந்த அந்தக் கட்சிகளின் ஊழல்களுக்கு வக்காலத்து வாங்கும் கம்யூனிஸ்டுகளாகட்டும், நமக்கு எல்லாம் ஒன்றுதான்.

 2. LVISS சொல்கிறார்:

  Congress Mukht Bharat does not mean a country without Congress Party but a country without Congress governments — This is what II heard Amit Shah saying in an interview – There was a time when we had only congress govt everywhere -It is not the situation now –There are strong regional parties firmly in control in many states –
  Having said that ,instead of tearing their heads as to why parties are veering towards BJP , those who oppose BJP should go to Gujarat to find out why the people there, in spite of the riots publicised all over the world and non stop vilifying of Modi voted for Modi led govt again and again –If they can find an answer to this they will know why parties are willing to ally with BJP —
  There was a news yesterday that one person from EPS faction and one from OPS faction will join the union cabinet after this session of Parliament –Modi is reported to have told the factions to reunite — BJP was able to get one ministry for LJP party in Bihar ,whose leader Ram Vilas Paswan is a severe critic of Nitish Kumar -Some from JDU may be inducted into Modi govt – These are all floating news —

  • புதியவன் சொல்கிறார்:

   எல்விஸ் – நமக்கு பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் ஸ்டிராங் ஆக இருக்கவேண்டும். மாநிலக் கட்சிகள் மறையவேண்டும். அவர்களால், இந்திய ஒற்றுமை ஓங்க முடியாது. கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிப்பது (2004, 2009 ஆகிய பீரியடில் நடந்தது போன்று) ஒழியவேண்டும்.

   அப்படி இல்லாததனால்தான், இந்த அரசியல் கூட்டு, பொரியல் எல்லாம் நமக்கு அலர்ஜியைத் தருகின்றன.

   ஒரே இனம் ஒன்று சேர்ந்து தலைமை தாங்கலாம். (இனம் என்பது ஒரு கட்சி என்று பொருள்). பலர் சேர்ந்து கூட்டுத் தலைமை என்பது கூட்டுக் கொள்ளையில்தான் போய் முடியும். திமுக, லாலு இவர்களெல்லாம் இதற்கு சாட்சி. (எனக்குத் தெரிந்தவரை, கம்யூனிஸ்டுகள் நாட்டு முன்னேற்றம் என்று மற்றவர்கள் நம்புபவைகளுக்கு முட்டுக்கட்டை போடுவார்களே தவிர, 90%க்கும் மேல் அவர்கள் காசு சுருட்டாத, சாதாரண மனிதர்கள், மனித அபிமானம் கொண்டவர்கள்)

   நான் சொல்லியிருப்பது, மத்தியில் மட்டுமல்ல, மானிலத்துக்கும் பொருந்தும்.

 3. LVISS சொல்கிறார்:

  Mr Puthiyavan When Congress was in power in most of the states no one spoke about a strong opposition –Now we want everything to be strong except the govt at the centre –Regional parties are here to stay –The main party was responsible for this –Just see what brought the DMK to power in T Nadu , Congress not supporting the popular view against Hindi at a particular time —

 4. Vignaani சொல்கிறார்:

  ..//..எல்விஸ் – நமக்கு பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் ஸ்டிராங் ஆக இருக்கவேண்டும். மாநிலக் கட்சிகள் மறையவேண்டும். அவர்களால், இந்திய ஒற்றுமை ஓங்க முடியாது.//..மிகச் சரி.
  அகில இந்திய கட்சிகள் என்று பொதுவான அபிப்ராயம் உள்ள கட்சிகள் பா ஜ. க., காங்கிரஸ், இடது, வலது கம்யூனிஸ்டுகள். தோழர்கள் வங்கம், கேரளா, திரிபுரா மாநிலக் காட்சிகள் என்றாலும் அகில இந்திய நோக்கு உள்ளவர்கள். அவர்களின் வங்கத்தில் அவர்களின் நிலை ஊக்கம் தருவதாக இல்லை. அம்பதுகளின் வசனங்களையே இன்றும் பேசுகின்றனர்.
  காங்கிரஸ் தம் கட்சிகளின் உறுப்பினர்களையே நம்ப வைக்க முடியவில்லை அது ஒரு சரியான கட்சி என்று: புதிய வாக்குகளை எங்ங ன ம் பெறும்? இப்போதைக்கு காங்கிரஸ் முக் த் இந்தியா தான்.
  காங்கிரஸ் ஒரே அல்ல து முக்கிய கட்சியாக இருந்த ஐம்பதுகளின், அறுபதுகளின் “தீர்க்க முடியாத பிரச்னைகள்” என்று அபிப்ராயம் உருவாக்கி இருக்கும் காஷ்மீர் போன்றவற்றை பா ஜ க ஒருவேளை முடித்துவைக்குமோ என்ற எண்ணம் உள்ளது.
  வரும் ஐந்தாறு ஆண்டுகளில் ISIS/JIM/LET ஒழிய வில்லை என்றால் மதச்சார்பின்மை என்ற ஒன்றையே மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும். காங்கிரஸ்-முகத் இந்தியாவால் அது முடியும்.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் இளங்கோ கேட்ட இந்த கேள்விக்கு
  யாரும் (தமிழன் தவிர ) respond பண்ணவில்லை போலிருக்கிறதே….
  அப்படியானால் இதை மேற்கண்ட அனைவரும் ஏற்கிறீர்கள்
  என்று அர்த்தம் கொள்ளலாமா …??? 🙂 🙂 🙂

  // காங்கிரசில் இருந்த கழிசடைகளை எல்லாம் பாஜகவில்
  வெற்றிலை பாக்கு வைத்து (தச்சணையும் கொடுத்து)
  இழுத்துக் கொள்கிறார்கள். So இவர்கள் வாதப்படி ஏற்கெனவே
  பாஜக புனிதக்கட்சியாக இருந்தாலும் கூட, இந்த கழிசடைகளை
  இழுத்துக் கொண்ட பிறகும் அது எப்படி இனியும் புனிதமாக
  இருக்க முடியும் ?//

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை. சார்… இதைவிட எனக்கு மிகவும் எரிச்சலை உண்டாக்கும் செய்தி, குஜராத் காங். எம்.எல்.ஏக்களில் சிலர் மீது (ஈகிள்டன் ரிசார்ட்டில் அடைத்துவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள்) வருமான வரி இலாகா ரெய்டு போவது. கூவாத்தூரில் நடந்தபோது இவர்கள் எங்கே சென்றிருந்தார்கள்? இதுபோல, அரசின் அங்கங்கள் அரசியல்ரீதியான நடவடிக்கைகள் எடுக்கும்போது, ஜன’நாயகத்தின் அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது. என்னைக் கேட்டால், இப்படி துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பவர், ஏன் எடுத்தார் என்று தனியான நிறுவனம் கண்டுபிடித்து, அதில் அரசியல் காரணங்கள் இருந்தால் அந்த அதிகாரிகளை பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யவேண்டும். இவர்கள் ஜன’நாயகத்தை அழிக்கவந்த பதர்கள். இதனை அரசியல்வாதிகள் செய்யச்சொல்லியிருந்தால், அவர்களைக் கண்டிப்பாக தகுதி நீக்கம் செய்யவேண்டும். இப்படி நியாயம் இல்லாமல், வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு சட்டம், வேண்டாதவர்களுக்கு ஒரு சட்டம் என்றா அரசு நடந்துகொள்வது?

  • LVISS சொல்கிறார்:

   People joining BJP may not have any influence on the members already in the party — There are more than 20 parties in NDA -In what way they have affected BJP –Some people are calling the BJP a punitha party –They call themselves a party with a difference —How many members who leave the party join other parties –Once a person leaves the party he becomes a nobody at once–They come back after some time and they are forgiven and given due recognition –I dont have to give examples —

 6. இளங்கோ சொல்கிறார்:

  புதியவன் சொல்வது மிகச்சரி.
  கூவாத்தூரில் கொட்டம் அடித்தபோது, இந்த டிபார்ட்மெண்ட் எங்கே
  போயிருந்தது.
  எவ்வளவு நாட்கள் டேரா போட்டிருந்தார்கள் – அத்தனை
  மீடியாவும் அதை காட்டியதே. டிபார்ட்மெண்ட் தூங்கிக் கொண்டிருந்ததா?
  மாஸ்டர்கள் அப்ரூவல் கொடுக்கவில்லையா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.