ஜெ.அவர்களின் மரணம் – 3 மர்மங்கள் – புதிய விவரங்கள்… விசாரணையில் …?

justice

நீதிமன்றத்திற்கு அப்போலோ மருத்துவ மனையும்,
மாநில அரசும் தந்துள்ள புதிய பதில்களிலிருந்து சில புதிய
விவரங்கள் வெளிவருகின்றன… அவற்றில் மூன்று
மர்மங்கள் புதைந்திருப்பதும் தெரிகிறது.

1) அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அவர்கள்
செப்டம்பர் 22-ந்தேதி இரவு கொண்டு வந்து சேர்க்கப்பட்டபோது
இருந்த அவரது உண்மை உடல்நிலை குறித்து இதுவரை
சொல்லி வந்ததற்கு மாறான ஒரு புதிய நிலை தரப்பட்டுள்ளது.

இதுவரை சொல்லி வந்தது – “fever and dehydration” மட்டுமே..

இப்போது சொல்லி இருப்பது – “fever and dehydration and
underlying co-morbidities.”

இந்த underlying co-morbidities என்கிற விவரம் இப்போது தான்
முதல்தடவையாக வெளிவருகிறது.

” co-morbidities ” – இதற்கு என்ன அர்த்தம் ..?

மருத்துவ அகராதி சொல்கிறது –

two or more coexisting
medical conditions or disease processes
that are additional to an initial diagnosis.

கூடவே இருந்த இந்த மற்ற வியாதிக்கூறுகள் தான் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்படும் முன் அவருக்கிருந்த பிரச்சினைகள்.
அவை எதனால் அவருக்கு ஏற்பட்டன…?
இதைப்பற்றி இதுவரை வெளியில் தெரிவிக்காததேன்…?

அவரது இல்லத்தில் -தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதாலா…?
அல்லது தள்ளி விடப்பட்டு, அல்லது கீழே விழுந்து ஏற்பட்ட
எதாவது பாதிப்புகளின் தொடர்விளைவா…?

———–

2) அடுத்து, அப்போலோ கூறுகிறது – “The late chief minister had
expressed her desire that no photographs be released.”

இதில் இரண்டு விஷயங்கள் தனித்தனியே பார்க்கப்பட
வேண்டும். ஒன்று அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள்..
மற்றொன்று அவரது புகைப்படம் சம்பந்தப்பட்டது.

தனது புகைப்படங்கள் வெளியிடப்பட வேண்டாம் என்று
ஜெ. அவர்கள் கூறி இருந்ததாக கூறுகிறார்கள்.
இது உண்மையாக இருந்தாலும் கூட – இங்கே வார்த்தை மிக
கவனமாக கையாளப்பட்டிருக்கிறது….
புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை என்று கூறவில்லை.
வெளியிடாததற்கான காரணம் தான் கூறப்படுகிறது.

ஜெ.அவர்கள், இதனை எப்போது சொல்லி இருக்கக்கூடும்…?
அவர் சுயநினைவற்ற, மயக்க நிலையில் தான் கொண்டு வந்து
சேர்க்கப்பட்டிருக்கிறார்.

எனவே, அவருக்கு நல்ல உணர்வு வந்து, இதைப்பற்றி எல்லாம்
யோசிக்கும் நிலையில் தான் கூறி இருக்க முடியும். எனவே,
அவர் அனுமதிக்கப்பட்ட, கொண்டு வரப்பட்ட நிலையில்
மருத்துவமனையில் இருந்த CCTV -க்களில் பதிவாகியிருந்த
வீடியோக்களும், புகைப்படங்களும், அப்போலோ வசம்
இருக்கிறது என்பதை அவர்கள் மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள்
என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வழக்கு விசாரணை வரும்போது, நீதிமன்றம் கேட்கும்போது,
குறந்தபட்சம், நீதிமன்ற பார்வைக்காவது இவை தரப்பட வேண்டும்…

3) அடுத்து, மிக மோசமான ஒரு விஷயம் –
அப்போலோவின் பதில் சொல்கிறது –

“A medical decision was taken to allow a natural cessation of life,” This was a day after she was put on support system following
a cardiac arrest, Apollo Hospitals has said.

அதாவது, முதலில் அவருக்கு மாரடைப்பு வந்தபோது,
உடனடியாக உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
பின்னர், அவர் இயற்கை மரணம் அடையும் விதம், அந்த
“support system” விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக, உயிர்காக்கும் கருவிகள் ஒரு நோயாளியின்
உடலில் பொருத்தப்பட்டால், பின்னர் அது விலக்கப்படும்
நேரத்தில், நோயாளியின் மரணம் உடனடியாக ஏற்படக்கூடும்.
எனவே, நோயாளியின் நெருங்கிய உறவினரிடம் அதற்கு,
எழுத்துபூர்வமாக ஒப்புதல் பெற்ற பிறகே அது நிகழ்த்தப்படும்.

இங்கு, ஜெயலலிதா அவர்களின் உயிர் பிரியட்டும் என்கிற
முடிவை ஏற்றுக் கொண்டு கையெழுத்து போட்டு ஒப்புதல்
கொடுத்தவர் யார்…?

——————

இவை எல்லாவற்றையும் தாண்டி, அப்போலோ இன்னொரு
ஒப்புதல் வாக்குமூலத்தையும் கொடுத்திருக்கிறது….
மாநில அரசு விரும்பியதைத்தான், அவ்வப்போது medical
bulletin -ஆக கொடுத்து வந்தோம் ( அதாவது உண்மை நிலையை
முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை – என்று… ? )

the hospital released statements during the 75-day hospitalization “only on request of the state government in the interests of maintaining public order and minimizing speculation and rumour-mongering.”

—————————

வழக்கை, திறமையான மூத்த வழக்கறிஞர் திரு.விஜயன்
மேலெடுத்துச் செல்கிறார். விசாரணையில் மேற்கொண்டு
சரியான முறையில் முழு உண்மைகளும் வெளிக்கொண்டு
வரப்படும் என்று நம்புவோம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ஜெ.அவர்களின் மரணம் – 3 மர்மங்கள் – புதிய விவரங்கள்… விசாரணையில் …?

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //மாநில அரசு விரும்பியதைத்தான், அவ்வப்போது medical
  bulletin -ஆக கொடுத்து வந்தோம்//
  அதாவது அப்போலோவை பொருத்தவரை மாநில அரசு என்பது சசிகலாதான் எனபதை ஒத்துக்கொள்கிறனர்!
  ஏனென்றால், முதல்வர் மரணப்படுக்கையில்…
  அடுத்த கட்ட மந்திரியாகிய ஓபிஎஸ் உட்பட எந்த மந்திரிக்கும் முதல்வரை பார்க்ககூட அனுமதி இல்லை…
  தமிழகத்தின் முதல் குடிமகனாகிய கவர்னருக்கும் அனுமதி கிடையாது…
  ஐயா, அடவகேட் விஜயன் ஐயா தயவுசெய்து இந்த கார்பரேட் மருத்துவமனைகளை மூட ஏதாவது வழியிருந்தா பாருங்க, புண்ணியமா போகும் உங்களுக்கு!

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! விகடன் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தி :– // Posted Date : 17:38 (20/02/2017) Last updated : 11:45 (22/02/2017)
  ‘சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!’ -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive // http://www.vikatan.com/news/tamilnadu/81435-jayalalithaas-blood-was-mixed-with-waste-water-doctors-reveal-the-embalming-secrets.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=8722 இந்த செய்தியில் பல சந்தேகங்களை ஆய்வு செய்து உள்ளார்கள் இரு மருத்துவர்கள் அதில் …..

  // ஜெயலலிதாவின் மரணம் குறித்து தீவிர தேடுதலில் இறங்கினோம். அவரது மரணம் நேர்மையாக அமையவில்லை என்பதை ஆய்வின் முடிவில் கண்டறிந்தோம்” – கவலை தோய்ந்த முகத்துடன் நம்மிடம் பேசினார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். இவரும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியும், ‘ தமிழக முதல்வரும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அவரது உடல்நிலையும்’ என்ற தலைப்பில் ஆய்வை நடத்தி முடித்துள்ளனர். // இவர்களது இந்த ஆய்விற்கு பதில் சொல்லப்போவது யார் …. ? இவர்களது ஆய்வையும் தனது வாதத்தில் சேர்த்து ” திறமையான மூத்த வழக்கறிஞர் திரு.விஜயன் அவர்கள் ” விசாரணையில் வெற்றி பெறுவார் என்று நம்புவோமாக … !!!

 3. LVISS சொல்கிறார்:

  Only on the request of the govt means “manila arasu kettukondathin peril”
  Let us wait and see what comes out of the case —

 4. selvarajan சொல்கிறார்:

  ” ஹைட்ரோ கார்பன் திட்டம் ” …? இல.கணேசன் கருத்து … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நாடு நலம் பெற “பாஜக”வை தியாகம் செய்து விடலாம்….!!!
   ( தனி இடுகை வருகிறது…)

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தினமும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சியான திமுக உட்பட பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவரது மரணத்தின் மர்மத்தை போக்கி நாட்டு மக்களுக்கு தெளிவு கிடைக்க அவரது மரணம் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது.

  இந்நிலையில் அவரது மரணத்திற்கு திமுகவின் சதிதான் காரணம் என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார்.

  அப்போது பேசிய அவர், அதிமுகவை ஒழிப்பதற்காக மறைமுகமாக சதித்திட்டங்களை திமுகவினர் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். ஜெயலலிதாவின் மீது எந்தவித குற்றமும் கிடையாது. வேண்டுமென்றே அவர்கள் மீது பழிசுமத்தி அவரை திமுகவினர் சிறைக்கு அனுப்பினர்.

  சிறைக்கு சென்றால் தான் குறுகிய காலத்திலேயே ஜெயலலிதா இறந்துவிடுவார் என திட்டமிட்டனர். திமுக செய்த சதியால் தான் ஜெயலலிதா இறந்தார். அவர்கள் தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என்றார்.

 6. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  இந்த மேலுள்ள செய்தியை எங்கே சொல்லி எப்படி சிரிப்பது ??

 7. தமிழன் சொல்கிறார்:

  திமுகவில் ஊழல் செய்யாமல் சொத்து சேர்த்த ஒருவரையாவது காட்டமுடியுமா? தலைவன் எவ்வழி தொண்டர்கள் அவ்வழி. ஊழலில் கரை கண்டது கருணானிதியும் அவர் குடும்பமும். அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் மற்றவர்மேல் குற்றம் சுமத்த துளிகூட அருகதை கிடையாது.

  ஜெ. மரணத்தில் சந்தேகங்களை, நீதிமன்றம் வெளிக் கொண்டுவர இயலாது. இதில் பல்வேறு நடைமுறை விதிமீறல்கள் நடந்துள்ளன. நிச்சயமாக தேவையான காகிதங்களில் அமைச்சர்கள் கையெழுத்திட்டிருக்க (அல்லது கருணானிதி பாணியில் முன் தேதியிட்டுக் கையெழுத்திட்டிருக்க) நிறைய வாய்ப்பு உள்ளது. ராகங்களுக்கு ஏற்றபடி ஆடிக்கொண்டிருந்த அப்போலோ மருத்துவமனை, தவறுகள் ஏதாகிலும் நடந்திருந்தால் அதனை மூடிமறைக்கத்தான் முயற்சிக்கும். அதில் வெற்றி பெறும்.

  தற்போது, ஜெ. அவர்கள் தன்னைப் பார்த்து ‘கட்டை விரல்’-வெற்றி அல்லது நலமாயிருக்கிறேன் என்று காட்டியதாக எழுதுகின்ற கவர்னர், அன்றே இதனைச் சொல்லவில்லையே. (இது உண்மை என்று நான் நம்புகிறேன்). போயஸ் கார்டனில் தாக்கினார்கள் என்றெல்லாம் எழுதுவது, உண்மைக்கு மாறானது என்றே எனக்குத் தோன்றுகிறது. நான் ஒரு அனுமானம் சொல்கிறேன். இது லாஜிக்கலாக இருக்கா என்று பாருங்களேன்.

  1. எம்ஜியார், தன்னை மருத்துவமனையில் யாரும் வந்து பார்ப்பதை, புகைப்படம் எடுப்பதை விரும்பவில்லை. சிவாஜி, டாக்டர் பழனிச்சாமி மூலமாகத் தன்னைப் பார்க்க அனுமதி கோரியபோதும், பழனிச்சாமி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனைச் சரி என்று சொன்னவர் எம்ஜியார். வேறு வழியில்லாமல், திமுகவும் கருணானிதியும்,. அவரை ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்ததனால், எம்.ஜியாரின் புகைப்படங்களும், வீடியோவும் வெளியிடப்பட்டது. அந்தப் புகைப்படங்கள், எம்ஜியாரின் இமேஜுக்குப் பங்கம் விளைவிப்பதுபோல்தான் இருந்தன (தலைமுடி இல்லாமல், கண் பார்வைக்கு சோடாபுட்டி கண்ணாடி இன்னபிற. தவறாகச் சொல்லவில்லை. ஆனால் அவரின் இமேஜ், இளமை, அழகு போன்றவை)

  2. கருணானிதிக்கு ஒரு கண் பழுது. அதைத் தெரியவிடாமல், அவர் கருப்புக் கண்ணாடி எப்போதும் அணிந்திருந்தார். ஒருதடவை, விகடன் அவரது கண்ணாடி அணியாத முகத்தைப் படம்பிடித்து வெளியிட்டது. எப்போதும் கருணானிதி கருப்புக்கண்ணாடியோடுதான் இருப்பார். (அப்புறம் இதற்கு விதிவிலக்குகள் வந்தன.. ஏனெனில் ஒருதடவை உண்மைப் படம் வெளியாகிவிட்டதே). இதேபோன்று, ஸ்டாலின் அவர்களுக்கும் முடி அனேகமாக நரைத்திருக்கும். அவரும் தலைக்கு மை போடுகிறார். அவரை நரைத்த தலையாக கற்பனை செய்துபாருங்கள். இமேஜ், அரசியல்வாதிகளுக்கு அவ்வளவு முக்கியம்.

  3. ஜெ. அவர்கள் தலைக்கு மை, மேக்கப் போன்றவற்றுடன் எப்போதும் காட்சி தந்தவர். அவரை, சுடிதாரோடு அல்லது நைட்டியோடு நம்மால் இமேஜின் செய்யவே முடியாது. அவருக்கு என்று ஒரு இமேஜைத் தொடர்ந்துவந்துள்ளார். அவர், ஒரு தடவை, தலைவர்களை, அசந்தர்ப்பமாகப் படம் எடுப்பது தவறு என்றும் (கொட்டாவி விடுவது, சில ஸ்டில்களில் முகம் அல்லது வாய் கோரமாக அமைந்துவிடுவது போன்று) சொல்லியிருக்கிறார். அதனால் அவருடைய புகைப்படம் அவர் உத்தரவின்பேரில்தான் வெளியிடப்படும்.

  4. ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்படுபவதையே அவர் விரும்பியதில்லை. மேக்கப் இல்லாத, தலை வெளுத்த, மருத்துவமனை உபகரணங்களோடு கூடிய, முகம் வெளிறிய ஜெ. படத்தை எப்படி வெளியிட அனுமதித்திருப்பார்? அவர் மீண்டு வந்துவிடுவார் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தபோது, அதே பயம் இருக்குமல்லவா (அவருக்குப் பிடிக்காத எதையும் செய்துவிடக்கூடாது என்று). அதனால்தான் அவர் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

  5. எனக்குத் தோன்றுகிறது. நிச்சயம் சில புகைப்படங்கள் இருக்கும். அதனை வேறு வழியில்லையென்றால், சிலர் பார்வைக்கு மட்டும் வெளியிடுவார்கள் – வழக்கு விசாரணையின்போது.

  6. ஜெ. அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்தது சசிகலா அவர்கள். அவர்தான் அவருடைய பாதுகாப்பாளர். அதனால் அவர் சொன்னதை அப்போலோ மருத்துவமனை செய்திருந்தாலும், நோயாளி, தமிழக முதல்வர். அதனால் அவர்கள், அரசு சொன்னதைத்தான் கடைபிடித்திருப்பார்கள். அந்த ‘அரசை’ சசிகலா அவர்கள், தன் கைப்பிடியில் அப்போது வைத்திருந்திருப்பார் (இப்போதும் என்ன. அதுதானே வாழ்கிறது).

  7. இவை எல்லாவற்றையும்விட, எய்ம்ஸ் மருத்துவர்களும் வந்திருந்தனர். ஆலோசனைக்கும் நோயாளியைப் பார்க்கவும்.

  இதனால், கூட்டுச் சதித்திட்டம் எதுவும் நடந்திருக்க இயலாது. இந்த நிகழ்ச்சியை வைத்து, அமெரிக்காவைப் போல், சரியான ப்ரோட்டோகாலை, விதிமுறைகளை ஏற்படுத்தினால், அது, நாளை, இதனைப்போல் ஒன்று நடவாமல் (அதாவது, என்ன நடக்கிறது என்று நாட்டுக்கே தெரியாமல் இருப்பது) இருக்க உதவியாக இருக்கும்.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தமிழன்,

  நான் துவக்கத்திலிருந்தே சொல்லி வரும் ஒரு முக்கியமான
  விஷயத்தை நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்…

  அப்போலோ மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கப்படும்போது
  ஜெ.அவர்களின் உண்மையான உடல் நிலை எப்படி இருந்தது…?

  அதற்கு முன்பாக, வீட்டிலேயே பல மாதங்களாக, திருமதி சசிகலாவின்
  உறவினர் டாக்டர் சிவகுமார் ட்ரீட்மெண்ட் கொடுத்து வந்தார்.
  அந்த சமயத்தில், அவருக்கு தவறான மருந்துகள் (வேண்டுமென்றே…?) –
  குறிப்பாக ஸ்டெராய்டு – மிக மோசமான உடல்நலக்கேட்டை உண்டு பண்ணும்
  அளவிற்கு – கொடுக்கப்பட்டதாக, ஜெ.அவர்களுக்கு மருத்துவம் பார்த்த
  ஒரு டாக்டர் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்…

  இதற்கெல்லாம் ஏன் யாரும், எந்த விளக்கமும் தரவில்லை…?

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • தமிழன் சொல்கிறார்:

   அப்படி நடந்திருந்தால் (வேண்டுமென்றே… எனக்கு இதில் நம்பிக்கை இல்லை) அதை எப்படி இனிமேல் கண்டுபிடிப்பார்கள்? எந்த மருத்துவர் கொடுக்கும் மருத்துவத்தையும் அடுத்த மருத்துவர், ‘இப்படிச் செய்திருக்கலாமே’ என்று கூற வாய்ப்பு உண்டு. அதனால்தான் முக்கியமான நபர்களுக்கு ஒரு மருத்துவக்குழுவே ஆலோசனை செய்து முடிவெடுக்கும்.

   மூட்டு வலி மற்றும் பலவற்றினால் அவதிப்பட்டுவந்தவருக்கு வலி நிவாரணிகள் அதிகமாகக் கொடுத்திருக்கலாம். (தூக்கம் வரவில்லை என்று, மாத்திரையின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வதுபோல).

   இதில் சதி இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. மருத்துவம் பற்றி ஒன்றுமே அறிந்திராதவர்களே, ஏகப்பட்ட ஆலோசனைகளைப் பின்னூட்டமாக பல இடங்களில் சொல்லும்போது, மருத்துவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு இருக்காதா? அது இன்னும் குழப்பத்தானே செய்யும்? திமுக சார்பு மருத்துவர் ஒரு திசையில் விளக்கம் சொல்ல, இன்னொரு திசையில் மற்றவர் விளக்கம் சொல்ல, நடுவில் அன்புமணியும் ராமதாசும், அவர்களுக்குத் தெரிந்த விளக்கம் சொல்ல… அதில் நமக்கு என்ன பிரயோசனம்? எல்லாமே ஸ்பெகுலேஷனாகிவிடும்.

   நடந்த துன்ப நிகழ்ச்சியை மறக்கவேண்டியதுதான். இந்த மாதிரி சந்தேகம் ஏற்படும்படியாக நடந்துகொண்ட மன்னார்குடி கும்பல் ஓட்டுக்கேட்டு வரும்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட, அல்லது ஆதரவாளர்களை விரட்டியடிப்பதுதான், ஜெ. அவர்கள் தமிழ்’நாட்டுக்குச் செய்த நன்மைகளுக்கு நாம் தரும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.