அழகான ஒரு 1928 காதல் கதை….!!!

சில நாட்களுக்கு முன்னர், எதேச்சையாக ராஜாஜி அவர்களின்
மகள் லக்ஷ்மி மற்றும் காந்திஜி அவர்களின் மகன் தேவதாஸ்
காந்தி ஆகியோரின் திருமண புகைப்படம் ஒன்றை கண்டேன்.

அதைத் தொடர்ந்து அவர்களது திருமணம் பற்றிய
தகவல்களை தேடிக்கொண்டிருந்தேன்…. நண்பர் செல்வராஜன்
மூலம் அந்த தகவல் கிடைத்தது. ( அதற்குண்டான ஆவணப்
பின்னணியுடன் ) செல்வராஜனுக்கு என் நன்றிகள்.

அந்த 1928 காதல் கதை – நண்பர் செல்வராஜனின்
வார்த்தைகளிலேயே –

—————————————

தேவதாஸ் காந்தி — காந்திஜியின் கடைக்குட்டி புதல்வர் …
காந்திஜிக்கு உறுதுணையாகவும் – அவரது போராட்டங்களில்
கலந்தகொண்டும் — ஜர்னலிஸ்ட்டாகவும் இருந்தவர் … பல
அந்நாளைய தலைவர்களின் தொடர்பு போலவே ராஜாஜியின்
தொடர்பும் தேவதாசுக்கு ஏற்பட்டது …..

அப்போதுதான் ராஜாஜியின் மகள் ” லக்ஷ்மியின் ” மீது காதல்
வயப்பட்டு ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிக்க … இரு
வீட்டாருக்கும் இது தெரிய வர … வழக்கம் போல
எதிர்ப்புகளும் – சலசலப்புகளும் ஏற்படத்தான் செய்தன …

ஆனால் காதலர்களின் உறுதியான முடிவினால் … என்ன
செய்வது என்று திண்டாட ..

ராஜாஜிக்கோ கலப்பு மணம் என்பதில் உடன்பாடு இல்லாத
நிலையிலும் — காந்திஜிக்கோ இருவருக்கும் உள்ள வயது
வித்தியாசம் என்பதும் ஒரு வித நெருடலை ஏற்படுத்தியது …

லக்ஷ்மிக்கு 15 வயது — தேவதாசுக்கு 28 வயது என்பதை
காரணம் காட்டி திருமணத்தை தவிர்க்கலாம் என்று முடிவு
செய்தும் – முடியாத நிலையில் … லக்ஷ்மிக்கு 16 வயது
பூர்த்தியாகவில்லை — பால்ய விவாகம் என்கிற சர்ச்சை ஏற்பட
வாய்ப்பு என்றெல்லாம் யோசித்து முடிவாக ….

காதலர்களின் உறுதியை ஏற்று இருவீட்டாரும்
திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாலும் — ஒரு
நிபந்தனையை விதித்தார்கள் –

அதாவது காதலர்கள் இருவரும் 5 ஆண்டுகளுக்கு
ஒருவரை ஒருவர் சந்திக்காமலும் – எவ்வித தொடர்பும்
இருக்க கூடாது என்றும் கட்டுப்பாடான கட்டளையை
விதித்தார்கள் …. இந்த காலக்கட்டத்தில் இருவருக்கும் மன
மாற்றம் ஏதாவது ஏற்படாதா என்கிற நப்பாசை
பெற்றோர்களுக்கு …

ஆனால் காதலர்கள் வைராக்கியத்தோடு நிபந்தனையை
கடைபிடித்து — ஜூன் 16 -1933 அன்று ” லேடி தாக்கரே ” என்பவரின் வீட்டில் பூனாவில் திருமணம் இனிதே நடந்தது — காந்திஜியும் — ராஜாஜியும் சம்பந்திகளாயினர் ….

திருமணத்தின் போது தேவதாஸ் காந்திக்கு 33 வயது —
லக்ஷ்மிக்கு 20 வயது … பல பிரபலங்கள் கலந்துகொண்டு
வாழ்த்தினார்கள் — பிர்லா மற்றும் டாக்டர் சையது மொகமது
போன்றோர் பரிசளித்த ” சில்க் புடவைகளை ” காந்திஜி ஏற்க
மறுத்துவிட்டார் … காதலின் உறுதியும் — கலப்பு மணமும்
இரு மாபெரும் தலைவர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவே
அமைந்தது…

——————————————————

இதையொட்டிய பின் சுருக்கம் –

திரு.தேவதாஸ் காந்தி, நீண்ட காலத்திற்கு ஹிந்துஸ்தான்
டைம்ஸ் நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
1957-ல் காலமானார்.

திருமதி லக்ஷ்மி, தேவதாஸ் காந்தி தம்பதிக்கு – 4 வாரிசுகள்.
ராஜ்மோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, ராமச்சந்திர காந்தி மற்றும் தாரா காந்தி.

சுதந்திர போராட்ட தலைவர்களான காந்திஜி, ராஜாஜி
ஆகிய இருவரையுமே தங்கள் தாத்தாக்களாக பெறும்
பாக்கியம் செய்தவர்கள் இவர்கள்.

இவர்களில் திரு.கோபாலகிருஷ்ண காந்தி நமக்கு அதிகம்
பரிச்சயமானவர். இவர் 1968 முதல் 1985 வரை தமிழ்நாட்டில்
IAS அதிகாரியாக பணியாற்றியவர். கடைசியாக மேற்கு வங்க
கவர்னராக பணியாற்றினார்.

————————————————–

இதையொட்டி, இந்த குடும்பம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை
தேடினேன். கிடைத்த புதையல்களை, நண்பர்களுடன் கீழே
பகிர்ந்து கொள்கிறேன் –


தேவதாஸ் காந்தி
தன் மாமனார் ராஜாஜியுடன்


லக்ஷ்மி தன் தந்தை ராஜாஜியுடன்

..

ராஜாஜி- தன் பேரக்குழந்தைகள், ராமச்சந்திரா மற்றும் தாராவுடன்

தேவதாஸ் காந்தி தன் தந்தை காந்திஜியுடன், மும்பை ஜூஹூ கடற்கரையில்

ராஜ்மோகன் காந்தி

கோபாலகிருஷ்ணா காந்தி


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அழகான ஒரு 1928 காதல் கதை….!!!

 1. சிவம் சொல்கிறார்:

  நன்றி காவிரிமைந்தன் சார்.
  ஒரு நல்ல கருப்பு வெள்ளை கால திரைப்படத்தை பார்த்தது
  போன்ற உணர்வு வருகிறது.

 2. சிவம் சொல்கிறார்:

  அவர்களது இரண்டு தாத்தாக்களின் சாயலும்
  வாரிசுகளிடம் நன்குதெரிகிறது. கதை மிகவும் நாகரிகமான முறையில்
  சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் – செல்வராஜனுக்கும், உங்களுக்கும்.

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  திரு காமை அவர்களுக்கு அனுப்பிய ஒரு சாதாரண மின்னஞ்சலை ” இடுகையாக” வெளியிட்டு பலரும் படிக்க செய்த அவருக்கும் …. வாழ்த்துக்கள் கூறிய நண்பர் சிவம் அவர்களுக்கும் …நனறி …. நன்றி ..!!!

 4. Srini சொல்கிறார்:

  Dear Sir,

  After reading this article, I searche in google to see who all are there in Gandhi’s family.. his sons, grandsons, grand daughters… where they are and what they are doing… One interesting observation is most of them are in US or outside India.Overall Mahatma’s family tribe has settled well and all are doing good.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ஸ்ரீநி,

   இப்போது இருக்கின்றவர்களைப் பொருத்த வரையில்
   நீங்கள் சொல்வது சரியே…

   ஆனால், காந்திஜி உயிரோடு இருந்தபோது –
   அவரது மகன் ஹரிலால் – தானும் துன்பப்பட்டு,
   குடும்பத்தினரையும் வேதனைப்படுத்தியது எல்லாம் –
   உங்களுக்கு நினைவிருக்குமே….
   திரு.கோபாலகிருஷ்ண காந்தி மட்டும் தன் தாய் வழி
   தாத்தாவான ராஜாஜியை நினைவுபடுத்துகிறார் என்று
   எனக்குத் தோன்றுகிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. muniraj சொல்கிறார்:

  2 periya thalaivar perannu
  solreenga

  cinema yedhum
  sondhamaa
  yeduthu
  release
  seiyallenna

  yennanga
  periya
  thala

  atleast
  paana ceenaa
  pola
  2 univercity yaavaddhu
  vaangi
  viyabaaram
  seiyaliyey?

  2 thalaivargalum
  padaviya
  use panna
  theriyalaey!

  -Sarcastic Sankaran

  • தமிழன் சொல்கிறார்:

   முனிராஜ் – தமிழ்ல எழுதியிருந்தீங்கன்னா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.

   ராஜாஜி அவர்கள் தன்னுடைய பூர்வீகச் சொத்தை, சேலத்தில் இருந்ததை விற்க நினைத்தார். கண்டிஷன்-அந்த இடத்தில் ஒரு மருத்துவமனை ஆரம்பித்து மக்களுக்குச் சேவை செய்யவேண்டும். அந்த இடத்துக்கு 30,000க்கு மேல் வாங்க மாட்டேன். இடத்தை மருத்துவமனை ஆரம்பிப்பதற்கு என்று சொல்லி விற்பதால், வாங்குபவர் மருத்துவக்குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். இந்தக் கண்டிஷனை ஒத்துக்கொண்டு ஒரு மருத்துவர் அந்த இடத்தை வாங்கி மருத்துவமனை ஆரம்பித்தார். (மா’நகராட்சி இடத்தை அபகரித்துக்கொண்ட, மா’நகராட்சி இடத்தில் தன் கட்சிக் கட்டிடத்திற்கு, அதிலும் அந்த அறக்கட்டளை தன் குடும்பத்திலேயே இருக்குமாறு செய்து, பெரிய இடத்தை அபகரித்த கொள்ளைக்குடும்பம் உங்கள் ஞாபகத்துக்கு வருகிறதா?)

   காந்தி அவர்கள், தன் வாழ்வை இந்திய தேச விடுதலை என்ற ஒன்றிர்க்கு அர்ப்பணித்ததால், அவரால், குடும்பத் தந்தை என்ற பொறுப்பில் பெரும் வெற்றி பெற முடியவில்லை (உங்களுக்குத் தெரிவதற்காகச் சொல்கிறேன். மொரார்ஜி தேசாய் முடிந்த அளவில் காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றினாலும், அவருடைய மகன் அப்படி இல்லை). அவருடைய மூத்த மகன், கண்டிப்பான தந்தையை வெறுக்கும் பொதுவான மகன் போல மாறிவிட்டார். ஆனால், மறைந்து 75 வருடங்களுக்கு மேலாகியும் உலகத் தலைவர்களில் ஒருவராக காந்தி அவர்கள் நினைக்கப்படுகிறார்.

   இன்றைக்கும் ஏழை எளிய யாரிடமாவது எம்ஜியார் என்று சொல்லிப்பாருங்கள், மகராசன் அவர் என்று சொல்வார்கள். ஏழைகளைக் கண்டு இரக்கபட்டவர் என்று சொல்வார்கள். கருணானிதியை யாராவது இப்படி நினைப்பாரா? அவர் தன் வாழ்க்கையில் 3/4 பாகம் தமிழ் தமிழினம் என்று பேசி கடைசி 12 வருடங்களில் நினைத்துப்பார்க்காத வகையில் தன் உண்மை சுவரூபத்தைக் காண்பித்து, தன் குடும்ப நலனுக்காக, ஊழல் பணத்தை பத்திரமாக்கிக்கொள்வதற்காக நடித்து, லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களிடமும், உண்மைத் தமிழுணர்வு கொண்டவர்களிடமும் தமிழ்த் துரோகி என்ற பெயரை வாங்கிக்கொண்டார்.

   இதுதான் தலைவர்களுக்கும் தன்நலம் கொண்ட வியாபாரிகளுக்கும் உள்ள வித்தியாசம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.