திரு.ஸ்டாலினால் – வெட்டவெளியில் விடப்படும் அம்புகள்…..!!!

tneb valuthur

 

வெளியில் வேலை நிமித்தம் போனவர்கள் வீடுவரும் நேரம்…
வீட்டில் பிள்ளைகள் படிக்கும் நேரம், ஹோம் ஒர்க் செய்யும் நேரம்.
பெண்கள் இரவு நேர சமையலில் ஈடுபட்டிருக்கும் நேரம்…
இரவு எட்டு மணி – கரெண்ட் போய் விடும்…

ஒரு நாளின் மிக முக்கியமான நேரமான
இரவு 8 முதல் 10 மணி வரை கரெண்ட் இருக்காது.
ஒரு வழியாக 10 மணிக்கு வரும்.
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சாப்பிட்டு,
சுற்று வேலைகளை முடிப்போம்.

நமக்கு படுப்பதற்கான நேரம்.
பிள்ளைகள் ஆழ்ந்து உறங்க ஆரம்பித்திருப்பார்கள்.
இரவு 12 மணி – மீண்டும் கரெண்ட் போய் விடும்.

நொந்துகொண்டே கையில் விசிறியுடன் வீட்டு வாசலில்,
கேட் அருகே, தெருவில் ( அங்கே காற்று வரும் என்கிற நம்பிக்கையில் )
நிம்மதியின்றி இங்கும் அங்கும் நகர்ந்து கொண்டே இருப்போம்.
( ஒரே இடத்தில் நின்றால் – கொசுக்கள் கடிக்குமே…)
கால் வலிக்கும் வரை நடந்து விட்டு, அக்கடா வென்று ஒரு இடத்தில்
அமர்ந்து கொண்டு விசிறிக்கொண்டே இருப்போம்.
இரவு இரண்டு மணி – கரெண்ட் வந்து விடும்.
அப்பாடா – சொர்க்கமே வந்து விட்டது போன்ற சந்தோஷத்துடன்
வீட்டுக்குள் ஓடுவோம்…. அக்கம் பக்கத்தில் எல்லாவீடுகளிலும்
இதே காட்சி தான்…. இதே அனுபவம் தான்.

போய்ப் படுத்து உறங்கி இரண்டு-மூன்று மணி நேரங்களிலேயே –
மீண்டும் அதிகாலை 5 மணிக்கு – சில சமயங்களில் 6 மணிக்கு
கரெண்ட் போய் விடும்.

மே, 2011-ல் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவை 12,000 மெகாவாட்டாகவும்,
மின் உற்பத்தி 8000 மெகாவாட்டாகவும் இருந்தது. தேவை’க்கும்
தரவு’க்கும் ( demand and supply ) பல காத தூரம் –
கிட்டத்தட்ட 4000 மெகாவாட்டாக – இருந்தது.

ஒரு நாளா – இரண்டு நாளா …?
2010-11-ல் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் இதே அவஸ்தை தான்.
மக்களின் இந்த அவஸ்தையை பற்றி கொஞ்சம் கூட
சொரணையே இல்லாமல் இருந்தது அரசு நிர்வாகம்…..

இந்த தடவை திமுக தேர்தலில் தோற்றால் அது “பவர் கட்” டுக்காகவே
இருக்கும் என்று அசடு வழிய, ( அப்போதும் செயலற்ற )
ஆர்க்காடு வீராச்சாமி ( மின்சார மந்திரி ) அவர்கள்
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த நாட்கள் அவை …

தமிழ்நாட்டில் பலர் அப்போது சபதமே செய்தார்கள் –
எக்காரணம் கொண்டும் மீண்டும் திமுகவை ஆட்சிக்கு வர
விடக்கூடது என்று.

மே 2011-ல் ஆட்சி மாறியது. ஜெ. அவர்களின் முனைப்பும்,
பிடிவாதமும் – கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தாலும் கூட –
குறைந்தது அடுத்த 3 ஆண்டுகளுக்காவது நிலைமை சீராகாது
என்றே தோன்றியது.

ஒரு வழியாக படிப்படியாக நிலை திருந்தத் துவங்கியது.
இன்று மே, 2016-ல், தேவை இன்னும் 3000 மெ.வா.அதிகரித்து,
ஏறக்குறைய 15,000 மெகாவாட்டாக விட்டது.
ஆனால், கிட்டத்தட்ட அதே அளவு “சப்ளை” இருக்கிறது.
எங்காவது சில பகுதிகளில் மட்டும்,
எப்போதாவது சிறிது தடைப்பட்டாலும்,
தொடர்ச்சியாக மின்வெட்டு என்கிற நிலை நிச்சயமாக இல்லை.

நான் இளம் வயதில் வேலைக்கு சேர்ந்த புதிதில் எனக்கு
ஒரு boss இருந்தார். அவரிடம் நிறைய விஷயங்கள்
கற்றுக் கொண்டேன். மிகச்சிறப்பான team leader …!

மிகவும் கண்டிப்பானவர்.
எத்தகைய task ஐயும் முடிக்கக்கூடியவர்.
ஆனால், அவர் எதைக் கேட்டாலும்,
நான் அதைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்,
அல்லது செய்து கொடுத்தேயாக வேண்டும்.

அவர் என்னிடம் அடிக்கடி சொன்ன ஒரு வார்த்தை –
” Beg, Borrow or Steal –
But the job must be done ”
( பிச்சை எடு, கடன் வாங்கு அல்லது திருடு –
– ஆனால் எனக்கு இந்த வேலை நடந்தேயாக வேண்டும்…! )

அதே போல் –
இந்த ஆட்சியில் – மின்சாரத்தை
தானே உற்பத்தி செய்தார்களோ, அல்லது
முந்தைய அரசின் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் பெற்றார்களோ,
அல்லது வெளியிலிருந்து கொள்முதல் செய்தார்களோ –

எப்படிச் செய்தாலும் சரி, எந்த முறையில் செய்தாலும் சரி –
மீண்டும் மக்கள் மின்வெட்டினால் துன்பப்படாத,
அவதிப்படாத – ஒரு நிலையை உண்டாக்கி
அதை தொடர்ந்து பாதுகாத்து வருகிறார்கள்.

மக்களுக்கு தேவை இது தான்.

முந்தைய ஆட்சியின் திட்டங்களினால் வந்தது –
அதிக காசு கொடுத்து வெளியிலிருந்து வாங்குகிறார்கள் –
இவர்களாக புதிதாக ஒரு யுனிட் கூட உற்பத்தி செய்யவில்லை
என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் பேசுவது –
மக்கள் மனதில் எடுபடவே இல்லை.

தாங்கள் நடைமுறையில் அனுபவித்து வரும் ஒரு வசதியை,
இல்லையென்று எதிர்க்கட்சிகள் – அதுவும் திமுக – கூறினால்
மக்கள் எப்படி ஏற்பார்கள்…?

இன்றைய இந்த மின்வெட்டு இல்லாத நிலைக்கு –
ஜெ.அரசு சொந்தம் கொண்டாடினால் –
அதில் நிச்சயம் எந்த தவறும் இல்லை.

திமுக ஆட்சியில் மின்வெட்டினால்
உச்சபட்ச பாதிப்புக்கு உள்ளான கோவைக்கு சென்று,

திருவாளர் ஸ்டாலின் அவர்கள்,
அதிமுக அரசில் கடுமையான மின்வெட்டு காரணமாக
தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டு,
தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் அவதிப்பட்டு
வருகிறார்கள் என்று பேசுவதை கலைஞர் டிவியில் பார்க்கும்போது
சிரிப்பு தான் வருகிறது…..!

மின் உற்பத்தியைப் பற்றி குறைகூறி
இவர்கள் எய்யும் அம்புகள் – வெட்டவெளியில் விடப்படும் அம்புகளே…

மின் உற்பத்தியைப் பற்றி திமுக பேசப் பேச,
மக்களுக்கு பழைய கசப்பான நினைவுகள் தான்
மீண்டும் ஞாபகத்திற்கு வருகின்றன…..!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to திரு.ஸ்டாலினால் – வெட்டவெளியில் விடப்படும் அம்புகள்…..!!!

 1. B.Venkasubramanian சொல்கிறார்:

  கே.எம்.

  செல்ல மகளை,
  சிறை சென்ற மகளை ஏன் விட்டு விட்டீர்கள் ? அவரும் தான் ஊர் ஊராக சென்று பினாத்துகிறார்.

  டெல்லி திஹார் ஜெயிலில் 8 மாதங்கள் கனிமொழி களி தின்றது எதற்காக ?
  இந்திய தேச சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றதனாலா ?

  தந்தை கருணாவிற்கு தெரியாமல், அண்ணன் ஸ்டாலினுக்கு தெரியாமல்,
  ஆ.ராஜாவுடன் கூட்டு சேர்ந்து
  கலைஞர் டிவி மூலம் 200 கோடி பெற்றவர் தான் இன்று
  சற்றும் வெட்கம், மானம் இல்லாமல் ஊர் ஊராகச்சென்று
  ஜெயலலிதாவை கேவலமாக ஏசி வருகிறார்.

  அதைப்பற்றி எல்லாம் கூட நீங்கள் விவரமாக எழுத வேண்டும்.

  • Surya சொல்கிறார்:

   >> டெல்லி திஹார் ஜெயிலில் 8 மாதங்கள் கனிமொழி களி தின்றது எதற்காக ?

   பண்ணலாம். ஆனால் அம்மா-வும் ஜெயில் சென்றவர் ஆயிற்றே.

   Note: இதை சொல்வதால் என்னை DMK ஆதரவாளன் என்று சொல்லதிர்!

 2. செந்தில் - கோவை. சொல்கிறார்:

  திரு கே.எம். ஜி,

  தினமலர் கருத்து கணிப்பு பார்த்தீர்களா…

  • Tamilian சொல்கிறார்:

   In that poll survey they have taken 30% women voters and 70% men voters it seems. In that case it is a twisted survey as women voters are slightly higher and they will not vote for DMK in numbers.

 3. M. செய்யது சொல்கிறார்:

  அம்மா கர்நாடகா சுதந்திர போராட்டத்திற்காக உள்ளே சென்றார் அதைபோய் நிங்கள் இங்கே சொல்லக்கூடாது சூர்யா.!
  குறிப்பு : இந்த கமெண்ட் உடனே அழிக்கப்படும்.

  M. செய்யது
  துபாய்

  • Tamilian சொல்கிறார்:

   The removal of power cut is a major achievement. It is being under played by the media but they are projecting some charge of corruption in TNEB in a big way. The media carries it out faithfully. The illegal grabbing of land was a big threat. It is not being spoken about. The law and order situation is by and large better. We do not see party goons in big numbers posing a threat as it was during DMK. Regarding industrial development the central minister had appreciated it. But it was neglected by media. By and large ok . but if we watch TV it looks as though we live in Syria or Iraq.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் சூர்யா மற்றும் எம்.செய்யது,

   நான் இடுகையில் கருத்துப் பொருளாக எடுத்திருப்பது –
   திமுக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் பட்ட அவதியைப்பற்றியும்,
   அதை மறைக்கும் விதத்தில் திரு.ஸ்டாலின் இப்போது
   பிரச்சாரம் பண்ணுவதையும் பற்றியுமே.

   நீங்கள் இருவருமே அந்த பொருளை விட்டு அகன்று,
   உங்களுக்கு பிடித்த “அம்மா எதிர்ப்பு” கோஷத்திற்கு இந்த
   இடுகையை பயன்படுத்திக் கொள்வதிலிருந்தே –

   சொன்னாலும் சொல்லா விட்டாலும் நீங்கள் திமுக ஆதரவு நிலை
   எடுத்திருப்பதை விளக்குகிறது.

   நான் இடுகையில் எழுதியிருக்கும் பொருளைப் பற்றியும்
   உங்கள் கருத்துக்களை கொஞ்சம் தெரிவியுங்களேன் நண்பர்களே….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Surya சொல்கிறார்:

    >>> சொன்னாலும் சொல்லா விட்டாலும் நீங்கள் திமுக ஆதரவு நிலை
    எடுத்திருப்பதை விளக்குகிறது.

    I don’t support DMK, ADMK, Congress, BJP, DMDK, MDMK parties in TN…

   • M. செய்யது சொல்கிறார்:

    /// நீங்கள் இருவருமே அந்த பொருளை விட்டு அகன்று,
    உங்களுக்கு பிடித்த “அம்மா எதிர்ப்பு” கோஷத்திற்கு இந்த
    இடுகையை பயன்படுத்திக் கொள்வதிலிருந்தே –
    சொன்னாலும் சொல்லா விட்டாலும் நீங்கள் திமுக ஆதரவு நிலை
    எடுத்திருப்பதை விளக்குகிறது. ////

    மறுபடியும் சொல்கிறேன் நான் எந்த கட்சியும் சாராதவன். ஆனால் தாங்கள் சில சமயம் நடுநிலை தவறி கருணாநிதியை மட்டுமே குறை கூறி அம்மா தவறே செய்யதது மாதிரி நடிப்பது எந்தவிதத்தில் நாயம். இருவரும் ஊழல் பேர்வழிதான் அல்லது ஊழல் பேர்வழிக்கு துணை போனவர்கள் இதில் சந்தேகமே இல்லை. அதேபோல் காங்கிரசும் சரி பிஜேபியும் சரி ஒரே மாதிரித்தான், தவறு யாரு செய்தாலும் கண்டிக்கப்படவேண்டியவர்கள் தான்.

    //// நான் இடுகையில் எழுதியிருக்கும் பொருளைப் பற்றியும்
    உங்கள் கருத்துக்களை கொஞ்சம் தெரிவியுங்களேன் நண்பர்களே….!!! ////

    நான் பதிவுக்கு கருத்து தெரிவிக்கிறேனோ இல்லையோ கண்டிப்பாக எல்லா பதிவையும் தவறாமல் படிக்கிறேன் .
    நன்றி KM Sir.

    M. செய்யது
    Dubai

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ” Beg, Borrow or Steal – But the job must be done ” – அருமையான வாதம். மின்சாரம் இல்லை என்ற தொல்லை நீங்கியது மிகப்பெரிய விஷயம். ஜெ. மத்திய அரசிலிருந்து 1000 மெகாவாட் மின் உதவி கேட்டபோது, சாக்குச்சொல்லி அதைத் தராததும் (திமுகாவின் முயற்சியினால்) நமக்குத் தெரியும். இதேபோன்று, தலைமைச் செயலகத்தை ராணி மேரி கல்லூரிக்கருகில் கட்டுவதற்கும் கட்டையைப் போட்டது கருணானிதி, மத்தியச் சுற்றுச்சூழலகம் (ஜெயந்தி நடராஜன் என்று நினைவு).

  ஜெ. பண்ணிய தவறுகளுக்கு மிகக் கடுமையாக 96ல் தண்டிக்கப்பட்டார். அதிமுக இயக்கம் வளருவது ஜெ.னால் அல்ல. அது மக்கள் வளர்ப்பது. அதனால்தான் அது எப்போதும் திமுகவை விட அதிக மக்கள் ஆதரவு கொண்டுள்ளது.

  மின் உற்பத்தியைப் பற்றி ஸ்டாலின் பேசுவது நல்லதுதான். அது மட்டுமல்ல, யாருமே, நிலங்களை ஆக்கிரமித்ததைப் பற்றிப் பேசுவதில்லை. திமுக ஆட்சியில் அத்தனை திமுக அரசியல்வாதிகளும் நிலக் கொள்ளையில் ஈடுபட்டார்கள், உதயனிதி உட்பட. கோர்ட் விடுதலை செய்ததால், ஆசிரியர் வேலை பார்த்த பொன்முடி 500 கோடி சொத்தை நியாயமாகச் சேர்த்தார் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? அல்லது எ.வ.வேலு, அன்புமணி, துரைமுருகன் போன்ற பலர் நியாயமாக இத்தனை ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி ஆயிருக்க முடியுமா?

 5. LVISS சொல்கிறார்:

  The power position looks vastly improved now — This may be because of additional power generation –When many people use things like air conditioner throughout the day sometimes the transformer gives way unable to withstand the pressure — During this time of course the power goes off for a long time —
  This is the first time that we heard the central govt telling that there is no shortage of power in the country (actually there is surplus ) but the states are unwilling to buy power from the grid and distribute it to the people —-Hopefully after the elections we get to see nil power cut situation —
  One factor that must be weighing in the minds of the parties is that like in Kerala people vote alternatively for the major parties – –The results are not decided by committed voters but by those who do not vote in a pattern —

 6. Surya சொல்கிறார்:

  KM,

  தமிழ்நாட்டில் மின்வெட்டு குறைவானது உண்மை-தான். ஆனால்…
  * முந்தைய அரசின் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் பெற்ற மின், யாருடைய கிரெடிட்-ல் போக வேண்டும்? Can JJ tell during public meetings how much of power generated through this source to the public (I guess 3000 MW…)
  * வெளியிலிருந்து கொள்முதல் செய்ததால் தமிழக அரசிற்க்கு மிக பெரிய செலவு.

  2014 -ல் தேவசகாயம் (IAS officer – Managed Haryana TNEB ) சொன்ன விஷயம்…
  Tamil nadu doesn’t have any power generation issue. The issue is only with managing the distribution aspects of power. Till date, I don’t think the root of the problem was looked into. Getting power from other sources is a burden on the people’s money and it was not at all required. But that is what our govt did.

  Please share your thoughts on the above…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சூர்யா,

   திருவாளர் தேவசகாயத்தை நான் அறிவேன்.
   அவர் சொல்வது சரி அல்ல.
   இதில் ஒவ்வொருவரும் சொந்த அரசியல் பண்ணுகிறார்கள்.
   அதில் தேவசகாயமும் ஒன்று.

   நீங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராகத் தெரியவில்லை.
   இங்கே அனுபவித்தவர்களுக்குத் தான் அந்த கொடுமை தெரியும்.

   யாரையும் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை.
   என்னைப் பொருத்த வரையில் –
   பிரச்சினையை தீர்க்க வேண்டும் –
   மக்களின் அவஸ்தையை போக்க வேண்டும்
   அதற்கு என்ன செய்தாலும் தகும்.

   நான் சொன்ன அந்த –
   ” Beg, Borrow or Steal –
   But the job must be done ” கொள்கையை தீவிரமாக நம்புபவன்.

   காரியம் முடிந்த பிறகு குறை கண்டுபிடிப்பது மிக எளிது.
   ஏன் – இதே வேலையை திமுக அரசு செய்திருக்கலாமே –
   ஏன் செய்யவில்லை ..? மக்களை ஆண்டுக்கணக்கில்
   தவிக்க விட்டது ஏன்…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. gopalasamy சொல்கிறார்:

  I worked more than 40 years in Power Generation. Any right thinking person should appreciate TNEB and Government for the efforts they undertook. In spite of so many negative factors ( like substandard fuel, irregular rainfall, politics), they achieved it. The political will of chief minister is an important factor.

 8. selvarajan சொல்கிறார்:

  // எனக்கு எதுவும் தெரியாது: முதல்வர் கருணாநிதி Monday, April 25, 2011, 14:28 [IST]
  Read more at: http://tamil.oneindia.com/news/2011/04/25/we-will-sue-defaming-dmk-govrt-karunanidhi-aid0091.html ..// இந்த நிருபர்கள் சந்திப்பில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கலைஞர் மின்வெட்டை பற்றிய கேள்விக்கும் பதில் கொடுத்துள்ளார் — அது : — // கேள்வி: தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போகிறது, சென்னையில் ஒரு மணி நேரம் மின் வெட்டு இருக்கிறதே?… முதல்வர்: மின்சாரப் பற்றாக்குறை இந்தியா முழுவதும் இருக்கிறது…. கேள்வி: மின் பற்றாக்குறைக்கு நீங்கள்தான் காரணம் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறாரே? …. முதல்வர்: அந்த அம்மையார் முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்தபோது, மின்சாரத் துறையில் எதையுமே செய்யாததால்தான் இப்போது இந்த விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் .// இந்த பதிலை அவர் கூறியது சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் — அப்போ இவர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரத்திற்கு ஒன்றுமே செய்யாமல் ஜெ . மீது பழி போட்டு தப்பிக்க நினைத்தவரின் — உத்தம புத்திரன் வெட்ட வெளியில் மட்டுமா அம்புகளை விடுவார்கள் … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   எங்கிருந்தாவது விஷயத்தை தேடி எடுத்துவிடும் உங்கள் ஆர்வத்தை
   பாராட்டுகிறேன். வர வர, ஸ்டாலின் வாய்க்கு வந்ததை எல்லாம்
   பேசுகிறார். அவரது தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் சில சமயங்களில்
   அடி மட்டத்தை தொட்டு விடுகிறது….
   எப்படியாவது நாற்காலியை பிடித்தாக வேண்டும் என்கிற வெறி
   அதில் தெரிகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. today.and.me சொல்கிறார்:

  KMji,

  https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfl1/v/l/t1.0-9/13103531_10206482502929723_6990410665520075455_n.jpg?oh=905f4eaf8475ee648aa6279d87c3680e&oe=57A045F9

  மாசற்ற மின்சக்தி – சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் தமிழகத்தின் வேகம் குஜராத் , ராஜஸ்தான் மாநிலங்களின் வேகத்தையும் மிஞ்சி முன்னோடி மாநிலமாக தமிழகம். மத்திய மரபுசாரா எரிசக்தித்துறையின் உயர்அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள சூரிய மின் சக்தி தயாரிக்கும் கொள்கைகளுக்குப் பாராட்டு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   ஆதாரத்துடன் கூடிய உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

   அதிமுக அரசு மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பால் –
   சில எதிர்க்கட்சித்தலைவர்கள் சொல்வதை,
   தொலைக்காட்சிகள் அப்படியே ஒளிபரப்புவதை –
   பல நண்பர்கள் உண்மை என்றே நம்பி விடுகிறார்கள்.

   இங்கு பின்னூட்டம் போட்டிருக்கும் சில நண்பர்களுக்கும்
   அது பொருந்தும்.

   ஜெ.அரசு வந்தபிறகு புதிதாக ஒரு யுனிட் கூட தயாரிக்கவில்லை
   என்று சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு
   இதை சமர்ப்பிக்கலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. today.and.me சொல்கிறார்:

  நஷ்டத்தையும் குறைத்து மீண்டும் மின் மிகை மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது …. 2006 ஆட்சி முடியும் தருவாயில் மின் மிகை மாநிலமாக செல்வி ஜெயலலிதா விட்டுச் சென்றார் … 2006 -2008 வரைக் கூட அதை தொடர முடியாமல் சீரழித்தது தி மு க … மீண்டும் 2011 இல் ஆட்சிப் பொறுப்பேற்று மின்மிகை மாநிலமாக்குவேன் என்று சொன்னதைப் போலவே செய்தும் காட்டிவிட்டார் ஜெயலலிதா… நன்றி KKS

  http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tangedco-reduces-losses-produces-surplus-power/article8424832.ece
  _______________________

  http://timesofindia.indiatimes.com/city/chennai/Tangedco-cuts-losses-by-Rs-4000-crore/articleshow/51638493.cms?from=mdr
  ______________________

 11. selvarajan சொல்கிறார்:

  // கருத்துக் கணிப்புகளில் ஆதரவு அலை.. உற்சாகத்தில் திமுக + கருணாநிதி!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-elated-over-the-results-opinion-polls-252776.html // — இந்த கருத்துக்கணிப்புகளை பார்த்தவுடன் கலைஞர் அவர்களின் பேச்சில் ஒரு ” வெட்டி வீராப்பு ” தோன்ற ஆரம்பித்து ஏதோ முதல்வராக பதவி ஏற்று கொண்டவரை போல மதுரையில் // சேது சமுத்திர திட்டத்தை யார் எதிர்த்தாலும் நிறைவேற்றியே தீருவோம்: மதுரையில் கருணாநிதி சபதம்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-campaign-at-madurai-252766.html // என்று சூளுரைக்காரே … சேது சமுத்திர திட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற முடிமா … ? கல்விக்கடன் ரத்து என்பதை போலவா … ? பல இடங்களில் கருத்துக்கணிப்பை காட்டி ஏகப்பட்ட விவகாரங்கள் நடக்க ஏதுவாகாதா .. . ” தேர்தல் கமிஷனிடம்” — // கூலிக்கு மாரடிக்கும் ‘தினமலர்’ ஊடகம்!- வேடிக்கைப் பார்க்கும் தேர்தல் ஆணையம்!
  May 3, 2016 1:47 pmஇன்று (03.05.2016) முதல் ‘தினமலர்’ நாளிதழில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியாக உள்ளது. இதை தடை செய்ய தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 02.05.2016 இரவு 8-34 மணிக்கு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தொலைபேசி மூலமாகவும், இரவு 9-15 மணிக்கு தமிழக தேர்தல் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளித்தோம்
  ஆனால், இன்று காலை வரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. // என்று Dr .DURAI BENJAMIN Editor & Publishar http://www.ullatchithagaval.com/?p=16642 — புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையே … ஏன் … ? அய்யா … உங்களின் கருத்து … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செல்வராஜன்,

   மதுரையில் கலைஞர் தமாஷ் – இடுகையில் முக்கால்வாசி விஷயங்கள்
   சேர்ந்து விட்டன என்று நினைக்கிறேன்.

   ஒரே ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டுப் போய்விட்டது.
   நீங்கள் அனுப்பிய தமிழ்.ஒன் இண்டியா -லிங்கில் இருந்து –

   ” சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது
   நானே நேரில் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டேன்.
   -கருணாநிதி ”

   – வடிவேலு, கவுண்டமணி எல்லாரையும் மிஞ்சி விட்டார் கலைஞர்.
   நீண்ட நேரம் சிரித்தேன்.

   உங்கள் லிங்க் – களுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. gopalasamy சொல்கிறார்:

  “The installed electricity generation capacity in Bihar was 2,759 MW on August 31, 2015. This is 1% of India’s power capacity and 8% of the East India.[7] Bihar reported a peak power demand of 3,500 MW in 2014-15. The per capita power consumption in Bihar is 144 kilo watt hour (kwh), 85% lower than the all-India average of 927 kwh. Only 26% of rural households are electrified in Bihar. Peak power availability in Bihar was highest at 2,831 MW in 2014-15.”
  This is from Wikipedia.
  Compared to Bihar’s condition, Tamilnadu is far better. our power consumption is nearly 13000 MW.
  We have to be grateful to Pa. Ramamachandran central minister (energy) for his vision. No other central minister did like that to Tamilnadu. Even though UPA1 and UPA2 were working under the guidelines of Kalaignar, DMK supporters have to explain what benefit we got from their rule.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கோபாலசாமி,

   நீங்கள் சொல்லும் பா.ராமச்சந்திரன் அவர்களைப்பற்றி தெரிந்தவர்கள்
   இன்று பேசக்கூடிய நிலையில் இல்லை.
   மற்றவர்கள் – தெரிந்து கொள்ளும் மன நிலையில் இல்லை.

   எனவே, நீங்களும் நானும் – இந்த பழைய விஷயம் குறித்தெல்லாம்
   தெரிந்த மிகச் சில நண்பர்களும் – பழசை நினைத்து
   ஆதங்கப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

   கிட்டத்தட்ட 1000 மெ.வா. சூரிய மின்சக்தி கடந்த ஒரு ஆண்டில்,
   தமிழ்நாட்டில் புதிதாக உற்பத்தியில் சேர்க்கப்பட்டிருக்கிறது
   என்கிற உண்மையை தெரிந்து கொள்வதில் எவ்வளவு பேருக்கு
   ஆர்வம் இருக்கிறது…? தெரிந்த சிலருக்கும், இந்த செய்தியை,
   ஏற்றுக்கொள்ளவோ,
   ஜீரணிக்கவோ, மனமில்லையே…!

   நான்கு நாளைக்கு முந்தைய மின் நுகர்வு (consumption )
   15, 430 மெ.வா. இது தான் – தமிழ்நாட்டின் உச்சபட்ச மின் தேவை.
   இதனை தமிழ்நாடு மின்வாரியம் பூர்த்தி செய்திருக்கிறது.

   யார் பாராட்டுகிறார்களோ – இல்லையோ –
   நாம் அவர்களை மனமாற பாராட்டுவோம்…..!!!

   உங்கள் தகவல்களுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 13. ravi சொல்கிறார்:
 14. ravi சொல்கிறார்:

  ப.ராமசந்திரன்.
  சத்யமூர்த்தி பவனை கொண்டு போய் காங்கிரசில் கொடுத்தவர்.
  இப்படி தான் இங்கு பலருக்கு அவர் அறிமுகம் …………

  தலைவர் காமராஜ் இறந்தவுடன் ஜனதா, அங்கு இருந்து காங்கிரஸ், முன்னாள் கேரளா கவர்னர் ..

  • தியாகராஜன் சொல்கிறார்:

   Mr .km மறைமுக ஆதரவு அ தி மு க விற்கு. எதிரான செய்தி வராவிட்டாலும் பரவாயில்லை அ தி மு க ஆதரவு தெரிகிறது. முன் வந்த மது ஒழிப்பு செய்தி ஒரு உதாரணம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.