பணம் இருந்தால்….? பாருக்கே வேந்தர்….!!! ஜூ. வி. சொல்லும் கதை

.

.

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது -அதை
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது

————
அந்த ரெண்டு கூட்டமும் ஒண்ணாச் சேர்ந்தா….?

————

அவர் மீது இந்திய தண்டனை சட்டம் –

பிரிவு- 420 (மோசடி),
பிரிவு- 406(நம்பிக்கை மோசடி),
பிரிவு- 34 (மோசடி செய்ய வேண்டும் என்று
உள்நோக்கத்துடன் செயல்படுதல்) –

ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு
கைது செய்யப்பட்டார்…

அதனால்…? வெளியே வர முடியாதா என்ன …?

தற்போதைக்கு 69 கோடி ரூபாயை நீதிமன்றத்தில்
ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், ஜாமீனில்
வெளிவர அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளனர்…

மேற்கொண்டு…..

நம்ம கதை தான் எப்பவும் இருக்கவே இருக்கிறது…
முதலில் ஜூ. வி. சொல்லும் கதையை கேட்போமா…?

jvpari-1a

jvpari-2a

jvpari-3a

jvpari-4a

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to பணம் இருந்தால்….? பாருக்கே வேந்தர்….!!! ஜூ. வி. சொல்லும் கதை

 1. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கா.மை சார்.. இதை ஜூவி சொல்லும்போது அதன் கிரெடிபிலிட்டி பல்லிளிக்கிறது. தொடர்ந்து ஜூவி வாசிப்பவர்களுக்குத் தெரியும். அவர்கள் மாறன் சகோதரர்கள் விஷயம் எல்லாவற்றையும் மிகவும் அடக்கிவாசிப்பார்கள். அப்புறம் மாறனுக்கு எதிரானவர்களை நன்றாகக் குட்டி அவர்களுடைய குற்றங்களை விலாவாரியாக எழுதுவார்கள். இப்படி எழுதுவதனால், இவர்கள் குறை சொல்லும் பாரிவேந்தரைப் பற்றி ஒன்றும் குறையாகத் தோன்றவில்லை. தமிழ்’நாடு பலமடங்கு பாரிவேந்தர்கள் உலவும் இடம். ஓசி டிக்கெட்டில் வந்தவர்களே உழைத்து(?) ஆசியாவில் பெரிய பணக்காரர்களாக ஆகும்போது, 7 ரூபாய் எடுத்துவந்த பாரிவேந்தர் ‘நூறில் ஒருபங்குகூட பணம் வைத்திருக்கவில்லையே. பொழச்சுப்போட்டும் என்று தோன்றுகிறது. அவர் ஏன் ‘இந்திய ஜன’நாயகக் கட்சி’ என்று ஒன்றை ஆரம்பித்தார் என்பதை ஆராய்ந்தால் அதன் காரணம் கோபாலபுரத்தில்போய் முடியும்.

 2. Prabhu சொல்கிறார்:

  For some people all roads lead to Gopalapuram.

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.KM I observe keenly that for some hot topics of your articles only a very handful of known
  people are responding with their comments. Can you guess why?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன்,

   என்னால், சில காரணங்களை யூகிக்க முடிகிறது…
   ஆனால், நான் அதைக் கூறும் முன்னர்
   நீங்கள் எதை காரணமாக நினைக்கிறீர்கள் என்பதை
   கூறி விடுங்களேன்….!!!

   நமது காரணங்கள் எங்கேயாவது match ஆகிறதா பார்ப்போம்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  பாரிவேந்தர் அவர்களின் கல்வி நிறுவனங்கள் மட்டுமே — பெரிதாக பிரபலப்படுத்துவது மட்டும் போதுமா … ? இன்னொரு துறை ” தமிழக தபால் நிலையங்களை ” வளைப்பது பற்றி யாரும் — மூச்சுக் காட்டமாட்டேன் என்பது ஏன்… ? மத்திய அரசின் ஆசிர்வாதத்தோடு நடப்பதினாலா … ?
  1999-ம் ஆண்டு வெறும் 2 பேருந்துகளுடன் துவங்கப்பட்ட எஸ்.ஆர்.எம் போக்குவரத்து நிறுவனம் தற்போது நூற்றுக்கணக்கான பேருந்துகளுடன் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது, அடுத்த வரும் வருடங்களில் இது இன்னும் அதிகமாகும் … ! என்பது ” பச்சையின் ” — கணக்கு …. அவற்றின் வருமானத்தை பெருக்க — மக்கள் நலன் என்கிற போர்வைக்குள் :
  பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம் நிறுவனத்தித்தின் ” ஆம்னி பேருந்துகளுக்கான ” முன்பதிவு செய்யும் வசதியை தமிழகத்தில் பல தபால் நிலையங்களில் அளித்திருக்கிறார்கள்…. மத்திய அரசினர் — இதை : தமிழகத்தில் உள்ள 2,500 தபால் நிலையங்களையும் இப்படி தனியாருக்கு தாரைவார்த்து வசூலை மேற்கொள்ளப் போவதாக ” தமிழ்நாடு கோட்டம் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ” பெருமையுடன் கூறியிருக்கிறார்…. // பணம் இருந்தால்….? // … அனைத்து துறைகளும் ” மலை முழுங்கி ” மகாதேவன்களின் — வசம் தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இந்த “தபால்நிலையம் – எஸ்.ஆர்.எம். முன்பதிவு”
   புதிய கூட்டணியாக இருக்கிறதே… இந்த விவகாரம்
   எனக்கே புதிய தகவல் தான்…!

   பாஜக, ஐஜேகே உறவு இப்படி வேறு
   போகிறதா….?

   இது குறித்து இன்னும் விவரங்கள் இருந்தால்
   பின்னூட்டத்தில் தாருங்களேன்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா …! மேல் விபரங்களுக்கு இந்தலிங்கை பார்க்கவும் : — http://www.chennaipost.gov.in/Pdf/fp5.pdf

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நன்றி செல்வராஜன்.

     நான் ட்ரெயின் முன்பதிவுகளை மட்டுமே
     தபால் நிலையங்கள் செய்கின்றன என்றிருந்தேன்…
     இப்போது தான் தெரிகிறது “இதுவும்” சேர்ந்து கொண்டது என்று…

     ” தொழில் நுணுக்கம் ” தெரிந்தவர்கள்…!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • ravi சொல்கிறார்:

      அத்தனை தனியார் ஏசி பேருந்துகள் கல்லா கட்டுகிறார்கள்
      காம்ரேடுகளின் கேரளத்தில் கூட ஏசி பஸ்கள் பறக்கின்றன ,
      தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஏன் ஓட்டை ஓடைசல்களாக ??
      பஸ் முதலாளிகள் எம்,எல்.எ ,எம்பி, உள்ளாட்சி என்று அணைத்து இடங்களிலும் இருக்கும் போது , செல்வராஜன் சொல்வது போல –>
      //அனைத்து துறைகளும் ” மலை முழுங்கி ” மகாதேவன்களின் — வசம் தானே … ?//

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  1. They don’t want to enter into never ending verbal vulgar fights with vested poeople.
  2. To avoid future back lash.
  3. Fear.
  As far as I am concerned, I don’t have concrete informations like Shri Selvarajan, Nellaithamizhan
  Today& me to name a few. Their informations are amazing. In fact I read your every hot topics
  min. 2 times till SR and NT’s response. Now you please give your reasons.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன் / நெல்லைத்தமிழன்,

   நண்பர் கோபாலகிருஷ்ணனின் கேள்விக்கு –
   உங்கள் விளக்கம் என்னவாக இருக்கும் என்றும்
   தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்…. 🙂 🙂

   //Mr.KM I observe keenly that for some hot topics
   of your articles only a very handful of known
   people are responding with their comments.
   Can you guess why? //

   உங்கள் யூகத்தைச் சொல்ல முடியுமா…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன்,

   உங்கள் வினாவிற்கான விளக்கத்தை வேண்டுமென்றே
   தான் கொஞ்சம் தள்ளிப்போட்டேன்….

   இடையில் நடந்தவை (“ஆவணங்கள்” – பின்னூட்டங்கள்..) தானாகவே உங்கள் கேள்விக்கான
   பதிலைத் தந்திருக்குமே…

   1) இங்கு பின்னூட்டம் போட யாரும் பயப்படுவதில்லை…

   2) பின்னால் வரக்கூடிய “கசையடி”களுக்காக அஞ்சுவதுமில்லை…

   3) சாதாரணமாக, யார் பின்னூட்டம் போட முன் வருவார்கள்…?
   இடுகையில் சொல்லப்படும் விஷயங்களுக்கு மாறான அல்லது
   எதிர்க்கருத்துக்கள் உள்ளவர்கள் தானே…?

   4) இடுகையில் நானும், பின்னூட்டங்களில் மற்ற சில
   நண்பர்களும், அவர்களின் எதிர்பார்ப்பை ஏற்கெனவே
   நிறைவேற்றி இருந்தால்…? அவர்களின் பின்னூட்டத்திற்கு
   அவசியம் ஏற்படுவதில்லை …

   5) இந்த வலைத்தளத்தில் நான் பல தலைப்புகளில்
   எழுதுகிறேன். சிலருக்கு சிலவற்றில் தான் ஆர்வம் இருக்கும்…
   எல்லாவற்றையும் ரசிக்க மாட்டார்கள்…. ( உதாரணம்
   வேண்டுமா…… 🙂 🙂 ) அத்தகையோரும் படித்து விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்…!

   6) சில இடுகைகளுக்கு, தலைப்பு பிரச்சினைக்குரியதாக
   இருந்தால் – 50-ஐயும் தாண்டி பின்னூட்டங்கள்
   சென்றிருக்கின்றன… வலைத்தளத்தை பொதுவாக
   எடுத்துக் கொண்டோமானால், இங்கு நல்ல அளவில்
   பின்னூட்டங்கள் வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

   7) நீங்கள் கூறிய நண்பர்கள் செல்வராஜன், நெல்லைத்தமிழன்,
   டுடேஅண்ட்மீ ஆகியோரும், இன்னும் சிலரும் கூட – இந்த
   வலைத்தளத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள்… தங்கள்
   ஆழ்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடுகளின் மூலம்
   இந்த வலைத்தளத்திற்கு value addition செய்பவர்கள்.

   நான் ஏற்கெனவே பலமுறை சொல்லி இருக்கிறேன்…
   இப்போதும் மீண்டும் சொல்கிறேன்…
   இந்த “விமரிசனம்” வலைத்தளத்தின் சிறப்பு அதை
   எழுதுவரிடம் இல்லை… பின்னூட்டம் இடுபவர்களிடமே
   இருக்கிறது என்று… இந்த நண்பர்கள் அனைவருக்கும்
   நம் அனைவரும் சார்பாகவும் இங்கு நன்றி சொல்ல
   விரும்புகிறேன்… இது மேலும் தொடர்ந்து விரிவடைய
   வேண்டுமென்றும் விரும்புகிறேன்.

   -உங்கள் சந்தேகங்கள் தீர்ந்திருக்குமென்கிற
   நம்பிக்கையுடனும் –

   -வாழ்த்துகளுடனும்,
   காவிரிமைந்தன்

 6. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Thanks Mr.KM for the detailed reply.But I feel your reply will be complete if you have spelt out
  your reasons as you have told in your first reply. In fact I also expect our friends” comments
  apart from your topics.In fact your reply is answer for my reasoning.But the punch line is
  missing.If you feel your time is wasted in answering my comments you may skip.

 7. Anbu சொல்கிறார்:

  கடந்த இரு மாதத்திற்கு முன் ஒரு வேலையாக தபால் நிலையம் சென்ற போது “இங்கு SRM பஸ் டிக்கெட் புக் செய்யப்படும்” என்று பார்த்தேன். தமிழக போக்குவரத்து பேருந்துகளுக்கு டிக்கெட் புக் செய்ய வழியில்லை, இதெற்கெல்லாம் இருக்கிறதே என்று எண்ணம் வந்தது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.