2011-ல் – கலைஞரின் குடும்ப ஆட்சி பற்றி வெளிவந்த ஆ.வி. கட்டுரை இப்போது எந்த அளவிற்கு பொருந்தும்…?

karunanithi family

கடந்த 2011 தேர்தலுக்கு முன்னதாக ஆனந்த விகடனில் வெளிவந்த
ஒரு கட்டுரையின் சில பகுதிகள் கீழே –

இந்த கட்டுரையை ஒரு முறை படித்தால், ஒருவேளை தற்போதைய
2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று –
கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலவரம்
எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய ஒரு அறிதல்-புரிதல்
உருவாகலாம்.

———————————————-

கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது
லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை
அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!

ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து,
பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள்
யார் யார் தெரியுமா?

‘திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல.
எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன்
என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு,
செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’
என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால்,
கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது
இந்த ஹோம் கேபினெட்!

கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த
இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன
என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து.

இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின்
தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள்
புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி
முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது.

‘ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால்
தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’
என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்
மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!

42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக
இருக்கிறார் கருணாநிதி. ‘தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக்
காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான்
இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான்,
அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப்
போடப்பட்ட முதல் கொள்கை.

அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா
என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,
பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள்.
அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.

1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி
அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது.

பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும்.
ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு
இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்…
அன்பகம் ஸ்டாலினுக்கு.

இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்… கட்சியின் மாவட்டச்
செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில்
ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில்
கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.
அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர்,
துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது
கண் அசைவில் தான் நடக்கின்றன.

 

கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி
மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள்.
உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல்
இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன்
நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத்
தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம்.

நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து
அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின்
செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது.
கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில்,
கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.

தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார்
என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை
மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத்
தேர்தலில் அழகிரியும் நிற்க… குடும்பக் கோபங்கள் தணிந்து
தயாநிதியும் மறுபடி நுழைய… ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் க
ட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.

இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!

karunanithi-kangal-panithana-photo

” கண்கள் பனித்த போது ” எடுக்கப்பட்ட புகைப்படம். பாவம் தயாளு அம்மாள் கூட கையை தட்டுகிறார்…!!!

குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி
மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே
தலை எடுத்து வலம் வருகிறார்கள்.

k.vaarisugal-1

ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது
அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர்
கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில்
அமைச்சராக வந்தவர் பூங்கோதை.

ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை
முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார்
கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள்
நுழைத்ததும்… அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக
கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும்
போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை
ஊருக்குச் சொல்லும்.

கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின்
இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே
அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை
கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.

கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக்
கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை
அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில்
காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக்
குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட
மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது
வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!

k.extended family

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள்
சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!

திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும்,
அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து
புதிய படங்களை வாங்கினார்கள்.

‘அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத
படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள்
எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே
‘கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள்
வாங்குவதில் சன் – கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி
கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.

அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள்.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி.
க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி.

பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள்.
கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம்
கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்…
தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல்
ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும்

சொல்ல முடியவில்லை.

பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை
மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது.
காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா
எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல
தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை
சந்தித்துத் திரும்பினார்கள்.

தமிழரசுவின் மகன் அருள்நிதி, ‘வம்சம்’ படத்தில் நடித்து
ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர்
டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன்,
குணாநிதியும் இருக்கிறார்.

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து.
அவரது மகன் அறிவுநிதி, சினிமாவில் பாடுகிறார். சென்னையில்
திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப
உறுப்பினரே கிழித்துவிட்டார். ‘நான் கலைஞரின் மூத்த பேரன்.
அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர்
சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த
மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு
மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக
எதிலும் கலந்துகொள்ளவில்லை.

உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார்.
கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு
என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம்
விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி.
214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில்
சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார்.

‘இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’
என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால்.
நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ.
அடம்பிடிக்க…. தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு
அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரியவில்லை.
முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை
வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே
அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன்
ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ்
கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின்
உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்… முற்றுப்புள்ளி வைக்கப்படாத
பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் –
அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில்
தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!

மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும்,
அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக்
கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை
சர்ச்சை தொடர்ந்தது!

தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல்
அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக்
கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி.
ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும்
அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!

தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில்
அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு
விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இ
ன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!

ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின்
தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம்.
அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை.
பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷுடன்
இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த
ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை.
தண்டிக்கவும் இல்லை!

மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத்
தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத்,

முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு
அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!

மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி
ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று
காத்திருந்ததும்…

அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது.
அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட
கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!

சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து
ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!

கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி
உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி
தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள்.
இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது
சி.பி.ஐ-க்கே தெரியாது!

யாருக்கு ஜாமீன்? யாருக்கு பெயில்? யாருக்கும் புரியல…

அடுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள்.
செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க
அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.

ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம்
வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன.
ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில்
சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள்

நுழைந்திருக்கிறார்.

—————————————————————

கடந்த 5 ஆண்டுகளில், மேலேயுள்ள செய்திகளிலிருந்து
கண்ணுக்கு பளிச்சென்று தெரியும் சில மாற்றங்கள் –

– திரு.அழகிரி ஒருவழியாக ஓரம் கட்டப்பட்டு விட்டார்….

– கட்சியில் திரு.ஸ்டாலின் ஒரு வலுவான இடத்தை பிடித்து விட்டார்.
கலைஞரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டார்.

– திரு.ஸ்டாலினை முழுவதுமாகக் கவர்ந்து, அவரது நம்பிக்கைக்கு
பாத்திரமாகி விட்ட அவரது மருமகன் திரு.சபரீசன் ஒரு புதிய
அதிகார மையமாக உருவாகி இருக்கிறார்….

– திரு.அழகிரிக்கு பதிலாக, திருமதி கனிமொழி செல்வாக்கு
பெற்றிருக்கிறார்….இனி தமிழ் நாட்டுக்கு ஸ்டாலின்,
டெல்லிக்கு ஸ்டாலின் சொல்படி நடக்கும் கனிமொழி….!!!


– மாறன் சகோதரர்கள், சிபிஐ வழக்கு காரணமாக கொஞ்சம்
அடக்கி வாசிக்கிறார்கள். இருந்தாலும் கூட, தயாநிதி மாறன், கலைஞரின்
நிழலாகவே இருக்கிறார்- அல்லது இருக்க முயல்கிறார்.

– மத்தியில் காங்கிரசுக்கு பதிலாக பாஜக தனி மெஜாரிடியுடன்
ஆட்சிக்கு வந்து விட்டது. எனவே, அவ்வப்போது மோடிஜியை “கூல்”
செய்யும் கைங்கரியங்களை கலைஞர் செய்து கொண்டிருக்கிறார்.

– இன்னொரு பக்கம் காங்கிரசும் சில சிக்கல் வழக்குகளில்
மாட்டிக் கொண்டிருப்பதால், “இரட்டை சகோதரர்களாக” திமுகவும்,
காங்கிரசும் உறவைத் தொடர்கின்றன….

இவற்றைத்தவிர வேறு குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் எதுவும்
திமுக குடும்பத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.

– இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறவிருக்கும்
தேர்தலில் – திமுகவுக்கு ஓட்டு போட்டு, மீண்டும் கலைஞரை ஆட்சியில்
அமர்த்தலாம் என்று சொல்கின்ற மனம் யாருக்காவது இருந்தால் –
பின்னூட்டங்களில் தாராளமாக, காரணங்களுடன் சொல்லலாம்…!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to 2011-ல் – கலைஞரின் குடும்ப ஆட்சி பற்றி வெளிவந்த ஆ.வி. கட்டுரை இப்போது எந்த அளவிற்கு பொருந்தும்…?

 1. today.and.me சொல்கிறார்:

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13124925_10208133271723205_7915985937556921749_n.jpg?oh=f85fd5f2fc2713f574d375b5794cae26&oe=57E0B262

  ஜி,
  இதுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை,
  ஆனா இருக்கு.

  இப்போ தான் லிங்க் கிடைச்சது, அதனால் இங்கே சேர்த்திருக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   உங்கள் லிங்க் – க்கு நன்றி.
   செத்துபோன மாணவர் உதயகுமார் நேற்றிரவு கனவில் வந்து
   தனக்காக அவசியம் ஒரு தனி இடுகை போட்டு,
   நியாயம் கேட்கச் சொன்னார் ….

   எனவே, இன்று ஒரு தனி இடுகை விவரமாக வெளிவருகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    //தனக்காக அவசியம் ஒரு தனி இடுகை போட்டு,
    நியாயம் கேட்கச் சொன்னார் ….//
    😦
    🙂

 2. gopalasamy சொல்கிறார்:

  Two more changes; 1) Ananda vikatan became a DMK party magazine and it’s standard became very low. . 2) Since last two months Dinamalar also became a party news paper. Except DMK/Congress, it is criticizing all other parties. Almighty in Srivaikundam only knows what is happening.

 3. sivakumar சொல்கிறார்:

  Dear Mr.KM. The above was true during that period. Vikatan has been publishing articles about all political leaders depending on the issue & situation, showing its neutrality. Similarly, if you could also extract those articles about Jaya from Vikatan, and re-publish them here to show your neutrality, it would be appropriate as well. At the end of the article, pls also add why admk should be not be voted this time, with ref to the article, as you have done in this article. Thanks.
  “Naangal dhanyanaavom”!

  • B.Venkasubramanian சொல்கிறார்:

   Mr.Sivakumar,

   If is funny to see that –
   You are certifying about the neutrality of vikatan.
   Probably you are also the first person to say so.

   Instead of asking Mr.K.M. what to do about reg. admk,
   better you comply with what is asked for in the last para of the article.

   //– இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறவிருக்கும்
   தேர்தலில் – திமுகவுக்கு ஓட்டு போட்டு, மீண்டும் கலைஞரை ஆட்சியில்
   அமர்த்தலாம் என்று சொல்கின்ற மனம் யாருக்காவது இருந்தால் –
   பின்னூட்டங்களில் தாராளமாக, காரணங்களுடன் சொல்லலாம்…!!!//

   Probably you are ashamed of supporting DMK openly.

 4. octmani1957@gmail.com சொல்கிறார்:

  Ananthavikatan dinamalar and news 7 channel are “purchased” for unknownprice.

 5. selvarajan சொல்கிறார்:

  தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் – 2050 ல்

  2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?
  இப்படித்தான்… 1. தமிழ்… 2 . முதலில் “கடவுள் வாழ்த்து”
  // மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
  திருக்குவளை தீய சக்தியே போற்றி
  மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
  காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
  கனிமொழியின் தந்தையே போற்றி
  செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
  அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
  தளபதியின் தந்தையே போற்றி
  மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
  குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
  வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
  சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
  ஈழத்தை அழித்த இதயமே போற்றி
  தமிழின துரோகியே போற்றி போற்றி ” // என்றும் … 3 . அடுத்து மொழி வரலாறு…. 4 . கணிதம். என்ற பாடத்தில் : — // திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.
  அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.
  பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.
  1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்…// .. 5. புவியியல் … 6. . வரலாறு என்கிற முக்கிய பாடத்தில் : — // வரலாறு
  தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.
  கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயகுமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயகுமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.
  கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
  திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.
  தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
  அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.
  பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்…. // என்றும் கல்வி வளர்ச்சியில் தமிழின் முக்கியத்துவத்தை வளர்க்கவும் — தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும் — கலைஞர் கருணாதியின் கட்சிக்கு வாக்கு அளித்தால் என்ன தப்பு அய்யா … ? மேலே தமிழ் பாடத்தில் துவங்கி — வரலாறு பாடத்தில் முடியும் முழு கலைஞர் ” பாட திட்டத்தை ” தெரிந்துக்கொள்ள : –http://sambarchutney.blogspot.in/2011/05/2050.html?m=1#comment-form ….. இங்கே தொடர்பு கொள்ளவும் … !!! ” சட்னி — சாம்பார் சுவையாக இருக்கும் … ருசியுங்கள் … !!!

 6. selvarajan சொல்கிறார்:

  // அதிமுக வெற்றி பெற்றால் சசிகலாதான் முதல்வராவார்.. சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு பேச்சு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/if-admk-win-the-election-then-sasikala-will-be-the-cm-says-subramaniyan-swamy-253144.html // … எப்படியெல்லாம் ” யோசிக்கிறார் ” … ? இந்த பேச்சில் : — // ஜெயலலிதா அரசியலுக்கு வரும்போது, அவருக்கு ஒரு ரூபாய்கூட சொத்து கிடையாது. ஆனால், ரூ.120 கோடி சொத்து இருப்பதாக தற்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூறியுள்ளார்.// என்று சு. சுவாமி கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் .. ஜெயா அரசியலுக்கு வருவதற்கு முன் — சுமார் 100 படங்களுக்கு மேல் ” கதாநாயகியாக ” நடித்தவர் — அவரிடம் ஒரு ரூபாய் கூட கிடையாது என்று கூறுவதை எப்படி ஏற்பது … ? ஒரு வேளை ரயிலில் டிக்கட் எடுக்காமல் வந்தவரை நினைத்து — மாற்றி ” இங்கே உளறி விட்டாரோ ” … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ஒரு விஷயத்திற்காகவாவது திரு.சு.சுவாமியை பாராட்டியே ஆக வேண்டும்….

   இந்த வயதிலும் எக்கச்சக்கமான எனர்ஜி ஆசாமிக்கு….!!!
   அவரும் விடாமல் கதைத்துக் கொண்டே இருக்கிறாரே…!!!

   நான் மிக நீண்ட காலமாக அவரை அவதானித்துக் கொண்டிருக்கிறேன்.
   ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் எல்லாம் சு.சுவாமி பேட்டி என்றால்,
   நிருபர்கள் எல்லாரும் சிரிப்பார்கள். அவர் பேசுவதை கேலிக்கூத்தாகவே
   எடுத்துக் கொள்வார்கள்…

   ஆனால், இப்போதெல்லாம்
   அவருக்கென்று ஒரு படித்த இளைஞர் கூட்டம் இருக்கிறது.
   அவர் சொல்வதை எல்லாம் அவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள்.
   அவர் விடும் உடான்ஸ்களை எல்லாம் நிஜமென்று நம்புகிறார்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. sivakumar சொல்கிறார்:

  Dear Friends
  The problem with you all is this. As soon as anybody says anything about Jaya, he will be marked as dmk supporter. Even if it is true, there is nothing wrong in it and nothing to be ashamed of!
  In this case, what i am trying to say? Mr.KM has quoted an article from Vikatan saying that DMK/Karunanidhi is bad and does not deserve to be voted to power. OK, agreed. He has quoted because he believes that whatever written in Vikatan is true, right? On the same logic, there are numerous articles published in Vikatan about Jaya and ADMK rule, negatively. So they should also be true, is it not? And ADMK also does not deserve to be voted to power, is it not?
  I only said that to re-publish them here as well. What is wrong in it?

 8. B.Venkasubramanian சொல்கிறார்:

  My dear Friend,

  Have you not read Socretes ?
  Just do not accept whatever being said by anybody howeever big he maybe.
  Whatever you hear, read, see
  Analyse them by using your own analytical thinking.
  Use your own brain.

 9. LVISS சொல்கிறார்:

  As the election day approaches one can see the growing anxiety of MR KM –These articles are not going to make any impact in the elections –Older generation have read all this and have read more about every party –The young generation wont be interested in this as they live for the present and future – –The past wont matter to them –There is a destiny at work–If a party is destined to win and rule they will, no matter what —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   நீங்கள் சொல்லும் anxiety நிலையை எல்லாம் நான் எப்போதோ
   கடந்து விட்டேன். நான் தனிப்பட்ட முறையில்
   எந்த பலனையும் எதிர்பார்க்கவில்லை.
   என்ன, ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்தால்,
   வீடு தேடி ஆட்டோவில் ஆட்கள் வரக்கூடும்…. வயதான உடம்பு,
   இதய நோயாளி ….இருந்தால் தான் என்ன …?

   கலைஞர் சொன்னது போல் ” இருப்பது ஒரு உயிர் தான் ” –
   அது கலைஞர் கூட்டத்தால் போகும்
   என்று விதி இருந்தால் …போகட்டுமே…!
   என் குடும்ப கடமைகளை எல்லாம் கடவுள் அருளால்
   முடித்து விட்டேன்…

   நான் ஏற்கெனவே கூறியது தான் –
   என் மனதில் எழுத வேண்டும் என்று தோன்றுவதை எல்லாம்
   இங்கு எழுதி விடுகிறேன்.

   இதனால் பலன் இருக்காது என்பது உங்கள் அபிப்பிராயம்.
   ஆனால், எனக்கு வரும் feed back அதற்கு நேர் விரோதமாக
   இருக்கிறது.

   எப்படி இருந்தாலும் சரி ” கடமையை செய் – விளைவு உன் கையில் இல்லை ”
   என்கிற வார்த்தைகள் தான் எனக்கு இப்போதைய துணை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.எல்விஸ்,

   முந்தைய பின்னூட்டத்திலேயே –
   உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல ஆசைப்பட்டேன்.
   எழுதி முடிப்பதற்குள் மறந்து விட்டேன்….!

   தேர்தல்கள் முடிந்த பிறகு –
   கொஞ்ச நாட்களுக்கு அரசியல் பற்றி எழுதுவதையே
   நிறுத்தி விடலாமென்றிருக்கிறேன்….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr KM This mistake you should never commit ,not writing about politics after elections –As a matter of fact I read this blog only for political articles –Who knows you may get a lot to write after the elections —
    Once the elections is over we may get to see some unexpected alliances –This is what I am waiting for—
    DESTINY, what does it hold for us after 16th —

 10. ravi சொல்கிறார்:

  2011 தேர்தல், 2014 தேர்தல் – மேலே சொன்ன விஷயங்களை வைத்து கறந்து வோட்டு வாங்கி ஆகி விட்டது .. இப்போது இது மடி வற்றிய மாடு கதை தான் . இதற்கு மேல் இந்த விஷயத்தில் கறக்க முடியாது …
  … 2011 அலையிலே , திமுக கிட்ட தட்ட 25 தொகுதி, காங்கிரஸ் 5 தொகுதி வென்றது …
  இப்போது , சென்ற முறையை விட அதிக தொகுதிகள் ஜெயித்தாலும் ஆச்சரியமில்லை ..
  ஐந்து வருடத்தில் திமுக குறுநில மன்னர்களை உள்ளே தள்ளி இருக்கலாம் .
  இப்போது அதிக பலத்துடன் அவர்கள் மீண்டும் வந்தாலும் ஆச்சரியம் இல்லை..
  நம்மால் நொந்து கொண்டு புலம்ப தான் முடியும்…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   வீடியோவில் பேசுபவரைப் பற்றி ஒரு அறிமுகமும்
   கொடுத்து விடுங்களேன்…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.