ஊழல் (கண்டு) பிடிப்பா…. அரசியல் சதுரங்கமா…?


tarasu

திருவாளர் ரெட்டியில் துவங்கி, வரிசையாக அரை டஜன் பேர்வழிகளுக்கு மேல்
மாட்டி இருக்கிறார்கள். வெளிவரும் பெயர்களைப் பார்க்கும்போது,
இந்த பெயர்கள் எல்லாம், ஏற்கெனவே நம் மனப்பட்டியலில் இருந்தவை தான்
என்பதால் அவர்களின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கவில்லை….

ஆனால், திடீரென்று அவர்கள் வளைக்கப்பட்ட விதம், பொதுவாக
தமிழக அரசியல்வாதிகளிடையே ஒரு விமரிசனத்தை உருவாக்கி
இருக்கிறது. தமிழக அரசியலில், ஆட்சி அதிகாரத்தில், ஆளும்கட்சியில் –
ஏற்பட்டுள்ள பலவீனத்தையும், வெற்றிடத்தையும் பயன்படுத்திக் கொண்டு,

மத்தியில் ஆளும் கட்சி, தன்னை தமிழகத்தில் முன் நிறுத்திக் கொள்ள
முயற்சிக்கிறது….. என்பது தான் அது…!!!

Income Tax Department, Enforcement Directorate, CBI
போன்ற அமைப்புகளை, எதிர்க்கட்சிகளை சீர்குலைக்கவும், சில
அரசியல்தலைவர்களை தடுமாறச் செய்யவும், தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு
உகந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளவும், மத்தியில் ஆளும்
கட்சி முயற்சி பயன்படுத்திக் கொள்வது நம் நாட்டைப்பொருத்த வரையில்
புதிதல்ல.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது,
பல உதாரணங்களை உருவாக்கி வைத்து விட்டுதான் சென்றிருக்கிறது…..
எனவே,
தற்போது மத்தியில் ஆட்சியை தங்கள் கையில் வைத்திருக்கும் கட்சியும்
இத்தகைய முயற்சிகளில் இறங்கினால் அதில் அதிசயம் ஒன்றுமில்லை….!!!

ஆனால், தமிழகத்தில் இப்போது வெளிவரும் ஊழல் புகார்களைப்
பொருத்த வரை, இதில் பொய்யாக வழக்கு புனைதல் என்பது எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை…
கிட்டத்தட்ட மக்களுக்கு தெரிந்த விஷயங்கள், நபர்கள் மீது தான் இப்போது
அதிகாரபூர்வமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

எனவே, மத்தியில் ஆளும் கட்சி – தங்களுக்கு வேண்டாதவர்களை
பயமுருத்தி அடிபணிய முயற்சி செய்கிறது என்கிற புகாரை ஒரு பக்கம்
ஒதுக்கி வைத்து விட்டு –

இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு, துவக்கப்பட்ட “சுத்தப்படுத்துதலை”
முழுமூச்சாக மேற்கொண்டு ஊழல் பெருச்சாளிகள் அத்தனை பேரையும்
வளைத்துப் பிடிப்பதில் மத்திய அரசும், இந்த ஏஜென்சிக்களும் இறங்க
வேண்டும் என்பதே நமது விருப்பமும், வேண்டுகோளாகவும் இருக்கும்.

மணல் கடத்தல்காரர்கள், கிரானைட் கொள்ளையர்கள்,
ஊழல் அரசு அதிகாரிகள், கோடிக்கணக்கில் கருப்புப்பணம் சேர்த்து
வைத்திருக்கும் ஊழல் அரசியல்வாதிகள், முன்னாள்-இந்நாள்
அமைச்சர்கள், கல்வித்தந்தைகள், ரியல் எஸ்டேட் புள்ளிகள் –
இவர்களின் பெயர்கள் எல்லாம் நம்மைப் போன்ற, ஓரளவு அரசியலை
கவனித்து வரும் நபர்களுக்கே தெரியும் என்கிறபோது –
Income Tax Department, Enforcement Directorate, CBI
போன்ற புலன் விசாரணை அமைப்புகளுக்கு தெரியாமலா இருக்கும்…. ?

எனவே, அத்தகைய நபர்கள், நிறுவனங்கள் மீது
முழுவீச்சாக இந்த அமைப்புகள் நடவடிக்கையில் இறங்குமேயானால்,
மத்திய அரசும் தங்களுக்கு வேண்டாத சிலரைப் பழிவாங்கவும்
சிலரை பயமுருத்தி தங்கள் வழிக்கு கொண்டு வரவும் மட்டும்
இதனை பயன்படுத்தாமல் –

நிஜமாகவே ஊழல் / கருப்புப்பண ஒழிப்பில்
முழுமூச்சுடன் இறங்குமேயானால் –

நாம் அத்தகைய நடவடிக்கைகளை முழுமனதுடன் வரவேற்போம்…!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஊழல் (கண்டு) பிடிப்பா…. அரசியல் சதுரங்கமா…?

  1. avudaiappan சொல்கிறார்:

    nadavadikkai eduthaal atharkku oru karanam kandupithaal arasu enna seiyum

  2. LVISS சொல்கிறார்:

    So many people are bing caught in many states keeping new currency notes –The govt should use this opportunity to give full hand to the investigating agencies to go after all the evders and hoarders –

  3. srinivasanmurugesan சொல்கிறார்:

    #’ஆனால், தமிழகத்தில் இப்போது வெளிவரும் ஊழல் புகார்களைப்
    பொருத்த வரை, இதில் பொய்யாக வழக்கு புனைதல் என்பது எதுவும்
    இருப்பதாகத் தெரியவில்லை…
    கிட்டத்தட்ட மக்களுக்கு தெரிந்த விஷயங்கள், நபர்கள் மீது தான் இப்போது
    அதிகாரபூர்வமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன’# ——எதிர்பார்ததை விட பிரம்மாண்ட அல்லவா இருக்கிறது.ஒரு பேரலல் அரசாங்க கஜானா அல்லவா நடாத்தி வந்துள்ளார்கள்.அத்தனை பேரையும் கைது செய்து நடு ரோட்டில் நடத்தி செல்ல வேண்டும். இன்னொன்றையும் கவனித்தீர்களா… மாட்டியவர்கள் மற்ற மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள்.வேலியே பயிரை மேய்ந்துள்ளது.இரத்தம் கொதிக்கின்றது.

  4. selvarajan சொல்கிறார்:

    செல்லாத நோட்டு என்று அறிவிப்பு வந்தவுடன் தங்கமாக வாங்கி குவித்தவர்களையும் — அன்று இரவு மட்டும் அதிகமாக விற்பனை செய்த கடைகளிடமும் — மக்களுக்கு கிடைக்காத 2000 ரூபாய் புது நோட்டுகள் பெரிய — பெரிய கருப்புப்பண முதலைகளிடமும் — முதலாளிகளிடமும் அதிக அளவில் போய் சேர உறுதுணையா இருந்தர்களையும் — எப்போது விசாரிக்க துவங்குவார்கள் — ? ஒன்றிரண்டு நபர்களை மட்டும் தோண்டி – துருவி விட்டால் வேலை முடிந்து விடுமா … ?
    மத்திய கூட்டுறவு வங்கிகளிடம் காட்டுகிற வேகத்தை — வெளிநாட்டு பிராண்டு வங்கிகளிடம் காட்டாமல் இருப்பதன் நோக்கம் என்ன … ? இன்றுவரை எந்தவொரு மகா முழுங்கி ” கார்பொரேட்களிடம் ” இது பற்றி எந்த நடவடிக்கையும் — எடுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன … ?
    பல கோடிகளில் சம்பளம் வாங்குகிற நடிகர்கள் யாரும் செல்லா நோட்டுகளை வைத்து இருக்கவில்லையா … அவர்கள் மாற்றியது எப்படி … ?
    ஒரு ஆழமான — அழுத்தமான விசாரணை மற்றும் ரைடுகள் எப்போது … ? 50 நாட்கள் என்ற கெடுவுக்கு ஒருசில நாட்களே உள்ளன என்கிற ஞாபகம் மோடிஜிக்கு இருக்குமா … ? அந்த நினைவு இருக்கிறதோ — இல்லையோ தினம் புது – புது விதமான மக்களை திக்கு முக்காட வைக்கும் –கெடுபிடி உத்திரவுகளுக்கு மட்டும் ஒன்றும் குறைச்சலில்லை ….
    கார்கள் தயாரிப்பு — மற்றும் விற்கும் நிறுவனங்களே ” கார் பார்க்கிங் ” வசதி வாங்குபவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தாலும் — கொடுப்பார்கள் — அவர்கள் பொழப்பு நடக்கணும் அல்லவா … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.