கவிஞர் கண்ணதாசன் மனம் மாறக்காரணம் காஞ்சி பெரியவரா ….?

periyavar-2

நாத்திகராக இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
ஆத்திகராக மாறியது எப்போது… எப்படி ..?
என்பது குறித்து ஒரு கட்டுரை படித்தேன்.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி அதனை
அப்படியே கீழே பதிப்பிக்கிறேன். இது குறித்து நண்பர்கள்
யாருக்காவது மேற்கொண்டு விவரங்கள் தெரிந்திருந்தால்,
பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

——————-

kannadasan-and-chinnappa-thevar

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு
படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது
மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா
தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால்
கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த
நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும்
கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து
வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன
மாத்திரத்தில்

‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர்
கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும்
வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல்
மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக்
கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி,
கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய்,
அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு,
மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’

என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர,
தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும்
துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின்
கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப்
பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன்
நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின்
சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில்
நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம்
அது.

விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர
மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில்
படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப்
பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை
எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத்
தயக்கமாயிருந்தது.

ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர்,
தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல்
கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம்
மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை
மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான்.

அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா?

கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல்
திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.

வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச்
செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா.

ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர்
கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச்
செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார்.

இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி
விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார்.

நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில்
விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு,
மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு
திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன்
நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ
என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின்
படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது
கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார்.
தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி
படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக்
கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர்
தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட
கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப்
பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர்,
தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம்
செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின்
விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர்.

திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது
கண்ணதாசனின் வார்த்தைகள் –
‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை?
போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப்
புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும்
சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவ
மனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச்
செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த
அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து
அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும்,
பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில்
ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை.
அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை
நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார்,
கண்ணதாசன். அக்கவிதை இதோ :

——
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்
முழுமூர்த்தம் கலிமொய்க்கும் இவ்வுலகைக்
காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!
—–

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர்,
கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி
அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ,

அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா
இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி,

‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை
எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே
கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்”
அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து
மணம் வீசியது.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

30 Responses to கவிஞர் கண்ணதாசன் மனம் மாறக்காரணம் காஞ்சி பெரியவரா ….?

 1. Senthil சொல்கிறார்:

  காஞ்சி மஹான் !!!!
  ஞானிகள் பொற்பாதம் , அற்புதம் ,…அற்புதம் !!!!

 2. நடந்தவைகளை சொல்லியுள்ளீர்கள் ஐயா.
  அதேநேரம் பெரியவர் ஏன் பிறகு இப்படி ஆனார் எல்லாமே விதிதானோ ?

  • Mahesh Thevesh சொல்கிறார்:

   காஞ்சிப்பெரியவர் என்பது காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகர
   சரஸ்வதி சங்கராச்சியார் ஆகும். இவர் ஒருமகான்.இவர் சமாதி
   அடைந்துவிட்டார்.இப்பஉள்ளவர்தான்பிரச்சனைக்குரியவர்.ஆகையால் அவர் வேறு இவர் வேறு என்பதை அறிந்து கொள்ளவும்

 3. srinivasanmurugesan சொல்கிறார்:

  வாட்ஸ் ஆப் பில் வந்தது
  Shared with thanks
  # “கண்ணதாசன் ஒரு சித்தர்”

  சமீபத்தில் ஒரு துறவி , என்னிடம் இப்படி சொன்னார்…!
  ஏற்கனவே பல ஞானிகள் என்னிடம் இதை சொல்லி இருக்கிறார்கள்..!
  எனவே நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..!

  ஆனால்…இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்…என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!

  “இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..”

  எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்தான் இது ..!
  ஆனால் இன்று ஏனோ….இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே … ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு..அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!

  “சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ – மாமன்
  திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”
  .
  # ….இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே….
  அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?

  நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்…

  “ அது வந்து….
  அதாவது…. சிவனின் திருவிளையாடல்களில்
  அதுவும் ஒன்று….
  அதற்கு மேல்…. …. முழுசா தெரியலியே..!”

  # சரி…பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்..
  கண்ணதாசன்…!
  சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..! அவர் ஒரு வரி எழுதினால் ..அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!

  அங்கும் இங்கும் தேடி ஓடி… சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்….அது இதுதான்…!

  அந்தக் காலத்தில்….காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ..அவன் பெயர் அரதன குப்தன் ….மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்… காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை…

  எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ….உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் …. வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே… ஒரு புன்னைவனம் ..அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..சற்றுத் தள்ளி ஒரு கிணறு…
  கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ….
  அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!

  காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்… கதறி அழுதாள் …காரணம்…அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்…
  நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது….தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ….நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட…உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்…

  சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்…. அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”
  மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
  இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் …அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் …!

  இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்…..கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்… ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல… அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!

  வழக்கு சபைக்கு வந்தது…
  திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்…
  “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி…
  முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ…அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”

  கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்….

  கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் …தொழுதாள்….!
  கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி…. “ஈசனே…இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்….?”
  ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ …அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல்…

  “நாங்கள் சாட்சி..”

  குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க….
  ஈசன் அங்கே நின்றாராம்…

  “ ஆம்…இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்… அதற்கு நாங்கள் மூவருமே சாட்சி”

  “ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்…!

  பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!

  இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்… வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்….!

  நீங்கள் பார்த்திருக்கிறீர்களா…?

  ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் … ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
  இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!

  # கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு…!

  கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!

  [ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]

  #.. கதையைப் படித்து முடித்த நான் , கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்தேன்…!

  “சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”

  ….கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..! இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் , கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒருவரியை எழுதி இருக்க முடியாது..!

  சரி…. ஒரு பாடலுக்கே இப்படி என்றால் அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?
  அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை….நூல்களை..புராணங்களை…இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?

  # அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் , எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?

  “ஆம்…அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
  நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”

  # கண்ணதாசன் வாசிக்க வேண்டியவர்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநிவாசன் முருகேசன்,

   ஒரு நல்ல செய்தியை இங்கு பகிர்ந்து
   கொண்டதற்காக மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Srini சொல்கிறார்:

  KM sir, Thanks for sharing.

  Pranams
  Srini

 5. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! கவிஞருக்கு மனம் மாறியது காலத்தின் கட்டாயம் — இவருக்கு முன்பே ” கம்பரசம் ” என்று ராமாயணத்தை அலசி ஆராய்ந்த அறிஞர் அண்ணாவும் ” கடவுள் மறுப்பு இயக்கத்திலிருந்து ” பிரிந்து தனி இயக்கம் கண்ட , போதும் — அனைத்து மக்களையும் இணைத்துச் சென்று, தேர்தலிலும் பங்கு கொள்ளும் இயக்கமாகப் புதிய அமைப்பை உருவாக்கியபோதும் அவருக்குக் கைகொடுத்தது ” திருமூலரின் திருமந்திரம். “” தான் என்பதை நாம் உற்று நோக்க வேண்டும் …

  ” ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் ” என்கிற திருமந்திர பாடலை கொஞ்சம் மாற்றி — அதாவது ” ம் ” என்பதை நீக்கி — அண்ணா தனது முழக்கமாக ” ஒன்றே குலம் — ஒருவனே தேவன் ” என்று தேவனை ஒத்துக்கொண்டது வரலாறு —

  உண்மையான பகுத்தறிவாளர் யார் என்றால் — அவர் திருமூலர் தான் — இதற்கு உதாரணமாக ஒரு பாடல் : — ”நூலுஞ் சிகையும் நுவலின் பிரமமோ
  நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
  நூலது வேதாந்த நுண்சிகை ஞானமாம்
  நூலுடை யந்தணர் காணு நுவலிலே.” என்பதில் நூல் என்றால் பூணுல் — சிகை என்றால் தலையில் நிறைய முடி — தாடி போன்றவை — இருந்தால் பிரம்மா நிலை வந்து விடுமா என்று வினவுகிறார் — இவ்வாறு வெளி வேஷம் போடுபவர்களை சாடுகிறார் — எது எப்படியோ — மன மாற்றம் என்பது ஒவ்வொரு மனிதனின் ” தனிப்பட்ட உள்மன நிலை ” — அப்படித்தானே … ? கவிஞரின் மன மாற்றத்தால் நமக்கு ” அர்த்தமுள்ள இந்து மதம் ” கிடைத்தது …. !!!

 6. Vinayagam சொல்கிறார்:

  காஞ்சி சங்கராச்சாரியாரிடம் தேவர் போய்ச் சொன்னவுடன், மடாதிபதி திருநீறு கொடுத்தார். கவிஞர் ஒரு நாத்திகர் என்று தேவர் தயங்க, அதன் காரணத்தை அறிந்துகொண்ட மடாதிபதி சொல்லும் காரணங்கள்: கவிஞரின் நெருங்கிய உறவினர்கள், தந்தை உட்பட இந்துப்பெரும் தமிழகக் கோயில்களுக்குத் திருப்பணி செய்தவரக்ளே. அப்படிப்பட்ட பரம்பரையைச்சேர்ந்தவர் கவிஞர் என்கிறார்.

  இது ஒரு முற்றுந்துறந்த முனிவர்; எல்லாருக்குமே தன் கருணை என்று இருக்க வேண்டிய்வரிடமிருந்து வந்தது வியப்பு. முன்பின் தெரியாமல் அவர் செய்திருக்க வேண்டும். அப்படியே தேவர் தயங்கினாலும், நாத்திகராயிருந்தாலேன்ன, ஆத்திகராயிருந்தாலென்ன எல்லாருமே இறைவனின் குழந்தைகள் என்று சொல்லிக் கொடுப்பதே ஒரு பெரும் முனிவரிடம் எதிர்பார்ப்பு. இங்கே கண்ணதாசனின் பரம்பரைக்காக நான் உதவி செய்கிறேன் என்பது போலல்லவா இருக்கிறது ? க்விட் ப்ரோ கவிட் என்பார்கள் ஆங்கிலத்தில். அதாவது எனக்கு நீ உதவி செய்தால் நான் உனக்கு உதவி செய்வேன் என்று பொருள்.

  மேலும், ஒரு வி ஐ பி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் கிடைப்பதை நன்கு நினைவில் வைத்தல்லவா //கண்ணதாசன் எப்படியிருக்கிறான்? என்று கேட்கும் முனிவரின் மனம் வி ஐ பிக்களால் நிறைந்ததெனலாமா?

  எவராகினும் இறைவன் முன் சமம். அதனால் எனக்கும் சமம் என்பவரே மகான். இருப்பவனும் இல்லாதவனும் என்னிடம் வந்தால் என் அன்பு உண்டு என்பவரே மகான். ஒரு பெரிய பரம்பரை, அலலது பரமபரையே இல்லாத பராரி இவன் எனப்பேதம் பார்க்கலாமா?

  கண்ணதாசனின் மனமாற்றமும் ஒரு பெரிய மதிப்பையே வியப்பையோ கொடுக்கவில்லை. பல நாத்திகர்கள் தங்கள் வாழ்க்கைகளில், நெருக்கடியான கட்டங்களில், தானோ அல்லது தன் உயிருக்குயிராக நேசிக்கும் – பிள்ளைகள், மனைவி, மற்றும் நெருங்கிய உறவினர் – மரணத்தில் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்க, மருத்துவர்களே கைவிரித்துவிட, எவராவது ஒருவர் வந்து இக்கடவுளை வழிபடு குணமாகும் எனச் சொல்ல அப்படியே அவரும் செய்ய, குணமாகிவிட, பின்னர் அவர் கண்டிப்பாக அக்கடவுளை வணங்கும் ஆத்திகராகி விடுவார். இதுபோக, ஒரு கடவுளை வணங்கி வந்த ஒருவருக்கு இப்படிப்பட்ட காலகட்டத்தில் இன்னொரு கடவுளை வணங்குபவர் வந்து நம்பினால் உனக்கு வாழ்க்கை மீண்டுவரும் என்று நம்ப, கிடைக்க அவர் பின்னர் அக்கடவுளின் தீவிர பக்தராக மாறுவதை நாம் காண்கிறோமல்லவா? பெந்தோகொஸ்தேக்காரர்கள் இப்படிச் செய்துதானே பலரை தம்மதம் திருப்புகிறார்கள்.

  கண்ணதாசனின் கதையும் இப்படி மாறியிருக்கும். வந்தவரோ, செய்தவரோ மாறியிருப்பின்.

  மன்னிக்கவும். குறிப்பாக, கவிஞரின் இர்சிகர்களும் மகாப்பெரியவரின் பக்தர்களும் என்னை மன்னிப்பார்களாக. இங்கு போடப்பட்ட பதிவு இருவரையும் என் கண்ணில் பெரிவர்களாகக் காட்டவில்லை. வருந்துகிறேன்.

  • பெந்தகொஸ்து சொல்கிறார்:

   கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

   • Vinayagam சொல்கிறார்:

    கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கள் திரு பெந்தொகொஸ்து.

    சின்னப்பா தேவர் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் செல்லவில்லை. கண்ணதாசன் மரணப்படுக்கையில் இருக்கிறாரெனத் தெரிந்து உங்களைப்போன்ற பெந்தொகொஸ்தோக்காரன் ஒருவன் அவரிடம் சென்று அவருக்காக பிரார்த்தனை செய்கிறான் (இப்படி ஆட்களைக கண்டுபிடித்துச்செல்வதுதான் அவர்கள் வழக்கம்) பின்னர் கவிஞர் குணமாகிவிட, அவரிடம் மருத்துவமனை ஆட்கள் யார் வந்து பிரார்த்தனை பண்ணினார் என்றவுடன், கவிஞர் கண்ணீர் விட்டு இயேசுவே என்னை மன்னியும் ஏற்றுக்கொள்ளும் என்று பெந்தொகோஸ்தாக்காரனாக மாறி ஊர் ஊராக, ஏவிஎம் இராஜன் செய்வதைப்போல செய்கிறார்.

    அல்லது, ஒரு மெளானா அல்லது ஜமாய்த்துக்காரர்கள்,, கவிஞ்ருக்காக் தமிழகத்து மசூதிகளிலெல்லாம் தொழுகை ஏற்பாடு செய்ய கவிஞர் குணமாகி, கண்ணீர் விடுகிறார். அல்லாவே என்னை குணாமாக்கினான் என்று மெக்காவுக்கு யாத்திரை செய்து பெரியார்தாசனைப்போல இசுலாமியர் ஆகிவிடுகிறார்.

    இவையெல்லாம் கண்ணதாசனைப்போன்றோர் – இன்று நாத்திகன், நாளை ஆத்திகன் – என்ற நிலையெடுப்போருக்கு சாத்தியமே. இங்கு நடந்தது ஒரு தற்செயல். சின்னப்பா தேவர் போனது. இந்துக்களுக்கு லாட்டரி அடித்ததைப்போல முதலில் சென்றவரிடன் வீழ்ந்துவிடுகிறார். First come First Served என்பதுதான் இங்கு நடந்தது.

    தற்செயலாக நடக்கும் மனமாற்றம் மாற்றமன்று. லாட்டரி. அவ்வளவுதான். கண்ணதாசன் போன்றோரிடம் இது நடக்க சாத்தியங்கள் நிறைய.

    • senthil சொல்கிறார்:

     Periyavar is yogi,an enlightened being… .he is not human being.

     Becoming enlightened is a transformation process from human state to other dimensions of life which you never tasted.

     Enlightenment is not some thing to learn from books. it is transformation experiencially through some spiritual practice , like swamy vallalaar achieved maximum to de-metirialise his body and dissolve with the sivalingam.

     So,please dont expect a enlightened being to behave as per your logic..

     • Vinayagam சொல்கிறார்:

      Your first statement is the very basis on which my first message was founded. A yogi and an enlightened being like this guru is more interested in keeping track of VIPs falling sick and he quickly remembered that the VIP was admitted to hospital. and gave his blessing but alas, only after knowing the pedigree of the VIP. So, he would first see whether one is well connected and offering donations etc for generations, before allowing his milk of kindenss flow to him or her. Such calculation pulled him down him from the high pedestal you said he has. An yogi transcends all. Has he done that, at least in this incident? That was the point in the last sentence of my first message.

      My message is centred on the VIP also. As I said earlier, the yogi came first as a server to the VIP. i.e. to say, he became the reason for his conversion from atheism to theism.

      Conversion of a person by others is possible only in respect of weak minds. A strong and stable mind cannot be so easily bought even by a miracle. It may convert itself to other view or religion if at all, but on his own examination and analysis, and not at all, on the basis of “the guru blessed me and I woke up cured” – i.e. a miracle. Miracles are used as cheap tricks by many religions to convert people to their side and we see everyday in TN the evangelical Christians are doing that. What is the difference between the act of this VIP’s miracle cure as the blog post makes us believe, and that indulged in by evangelical Christians? Nothing.

      Kannadasan’s is a weak mind which hops from one place to another if provided with sufficient provocation. Getting provoked and possessing a weak mind are helpful to write emotional and good poems -which he did greatly. As I said, another religious guru or a competent person of another religion can ahcieve the same with this weak mind. First came! First Served !!. Kannadasan served the Hindus because they came first with their sacred ash. Muslims and Pentecostalists and Evangelists are the losers because they lost an important catch. They did not come with their Holy Koran or their sacred Cross !

      Remember everything is accident here. The incident which sent him to deathbed is an accident. Had it not happened, then? Then, where would have been your yogi and his miracle? The poet would have continued to be an atheist and remained a potential ‘catch’ by proselyting sects.

      Your yogi and enlightened soul behaved in such a way that depletes his status as a yogi – that’s my central point.

      I am sorry if have hurt minds here. Not saying it out will hurt myself more than that.

  • தமிழன் சொல்கிறார்:

   இது தவறான புரிதல். பாத்திரம் அறிந்துதான் பிச்சையிடமுடியும். ஒவ்வொன்றிற்கும் அதற்கான வேளை வரும்போதுதான் எல்லாம் கூடிவரும். பொதுவாக நகரத்தாரிடையே (நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்), நாத்திகம் கிடையாது. அவர்கள் சிவனை வழிபடுவது மட்டுமல்ல, ஏராளமான கோவில் திருப்பணிகளைச் செய்தவர்கள். சமயம் வரும்போது கண்ணதாசனுக்கு அந்தத் திருப்பம் நேர்ந்தது. சிறிது காலம் நாத்திகனாக இருந்தவர், அவருடைய சுய ரூபமான ஆத்திகராக ஆனார்.

   “இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான் – அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?
   நான் ஆஸ்திகனானேன் அவன் அகப்படவில்லை!
   நான் நாஸ்திகனானேன் அவன் பயப்படவில்லை!

   இது கண்ணதாசன் பாடல். ஒரு சுவைக்காக, பரமாச்சாரியர் சொன்ன அன்றையிலிருந்து கண்ணதாசன் ஆத்திகரானார் என்று சொல்லப்பட்டாலும், கண்ணதாசன் வார்த்தையிலேயே அதைக் கேளுங்கள்.
   ——-
   ’அர்த்தமுள்ள இந்துமதம்’ முன்னுரையில் கண்ணதாசன் சொல்வார்.
   `நான் நாத்திகனாக இருந்தது, இரண்டு மூன்று ஆண்டுகளே!
   அதுவும் நாத்திகத்திற்கு, ஒரு போலித்தனமான மரியாதை கிடைக்கத் தொடங்கிய இடைக் காலத்திலேயே!
   நான் எப்படி ஆத்திகனானேன்?
   கடவுளையும், புராணங்களையும் கேலி செய்வதற்காகக் கந்தபுராணம், பெரியபுராணம், கம்பனின் ராமகாதை, திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, அதை உள்ளிட்ட நாலாயிர திவ்யபிரபந்தம், வில்லிபாரதம் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன்.
   அறிஞர் அண்ணா அவர்கள், கம்பனை விமர்சித்து, `கம்பரசம்’ எழுதியதற்குப் பின், அதன் எதிரொலியாகவே எனக்கு இந்த ஆசை தோன்றிற்று.
   படித்தேன்; பல பாடல்களை மனனம் செய்தேன். விளைவு?
   கம்பனை படிக்கப் படிக்க, நான் கம்பனுக்கு அடிமையானேன்.
   புராணங்களிலுள்ள தத்துவங்களைப் படிக்கப் படிக்க நான் கடவுளுக்கு அடிமையானேன்.
   நாத்திகவாதம் என்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பதையும், உள் மனத்தின் உண்மையான உணர்ச்சி அல்ல, என்பதை உணர்ந்தேன்.
   மேலும் மேலும் கம்பனைப் படித்தேன், கடவுளைப் படித்தேன்.
   என் சிறகுகள் விரிந்தன; சொற்கள் எழுந்தன; பொருள்கள் மலர்ந்தன; காண்கின்ற காட்சியெல்லாம் கவிதையிலேயே தோன்றின.’ என்கிறார்
   ——–
   ‘கடவுள் அருளால் இன்னாருக்கு இன்ன துன்பம் நீங்கியது, குணமடைந்தது’ என்றால், அவருக்கு அவ்வளவு சக்தி இருந்தால் ஏன் யாருக்குமே துன்பம் விளையாதவாறு படைக்க இயலவில்லை, எனக்கு ஏன் இதைக் குணமாக்கவில்லை என்று கேள்வி கேட்பது, நமது அறியாமைதான்.

   க்விட் ப்ரோ க்விட் – என்பதல்ல இது. அவர் மதமாற்றத்திற்காக வாழ்நாளைச் செலவழித்தவரல்ல. எது சரி என்று அவர் உணர்ந்ததைப், படித்ததைப் பிறருக்குப் போதித்தவர்.

   எனக்கு ‘ஒரு கோடி ரூபாய்’ இந்தக்ஷணம் கொடு, நான் உன் பக்தனாகிவிடுகிறேன் என்று சொல்வதற்காக கடவுள் ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிடுவார் என்று எண்ணுவது பேதமை.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தமிழன்,

    அழகாக, தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • Vinayagam சொல்கிறார்:

    Quid Pro Quo உன் உதவிக்கு என் பதிலுதவி – இதை நான் சொல்லவில்லை. பதிவு சொல்லவைக்கிறது. பதிவில் விவரிக்கப்பட்ட நிகழ்ச்சி உண்மையானால் அது கண்ணதாசன் த‌னக்கு நன்மை கிடைத்தபடியால் ஆத்திகனானேன் என்றுதான் வருகிறது.
    இந்நிகழ்ச்சி உண்மையானால், நிகழ்ச்சியில் வரும் இருவரில் புகழுக்கும் களங்கம் என்பதே என் கருத்து.

    மேலும், கண்ணதாசன் எழுதியதாக நீங்கள் காட்டுவதிலும் நீங்கள் எக்கருத்தைப் பகடி பண்ணுகிறீர்களோ அது இருக்கிறது. என்ன சொல்கிறார் வனவாசத்தில்? அண்ணாவுடன் தொடக்க கால நட்பின் போது நாத்திகக்கொள்கையால் ஈர்க்கப்பட்டேன். அண்ணாவின் கம்பரசத்தப்படித்தேன். எவற்றையெல்லாம் அவர்கள் விமர்சித்தார்களோ, அவற்றையே நானும் அவர்கள் செய்வதைப்போல செய்ய நினைத்து வாசித்தேன். பின்னர் ஈர்க்கப்பட்டு ஆத்தினானேன். அவர்களிடம் இருந்து விலகினேன்

    இவைதானே அவர் எழுதியது? அண்ணாவுடன் நட்பு வந்தபடியால், அண்ணாவின் நாத்திகக்கொள்கையால் ஈர்க்கப்பட்டார். அண்ணாவுடன் நட்புடன் எத்தனை நாட்டுக்கோட்டைச்செட்டியார்கள் இருந்தார்கள்? பலரிருந்திருக்கலாம். ஏனெனில் அக்காலத்தில் மெய்யப்பச் செட்டியார் முதற்கொண்டு பலரும் திரைப்படத்துறையில் சாதிக்க துடித்த காலம். அக்காலத்தில்தான் இவரும் அங்கே நுழைந்தார். அவர்கள் அண்ணாவின் இலக்கிய கலை அறிவை வியந்து அதைப்பயன்படுத்திக்கொணடார்களேயோழிய அவரின் நாத்திகக்கொள்கையை ஏற்று மாய்ந்து போகவில்லை. அவர்களிடம் இருந்தது அவர்களின் மதத்தில் ஊறிய அழுத்தமான மன நிலைப்பாடு.

    அங்கிருந்தே வந்த கண்ணதாசன், தொப்பொன என நாத்திக வீச்சில் வீழ்ந்து கிடந்தார். பின்னர் படித்தேன்; எழுந்தேன் என்றால், நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமா? அது கிடக்க. இப்போது அண்ணா பைபிளையோ குரானையோ வாங்கு வாங்கென்று வாங்கி நூல்கள் எழுதி, அதாவது கம்பரசத்தோடு வேறுமத இரசங்களையும் போட்டு தாளிதிருந்தால், இவர் என்ன பண்ணியிருப்பார்? பைபிளைப்படித்தேன். இரவு பகலுமாக ஈர்க்கப்பட்டேன். இயேசுவே என் தெய்வம்; அல்லது, குரானைப்படித்தேன். இரவும் பகலுமாக. ஈர்க்கப்பட்டேன். மெக்காவுக்குப் ;புற்ப்படுகிறேன். அல்லாவைத்தவிர தேவனில்லை என்றிருப்பார்.

    ஆக, இவருக்கு வாயத்த சூழ்நிலைக்குக் தக்க மாறுகிறார். நான் ஏற்கன்வே எழுதியது போல ஒரு இசுலாமியராகவோ, அல்லது கிருத்துவராக மாறியிருப்பார். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் வந்து மோதியிருந்தால். இந்துக்களுக்கு அடித்தது லாட்டரி என்றேனல்லவா? அதுவே சரி இவரைப்பொறுத்தவரை. காவேரி மைந்தனின் பதிவில் பேசப்பட்ட நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டே கண்ணதாசனின் எடுப்பார் கைப்பிள்ளை மனதைக்காட்ட.

    • Vinayagam சொல்கிறார்:

     சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை. எத்திசைக்கு ஓட வைக்க வேண்டுமோ அதன்படி கொடுக்கலாம். காவேரி மைந்தனின் பதிவில் சாவி கொடுப்பவர் காஞ்சிப்பெரியவர் என்றெடுக்கலாம். அவர்தானே தன்னை விமர்ச்சித்த கண்ணதாசனுக்கு திருநீறு கொடுத்தனுப்ப இவர் நெகிழ்ந்து போகிறார். நீங்கள் போட்ட வனவாசப்பகுதியில் சாவிகள் அண்ணாவின் கமபரசம், திராவிடத்தலைவர்களின் மேடைப்பேச்சுக்கள், இந்துமறைகளைத்தாக்குப்பேசிய நாத்திகவாதங்களே சாவிகள். அண்ணா, மு.க, மற்றும் பிற திராவிட தலைவர்கள் மற்றும் அவர்களின் குரு பெரியார் – இவர்களின் இந்துமத விமர்சங்களே இன்று தமிழகத்தில் இந்து ஆத்திகத்தைத் தழைத்தோங்க வைத்தது என்று இந்துத்வாவினர் பேசியும் எழுதியும் வருவதும் இங்கே ஒப்பிடத்தக்கது. An action begets a reaction of equal force. இது இயறகை விதி. When there is no action, the object is motionless.

 7. Reader சொல்கிறார்:

  கண்ணதாசன் தன் தந்தையைப் பற்றி வனவாசம் நூலில் எழுதியதைப் படித்திருக்கும்போது இதுவும் இன்னுமொரு இணையப்புனைவு என்பது விளங்குகிறது.

 8. Senthil சொல்கிறார்:

  Dear Vinayagam

  You never hurt any one , be feel free.

  You are known to hundreds of peoples and Kannadasan is known to crores of peoples.That’s all. Because of this, one can not be very important one(VIP) in spirituality.

  VIPs are very few as kanchi periyava devotees,but,there were millions of others.So,”being devotee” or “a guru choosing devotee” is irrelevant to the VIP status.

  An enlightened being seeing a human system is capable to receive the bliss or not. Kannadasan is some one flexible to receive it easily. Kannadasan’s mind might be light.

  His mind is neither weak nor strong.Weaker minds are lazy and not capable to do anything,as well , stronger mind is so arrogant and newer taste the bliss.

  thanks

  • Vinayagam சொல்கிறார்:

   I am known to not even a single hundred of people. I am known only to a few, in two digit numbered persons, among my friends and family circles. Whether Kannadasan is known to crores of people or I am to a few hundreds – is irrelevant to the issue at debate, But he is a VIP and he is a great guru – are essential points here.

   A person is a VIP – not from the spiritual point of view you are taking about here; but from the general point of view. No one can deny that Kannadasan was a VIP when he lived. Even after his death, he stands so as a brass statue. One cannot damage it; he will be arrested. When VIPs visit, the darshan queue for devotees, is halted, in Tirupati and all other temples. Thus, even in spiritual places, the status of a person is decided by the general society and not by the spiritual society that is the temple here. The spiritual society accepts the general view for many a purpose, as the onc cited above. All mutts are well known to discriminate between common people and the VIPs – discriminate in the sense that they treat them differently. Political and other leaders in authority also behave like that. A cine actress can go straight to South Block and have a chat with the PM of this country sitting on a chair next to him. (The photo of Gowthami sitting beside Modi and having a chat – is everywhere in the media now) But all o fthem have their reason for that. We don’t cavil at that. Because it is life. At the same time, won’t it pain one to know about a person, who is highly regarded as, to use your term. an enlightened soul, to go all out, to surprise the listener with the latest uptake on the person, and send his blessing in the form of sacred ash through the listener.

   From your standpoint, you can find a plethora of justifications for such behavior, but from my common standpoint, it is not to be expected from a yogi who transcends all.

   I wish the episode here described by Kaveri Mainthan were untrue or a figment of some febrile imagination. Indeed, one commentator has said just that. It is important to upload such an episode only with double check. If it s a hearsay, why to upload? It shows an iconic spiritual figures venerated by a huge number of people, in poor light.

   It is not a blog for specialists, nor the readers are so. All of us are common people. (perhaps I have to exclude you). Kindly write here keeping this averageness in view. Your writing is unintelligible to my average understanding.

   • senthil சொல்கிறார்:

    Your intelligent ….which is breathing ,digesting and keeping you alive ….is capable to catch everything..

    But,the intellectual mind is the problem….it is not allowing you to know the reality as it is…it keep on converting the reality into words …and make you believe words are true..

    Words are just words…it can represent something…but word itself can not be true….

    Truth, enlightment , really who you are…god …everything is diffrent name for same existance….

    When there is no thoughts….what is existing here ? That is what really who you are….you are already enlightened and enlightment/bliss is your true nature…

    But,to experience this , no mind state is needed.

    • senthil சொல்கிறார்:

     There is no two separate things here as “you” and god….what you think can be your ego …..but not really who you are….

     • senthil சொல்கிறார்:

      You are thinking that kannadasan is VIP….

      But,kannadasan not thought about himself as VIP…

      If he thought… he is VIP….his ego would have been stronger ….and poems can not come out.

      Poetry only can come from kind and romance minded persons….

      Periyava always choose right human being…

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப செந்தில்,

      இது போன்ற விவாதம் தொடர்வதை நான் விரும்பவில்லை.

      தயவுசெய்து இந்த இடுகையின் மீதான
      உங்கள் பின்னூட்டங்களை
      இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்…

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப விநாயகம்,

    உங்கள் கருத்து ஒவ்வொன்றுக்கும்
    என்னால் விளக்கம் கொடுக்க இயலும்.

    ஆனால், நீங்கள் கருத்து சொல்லவில்லை…
    வேண்டுமென்றே விதண்டாவாதம்
    செய்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது….

    இந்த வலைத்தளத்தை விதண்டாவாதம் செய்பவர்கள்
    பயன்படுத்துவதற்கு இடம் கொடுக்க நான் தயாரில்லை.

    நீங்கள் செய்வது விதண்டாவாதம் அல்ல
    கருத்து முன்வைப்பு தான்
    என்று சொல்ல முற்படுவீர்களாயின் –

    இந்த வலைத்தளத்தை நீங்கள் எத்தனை நாட்களாக
    படித்து வருகிறீர்கள்…? இவ்வளவு நாட்களாக
    இல்லாமல் இப்போது திடீரென்று பின்னூட்டம் எழுத
    காரணம் என்ன…? தொடர்ந்து வாதம் செய்துகொண்டே
    போவதற்கான பின்னணி என்ன –
    நண்பர் செந்தில் அவர்களின் பின்னூட்டம் மட்டும் தான்
    உங்களின் தொடர்ந்த வாதத்திற்கு காரணமா …?

    என்று நான் தெரிந்துகொள்ள விரும்புவேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Vinayagam சொல்கிறார்:

     தற்செயலாக தமிழ்மணத்தில் பார்ததது உங்கள் பதிவு. நான் எவரையும் தொடர்வதில்லை. எல்லாமே தற்செய்லாகத்தான். இப்பதிவு மட்டும்தான். இதன்பின்னர் இல்லை. மகிழ்ச்சி.

     விதண்டவாதம் என்று சொல்வதை விளக்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். பொத்தாம் பொதுவாக. எல்லாவற்றுக்கும் தன்னால் மறுபதில் வைக்க முடியுமென்கிறீர்கள். அப்படியென்றால் நான் எழுதிய அனைத்தையுமே மறுக்கிறீர்கள். என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் என்றறிய அவா. சொல்லலாமே?

     தனித்தனியாக கேள்விகள் வைக்கிறேன். பதிலகள் எல்லாருக்கும் நல்ல விளக்கத்தைக்கொடுக்கமல்லவா?

     1. உங்கள் பதிவில் சொல்லப்பட்ட விச்யம் உண்மையில் நடந்ததா? அப்ப்டியில்லையெனில், வீணான கருத்தாக்கங்களுக்கு – இரு நபர்கள் பற்றியது — இடம் கொடுக்குமல்லவா?
     2. மகா பெரியவர் திருநீறு அளித்தபின் கண்ணதாசன் ஆத்திகர் ஆகிவிட்டாரென சொல்வதா இப்பதிவின் நோக்கம்?
     3. அப்படியே வைத்தாலும், இப்படி ஒருவர் திருநீறு அளிக்கும் முன்பு, இன்னொரு மதத்துக்காரன் இப்படியே கண்ணதாசனிடம் செய்து இருந்தால் கண்ணதாசன் அம்மதத்தைப்பற்றித்தானே பெருமதிப்பும் நன்றியும் கொண்டு அம்மத ஆத்திகராயிருபபார்?

     இன்னும் நிறைய். இக்கேள்விகள் என் கற்பனைகள் அல்ல. உங்கள் பதிவே உருவாக்குகின்றன. இவற்றை விதவாண்டமென்றால், வாதம்தான் என்ன? அதையாவது விளக்கினால் நன்று.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப விநாயகம்,

      // தற்செயலாக தமிழ்மணத்தில்
      பார்ததது உங்கள் பதிவு.//

      நீங்களாகவே துவங்கிய பிறகு,
      நான் விடுவதாக இல்லை –

      எவ்வளவு நாட்களாக தமிழ் வலைப்பதிவுகளை
      பார்க்கிறீர்கள்…?

      இதற்கு முன்னால் என் பதிவுகள் எதையும்
      நீங்கள் படித்ததில்லையா…?
      வழுக்காமல், நழுவாமல் உறுதியாக கூற முடியுமா..?

      என்னுடைய வேறு இடுகைகள் எதுவும்
      உங்களை பின்னூட்டம் எழுத தூண்டவில்லையா…?
      இது மட்டும் தான் பின்னூட்டம் எழுத வைத்ததா…?

      இந்த விமரிசனம் வலைத்தளத்தை இன்று தான்
      முதல் தடவையாக பார்க்கிறீர்களா…?

      காஞ்சி பெரியவரைப் பற்றியும்,
      கவிஞர் கண்ணதாசனைப் பற்றியும் –
      உங்களது உண்மையான அபிப்பிராயம்
      நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில்
      சொல்லி இருப்பது தானா…?

      ——————–
      1) பதிவில் சொல்லப்பட்ட விஷயம் உண்மையா
      இல்லையா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தான்
      கூற முடியும்… நான் உண்மை அல்லது பொய்
      என்று கூறவே இல்லை…
      ஆனால், அதில் சம்பந்தப்படாத நீங்கள்
      அதை உண்மை இல்லை என்று மட்டும்
      எப்படி சொல்ல முடியும் ?
      ———————

      2. மகா பெரியவர் திருநீறு அளித்தபின்
      கண்ணதாசன் ஆத்திகர் ஆகிவிட்டாரென
      சொல்வதா இப்பதிவின் நோக்கம்?

      நான் அப்படி சொல்லி இருக்கிறேனா…?
      இதற்குப் பெயர் தான் விதண்டாவாதம்…

      ————————
      3. அப்படியே வைத்தாலும், இப்படி ஒருவர்
      திருநீறு அளிக்கும் முன்பு, இன்னொரு மதத்துக்காரன் இப்படியே கண்ணதாசனிடம் செய்து இருந்தால்
      கண்ணதாசன் அம்மதத்தைப்பற்றித்தானே
      பெருமதிப்பும் நன்றியும் கொண்டு அம்மத
      ஆத்திகராயிருபபார்?

      நடக்காத ஒரு கற்பனை சம்பவத்தை
      உதாரணத்திற்கு கூப்பிடுவது – உங்கள் கற்பனை.
      விதண்டாவாதத்திற்கு இது இன்னொரு சான்று…
      —————-

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 9. B.V.Subramanian சொல்கிறார்:

  Even after these,
  If Mr.Vinayagam continues his arguments
  then I would like to second the statement
  of Mr.பெந்தகொஸ்து :

  //கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?//

  • senthil சொல்கிறார்:

   It is nature that every one give importance to their own thinking…

   It is quite sure …. no one in this blog is intended to harm others

   However, we don’t know the efforts made by km sir for this blog and the close attachment he have…

   So, I respect his words and keep myself shutup…

  • Vinayagam சொல்கிறார்:

   Even after these? What are ‘these” Sir? I don’t believe you have any regard for Mahaperiyava. If you had, you would have rejected the episode. This episode in this blog post is no credit to him. Rather, it shows him in a poor light. The devotees of Mahaperiyva don’t need such episodes to show his glory to the people.

   Please don’t believe this episode. If you call it Karpoora Vasanai, I am shocked. How can it be so?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.