காத்திருக்க முடியாத கழுகுகள் …..

.

.

அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்க வேண்டும்- கருணாநிதி

“தமிழக முதலமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருவதால், ஆளுநர்தான் பொறுப்பேற்று செயல்பட
வேண்டும்.” – ஸ்டாலின்

ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜூ சொல்கிறார் –

kadju-letter

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை. Bookmark the permalink.

8 Responses to காத்திருக்க முடியாத கழுகுகள் …..

 1. selvarajan சொல்கிறார்:

  முரசொலி மாறன் மத்திய பா.ஜ.க. அரசில் மந்திரியாக இருந்தபோது ” கோமாவில் ” இரண்டு வருடங்களுக்கு மேல் படுத்துக்க கிடந்த போது — தினமும் அவரை போட்டோ எடுத்து ஊடகங்கங்களில் போட சொன்ன — யோக்கியர் கேட்கிறார் …. உடனே வெளியிடுங்கள் … ? இலாக்கா இல்லாத மந்திரியாக சாகும் வரை பதவி வகித்தவரை — எப்படி மறக்க முடியும் — இவர்களுக்கு ஒரு நீதி — மற்றவர்களுக்கு ஒன்னா … ? முகம் சுளிக்க வைக்கிற அறிக்கைகளை வெளியிடுவதில் அப்பனும் – மகனும் சளைத்தவர்கள் இல்லை — இது இவர்களிடம் ஊறிப்போன ஒரு செயல் —
  காவிரிப் பிரச்சனையில் நீண்ட சட்ட போராட்டங்களை நடத்தி — ஒரு முடிவுக்கு வர முயன்றவரை — ஒரு வார்த்தை சொல்லி வாழ்த்த மனம் இல்லாதவர்கள் — மற்ற விஷயங்களில் அக்கறைக் காட்டி திசை திருப்ப முயலுவது வாடிக்கை — உச்ச நீதிமன்றம் கர்னாடக அரசுக்கு கடும் எச்சரிக்கையும் — மத்திய அரசுக்கு மேலாண்மை வாரியம் அமைக்க நாள் கெடு உத்திரவு போட்டதைப்பற்றியும் ஒன்றுமே பேசாமல் –மீண்டும் ” முருங்கை மரம் ” ஏறும் கர்நாடக அரசை கண்டிக்கவும் திராணியற்ற இவர்களை —- திரு கட்ஜு அவர்கள் ” மனிதாபிமானம் அற்ற மனிதன் ” என்று கூறியுள்ளதில் தவறு ஏதும் — உண்டோ … ?

 2. gopalasamy சொல்கிறார்:

  Karnataka CM refused to budge. They will not release water. They will not name a person for Caveri Management Board . As per CM , Supreme court is not having any right to construct the Board . They will go for review petition. To my wonder, so far no Tamilnadu politician has given any statement against Karnataka. Instead of talking about Karnataka, Our senior leader wants to see Jaya’s photo ! He is behaving as per his standard .

 3. gopalasamy சொல்கிறார்:

  Why Stalin is taking treatment in London ? What is the actual problem ? Whether Kalignar is ready to publish the video visuals of treatment Stalin taking in London hospital?

 4. NS RAMAN சொல்கிறார்:

  This is nothing new who knows MK repeat of MGR times. Only difference is that MGR second line of administration is with good hands but JJ only one in her cabinet which is not good for the state

 5. விஜயன் சொல்கிறார்:

  எதிர்கட்சிகளை விட்டுவிடுங்கள். அவர்களுக்கு அரசியல் வேண்டும். ஒதுக்கித்தள்ளுங்கள்.
  முதல்வர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பவேண்டுமென்பதே நம் அனைவரின் விருப்பமும் வேண்டுதலும். அவரின் உண்மை நிலை தெரிந்தால் மக்களின் வேண்டுதல்கள்/பிரார்த்தனைகள் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது இருந்ததை விட அதிகமாக இருக்கும்.

  ஏழு கோடி மக்களின் பிரதிநிதியாக, அம்மா என்று பலராலும் அழைக்கப்படுபவராக இருப்பவரின் உடல்நிலையை பற்றி ஒரு சாதாரண குடிமகனாக சிந்தியுங்கள். அவர்களுக்குள் பல விடை தெரியாத கேள்விகள். கேள்விகள் வதந்திகளாகின்றன. இவர்களே கேள்விகளைக் கொடுத்துவிட்டு வதந்திகளுக்கு காரணமாகிறார்கள்.
  – ஒரு குடிமகனுக்கு உண்மை நிலவரத்தை ஒரு அரசு சொல்ல வேண்டாமா?
  – ஒரு தனியார் மருத்துவமனையின் மொக்கை அறிக்கை போதுமானதா?
  -தனியார் மருத்துமனையின் அறிக்கையை ஏன் அரசு வெளியிடவில்லை?
  -முதல்வரின் உடல்நிலையைப் பற்றி அதிமுக சொல்லுகிறதே தவிர, தமிழக அரசு ஒன்றும் சொல்லவில்லையே ஏன்?
  – இன்னும் சில நாட்களில் வந்துவிடுவார் என்று எத்தனை அறிக்கை?
  – சாதாரண காய்ச்சலுக்கு எதற்கு பத்து நாட்களாக சிகிச்சை?
  – எதற்கு வெளிநாட்டிலிருந்து மருத்துவர்?
  – முதலமைச்சரை மருத்துவர் தவிர, வேறு யாரேனும், அமைச்சர்/அதிகாரிகள் உள்பட கண்டதுண்டா?
  – காய்ச்சலுக்கு எதற்கு சிசியு?
  – சிசியு வில் இருந்துகொண்டு அதிகாரிகளை சந்திக்கமுடியுமா?. தீபாவளி போனஸ் அறிவிக்கமுடியுமா?
  -தீபாவளி போனஸ் அறிவித்த முதல்வரால் தமிழக மக்களுக்கு முகம் காட்ட முடியாதா?
  -முதல்வரின் உடல்நிலையை பற்றி சுகாதாரத்துறை/தலமைச்செயலாலர்/ஆளுநர் ஏன் வாயைத்திறக்கவில்லை.
  – சமீபத்தில் முதல்வரை பார்க்கச் சென்ற ஆளுநரின் அறிக்கையில் ஏன் இத்தனை மர்மங்கள். அவர் முதல்வரை பார்த்ததாக எங்கும் குறிப்பிடவில்லயே ஏன்?
  -முதல்வர் தற்போது இயங்கமுடியா சூழ்நிலையில் இருக்கும்போது, அரசை செயல்படவைப்பது யார்?
  -ஒரு மாநில முதல்வர் நோய்வாய்ப்படுவதில் என்ன மறைக்கவேண்டியிருக்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்களைத்தவிர. நோய்கள் அனைவருக்கும் பொது தானே?.

  தற்போதைய சூழ்நிலையில் கருநாநிதிக்கு ஒரேமாற்று ஜெயா தான் என்பது மறுக்கமுடியாத உண்மை. என் உறுதி. என் நிலைப்பாடு.
  பல களங்களைக் கண்ட தாங்கள் வெளிக்கொணர்வீர்களா?
  விஜயன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   விஜயன்,

   உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது…
   நிறைய பேர் இது போல் நினைக்கிறார்கள்..

   ஆனால், இந்த நிலையை வேறு ஒரு
   கோணத்திலிருந்தும் பார்க்க வேண்டி இருக்கிறது.

   இதைப்பற்றி எல்லாம், ஹாஸ்பிடல் நிர்வாகமும்,
   அவரை கவனித்துக் கொள்பவர்களும் யோசிக்க மாட்டார்களா ?
   அவர்கள் விவரமாக பேசாததற்கு காரணங்கள் இருக்கலாம்.

   அவரது உடல்நிலை குறித்த செய்திகள்
   விவரமாக தெரிவிக்கப்பட்டால்,
   மக்கள் பதட்டப்படுவார்கள் –
   சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படக்கூடும்
   என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

   எப்படி இருந்தபோதும், அவரது சுகவீனம்
   தற்காலிகமானது என்றும் அவர் நிச்சயம்
   இந்த நிலையிலிருந்து மீண்டு விடுவார் என்பதும்
   புரிகிறது.

   அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று
   வீடு திரும்ப வேண்டும் என்பதே முக்கியம் என்பதால் –
   கேள்விகளைத் தவிர்த்து –
   அமைதியாக இருப்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. mani சொல்கிறார்:

  karunanithi is very impatient. His DMK could not win the assembly elections. He is desperate
  to come back to power even at the cost of his son Stalin. He will stoop to any level to come back to
  power. In the coming local body elections he has formed alliance with cong knowing well
  that congress govt in karnataka is refusing water to Tamilnadu. He could have broken that alliance
  as he did sometime ago citing srilankan issue. But he still persists with that alliance as he is desperate to win even local body elections.

 7. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தலைப்பு மிக அருமை. கருணானிதிக்கு, அண்ணன் எப்போ….. திண்ணை எப்போ காலியாகும் என்ற எண்ணம். அவரால் எம்ஜியாரையும் வெற்றி கொள்ள இயலவில்லை. இப்போ ஜெ.வையும் வெற்றிகொள்ள இயலவில்லை. அதன் காரணம், அவர்கள் சிறந்தவர்கள் என்பதல்ல. இவரைப் பெரும்பான்மையான தமிழர்களுக்குப் பிடிக்கவில்லை, வெறுக்கிறார்கள் என்பதுதான்.

  கருணானிதி, முரசொலி மாறனுக்கு ஒரு நீதி, அவரது பையன் ஸ்டாலினுக்கு ஒரு நீதி, நம் முதலமைச்சருக்கு ஒரு நீதி என்று நினைக்கிறாரே என்றெல்லாம் எண்ணிப் பிரயோசனமில்லை. தீயவன் இறக்கும்வரை தீய எண்ணங்களோடே வாழ்கிறான்.. தன்னை எண்ணி, தன் குணத்தை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பையெல்லாம் புறக்கணிக்கிறான் என்பதுதான் விதி போலும்.

  நிறையபேர், ‘குடிமகனுக்கு உண்மை தெரியவேண்டும்’ என்றெல்லாம் எழுதுகிறார்கள். நோயாளியைப் பற்றியோ, அவரின் நோயின் தன்மை பற்றியோ டாக்டர்கள் சொல்வதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கும். இது கிரிக்கெட் ஸ்கோர் அல்ல. நோயாளியின் நிலையைப் பற்றித் தெரியாமல் வெற்று அறிக்கை கொடுக்க அப்பல்லோ போன்ற மருத்துவ நிறுவனங்கள் கத்துக்குட்டி அல்ல. முதலமைச்சருக்கு, எந்த விதமான கவனிப்புகள் கொடுக்கவேண்டும், யாரை வரவழைக்கவேண்டும் என்பது போன்றவற்றை ஃப்ரொபஷனல் டாக்டர்கள் தீர்மானிக்கட்டும். படம் வெளியிட்டு என்ன செய்யப்போகிறோம்? நமக்கு gossipதவிர வேறு நோக்கம் இருக்க முடியாது. சாதாரண டெங்கு காய்ச்சல் என்றாலே எத்தனை சதவிகித மக்களுக்குப் புரியும்? புகழ் பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை, அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்துக்குச் சிகிச்சை அளித்தபோது என்ன அறிக்கை வெளியிட்டது? கடைசிவரை அவரது நோய்க்குக் காரணம் எலியின்மூலம் பரவிய பாக்டீரியா என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லையே. ‘உடம்பு சரியில்லை. ஐ.சி.யூவில் வைத்து சிகிச்சை மேற்கொள்கிறோம். வெளி’நாட்டு டாக்டர்கள் வந்து பார்க்கின்றனர்’ என்பதுபோன்ற செய்திகளே போதுமானவை. தமிழிசை சொன்னதுபோல், படம் வெளியிட்டால் அதைவைத்து சர்ச்சை கிளப்பலாம் என்று காத்திருப்பவர்களுக்கு மருத்துவமனை தீனிபோட முயலாது. எல்லோருக்கும் தெரியும், ஜெ. வெறும் தனி மனுஷியோ, அல்லது வெறும் முதலமைச்சரோ இல்லை. பல கோடி தமிழர்களின் மதிப்பைப் பெற்றவர் என்று.

  எம்.ஜி.யாருக்கு அமைந்தது போன்று, தலைவர்களாகத் தோற்றமளிக்கும் இரண்டாம் நிலை ஜெ.வுக்கு இல்லை. அது குறைபோன்று தோற்றமளித்தாலும், இந்த நிலை நிறைய கட்சிகளுக்கு இருக்கிறது. ஏனென்றால், ஓட்டு என்பது ஒரு தலைவரைக் கருத்தில்கொண்டுதான் அளிக்கப்படுகிறது.

  இப்போது நாம் செய்யக்கூடியது, ஜெ. தலைமை தமிழ்’நாட்டுக்குத் தேவை என்று கருதும் பெரும்பான்மையோர், அவர் நோயினின்று விடுபட்டு மீண்டும் energyயோடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவேண்டும் என்பதுதான். இரண்டாம் நிலை என்பதைக் காலம் மற்றும் மக்கள் தீர்மானிப்பார்கள். கருணானிதிக்கு மாற்றுக் கட்சியை, மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.