ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சில புதிய கோணங்கள்…..!!!

arputhammal

வருகின்ற 11-ந்தேதியுடன், இருண்ட சிறைக்குள் இருபத்தி ஐந்து
ஆண்டுகளை முடிக்கிறார்கள் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும்.

இப்போதாவது கருணை காட்டி, அவர்களை விடுதலை செய்ய
வேண்டுமென்று, பேரறிவாளனின் அன்னை அற்புதம் அம்மாள்
முயற்சியில் ஒரு பேரணி 11ந்தேதியன்று, வேலூரிலிருந்து
கிளம்பி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வரை ஊர்வலமாக
வந்து முதல்வர் ஜெ. அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்க
இருக்கிறது.

14-ந்தேதி டெல்லி செல்லும் முதல்வர், இது குறித்து
பிரதமருடன் கலந்து ஆலோசித்து விட்டு, திரும்பிய பிறகு,
இந்த பாவப்பட்ட மனிதர்களுக்கு ஒரு விமோசனம் பிறக்கும்
என்கிற நம்பிக்கை உருவாகி இருக்கிறது. ( மத்திய அரசு
சம்பந்தப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில்
இருந்தாலும் கூட, மாநில அரசு தனக்குள்ள பிரத்தியேக
அதிகாரத்தை பயன்படுத்தி, இவர்களை விடுதலை செய்ய
வழி இருக்கிறது. இருந்தாலும், இது குறித்து மத்திய அரசுடன்
கருத்து மோதல், ஈகோ பிரச்சினை உருவாக இடம்
கொடுக்காமல், இதைச்செய்து முடிப்பதே சிறந்த வழி….
முதல்வரும், பிரதமரும் நேரில் சந்தித்துப் பேசும்போது –
இத்தகைய பிரச்சினைகள் எதுவும் எழாமல்,
ஒரு முடிவு காண இயலக்கூடும்…)

நல்லதே நடக்க வேண்டுவோம்…

இதற்கிடையில், ஒரு தனியார் செய்தி நிறுவனம் – தனிப்பட்ட
முறையில் ராஜீவ் காந்தி கொலைவழக்கு சம்பந்தமாக
ஒரு விசாரணையை மேற்கொண்டு –
ஏற்கெனவே கிடைத்த, தற்போது கிடைக்ககூடிய தடயங்கள்,
ஆதாரங்களை – வைத்து, புதிய கோணத்தில் இந்த வழக்கை
அணுக ஆரம்பித்திருக்கிறது. இது குறித்து ஒரு
ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

துவக்கத்திலேயே பல கேள்விகள் எழுப்பப்பட்டிருகின்றன….

———-

1. ராஜீவ் கொலை வழக்கில் தடவியல் நிபுணர்களுக்கு தாதமாக,
அதாவது கொலை நடந்த 10.20க்கு பிறகு தகவல் அளிக்காமல்,
காலை 6 மணிக்கு தகவல் அளித்து, 7.30க்கு சென்றவர்களை
1.30 மணி நேரம் காக்க வைத்து 9 மணிக்கு கொலை நடந்த
இடத்திற்குள் அனுமதித்துள்ளனர். தடவியல் நிபுணர்கள்
சென்றபோது இறந்தவர்களின் உடல்கள் அங்கு இல்லை.
இதனால் ஆவனங்களை சரிவர தேட முடியவில்லை.

2. குற்றம் நடந்த இடத்தில் ஒரு சடலத்தின் மீது கேமரா
இருந்துள்ளது. அந்த கேமராவை எடுத்துக்கொண்டு நெகடிவ்
போட சென்றுள்ளனர். கலர் ப்ரின்ட் கிடைக்காது என்பதால்

புகைப்படங்களை கட் செய்து நெகடிவ் போட்டுவிட்டு
மீண்டும் கேமராவை அதே சடலத்திற்கு மேல் வைத்துள்ளனர்.
இது குற்றம் நடந்த இடத்தின் தன்மையை பாதிக்கும்.

3. புகைப்படத்தை நெகடிவ் போட்டு கொடுத்த நாராயணனை
பைபாஸ் படக்குழுவினர் சந்தித்து பேசியபோது, என்னை
அங்கே இரவு 12 மணிக்குக் கூட்டிப் போனார்கள். சம்பவ
இடத்தில் நிறைய புகைப்படங்களை எடுத்தேன். அங்கு
முழுக்க ரத்தத் துளிகள் நிரம்பிய ஒரு கேமராவைப் பார்த்தேன்.
அதைத் துடைத்து சுத்தம் செய்தேன். அந்தக் கேமராவில்
பிளாஷ் இருந்தது என்று கூறியுள்ளார். ஆனால்
காவல்துறையினர் நீதிமன்றத்தில் காட்டிய தடைய
ஆவனங்களில் கேமராவில் பிளாஷ் இல்லை. ஹரிபாபுவின்
கேமரா சேதமடைந்திருந்தாக நாரயணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் காவல்துறை காட்டிய கேமராவில் சேதம் எதுவுமே
இல்லை.

4. தடயவியல் பேராசிரியர் சந்திரசேகர் படக்குழுவினரிடம்,
”கேமரா பற்றி எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை” என்று
குறிப்பிட்டுள்ளார். ஆனால்

ஒரு மாலை நாளிதழுக்கு, சம்பவம் நடத்த தினத்தன்று,
”30 வயதுள்ள சடலத்தின் மீது கேமரா கிடந்தது. மறுநாள்
அதைத் தேடிச் சென்றேன்.” என்று பேட்டி கொடுத்துள்ளார்.

அதேபோல, தடா நீதிமன்றத்தில், ”கேமராவைப் பற்றி
காஞ்சிபுரம் தடயவியல் உதவியாளர் ஏ.ஆர்.மோகன் கூறினார்.

பத்திரிக்கைகளில் இந்தப் படங்களை வெளியிட்டது யார்
என்று தனக்குத் தெரியாது” என்று குறுக்கு விசாரனையின்
போது தெரிவித்துள்ள அவர்,
தற்போது ”பத்திரிகையாளர் ஒருவருக்கு குற்றவாளியின்
படங்களைக் கொடுத்து, உண்மை வெளியில் வரட்டும்
என தெரிவித்ததாக பேட்டி கொடுத்துள்ளார்.
இதில் எது உண்மை என்பது கூட இன்னும்
கண்டுபிடிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

5. சம்பவ இடத்தில் இரண்டு பூக்கூடைகள் காவல்துறையினருக்கு
கிடைத்துள்ளன. ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ தூவுவதற்காக
உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் சுலைமான் என்பவர் தனது
உதவியாளர்கள் மூலம் பூக்கூடைகளை அனுப்பி வைத்திருக்கிறார்.
சுலைமானின் உதவியாளரை தான் ஹரிபாபு என்று காவல்துறை
திரித்து கூறியுள்ளது.

6. பத்திரிகையாளர் ராமசுந்தரத்திற்கு, சந்திரசேகர் கொடுத்த
வீடியோ பேட்டியில், ராஜீவ் காந்தி லோட்டோ ஷு, தனுவின்
சல்வார் கமீஸ், சுவிட்ச் ஆகியவற்றை தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

இவைகளை எடுக்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.
சடலத்தை பிரேத பரிசோதனை செய்யும்போது மட்டுமே நான்
அனுமதிக்கப்பட்டேன்.” என்று கூறியுள்ளார்.

இதுபற்றி மேலும் விளக்கும் ராமசுந்தரம் அவர்கள், ”சம்பவ
இடத்திற்குப் போகாமல், இந்தப் பொருட்களை வீடியோ பதிவில்
காட்ட முடியாது. இதை ஏன் சந்திரசேகர் மறைக்கிறார்? என்று

தெரியவில்லை. எனக்கு ஒரு வீடியோ பேட்டி கொடுத்தேன்
என்பதையே சந்திரசேகர் நீதிமன்றத்தில் மறைத்துவிட்டார்”
என்று தெரிவிக்கின்றார்.

7. சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகுதான்,
போட்டோகிராபர் ஹரிபாபுவின் அப்பா சுந்தரமணி, உடலுக்கு
உரிமை கோரி ஆஸ்பத்திரிக்கு வருகிறார். அவரிடம்,
தலை தனியாக வெட்டி எடுக்கப்பட்ட சடலத்தைத்தான்,
உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ஜீவானந்தம் காண்பிக்கிறார்.
முகம் முழுக்க கருகிப் போய், மார்பில் குண்டு துகள்கள்
துளைக்கப்பட்ட அந்த உடலை, ஹரிபாபு என நம்ப
வைத்திருக்கிறார்கள். தவிர, ‘ஹரிபாபுவின் வயது 22.

போஸ்ட்மார்ட்டத்தில் சொல்லப்பட்ட வயது 30. அதுவும்
சுன்னத் செய்யப்பட்ட இளைஞரின் உடல் அது. ‘ உடலை
ஒப்படைத்தவர்கள் ஏன் சுன்னத் செய்யப்பட்டது என்ற
கேள்வியை எந்த இடத்திலும் கேட்கவில்லை.
புதைக்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுக்கப்பட்ட உடலை,
ஹரிபாபு குடும்பத்தினர் ஏன் எரித்தார்கள்?’ எனப் பல கேள்விகள்
எழுகின்றன என்கிறது அந்த டாகுமென்ட் படம்.

8. இதுபற்றிய பெரிய விளத்தை கொடுத்துள்ளது அந்த படம்.
அதில், ”ராஜீவ்காந்தி நடந்து வரும் சிவப்புக் கம்பளத்தின்
தெற்கில் நின்றபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்
ஹரிபாபு. அவருக்குப் பக்கத்தில் சங்கர்-கணேஷ் இசைக்
குழுவின் போட்டோகிராபர் ஜெயபாலனும் போட்டோ
எடுத்தபடியே நின்றிருக்கிறார்.

குண்டு வெடித்ததும் காதில் ரத்தம் வடிய மயக்க நிலைக்குச்
சென்ற ஜெயபாலன் பிழைத்துவிட்டார். அவரோடு சேர்ந்து
ஹரிபாபுவும் பிழைத்திருக்கவே வாய்ப்பு அதிகம்.
வடதுபக்கம் இறந்துகிடந்த ஒரு முஸ்லிம் இளைஞரின்
உடலின் மீது காவல்துறை கேமராவைப் போட்டுவிட்டு,
அவர்தான் ஹரிபாபு என நம்ப வைத்திருக்கிறது” என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. மேடையில், ராஜீவ்காந்தி பங்கேற்கும் நிகழ்வைத் தொகுத்து
வழங்கிய ஏ.ஜெ.தாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
10.12 மணிக்கு அவர் பேசும்போது, ‘மேடைக்கு வலதுபக்கம்
உள்ளவர்கள், மேடையின் இடதுபக்கம் உள்ள கார்பெட்
ஏரியாவுக்கு வருமாறு’ சொல்கிறார். மேடையின் பின்புறம்
காங்கிரஸ் பிரமுகர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பு வெளியான உடன், பொதுமக்கள் கூட்டம் ரெட் கார்பெட்
ஏரியாவை நோக்கி வேகமாக முன்னேறுகிறது.
ராஜீவ்காந்தி நடந்து வந்த ரெட் கார்பெட்டில் போலீஸ் பந்தோபஸ்து
இல்லை. ராஜீவை நோக்கி வருபவர்களைத் தடுக்க போலீஸ்
எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேடைக்கு ராஜீவ்காந்தி
வந்திருந்தால் வெடிகுண்டு வெடித்திருக்க வாய்ப்பில்லை.
மாலை போட வருகிறவர்களை சோதனை செய்திருக்க முடியும்.

ஆனால், சிவப்புக் கம்பளத்தை குறிவைத்து ஏ.ஜெ.தாஸ்
தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டாரா? என்ற கேள்விக்கு,
விடை சொல்கிறார் ராஜீவ்காந்திக்கு முதலில் மாலை போட்ட
ரங்கநாத முதலியார். அவர் தனது வாக்குமூலத்தில், ‘ஐ.ஜி
ஆர்.கே.ராகவன்தான் இப்படியொரு அறிவிப்பை வெளியிடச்
சொன்னார்’ என்கிறார். அப்படியானால், சிவப்புக் கம்பளத்தில்
மக்களை நிற்க வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா?
என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது ஆவணப்படம்.

10. ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்குப் பின்புறம் சி.ஆர்.பி.எஃப்
போலீஸார் 50 பேர் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும்
என போலீஸ் தயார் செய்த பந்தோபஸ்து குறிப்பில் உள்ளது.
சம்பவ இடத்தில் இப்படிப்பட்ட ஒரு போலீஸ் படை இருந்ததாக
எவரும் குறிப்பிடவில்லை. கடைசிநேரத்தில், இவர்கள்
வராமல் போனதற்கான ஆதாரம்தான் இருக்கிறது.
இதற்கான மர்மம் என்ன?

———————————————————-

உலகிலேயே 25 ஆண்டுகள் கடந்தும், விசாரணை
முற்றுப்பெறாத வெகு சில வழக்குகளில் ஒன்றாக
ராஜீவ் காந்தி கொலை வழக்கும் இடம் பெறுகிறது…

நம்மைப் பொருத்த வரையில், கொலையில் தொடர்புடைய
உண்மை குற்றவாளிகள் சிலர் இன்னமும் இந்திய அரசியலில்
கோலோச்சி வருகிறார்கள் என்றே நம்புகிறோம்.
அவர்களை தண்டிக்க மனிதர் உருவாக்கிய சட்டங்களுக்கு
வலுவில்லை….

இயற்கையாகப் பார்த்து எதாவது
செய்தால் தான் உண்டு….!

இப்போதைக்கு முதலில், இருண்ட சிறையில் 25 ஆண்டுகளாக
இருப்பவர்கள் வெளியே வருவது மிக மிக முக்கியம்…..!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சில புதிய கோணங்கள்…..!!!

 1. Sella சொல்கிறார்:

  Please provide the link if available

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் stanjoe, Sella, and Selvarajan –

   இப்போதைக்கு இதற்கு மேல் வேண்டாமே…
   பின்னர், வேறொரு சமயத்தில் இதைப்பற்றி
   விரிவாக, விவரமாக விவாதிக்கலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. stanjoe சொல்கிறார்:

  There are few things which are a concern to me, the film narrates that the this team has got access to all the documents only after they built this STORY. If that’s the case I doubt you free and fair mind in their analysis and investigation..

  Second thing, regarding the body of Haribabu, Did these these team got a chance to access pictures and videos of Haribabu’s body ? or they are just strengthening their story based on post mortem report alone , Did the team inquire Haribabu families and friends ( He was supposed to have one girlfriend who warned him to snap the ties with LTTE)

  From My side:
  In the video released by SIT “The human Bomb – Rajiv Gandhi assassination”

  There is one body shown exactly at 9:22 saying that as Haribabu’s body…This body is neither charred nor unrecognizable , Did the this Bypass team got a chance to analyse this frames?. This body seems to be easily can be identified ..The face in the body is very similar to the Haribabu’s photos…

  Haribabu is not an ordinary man in the press circle..He seems to know everyone in the press , a very known, famous cameraman..since he was working under suba sundaram..If team could not trace back his family why don’t they ask the press circle..Many reporters have found him wandering with Sivarasan on that day . Even in this film they have mentioned that there is one person who has seen Haribabu taking pictures using his flash…He has seen Haribabu..why don this team Show him this video and verify the details..

 3. selvarajan சொல்கிறார்:

  // ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தப்பித்த சில பேர்கள் … புதிய தகவல்கள்….
  Posted on ஜனவரி 19, 2012 by vimarisanam – kavirimainthan // என்ற நான்கு வருடங்களுக்கு முன் வந்த இடுக்கையில் : // ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியின் சார்பாக
  வழக்காடிய, 1970 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில்
  வழக்கறிஞராகப் பணியாற்றி வரும், 69 வயதாகும்,
  திரு எஸ்.துரைசாமி அவர்கள் எழுதி, விரைவில்
  வெளிவரவிருக்கும் ஒரு புத்தகம் தொடர்பாக –

  டெஹல்கா ஆங்கில இதழில் அவருடன் ஒரு பேட்டி
  காணப்பட்டு, அதன் மூலம் இந்த வழக்கு பற்றிய
  பல புதிய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. // அதில் பல சந்தேகங்களும் — கேள்விகளும் நிறையவே எழுப்பப் பட்டுள்ளன — தற்கான ” விளக்கமும் — விடையும் ” இன்று வரை வெளியுலகத்திற்கு வரவேயில்லை என்பது தான் வேதனையான விஷயம் …. அதில் ஹரிபாபுவை பற்றி அவர் எழுப்பிய சந்தேகங்கள் இன்றும் இந்த ” ஆவணப்படத்திலும் ” கேட்கப் பட்டு இருப்பது உற்று நோக்கத் தக்கது … வழக்குரைஞர் திரு துரைசாமி அவர்கள் // வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, ஹரிபாபுவின்
  காமிராவை போலீஸ் கைப்பற்றி இருந்தது. அதிலிருந்த
  பிலிம் சுருளை 5 மணி நேரத்திற்குள்ளாக ப்ராசஸ்
  செய்து புகைப்படங்களை எடுத்திருக்கலாம்.
  குற்றவாளிகளின் புகைப்படங்கள் கிடைத்து, தேடுதலை
  துவக்கி இருக்கலாம். அது நடக்கவில்லை.

  ஆனால் – இந்த புகைப்படங்கள் 25ந்தேதி திடீரென்று
  “இந்து” பத்திரிகையில் வெளிவந்தன. போலீஸ் வசம்
  இருந்த பிலிம் சுருளின் புகைப்படங்கள்
  இந்து பத்திரிகைக்கு கிடைத்தது எப்படி ? இதை
  யாரும் விசாரிக்கவில்லை.

  சம்பவம் நடந்த இடத்தில் 3 வீடியோ
  புகைப்படக்காரர்கள் எடுத்த வீடியோக்கள் சிதைக்கப்பட்டும்,
  சில் இடங்களில் அழிக்கப்பட்டும் இருந்தன.
  அவற்றை கையாளும்போது தவறுதலாக இவை
  நிகழ்ந்து விட்டன என்று போலீஸ் தரப்பு பின்னர் கூறிய
  காரணங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.// என்று கூறியிருக்கிறார் …. அந்த முந்தைய இடுக்கையை மீண்டும் படிக்கும் போது ” விடைக் காணா ” கேள்விகளுக்கு விடிவு எப்போது … ?

  • நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

   நான் இது சம்பந்தமான புத்தகங்களையும் (மொத்தம் நான்கு. இவைதான் முக்கியமானவை) படித்துள்ளேன். நிறையத் தகவல்களையும் இது சம்பந்தமாகப் படித்திருக்கிறேன். 100 சதவிகிதம் கேள்வி எழுப்பமுடியாத விசாரணை என்பது உலகத்தில் கிடையாது. ஒரு மனித மனமே விசித்திரம் எனும்போது பல நூறு மனித மனங்கள் நேரடியாகப் பங்குபெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏகப்பட்ட விடை தெரியா நுனிகள் கட்டாயம் இருக்கும். அதை விளக்க இறந்தவர்கள் (சிவராசன், பிரபாகரன் போன்ற அனைவரும்) உயிர்த்தெழுந்து வந்து உண்மையைச் சொன்னால்தான் உண்டு. அப்போதும் நிறைய கேள்விகள் எழும். ஏனென்றால் உண்மை என்பது வேறு. த்த்தம் பார்வையில் நடக்கும் சம்பவம் வேறு. இது குழப்பும். When two persons see an act, they need not interpret or understand it in the same manner.

   தடயவியல் சந்திரசேகரிடம் கேமரா ரோல் செல்கிறது. அதிலிருந்து இந்துப் பத்திரிகைக்கு காபி கொடுத்தபின்தான் (எப்படிச் செய்தார் என்பது ஆணவப்படுத்தப்படவில்லை. சொந்த லாபம், பணமல்ல, தன் connection கருதிச் செய்திருப்பார். ஆனாலும் இது மாபெரும் தவறு. இதை சந்திரசேகர் நல்லதை எண்ணிச் செய்திருக்கக்கூடும் ஆனாலும் இது breach of trust) விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது இதை ரகோத்தமன் அவர்கள் எழுதியுள்ளார்.

   எதையும் கேள்வி கேட்பது எளிது. பதட்டமான சூழ்நிலை. (கொலைச்சம்பவ இரவு) நிறைய மனித மனங்கள் தவறு செய்திருக்கலாம். ஏன் குறைந்த தூரமுள்ள இடதுபக்கம் திரும்பிச் செல்லாமல் வலது பக்கம் சென்றாய் என்று ஒரு சம்பவத்தில் கேள்வி கேட்டால் விடை இருக்காது, விதி என்பதைத்தவிர. உதாரணமாக எனக்கு செல்வராஜின்மேல் ஏதேனும் பிடிக்காமல் இருக்கலாம். நான் நேரடியாகப் பழிவாங்கும் எண்ணமே இல்லாமல் இருக்கலாம். செல்வராஜனை ஒருவன் தாக்கப்போகிறான் என்று தெரியவருகிறது. நான் அஅதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடலாம். ஒருவன் என் நண்பனின் அண்ணணைக் கொலை செய்ய முயற்ச்சிக்கலாம். அவன் செத்தால் என் நணபன்தானே பதவிக்கு வருவான் என்றெண்ணி நான் அமைதியாக இருந்துவிடலாம். மனித மனம் பெரும்பாலும் சுயநலமாகத்தான் முதலில் சிந்திக்கும். Means, first he will think about himself and his benefits. அதனால்தான் நமக்கு (ஜெ, கரு யாருக்கும் இது பொருந்தும்) தலைவர்கள் மீது உள்ள அன்பு, அவர் அருகிலிருக்கும் அமைச்சருக்கோ எம்எல்ஏ எம்பிக்கு உள்ளதைவிட மிகவும் அதிகம். அதனால்தான் தலைவர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் செய்வது நாடகமாகவும் கூழைக்கும்பிடாகவும் நமக்கு சுலபமாகத் தெரிகிறது. All this are relevant in this case.

   காமை அவர்களின் எண்ணத்துக்கு மாறானது இந்த விஷயத்தில் என் எண்ணம். (ஒருவேளை இந்த ஏழில் ஓரிருவர் நிஜமாகவே அப்பாவியாக இருந்து சந்தர்ப்ப வசத்தால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தால்? இதனால் என் கருத்தை எழுதக்கூடாது என்று நினைக்கிறேன்(

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நெல்லைத்தமிழன்,

    உங்கள் எண்ணத்துக்கு தடை போட
    நான் விரும்பமாட்டேன். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில்
    வேண்டாமென்று நினைக்கிறேன்.
    கொஞ்ச நாட்கள் கழியட்டும். நாம் மீண்டும் இதைப்பற்றி
    விவாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
    அப்போது இன்னமும் மனம் திறந்து பேசுவோம்.

    இப்போதைக்கு ஒன்றை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன் –

    ஒரு பேச்சுக்கு –
    இந்த ஏழு பேரும் –
    ஏதோ ஒரு விதத்தில் இந்த குற்ற நிகழ்வில்
    சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட –

    25 ஆண்டுக்கால காராக்கிரக வாசம் என்பது மிக மிக அதிகம்.
    மிகக் கொடுமையானது.

    எனவே, அவர்கள் அவசியம் இப்போதாவது
    விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது என் கருத்து.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

   • Tamilian சொல்கிறார்:

    That Chandrasekar crook handed over the photo of killers to Hindu which was given to him in his official capacity as Forensic director for development of negatives. I am sure much money would have changed hands for that scoop . Why the hell film roll should be given to him for development is a mystery. Because of photo getting released in the press, the killers escaped. Why was he not punished? Why till date no one has grilled him for that leak? Had the killers been caught alive, all our discussion based on presumptions would not be there. He did play a very important role in that way by giving a twist.

    • நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

     கொலையாளர்களை உயிரோடு பிடித்திருக்க வாயப்பு அனேகமாக இல்லை. அவர்கள் மேட்டூர் திராவிட கழகம் பிரமுகரால் அவருடைய டேங்கரில் பெங்களூருக்கு அனுப்பப்பட்டனர். கோனேகுண்டாவில் அதிரடிப்படை வீட்டில் அதிரடியாக நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர். டெல்லி வீர்ர்களுக்காக ஒருநாள் வரை தாமதப்படுத்தப்பட்டது. கிரி சொன்னதுபோல் பலருக்கு முதலிலேயே விஷயம் தெரியும். (வைகோ மூலமாக கருவுக்கு. அதனால் திமுக பொதுக்கூட்டம் காரணமில்லாமல் கடைசி நேரத்தில் கேன்சல். சு சாவுக்குத் தெரியும், வேலுச்சாமியின் கூற்றுப்படி. மரகத்த்துக்கும் (அல்லது நிச்சயமாக அவர் பெண்ணுக்கு, மருமகனுக்கு) தெரியும். இந்துவும் சிவராசன் படத்தை கட் செய்துவிட்டுத்தான் பிரசுரம் செய்தது (assuming he was another magazine’s reporter). நிச்சயமாக சந்திரசேகரை விசாரித்திருப்பார்கள், which is not much relevant to the case. வக்கீல் துரைசாமி (திராவிடர் கழக சார்பானவர், குற்றவாளிகளுக்கு.. Sorry.. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாதாடினவர்)

     Today’s question is… These seven who are not directly involved or who were not part of சதிசெய்த கூட்டம், have already served 25 years. Why shouldn’t be released? நிறைய பேர் விடுதலை செய்வதை ஆதரிக்கிறார்கள். அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்கோ நியாயம் என்று கருதுவதாலோ, வி.புலிகளுக்கு (for whatsoever reasons) கடமைப்பட்டதாலோ ஆதரிக்கிறார்கள். காமை சார் போன்றவர்கள் விசாரணை முழுமையானதாக இல்லை என்பதாலும் வெல்லம் திருடினவர்களை விட்டுவிட்டு விரல் சூப்பினவர்களைத் தண்டிப்பதாக நினைப்பதாலும் மனிதாபிமானத்தாலும் ஆதரிக்கிறார்கள்

     • நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

      வக்கீல் துரைசாமி.. யின் பாயின்டுகள், கேள்விகள் எந்த விசாரணையிலும் எழக்கூடியதுதான். எனக்கு convincingஆக இல்லை. This sentence was not complete. In iPad I could not review properly.

 4. NS RAMAN சொல்கிறார்:

  There can be a doubt on Rajiv assassination after 100 years aldo. The question here is 7 persons now in jail are innocents or linked with the crime. SC analysed 4 times this case and confirmed charges against 7 persons and clearly stated they should not be given any further remission of term. Since some of the criminals not punishment other criminals cannot be released freely. in the name of human rights we should allow mocry of law . State should voice for people affected by assassination not to criminals. Otherwise we are encouraging terrorism and supporters.

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   அறிவுஜீவிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்
   சில அறிவீனங்களுக்கு இதுவே வாடிக்கையாகி விட்டது.
   ஆயிரம் முறை விளக்கிக் கூறினாலும் புரிந்து கொள்ள
   அருகதை இல்லாமல் திரும்ப திரும்ப டெர்ரரிஸ்ம்,
   க்ரிமினல் என்றே கூறி வருவார்கள். இவர்களைத் தூக்கி
   காராக்கிரத்தில் போட வேண்டும். 25 ஆண்டுகள் வேண்டாம்
   ஒரு வாரம் போட்டாலே போதும். பிறகு தான் சிறைச்சாலை
   எவ்வளவு கொடுமை என்பதும், அதில் 25 ஆண்டுகள்
   இருப்பது எவ்வளவு கொடூரமானது என்பதும் புரியும்.
   வழக்கு முழுமையாக விசாரிக்கப்படவில்லையென்பதற்கு
   காவிரிமைந்தன் எழுதி இருக்கும் பழைய இடுகைகளில்
   சொல்லப்பட்டிருக்கும் ஆதாரங்களை விடவா வேண்டும்.
   ஒன்று தனக்காக தெரிய வேண்டும். அல்லது பிறர்
   தரும் ஆதாரபூர்வமான சங்கதிகளைப் பார்க்க, படிக்க வேண்டும்.
   எதுவும் கிடையாது. தனக்கு எல்லாம் தெரியும் என்று
   நினைத்துக்கொண்டு இங்கு பின்னூட்டம் போட வந்துவிடும்
   சில அறிவீனங்கள். இதை எல்லாம் ஏன் சார் அனுமதிக்கிறீர்கள் ?

   • NS RAMAN சொல்கிறார்:

    If you are thinking very intelligent than supreme Court judges and giving comments on the case nothing wrong in my comments. Is rajiv assassination in not terrorism? For LTTE lovers it may be a small mistake not for everyone. You can accept all stories as a truth but not by Court.

 5. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  அமைதி வெங்கட்ராமன் சார். உங்களை மாதிரியே எல்லோரும் எண்ணவேண்டுமென்றால் அது எப்படி. சிறைச்சாலை கொடுமைதான். 4 1/2 கோடி மக்கள் பிரதிநிதியை அவரின் வயதான பருவத்தில் வெறம் நீதித்துறை அதிகாரியால் ஒரு மாத்த்துக்குமேல் சிறையிலிட்டபோது இந்த ஆவேசத்தைத் தமிழக மக்கள் அனைவரிடமும் நான் காணவில்லையே

 6. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  திருச்சி வேலுவின் கூற்றில் உண்மை இல்லாமல் போய்விட வில்லை …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.