ஜூ.வி.வெளியிட்ட அமீத் ஷா அவர்களின் ரகசிய நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் ….!!!

bjpamitshah-

மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு
ஆகியவை எல்லாம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் ஆளுகைக்கு
உட்பட்டே செயல்படும் என்றல்லவா நாமெல்லாம் இது வரை நினைத்து வந்தோம் ..?

இன்று வெளிவந்திருக்கும் ஜூ.வி. இதற்கு முற்றிலும் மாறான
தகவல்களைத் தருகிறது. தமிழக தேர்தல்களில் ஈடுபாடு காட்டிவரும்
பாஜக தலைவர் திரு.அமீத் ஷா அவர்கள் இவற்றை திட்டமிட்டு
இயக்குவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதிர்ச்சியாக இருக்கிறதா …?

ஜூ.வி.யின் செய்திக் கட்டுரையிலிருந்து சம்பந்தப்பட்ட பகுதிகள் கீழே –

p-1

p-2

p-3

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to ஜூ.வி.வெளியிட்ட அமீத் ஷா அவர்களின் ரகசிய நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் ….!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த விமரிசனம் வலைத்தள சரித்திரத்தில் இன்று ஒரு
  மிக வித்தியாசமான நாள்….!!!

  ஆயிரம் பேருக்கு மேல் இந்த இடுகையைப் படித்தும்,
  இந்த நேரம் வரையில் ( இரவு 11.30 ) ஒரு பின்னூட்டம் கூட
  போடப்படவில்லை….

  காரணம் என்னவாக இருக்கும் ….?
  திருவாளர் அமீத் ஷாவின் முன் சரித்திரம் பயமுருத்துகிறதா ?
  அல்லது அவரது தோற்றம் தான் பயமுருத்துகிறதா …?

  நண்பர்கள் யாராவது சொல்லுங்களேன்…

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   ஜி
   பாஜகவைக் குறித்தும் அமித்ஷாவைக்குறித்தும் எனக்கு சொல்வதற்கு நிறைய உண்டு.

   ஆனால் நான் இங்கே அதைப் பற்றி எழுதினாலே, குறிப்பாக பக்தர்களுக்கு ரோஷம்வந்துவிடும்.

   எனவே மற்றவர்கள் எழுதுவதை வாசிக்க உங்களைப் போலவே ஆவலோடு காத்திருக்கிறேன்.

   • LVISS சொல்கிறார்:

    Wikipedia gives a lot of information about Anilbhai Amitchandra Amit Shah—

    • today.and.me சொல்கிறார்:

     ஓஹோ… விக்கிபிடீயாவையெல்லாம் நீங்கள்தான் கைக்குள் வைத்திருக்கிறீர்களா? வெரிகுட். இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைத்தான் எதிர்பார்த்தேன்.
     😀

 2. today.and.me சொல்கிறார்:

  நேரம் : இரவு 11.45, 30 ஏப்ரல்

  இன்னும் 15 நிமிடங்களில்
  பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.06 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.94 ரூபாயும் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல் !

  இது அறிவிக்கப்படாத விலைஉயர்வு.

  பங்க் பக்கத்துல இருப்பவர்கள், முடிந்தால் டேங்க்கை பில்லப்பண்ணி உங்கள் முடிந்த வரை பணத்தை சேமித்துக்கொள்ளவும்.

 3. Antony சொல்கிறார்:

  Since you have asked…:)
  My opinion is at any cost and for any reason I appreciate any action taken by anybody against Vote for Money.. Lots of time I felt shame in front of others and were unable to back Tamils in any discussion when they start this topic. Of course I know where it started… But I feel, these actions taken will affect the major parties and let the public to vote for the good people of their electorate regardless of the party..

 4. LVISS சொல்கிறார்:

  Enru sollugirargal” yar sollugirargal—
  Many people complain about money being used to lure voters –Ane EC has to act on them– Even during the previous elections money was seized — Was Amit Shah or for that matter any individual behind that also — Election commission is an independent body –Whatever they do is watched by every party —-

 5. Narasimhan சொல்கிறார்:

  பணம் கொடுப்பது எல்லோர்க்கும் தெரிந்த பொருள் என்றாலும் இதில் அதிமுக மட்டும் கொடுப்பது போல ஏன் சித்தரிக்கபடுகிறது . திமுக திருந்திவிட்டதா . அவ்வளவு நல்லவராகிவிட்டரா.

 6. ThiyagaRajan சொல்கிறார்:

  May I know any news written about ADMK ? I think never.

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  1) பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதையோ,
  பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதையோ –
  நூற்றுக்கு நூறு சதவீதம் –

  – நானும் எதிர்க்கிறேன்.
  – வெறுக்கிறேன்.
  – இதைத்தடுக்க சட்டபூர்வமாக என்ன செய்தாலும் தகும்.

  2) இந்த இடுகையின் தலைப்பை மற்றுமொரு முறை
  பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்…

  ஜூவியில் வெளிவந்துள்ள செய்தி எந்த அளவிற்கு
  உண்மையானது என்பது நமக்குத் தெரியாது.

  ஆனால், உண்மை என்று வைத்துக் கொண்டால் –
  மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்களையும்,
  வருமான வரி இலாகா ரெய்டு சம்பந்தவற்றையும்,
  அமலாக்கப்பிரிவின் குறிகளையும் –

  அரசு அமைப்பில் அங்கம் வகிக்காத,
  அரசில் எந்த பொறுப்பிலும் இல்லாத –
  கட்சித்தலைவர் தலையிடுவதும், தீர்மானிப்பதும்
  எந்த விதத்தில் சரி ? நியாயம் ?

  3) தன்னை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை
  என்பதற்காக மத்தியில் ஆளும் கட்சி, தனது
  அதிகாரத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட கட்சியை
  தாக்குவதை எந்த அளவிற்கு, யார் நியாயப்படுத்த இயலும்…..?

  4) ஜூனியர் விகடன் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகும்
  ஒரு அரசியல் இதழ். அதில் பரபரப்பான இந்த செய்தி கட்டுரை
  வெளியாகி 48 மணி நேரம் கடந்தும், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தோ,
  கட்சியிலிருந்தோ, ஏன் எத்தகைய மறுப்போ, விளக்கமோ -வரவில்லை ….?

  5) நான் இங்கு எழுதுவதால், ஜூ.வி.யில் வந்துள்ளவற்றை எல்லாம்
  உண்மை என்று ஏற்கிறேன் என்று பொருளல்ல.
  நாம் இந்த கோணங்களிலும் இந்த செய்தியைப்பற்றி யோசித்துப்
  பார்க்க வேண்டும் என்பதே என் கருத்து.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 8. ravi சொல்கிறார்:

  அட போங்கப்பா,
  பணம் விஷயத்தில் மாட்டிய ஆளை போலிசே தப்ப வைத்ததாக இதே ஜூனியர் விகடனில் செய்தி உள்ளது ..
  ஆளும் கட்சிக்கு ஆதரவான ஆட்கள் , போலீசுடன் பேசி தப்பிக்க வைத்து விட்டார்களாம் ..
  இது அனைத்தும் தன கண் முன்னால் நடந்தது போல இந்த பத்திரிக்கை செய்தி போடுகிறது …

 9. Muthukumar சொல்கிறார்:

  \\\\ அரசு அமைப்பில் அங்கம் வகிக்காத,
  அரசில் எந்த பொறுப்பிலும் இல்லாத –
  கட்சித்தலைவர் தலையிடுவதும், தீர்மானிப்பதும்
  எந்த விதத்தில் சரி ? நியாயம் ? //// மன்மோகன் பிரதமராக இருந்த பொழுது அவர் யாரால் இயக்கப்பட்டார் என்பது நாடறிந்த ரகசியம் ….. அந்த ‘இயக்குனர்’ எந்த அரசு பதவியில் இருந்து கொண்டு இயக்கினார் ????

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.