வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்…. திரு.ஸ்டாலினும் – திரு.திருமாவளவனும்…!!!

தமிழில் எல்லாவற்றிற்கும் உதாரணம் இருக்கிறது….

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்…
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்…

—————

செய்தி –


சென்னையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய
ஸ்டாலின், ‘மாற்றம் வேண்டும் என்றால், திருமாவளவன்
பக்கபலமாக இருக்க வேண்டும்; அவர் பக்கபலமாக
இருந்தால், தேர்தலில் வெற்றி பெறுவோம்’ என்றார்.

இது குறித்து, திருமாவளவன் கூறுகையில், ‘மக்கள்
பிரச்னைகளுக்காக, தி.மு.க., வுடன் இணைந்து
செயல்படுவதில், எந்தவித சங்கடமும் இல்லை.

ஆனால், கூட்டணி பற்றி, தேர்தல் நேரத்தில் ஏற்படும் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்’ என்றார்…. 🙂 🙂 🙂

( http://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-expects-
support-from-thirumavalavan-291216.html )

கடந்த தேர்தலின்போது, திருமாவளவன் அவர்கள்
திமுகவுடன் கூட்டு சேர விரும்பினார்..ஆனால் திருவாளர்
ஸ்டாலினுக்கு அப்போது பிடிக்கவில்லை…

இப்போது….?
ஸ்டாலின் அழைக்கிறார் …
திருமாவளவனோ … தேர்தல் வரும்போது பார்ப்போம்
என்கிறார்…!!!

இப்போது அவர் கூப்பிடுவதற்கும் –
இவர் நழுவுவதற்கும் –
காரணம் ஒன்றே…

அது…..???

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்…. திரு.ஸ்டாலினும் – திரு.திருமாவளவனும்…!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    கருணானிதியிடம் திருமா இவ்வாறு பேசமுடியாது. ஏனென்றால், கருணானிதி முகத்தில் புன்னகையோடு, நேரம் வரும்போது கழுத்தை அறுத்துவிடுவார் (சீட் எதுவும் கொடுக்காமல், அல்லது கேட்ட இடங்கள் கொடுக்காமல்).

    ஏற்கனவே ஸ்டாலினுக்கு திருமா அவ்வளவு பிடிக்காது. பாமக நெருங்கி வருவதுபோல் தெரியவில்லை என்பதால், வட தமிழக பெல்டில் திருமாவைக் கூட்டணி சேர்க்க ஸ்டாலின் எண்ணுகிறார். தேதிமுக நிச்சயம் திமுகவை நோக்கி வராது.

    எனக்குத் தோன்றுகிறது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் திருமா, முஸ்லீம் கட்சிகள் சேர்ந்து கூட்டணியாக நிற்கலாம். அதற்கு எதிராக, அதிமுக, பாஜக சேர்ந்து நிற்க வாய்ப்பு இருக்கிறது.

    இப்போது திருமா ஆர்வமாக பதில் சொல்லாததற்குக் காரணம், இப்போது நடக்கின்ற ஆட்சியின் ஆதாயம் போய்விடக்கூடாது என்பதால்தான் (தன் கட்சிக்காரர்களுக்கு, கட்டப்பஞ்சாயத்து வீரர்களுக்கு). தேர்தல் நெருங்கும்போது நிச்சயம் சரண்டர்தான்.

    திருமாவுக்கு வேறு போக்கிடம் கிடையாது. அவர் பாஜகவை நெருங்க முடியாத அளவு தேவையில்லாத வீரம் காண்பித்துவிட்டார். தனியாக நின்றால் டெப்பாசிட்கூட அவருக்குக் கிடைக்காது. திமுகவோடு சேராமல் இருந்தால் தோல்வி நிச்சயம். வேறு என்னதான் அவருக்குப் போக்கிடம்?

  2. LVISS சொல்கிறார்:

    Why every party is trying to build up Thirumalavan as a party leader with good vote bank — By himself he would not get many votes – He cannot go to BJP because he is secular – He cannot go to AIADMK because he has never allied with the party – That leaves only DMK –If what you say is true then he is paying back and wants to keep Stalin on tender hooks —

    • தமிழன் சொல்கிறார்:

      திருமா 2006 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிவைத்து 6 (நினைக்கறேன்) சீட்டுகள் வெற்றிபெற்றார். அப்போதுதான் 90 சீட்டுகள் பெற்று மைனாரிட்டி ஆட்சியை கருணானிதி அமைத்தார்.. உடனே திருமா அதிமுகவை விட்டுவிட்டு திமுகவுக்கு ஆதரவாக மாறினார்.

      இதே திருமா தான், முதல் முதலாக அப்போலோ மருத்துவமனை சென்று ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று வாங்கின காசுக்கு கூவினவர்.

      திருமாவுக்கு வேறு வழியே கிடையாது. அதனால் ஸ்டாலின் இப்போது அவரை நல்ல பக்கத்தில் வைத்து, தேர்தலின்போது மிகக் குறைந்த இடங்களைக் கொடுக்கலாம் (திருமாவின் மற்ற வாய்ப்புகளைக் கெடுத்து). திருமாவால் ‘நாஞ்சில் சம்பத்’ போல நல்ல உபயோகம் கிட்டும் (எதை எடுத்தாலும் ஆதரித்து தவளைபோல் பேச)

      • இளங்கோ சொல்கிறார்:

        தமிழன்

        நீங்கள் திருமாவை குறைவாக எடைபோடுகிறீர்கள்.
        அவர் திறன் உங்களுக்கு தெரியாது.

        • தமிழன் சொல்கிறார்:

          நல்லாப் பேசுவார். ஆனால் ராமதாஸ், சட் சட் என்று அரசின் தவறுகளைச் சுட்டிக்காண்பிப்பதுபோல் திருமா செய்ததில்லை. பொதுவாக அவரைப் பற்றி என் பிம்பம், ‘அல்லக்கை’, அதாவது சுப.வீ , வீரமணி போல.

          இலங்கைத் தமிழர்கள் என்று பேசிக்கொண்டே, கனிமொழியோடு சேர்ந்து ராஜபக்ஷேவைப் பார்த்து இளித்து பெட்டி வாங்கியது, அப்போலோவுக்கு முதல் ஆளாகப் போய் ‘Everything Okay’ என்று கூவியது, 2006 தேர்தல் முடிந்ததும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்ததை மறந்துவிட்டு, முதல் ஆளாக, ஆதாயத்துக்காக கருணானிதிக்கு ஆதரவு தெரிவித்தது போன்றவை திருமாவின் திறமையைப் பறைசாற்றுவதுபோல் இல்லை.

    • srinivasanmurugesan சொல்கிறார்:

      குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற முன் ஜாக்கிறதை தான் காரணம்.மற்றபடி திருமா மீது அன்பு பாசம் மரியாதை எல்லாம் கிடையாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.