திரு.ப.சி. அடுத்த தலைவரா…? எதிர்பாராத இடங்களிலிருந்து முயற்சி….!!!

p.c.delhi

டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் வேடிக்கையாக
இருக்கின்றன. ப.சி.அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ்
தலைவராக ஆகி விடக்கூடாதே என்று, தமிழ்நாட்டில்
தங்கபாலுவைத் தவிர மீதி அத்தனை காங்கிரஸ்
தலைவர்களும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

ஈவிகேஎஸ். இளங்கோவன், ப.சி. மட்டும் காங்கிரஸ்
தலைவராக நியமிக்கப்படாமல் இருந்தால்
திருப்பதிக்கே வந்து மொட்டை போட்டுக் கொள்வதாக
வேண்டிக் கொள்கிற அளவிற்கு போய் விட்டதாக
காங்கிரஸ்காரர்களே “ஜோக்” அடிக்கின்றனர்.

ப.சி. அவர்களைப் பொருத்தவரை, தன் ஆதரவாளர்
ஒருவரை இந்தப் பதவியில் அமர்த்தவே முயன்று
வருகிறார்… வேறு வழி இல்லையென்றால், தானே
தலைவர் பதவியை ஏற்கவும் தயாராக இருப்பதாக
மறைமுகமாகத் தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில் எதிர்பாராத இடத்திலிருந்து
ப.சிதம்பரம் அவர்களுக்கு ஆதரவு வருகிறது. அதுவும் எப்படி….?

பாராளுமன்றத்தில், ராஜ்ய சபா காங்கிரஸ் கட்சித்
தலைவராக திரு.குலாம் நபி ஆசாத், மற்றும்
துணைத்தலைவராக திரு.ஆனந்த் சர்மா ஆகியோர்
2014-லிருந்து செயல்பட்டு வருகின்றனர்.

அண்மையில் திரு.ப.சிதம்பரம், மஹாராஷ்டிராவிலிருந்து
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, இந்த இரண்டு ஆசாமிகளுக்கும்
தங்கள் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று
உதறல்.

திருமதி சோனியா – திரு. குலாம் நபியை உத்திர பிரதேச
தேர்தல் பொறுப்பாளராக நியமித்து விட்டு திரு.ப.சிதம்பரத்தை
ராஜ்ய சபா காங்கிரஸ் தலைவராக நியமிக்க ஆலோசனை
செய்து வருகிறாராம்.

குலாம் நபி ஆசாத் அவர்களுக்கு – அதிகாரமும்,
அந்தஸ்தும் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் பதவியை விட
விருப்பமில்லை. அதே போல், ப.சி.தலைவராக வந்தால்,

தன்னுடைய எதிர்கால வாய்ப்பு
பறி போய் விடுமென்று ஆனந்த் சர்மாவுக்கும் கவலை.

என்ன செய்யலாம்….?
இருவரின் கூட்டு ஆலோசனையின் விளைவு தான் –
திரு.ப.சி.யை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு
அனுப்பி விட்டு, ராஜ்ய சபாவில் தங்கள் நிலையை
தக்க வைத்துக் கொள்வது என்பது…..!
அதற்காகவே இருவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வெகு
தீவிரமாக வேலை செய்கிறார்கள் –

இது தான் டெல்லியிலிருந்து வரும் லேடஸ்ட் செய்தி….!!!

அன்னையின் மனதை யார் அறிவார்….?
அவர் ஒரு வேளை –
இரண்டு பதவிகளையுமே, ப.சி.க்கு கொடுத்து விட்டால்…?

இதில் காங்கிரசுக்கு சம்பந்தம் இல்லாத இன்னொரு
இடமும் பதை பதைத்துக் கொண்டிருக்கிறது.

திரு.ப.சி. தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனால் –
திமுகவுடனான அதன் உறவின் பரிமாணமே முற்றிலும்
மாறி விடுமே… எனவே –

கலைஞரும் கவலையில் இருக்கிறாராம்…!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திரு.ப.சி. அடுத்த தலைவரா…? எதிர்பாராத இடங்களிலிருந்து முயற்சி….!!!

 1. பெருவழுதி சொல்கிறார்:

  கலைஞருக்காகவாவது,
  ப.சிதம்பரம் தமிழக காங்கிரஸ் தலைவராக
  வேண்டும்.
  நிறைய திருப்பங்கள் ஏற்படும். அப்போது
  நிறைய முகங்களின் நிலையை பார்க்க ஆசை.

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ராகுல் அவர்கள், முதிர்ச்சியின்மை காரணமாக, தேவையில்லாமல் இந்தப் பிரச்சனையை வரவழைத்துக்கொண்டுள்ளார். இளங்கோவன் சரியான தலைவர். அவருடைய கோஷ்டி பிரச்சனையையும் (ஜோதிமணிக்கு சீட் கொடுக்காமல் பிளான் செய்தது, குஷ்புக்கு தொகுதிவாங்கித்தர முயற்சித்தது போன்றவை), தலைவருக்குள்ள சரியான முதிர்ச்சியான விமரிசனத்துக்குப் பதிலாக below the belt வார்த்தைகளையும் கட்டுப்படுத்தினால் போதுமானது. போட்டுக்கொடுத்தே காங்கிரஸை காலி செய்வது இந்த கோஷ்டித்தலைவர்கள்தான். This includes PC, who wants his incapable son to come to some power within Congress.

  ப.சி. தமிழக காங்கிரஸ் தலைவராவது சரியல்ல. அவருடைய ஸ்டேட்டஸ் 10 வருடங்களுக்கு முன்பே மாறிவிட்டது. அவர் போய் ஸ்டாலினைச் சந்தித்து தொகுதி உடன்பாடு செய்யவேண்டி வருவது ஏற்பாடான செய்கை அல்ல. அதனால் தமிழக தலைவராக ப.சி வருவது காங்கிரஸுக்கு நல்லதல்ல. ப.சிக்குமே அது நல்லதல்ல. அவர் அவமதிக்கப்படுவது தொடர்கதையாகிவிடும்.

  இளங்கோவனை இப்போது நியமித்தாலும், அது அசிங்கமாகிவிடும். (எண்ணித் துணிக கருமம் என்பதை மறந்த ராகுல் அவர்களால்). ஸ்டேட்டஸ் உள்ள தலைவர் என்று இப்போது காங்கிரசில் இல்லை. பீட்டருக்கோ, திருனாவுக்கரசருக்கோ அல்லது போயும் போயும் கராத்தே தியாகராசனுக்கோ கொடுப்பது காங்கிரஸின் ஸ்டேட்டஸுக்கு நல்லதல்ல.

  இளங்கோவனைத் தொடரச் செய்து, அவரது தான் தோன்றிப்போக்கைக் கட்டுப்படுத்தும் விதமாக, அனுபவமிக்க 5 பேர் குழுவை அமைத்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

  • Jagannathan chellappa சொல்கிறார்:

   சோதா என்கிற வார்த்தைக்கு தமிழில் வேறு எதாவது
   பொருத்தமான சொல் இருந்தால், அதை போட்டுக் கொள்ளலாம்
   இளங்கோவன் பெயருக்கு முன்னதாக. நம்பர் ஒன் என்பதையும்
   சேர்த்துக் கொள்ளலாம். காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டுக்கு
   என்ன பயன் ? தொலையட்டும் காங்கிரஸ் தமிழ்நாடிலிருந்து.

 3. natchander சொல்கிறார்:

  jagan ji tamilnadu people cannot afford to lose congress atleast in
  parliamentary elections…..
  highly irresponsible apeeches of bjp leaders throughout india say about mayawathi…
  and the brutal blows executed by bjp guys against dalits….
  and many other factors … threaten the tamilnadu people…
  i do not think that bjp would even get ten to fifteenmp seats in 2019 pariamentary elections…

 4. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Poor Congress

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.