மத்திய அமைச்சர் “ஒன்று”க்கு போக – கமாண்டோ பாதுகாப்பு….!!!

வலைத்தளத்திலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்ட
இந்த புகைப்படத்தில் இருப்பவர் மத்திய அமைச்சர்
திரு.ராதாமோகன் சிங் என்று சொல்லப்படுகிறது…!!!

இவர் போன்றவர்களை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு
தான் “தூய்மை இந்தியா” திட்டத்தை மோடிஜி முன் கொண்டு
செல்கிறார்…

உண்மையில் இந்த கமாண்டோக்களின் பணி தான் என்ன…?
அமைச்சர் பத்திரமாக “ஒன்று”க்கு போவதை உறுதி
செய்வதா…?

அவர்கள், எதை…. அல்லது யாரை பாதுகாக்கிறார்கள்…?

மோடிஜிக்கு வாழ்த்து சொல்வதா அல்லது
அனுதாபம் தெரிவிப்பதா – தெரியவில்லை…!!!

இந்த ஆசாமியை “கேபினட்”டிலிருந்து விலக்க மோடிஜியால்
முடியாது. பீஹாரைச் சேர்ந்த இவர், அந்த அளவுக்கு
“powerful “…..!!! அவரை தொட முயன்றால், பீஹாரில்
முதலுக்கே மோசம் ஆகி விடும்.

எனவே அனுதாபம் சொல்வது தான் சரியாக இருக்குமென்று
நினைக்கிறேன். என்ன தான் பெரிய ஹீரோவாக இருந்தாலும்,
சில சமயங்களில் கண்டும் காணாத மாதிரி போய் விட வேண்டிய
அவசியங்கள் வருகின்றன அல்லவா…? அந்த மாதிரி
மோடிஜிக்கு இது ஒரு helpless situation ….!!!

நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to மத்திய அமைச்சர் “ஒன்று”க்கு போக – கமாண்டோ பாதுகாப்பு….!!!

 1. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  எப்படி பிணங்களை கங்கையில் எறிந்துகொண்டே… அதில் எவ்வளவு கோடி கொட்டினாலும் தூய்மைபடுத்த முடியாதோ அதேபோலத்தான் இவர்களை போன்றவர்கள் நம்மில் இருக்கும் வரை ஸ்வச் பாரதம் என்கின்ற கனவு நிறைவேறவேவேறாது!!

 2. புதியவன் சொல்கிறார்:

  சமூக வலைத்தளங்களால் எவ்வளவு உபயோகம் பார்த்தீர்களா? ஊருக்கு உபதேசம் தலைவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவரது அமைச்சரவை சகாவுக்கே இவ்வளவுதான் புத்தி என்பதை எவ்வளவு விரைவாக எல்லோருக்கும் தெரியப்படுத்திவிட்டார்கள். கையை அலம்பினமாதிரி தெரியலையே.

  இதையெல்லாம் தெரிந்துகொண்டுதானோ என்னவோ நம்முடைய கலாச்சாரம் கைகூப்புவதோடு நின்றுவிடுகிறது.

  ஐயோ பாவம் கமாண்டோக்கள்.

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  சுவர்கள் ” ஜாக்கிரதை ” …! நல்லவேளை சுற்றி பாதுகாப்பு இருந்தால் தான் வரும் என்று அடம்பிடிக்காமல் விட்டது நாம்செய்த புண்ணியம் … இவரே இப்படி என்றால் ” பிக் பாஸ் ” எப்படியாே…?

 4. gopalmohan சொல்கிறார்:

  ஒரு வேளை,சிறுநீர்ப்பை குறித்த நோய் இருக்கலாம் .வயதானவர்கள் அடக்க முடியாது

  • ராஜேந்திரன் சொல்கிறார்:

   இந்த ஆசாமி ஒரு மத்திய மந்திரி.
   அவருக்கென்று பல பொறுப்புகள் இருக்கின்றன.
   இப்படி பொது இடத்தில் இத்தனை பேர் எதிரில் அவர் செய்யும் காரியம்
   அவரின் திமிரை காட்டுகிறது.
   நோய் இருப்பவர்கள், அருகிலுள்ள டாய்லெட் எது என்று விசாரித்தறிந்து
   அதனை பயன்படுத்திக் கொள்ள் வேண்டும்.
   வெளியே கிளம்பும் முன்னர் இத்தகைய வேலைகளை முடித்துக்கொண்டு
   கிளம்ப வேண்டும். எங்கள் வீட்டில் 3 வயது குழந்தைக்கு கூட நாங்கள்
   கற்றுக்கொடுக்கும் பாடம் அது தான்.

 5. Woraiyur Pugal சொல்கிறார்:

  வயதான முதியவர் …ஏதாவது சர்க்கரை வியாதி இருக்கலாம் அல்லது சிறுநீரக கோளாறு அல்லது வேறு நோய்கள் இருக்கலாம் அல்லவா..இதற்க்கு முன் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அடுத்து கலந்து கொள்ள போகும் நிகழ்ச்சி களுக்கு இடையில் முடியாத நேரத்தில் ஓதுங்குவது தவறில்ரையே..கமண்டோ பாதுகாப்பு தவறு என்ன..

 6. Rajamanickam Veera சொல்கிறார்:

  மிகவும் அநாகரீகமான கட்டுரை, வெறுப்பு என்பது எவ்வளவு கீழ்மைக்கு தள்ளும் என்பதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உதாரணமாக மாறி வருகிறீர்கள் அய்யா. எந்த ஒரு திட்டத்தையும் கீழ்மையோடு மட்டுமே சிந்திப்பதும் சந்தடி சாக்கில் கமெண்ட் போடும் வாய்ப்பை தவற விடாமல் தங்களின் மத வெறுப்பையும், இந்தியா பற்றிய இழிவையும் முற்போக்கு முலாமோடு பூசி செல்வது என்று….
  மன்னிக்கவும் சார், உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்க வில்லை.

  • ராஜேந்திரன் சொல்கிறார்:

   எத்தகைய வெட்கங்கெட்ட செயல்களுக்கும் இந்த மாதிரி
   ஆதரவாளர்கள் இருக்கையில் அவருக்கென்ன கவலை ?

   ஸ்வச்ச பாரத் விளம்பரங்களில் இனி இந்த புகைப்படத்தையும்
   சேர்த்துக் கொள்ளலாம். “யாரும் இந்த அமைச்சரைப் போல்
   செய்யாதீர்கள்” என்று கேப்ஷன் கொடுத்து.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ராஜமாணிக்கம் வீரா,

   //எந்த ஒரு திட்டத்தையும் கீழ்மையோடு மட்டுமே
   சிந்திப்பதும் //

   – பொதுவெளியில் ஒன்று’க்கு போவது என்பது தான் உங்கள்
   கட்சியின் திட்டமா…?

   கொஞ்சம் கூட நாகரிகமில்லாது, தான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறோம் என்பதைக் கூட சிந்திக்காமல்,
   பலபேர் பார்க்க, தெருநாயைப் போல்,
   கண்ட இடத்தில் காலைத்தூக்கிக் கொண்டு ஒன்று’க்கு
   போவதை ஆதரிப்பது தான் உங்கள் கொள்கையா ?

   அவரின் இந்த செயலுக்கு கட்சிக்காரர் என்கிற முறையில் வெட்கப்பட வேண்டும் நீங்கள். மாறாக, குறை கூறுபவர்களை கண்டிக்க வந்து விட்டீர்கள்.

   //தங்களின் மத வெறுப்பையும்,
   இந்தியா பற்றிய இழிவையும் //

   – நான் “மதவெறி” பிடித்தவர்களுக்கு எதிராகத்தான்
   எழுதி வருகிறேன். அதனால் நீங்கள் பாதிக்கப்படுவதாக
   நினைக்கிறீர்களா ….?

   // உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்க வில்லை//

   நீங்கள் வர வேண்டிய தளம் இதுவல்ல.

   நீங்கள் எதிர்பார்ப்பதை எழுதுவதற்கான ஆள் நானில்லை.
   பஜனை பாடும் கூட்டங்கள் வலைத்தளத்திலேயே நிறைய இருக்கின்றன. “தரம் தாழ்ந்தவர்களின்” இந்த தளத்திற்கு
   வந்து, உங்கள் தரத்தை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டிய
   அவசியமே இல்லை…

   இனியாவது உங்கள் “தரத்திற்கு” ஏற்ற தளத்தை மட்டுமே நாடிச்செல்லுங்கள்…
   good luck – bye.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • இளங்கோ சொல்கிறார்:

   இது ஒங்க இடமே இல்லை.
   எங்கேயாவது 8-10 காலிப்பசங்க சேர்ந்துக்கிட்டு,
   மாடு மேய்க்கிறவன் எவனையாவது அடிச்சு துவைச்சுட்டு
   இருப்பானுங்க. அங்க போய் சேர்ந்துக்குங்க. அது தான் ஒங்க இடம்.

 7. Sundararaman சொல்கிறார்:

  Very sad…not expected from you …and the female joralists from NDTV…who kept mum for Tejpal hand work. Even now , people blame bangaru lakshman …but it was a set up by Tejpal, laxman was naive….he was under the impression that he was getting a party donation….with 1 lakhs arms deal doesn’t get closed.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சுந்தரராமன்,

   நீங்கள் ” SAD ” ஆக வேண்டியது உங்கள் அபிமான அமைச்சரின்
   செயலைப்பார்த்து தான். என் எழுத்தைப்பார்த்து அல்ல.

   ஆமாம், சந்தடி சாக்கில் இங்கே ஏன் உங்கள் கட்சியை ப்ரமோட்
   செய்கிறீர்கள்…? நீங்கள் கூறும் சம்பவத்திற்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம்…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. jksm raja சொல்கிறார்:

  ஹலோ மிஸ்டர் நாராயணன், சாரி மிஸ்டர் சுந்தர் ராமன் எதற்க்காக இந்த இடுகைக்கு சம்பந்தம் இல்லாத கருத்து.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.