( பகுதி-2 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன …

.

.


( முதல் பகுதியின் தொடர்ச்சியாக ) –

தமிழகத்திற்கு அப்பால் கடல்களைக் கடந்து
சென்ற
தமிழர்கள் பொதுவாக 3 வகைகளுள் வந்து விடுகின்றனர் –

1) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடல்
கடந்து
மேற்கே – மத்திய தரைக்கடல் பகுதிகளில்


கிரேக்கம், ரோம், எகிப்து
முந்நீர்ப்பழந்தீவு(மாலத்தீவு)போன்ற நாடுகளுடனும்

கிழக்கே, காம்போஜம்(கம்போடியா),
ஸ்ரீவிஜயம்(சுமத்ரா), சாவகம்(ஜாவா),
சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம்(மலேசியா),
நக்காவரம்(அந்தமான்,நிக்கோபார் தீவுகள்),
போன்ற நாடுகளுடனும் – சீனம் வரையிலும் கூட
வாணிபத்திற்காக பல தமிழ் வணிகர்கள்
சென்றனர்.

மேற்கே அவர்களுக்கு எந்தவித தடையும்
ஏற்படவில்லை.
ஆனால் கிழக்கே, வர்த்தக முயற்சிகளுக்கு ஆங்காங்கே
உள்ள சிலஅரசுகளால் தடங்கலும்,
கடற்கொள்ளைக்காரர்களால் பாதிப்பும் ஏற்பட்டதால் –

 

– முக்கியமாக இந்த வணிகர்களுக்கு உதவுவதற்காக
பல்லவர் காலத்திலும், பிற்பாடு ராஜேந்திர
சோழன்
காலத்திலும் சில படையெடுப்புகள்
அவசியப்பட்டன.

கீழே காணும் படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே
ராஜேந்திர சோழன் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய –
அவன் சென்ற, வென்ற நாடுகளை காட்டுகிறது.

( இன்றைய பர்மா, அந்தமான் தீவுகள், சிங்கப்பூர்,
மலேசியா,இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா,
கம்போடியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் இவற்றில் அடக்கம்.)

places-won-by-rajendra-chozan-1

rajendra-chozan-2

2)கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில்
பிரிட்டிஷ்
ஆட்சியின் போது தமிழர்கள் சென்ற இடங்கள் –

(ஒரே ஆட்சியின் கீழ் இருந்தமையால்
பாஸ்போர்ட்டோ, விசாவோ இல்லாமல்
வேலை
நிமித்தமாக –

பர்மா, மலேசியா, தென்னாப்பிரிக்கா,
பிஜி, ரீயூனியன் போன்ற பல நாடுகளுக்கு
தமிழர்கள்
தமிழ் நாட்டில் இருந்து சென்றார்கள்.)

3) நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த
40-50 ஆண்டுகளில், வேலை வாய்ப்புகளைத்தேடி
வெளிநாடு சென்ற தமிழர்கள் –

———————————————
இவற்றில் முதல் வகையில் வரும் நாடுகளில் ஒன்று –
தான்
காம்போஜம் …!! என்கிற
இன்றைய கம்போடியா….
———————————

இன்றைய கம்போடியாவில் இன்னமும் உள்ள –
தமிழ் மன்னர்கள் காலத்திய தமிழ் கல்வெட்டு ஒன்று கீழே –

800px-ancientkhmerscript

உலகம் தட்டையா – உருண்டையா ?
– என்றே தெரியாமல்மேற்கத்திய நாடுகள்
விழித்துக்கொண்டிருந்த வேளையில்
தமிழன் கிழக்கே வெற்றிகளைக்
குவித்துக்கொண்டிருந்தான் !

தமிழ் நாடு எங்கே – கம்போடியா எங்கே ?
கடல்வழியே போனால் கிட்டத்தட்ட
3000 கிலோமீட்டர்கள் !

எத்தகைய வலிவும், துணிவும், அறிவும், வீரமும்
இருந்தால் இவ்வளவு தூரம் படையெடுத்துச்சென்று
வெற்றி பெற்று அரசாட்சியை நிலை நிறுத்த முடியும் ?

பல்லவ, சோழ மன்னர்கள் காம்போஜம் வரை
சென்று
தங்கள் வலிமையை நிரூபித்த பிறகு தங்கள் படைத்தளபதிகளையே அங்கே
அரசராக
நியமித்து விட்டு வந்தார்கள்.
அவர்களின் வழி
வந்தவர்கள் தான் மேற்கூறிய காம்போஜத்தை
ஆண்ட தமிழ் மன்னர்கள் !
ஒன்பதாவது நூற்றாண்டில் தமிழ் மன்னன்
ஜெயவர்மனுடன்
துவங்கிய இந்த வம்சம் காம்போஜத்தை அந்த நாட்களில்
தெற்காசிய நாடுகளில் மிக வலுவானதொரு
ஆட்சியாகஉருவாக்கியது. தொடர்ந்து சுமார்
500-600 ஆண்டுகளுக்கு, தமிழ் மன்னர்களின்
ஆட்சியில்
இருந்த காம்போஜம், கொஞ்சம் கொஞ்சமாகத் தாய்த் தமிழ்நாட்டுடன் இருந்த தொடர்பை இழந்தது.படையெடுப்பின்போது போய்க் குடியேறிய
தமிழர்களைத்தவிர
பிற்காலங்களில் அதிகம் பேர் தமிழ் நாட்டிலிருந்து  இங்கு குடிபெயரவில்லை என்பதே இதன் முக்கிய காரணம்.

சுற்றிலுமிருந்த லாவோஸ், வியட்னாம்,
தாய்லாந்து ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தில் சிறிது சிறிதாக தமிழ் மணத்தையும், இந்து மதப் பழக்க வழக்கங்களையும் இழந்தது.

சுற்றிலுமிருந்த நாடுகள் அனைத்திலும்
பரவிய பௌத்த கலாச்சாரம் இங்கும் பரவியது.

15வது நூற்றாண்டுக்குப் பிறகு, சுமார்
600 ஆண்டுகளுக்கு இங்கு ஒரு இருண்ட நிலையே நிலவியது.

இன்றைய கம்பூச்சியாவில் குறிப்பிடத்தக்க அளவில்
தமிழர்கள் இல்லையென்றாலும் –
பண்டைத் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம்,தமிழ்ப்
பெயர்கள் ஆகியவை இந்த மக்களின் ரத்தத்தில் கலந்தே வந்திருக்கிறது. ‘ராமாயணம்’இவர்களுக்கே உரிய முறையில் உருமாற்றம் பெற்று இப்போதும் நடன,
நாடக உருவத்தில் உலா வருகிறது.

உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் இன்று வந்து ஆச்சரியத்தோடு காணும் ‘
அங்கோர் வாட்’
கோயில்கள் தான்
தமிழர்கள் இங்கு வாழ்ந்த வளமான

வாழ்க்கைக்கும், கலைச்செழுமை மிக்க
தமிழ்ப்பண்பாட்டிற்குமான எஞ்சியிருக்கும் சாட்சி.

.
முன்பாக இங்கிருந்த மக்கள் பருவக்காற்றையும், மழையையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்த நிலையில்,
முதல் முதலாக கிழக்கு பராய் என்கிற மிகப்பெரிய
நீர்த்தேக்கத்தை உருவாக்கி பஞ்சமில்லாத நாட்டை உருவாக்கினான் தமிழ் மன்னன் யசோவர்மன்.

அவன் –  1000  ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய நீர்த்தேக்கம் இது –

lake

துவக்கத்தில் –விஷ்ணு, இந்திரன், சிவன்
ஆகியோர்களுக்கான கோவில்களையும்,

பிற்காலத்தில் புத்தமதத்தின் செல்வாக்கு தழைத்தோங்கிய கடைசி தமிழ் மன்னன் ஜயவர்மன்-7ன் நாட்களில்
போதிசத்வரின் 216 முகங்கள் அடங்கிய புத்தருக்கான திருக்கோயில் ஒன்றும் கட்டப்பட்டன !

banyon-angkor-wat1

images-3 (1)

images-5

images-6

aspara-dancer-angkor-wat-temple-cambodia-600x400 (1)

angkor vat

—————————————-

( தொடர்கிறது – பகுதி-3-ல் )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ( பகுதி-2 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன …

 1. ஸ்ரீனிவாசன் சொல்கிறார்:

  அனைத்து தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். சிரத்தையுடன் தயாரித்திருக்கிறீர்கள். படங்களுக்கான இணைப்பில் பிழை தெரிகிறது. URL ல் உள்ள இடைவெளியை நீக்க வேண்டும்

  • anbudan Ponnivalavan சொல்கிறார்:

   sir, could not see any pictures and 404 — File not found error msg comes on opening of the links…

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களே,

    சரி செய்திருக்கிறேன்.
    இப்போது புகைப்படங்கள் தெளிவாக தெரியும்
    என்று நினைக்கிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 2. srimalaiyappan சொல்கிறார்:

  அருமை தொடர்கிறேன்

 3. selvarajan சொல்கிறார்:

  // 15வது நூற்றாண்டுக்குப் பிறகு, சுமார்
  600 ஆண்டுகளுக்கு இங்கு ஒரு இருண்ட நிலையே நிலவியது.// .. அதன்
  பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.

  பின்னர் ” Henri Mouhot ” — என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் ” One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged ” என்று குறிப்பிட்டுள்ளார்….
  பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
  அது மட்டுமல்ல — இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேயக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. —- மேலும் ” இன்றும் தாய்லாந்தில் மன்னர் ” – ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது — என்பதும் குறிப்பிட தக்கது —
  நாம் — // அங்கோர் வாட்’ கோயில்கள் தான்
  தமிழர்கள் இங்கு வாழ்ந்த வளமான
  வாழ்க்கைக்கும், கலைச்செழுமை மிக்க
  தமிழ்ப்பண்பாட்டிற்குமான எஞ்சியிருக்கும் சாட்சி.// என்கிற அய்யாவின் கூற்றை பறைசாற்றும் விதமாக — யாராவது ஒருவரிடம் பேச்சு வாக்கில் இதைப் பற்றி கூறினாலே நம் தமிழர் பெருமை உயரும் அல்லவா … அய்யா … ! தாங்கள் இந்த தொடர் முடிக்கும் போது :— ” இதே கோயில் நம்நாட்டில் இருந்தால் — இந்நேரம் : திரைப்படத் துறையினர் பாடல் — மற்றும் சண்டைக் காட்சிகள் எடுக்கவும் — பல தரப்பட்ட ” காதலர்களின் ” பொழுது போக்கு இடமாகவும் — சுவர்களில் தங்களின் பெயர்களை பொறிக்க சுரண்டியும் — குப்பைக்காடாகவும் — சிற்பங்களை திருடியும் — அரசியல்வாதிகள் சுற்று சுவர்களை ஒட்டி ஆக்கிரமித்து கடைகள் கட்டியும் — இன்னும் பலரும் பலவிதமாக பயன் படுத்தி இருக்கமாட்டார்களா … ?என்பதை தங்களின் பாணியில் கோடிட்டு காட்டுவிர்கள் என்று நினைப்பது … தவறா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நிறைய பயனுள்ள தகவல்களை தந்திருக்கிறீர்கள்….
   மிக்க நன்றி.

   // தங்களின் பாணியில் கோடிட்டு காட்டுவிர்கள்
   என்று நினைப்பது … தவறா … ? //
   நான் இதை கண்டுகொள்ளாமல் விட்டால் தவறா…!!!

   ஏனெனில்,

   நான் முதன் முதலில் இந்த விமரிசனம் தளத்தில்
   3-4 வருடங்களுக்கு, அங்கோர் வாட் பற்றி எழுதிய
   இடுகையை ஹாலிவுட் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி
   இங்கு படப்பிடிப்பு நடத்தியதைப்பற்றிய செய்தியுடன் தான்
   துவக்கினேன்…!!! 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Pallavas -the GREAT-salute

 5. Pingback: புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன ….( பகுதி-1 - பகுதி2) - காவிரிமைந்தன் - வெளிச்சவீடு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.