மக்களை ஏமாற்றும் மத்திய அரசு…..

petrol bunk

மக்களை காக்க வேண்டிய அரசே, மறைமுகமாக தொடர்ந்து
ஏமாற்றிக்கொண்டே இருக்குமானால், அந்த அரசின் மீது மக்களுக்கு
என்ன மரியாதை இருக்கும் ….?

மக்கள் எவ்வளவு தான் புலம்பினாலும், எதிர்த்தாலும்,
காதிலேயே போட்டுக் கொள்ளாமல், தொடர்ந்து இந்த தாக்குதலை
அரசு தொடர்ந்து கொண்டே இருந்தால் அதற்கு என்ன பொருள் …?

நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையேற்றம்….!

உலக வர்த்தக சந்தையில் பெட்ரோலியம் பொருட்களின் விலை
குறையும்போதெல்லாம், புதிது புதிதாக கூடுதல் எக்ஸைஸ் வரிகளை
போட்டு, விலைக்குறைப்பின் பயன் முழுவதும் மக்களுக்கு
போய்ச்சேராமல், அரசே மடக்கிக் கொள்கிறது.

விலை ஏறும்போது மட்டும், அதனை அப்படியே மக்கள் தலையில்
கட்டுகிறது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக நடக்கும் ஏமாற்று
வேலை இது. ஒவ்வொரு தடவையும், ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டே
மக்கள் இதை சகித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும்
இந்த நிகழ்வு தொடரப்போகிறது …? இது குறித்த இடுகையை நான்
எழுதிக்கொண்டிருந்தபோது, டாக்டர் ராமதாஸ் அவர்கள் இன்று
வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையை பார்த்தேன். அவரும் இதே
விஷயத்தை விவரமாக அலசி இருப்பதால், அவரது அறிக்கையிலிருந்தே
சில பகுதிகளை கீழே தருகிறேன்.

—————————-

மனிதநேயமற்ற பொருளாதாரத் தாக்குதல்:
மத்திய அரசுக்கு 5 மாநில தேர்தல் பாடம் புகட்டும்: ராமதாஸ்

————-

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம்
காட்டி பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.06 உயர்த்தப்பட்டு
ரூ.61.64 ஆகவும், டீசல் விலை ரூ.3.02 உயர்த்தப்பட்டு ரூ.51.78 ஆகவும்

அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக
பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கதாகும்.

கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன்பயனை முழுமையாக
மக்களுக்கு அளிக்காத எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும்,
விலை அதிகரிக்கும் போது மட்டும் கூடுதல் சுமையை மக்கள் மீது
சுமத்துகின்றன.

உதாரணமாக ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் கச்சா எண்ணெய் விலை
கணிசமாக குறைந்த போதிலும் கடந்த மாதம் 17 ஆம் தேதி பெட்ரோல்
விலை லிட்டருக்கு 74 பைசாவும், டீசல் விலை 1.33 ரூபாயும் மட்டுமே
குறைக்கப்பட்டது.

ஆனால், ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பகுதியில் கிட்டத்தட்ட
அதே அளவு தான் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது
என்ற போதிலும், இரு வாரங்களுக்கு முன் குறைக்கப்பட்டதை விட
இரு மடங்கு அளவுக்கு விலை உயர்த்தப்பட்டிருப்பது மிகப்பெரிய
அநீதி ஆகும். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல் விலை
கடந்த 44 நாட்களில் லிட்டருக்கு ரூ. 5.57 உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதேபோல், டீசல் விலை கடந்த இரு மாதங்களில் லிட்டருக்கு ரூ. 6.16
அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது
அதன் பயனை நாட்டு மக்களுக்கு அளிக்காமல், கடந்த 2014 நவம்பர்
மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான
கலால் வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும்,
டீசல் மீதான வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு
ரூ.1,46,838 கோடி கூடுதல் வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது.

இப்போது கலால் வரியை ஓரளவு குறைப்பதன் மூலம் இந்த
விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். இதனால் மத்திய
அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாய் 20 முதல் 25 விழுக்காடு வரை
குறையுமே தவிர, ஒரு போதும் இழப்பு ஏற்படாது.

ஆனால், ஏழை மக்கள் நலனில் அக்கறையில்லாத, வருவாய்
ஈட்டுவதில் மட்டும் அக்கறை காட்டி வரும் நரேந்திர மோடி
தலைமையிலான அரசுக்கு இதைச் செய்வதற்கு கூட மனம் வரவில்லை.
அந்த வகையில் பார்த்தால் இது மக்கள் மீது நடத்தப்பட்ட
மனிதநேயமற்ற பொருளாதாரத் தாக்குதல் ஆகும்.

கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து 4 முறை டீசல் விலை
உயர்த்தப்பட்டதாலும், தமிழகத்தில் சாலை பயன்பாட்டுக்கான சுங்கக்
கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் சரக்குந்து வாடகை கணிசமாக
உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் இப்போது மீண்டும் டீசல் விலை
உயர்த்தப்பட்டு இருப்பது சரக்குந்து கட்டணம் மேலும்
உயர்த்தப்படுவதற்கு தான் வழிவகுக்கும்.

இதன் விளைவாக பாலில் தொடங்கி காய்கறிகள் வரை அனைத்து
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும். இதனால் ஏழை
மற்றும் நடுத்தர மக்களின் துன்பங்கள் தொடர்ந்து அதிகரிக்கும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மக்களை ஏமாற்றும் மத்திய அரசு…..

 1. selvarajan சொல்கிறார்:

  // நரேந்திர மோடி – வரலாமா ? வந்தால் என்ன ஆகும் ?
  Posted on ஜூன் 10, 2013 by vimarisanam – kavirimainthan ….. சரி – மோடி பிரதமராக வந்தால் என்ன ஆகும் ?
  ஊழல் குறையுமா ?
  குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு
  தண்டிக்கப்படுவார்களா ?
  விலைவாசி ஸ்திரப்படுமா ?
  மக்கள் பாதுகாப்புடன் வாழ்வார்களா ?
  தனியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு
  உணர்வு கிடைக்குமா ?
  கல்வியும், சுகாதாரமும் – அனைத்து மக்களுக்கும்
  உறுதி செய்யப்படுமா ?
  அண்டை நாடுகளுக்கு நம் மீது மதிப்பும், மரியாதையும்,
  நல்ல உறவும் ஏற்படுமா ?
  உலக அரங்கில் இந்தியாவிற்கு மரியாதை கிடைக்குமா ?
  நாட்டின் வளங்கள் சுரண்டப்பட்டு –
  தனியாருக்கு தாரை வார்ப்பது நிறுத்தப்படுமா ?
  நாடு முழுவதும் – மக்களுக்கு நல்ல குடிநீர்,மின்சாரம்,
  சாலைப் போக்குவரத்து உறுதி செய்யப்படுமா ?
  சிறுபான்மை இனத்தவர் பாதுகாப்புடன் வாழ முடியுமா ? … ” என்று பல கேள்விகளை கேட்டு ” — பின்

  ஊழல் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
  பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்தினால் –
  தானாகவே விலைவாசி ஸ்திரப்பட்டு விடும்.
  முதுகெலும்புள்ள, வலுவான மத்திய அரசு உருவானால் –
  அண்டை நாடுகளிலும், உலக அரங்கிலும்
  இந்தியாவிற்கு ஒரு மரியாதை தானாகவே ஏற்படும்…. // என்று குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தீர்கள் — கடைசி பத்தியில் அய்யா … குறிப்பிட்டுள்ளதை போல — அவ்வளவு நம்பிக்கை அவர்மேல் வைத்த ” அப்பாவி மக்களுக்கு ஒன்றைக்கூட இந்தஇரண்டு ஆண்டுகளில் அவர் செய்யவில்லை என்பதை நோக்கும்போது இடுக்கையில் // suppose – ஏதோ காரணத்திற்காக நமக்கு மோடியைப்
  பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
  அடுத்த alternative என்ன என்று யோசித்தால் –
  பயமாக இருக்கிறது.// என்று எழுதிய வரிகளை இன்றைக்கு படிக்கும் போது — ” அந்த பயம் ” தொடருகிறதா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   பயம் நிச்சயமாகத் தொடர்கிறது.

   மீண்டும் காங்கிரஸ் ஆட்சி – நிச்சயம் வேண்டாம்.
   குறைந்தபட்சம் தலைமை கும்பலில் மாற்றம் வரும்வரை
   வேண்டவே வேண்டாம்..

   மக்கள் ஐந்தாண்டு காலத்திற்கு பாஜக / மோடிஜி ஆட்சிக்கு
   அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இன்னமும் மூன்றாண்டு காலம்
   பாஜக தாராளமாகத் தொடரலாம்.

   அதற்காக, கண்மூடித்தனமாக, மக்கள் விரோத கொள்கைகளை
   பாஜக அரசு நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது.
   மக்கள் நலனுக்கு எதிரான / விரோதமான
   அரசு நடவடிக்கைகள் தொடரும்போது,
   பொதுக்கருத்துக்களை உருவாக்குவதன் மூலம் தான்
   அரசின் கொள்கை முடிவுகளை மாற்ற முடியும்.

   அண்மையில் தொழிலாளர் வைப்பு நிதி சம்பந்தமாக எடுக்கப்பட்ட
   சில தவறான முடிவுகள் தொழிற்சங்கங்களின்
   உடனடியான, கடுமையான எதிர்ப்புகளின் மூலம் தான் பின்வாங்கச்
   செய்யப்பட்டன. அதற்கு முன்னதாக விவசாயிகளின் நிலம்
   சம்பந்தப்பட்ட பிரச்சினையிலும் – மக்களின் கடும் எதிர்ப்பை
   கண்டபிறகு தான் பாஜக அரசு தன் நிலையை மாற்றிக்கொண்டது.

   எனவே, தவறுகள் நிகழும்போது, தொடரும்போது –
   எதிர்ப்புக் குரல்கள் ஜனநாயகத்தில் மிகவும் அவசியம்.

   இதுவும் அத்தகைய ஒன்று தான்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்
   .

   • LVISS சொல்கிறார்:

    Congress coming back withclear majority is uncertain–So also NDA retaining power with the same strength – Only alternative is to have a coalition government hoping ti will solve all the unresolved problems of 70 years –We have had some Prime Ministers who never would have imagined becoming PM —
    More than any other country our country ,in my opinion, is the most difficult to govern because of its extreme complexity —How we manged to run this huge diverse country so far is a tribute to our leaders —

 2. selvarajan சொல்கிறார்:

  // காவிரி விவகாரத்தில் வஞ்சித்துவிட்டு வாக்கு கேட்க வருவதா? மோடிக்கு கருப்பு காட்ட விவசாயிகள் முடிவு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-farmers-hold-black-flag-agitation-against-modi-252620.html // — அய்யா … நேற்று என்னுடைய பின்னூட்டத்திற்கு தாங்கள் மறுமொழியாக பதிவிட்டதில் : // முன்னதாக விவசாயிகளின் நிலம்
  சம்பந்தப்பட்ட பிரச்சினையிலும் – மக்களின் கடும் எதிர்ப்பை
  கண்டபிறகு தான் பாஜக அரசு தன் நிலையை மாற்றிக்கொண்டது.// என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் — மேலே உள்ள பத்திரிக்கை செய்தியின் படி ” தமிழக விவசாயிகளின் ” ஏகோபித்த எதிர்ப்புக்கு மோடிஜி — செவிசாய்த்து ஏதாவது செய்வாரா … ? கிடப்பில் கிடக்கும் ” காவிரி மேலாண்மை வாரியம் ” அமைக்க வேண்டிய — காகிதத்தையாவது தூசி தட்டுவாரா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   வாரியம் அமைப்பதா …..?
   அய்யய்யோ – அப்படி எல்லாம் ஒன்றும் பிரதமர்
   முடிவெடுத்து விட மாட்டார்….

   அடுத்து, எப்படியாவது கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடிக்கவேண்டுமென்றே –
   ஊழல்மன்னன் என்றும் பாராமல்,
   யெட்டியூரப்பாவை கட்சித்தலைமையில் அமர்த்தி இருக்கும்போது, கர்நாடக வாக்கு வங்கியை பாதிக்கும்
   எந்த முடிவையும் பாஜக மத்திய அரசு நிச்சயம் எடுக்காது….!!!

   ஆனால் – விவசாயிகளின் போராட்டம்
   கட்சி சார்பில்லாமல், அனைத்து விவசாயிகளையும்
   ஒன்று திரட்டி பெரிய அளவில் நடத்தப்படுவதாக இருந்தால் –
   குறைந்த பட்சம் இந்த செய்திகள் பிரதமரின் பார்வைக்கு செல்லும்
   வாய்ப்பு கிட்டும்….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.