தீர்ப்பளித்தவரின் திடுக்கிட வைக்கும் பின்னணிகள் –

தமிழகத்தை உலுக்கிப் போட்ட ஒரு மிக முக்கிய வழக்கில்
தீர்ப்பு வெளிவந்ததும், திமுக தலவர் கலைஞர் கருணாநிதி –
தீர்ப்பு கூறிய நீதிபதியை இமயத்திற்கு இணையாக உயர்த்தி
பாராட்டினார்.

தீர்ப்பை விமரிசிக்கலாம் – ஆனால் அதற்கு உள்நோக்கம்
கற்பிக்கக்கூடாது என்பது மரபு. அந்த தீர்ப்பைக் குறித்தும்,
அதனைக் கூறியவரின் பின்னணியைக் குறித்தும் நமக்கும்
எத்தனையோ சந்தேகம் எழுந்தாலும், தகுந்த ஆதாரங்களின்றி
விமரிசிக்க முடியாத நிலையில் இருந்தோம்.

அந்த தீர்ப்பு வெளிவந்து, அதன் பலனாக சம்பந்தப்பட்டவர்களுக்கு
பல அவமானங்களும், அநீதிகளும் இழைக்கப்பட்டு –
எத்தனையோ உயிரிழப்புக்களை- உணர்ச்சி வசப்பட்டவர்களின்
தற்கொலைகளை எல்லாம் தமிழகம் சந்திக்க நேர்ந்தது.

அதன் பிறகு அப்பீல், பிறகு அப்பீலுக்கு எதிராக இன்னொரு
அப்பீல் என்று வழக்கு தொடர்ந்து சென்று கொண்டிருந்தாலும் –
இத்தனைக்கும் அடிப்படையாக அமைந்த முதலாவது
தீர்ப்பை கொடுத்தவரின் பின்னணி பற்றி
இப்போது தெரிய வரும் பல விவரங்கள் -திடுக்கிட
வைக்கின்றன.

இத்தகைய ஆசாமியை கலைஞர் வலை வீசி பிடித்ததன்
விளைவு தானோ அந்த முதல் தீர்ப்பு என்று யோசிக்க வைக்கிறது…!

நேற்றைய தினம் ஒரு பின்னூட்டத்தில் நண்பர் ஜோதி
அவர்கள் தந்திருந்த கீழ்க்கண்ட செய்தி தான் இதற்கான துவக்கம் –

// ரெஜிஸ்ட்ரார் பதவியில் இருந்ததுபோது போலி சர்ட்பிகேட்டுகள்,
போலி ரப்பர்ஸ்டாம்புகள் உபயோகித்து தன் பதவியை தவறாகப்

பயன்படுத்தி நில அபகரிப்பு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள்
என ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகிறது. கர்நாடக அரசே
இவர்மீது வழக்குபதியவேண்டும் என நீதிமன்றைக் கேட்டுள்ளது.
தானே பதவிவிலகுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்…

கர்நாடக பாஜகவும் இந்தவிசயத்தில் காங்கிரசை அங்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.

நீதிபதி குன்ஹா மீது பல்வேறு முறைகேடு புகார்களில்
கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்து விசாரனையை துவக்குமாறு கர்நாடக
அரசு உத்தரவிட்டுள்ளது. //

– இதற்கான ஆதாரங்களாக நண்பர் ஜோதி கீழ்க்கண்ட
ஆவணங்களையும் கூறி இருந்தார் –

kunha associates-2

kunha associates-3

இந்த கதையின் சுருக்கம் பின்வருமாறு –

ஒரு விவாகரத்து வழக்கில் , ஒரே நீதிமன்றம் ,
ஒருவர் இறந்து விட்டார் என்பதால் அவரது விவாகரத்து
வழக்கை முடிக்கிறோம் என்று அக்டோபர் 7 2005 இல்
ஆணை பிறப்பிக்கிறது , அதே நீதிமன்றம் ஜூன் 10 2005
அன்று விவாகரத்து அளிப்பதாக ஆணையும் பிறப்பித்துள்ளது …

இதை வைத்து அந்த நபரின் சொத்தை இரண்டாவது மனைவி
ஆட்டையைப் போட்டு விடுகிறார் … பாதிக்கப் பட்டவர்
அப்பொழுதைய உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்புத் துறை
பதிவாளரான ஜான் மைக்கேல் குன்ஹாவிடம் முறையிடுகிறார் …

அவரோ .. நீதிமன்றத்தின் மீது எந்தத் தவறுமில்லை ,
தவறான சான்றிதழ் கொடுத்தவர் மீது விசாரணை செய்யலாம்
என்று சொல்கிறார் ….

அது எப்படிங்க ஒரே நீதிமன்றத்துல இரண்டு விதமான ஆணை
பிறப்பிக்கப் படும்/? அதில் எதோ ஒன்று பொய் என்பதை
மறைக்கிறார் பதிவாளர் …

ஏன் என்றால் , அப்படியான ஆணையை பெற்ற வக்கீல் ,
இவர் வக்கீலாக இருந்தப பொழுது இவருடன் இணைந்து
பணியாற்றிய்ள்ளார் , நெருங்கிய நண்பர் …

manu advocates logo

kunha associates-1

About Us
The word “MANU” is the union of first letters of four eminent Advocates viz., Michael D´Cunha, Amrith Kini A, Noronha Melwin Prakash and Ullal S.K

One of the founder of the institution MANU ADVOCATES Mr. Michael D’Cunha since elevated from the Bar (Advocate) to Bench (Judicial Officer) the remaining 3 members of MANU continued the profession under the same name and style along with 12 eminent associate advocates.

MANU என்பது அவர்களது நிறுவனத்தின் பெயர் ….
M – மைக்கல் த குன்ஹா
A – அம்ருத் கினி
N – நொரொன்ஹா
U – உள்ளாள்manu advocates – about us

இது இவர்கள் எல்லோரும் சேர்ந்து நடத்திய நிறுவனம் ….
இந்த விவாகரத்து /மரணம் வழக்கில் கோர்ட்டை ஏமாற்றி
சொத்தை ஏப்பம் விட்ட வக்கீல் நொரொன்ஹா –
இவருக்கு துணை போயிருப்பதாக குற்றம் சாட்டப்படுபவர்
தான் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிமான்….

———————-
நண்பர் ஜோதி துவக்கி வைத்த இந்த விஷயத்தில் –
தொடர்ந்து எதாவது தகவல்கள் கிடைக்கின்றதா என்று
தேடியதில் சில தகவல்கள் கிடைத்தன. திரு.குன்ஹா
அவர்களது நண்பரும், அவரது மனு அட்வொகேட்ஸ்
நிறுவனத்தின் பங்குதாரருமான வக்கீல் நொரொன்ஹா மீது
கொலைக்குற்றமும், மோசடி குற்றமும் சாட்டப்பெற்று
இருக்கிறது. மங்களூர் தான் இவர்களது துரோகச்
செயல்பாடுகளின் அடிப்படை ஸ்தலம்.

மங்களூர் Peoples Union of Civil Liberties
இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தி வருகிறது.

இது தொடர்பாக எனக்கு கிடைத்த சில ஆவணங்களின்
நகல்கள் கீழே –

JUN
4
2015
M.P. Noronha Case
PUCL – People’s Union For Civil Liberties – D.K
“Pauline”, Fr. Muller Road, Valencia Mangalore – 02

http://www.puclmangalore.wordpress.com / E-Mail : pucl_sk@yahoo.com

Tel : 0824-2432170 / 9008820186 / 9845240765

Date : 04.06.2015

Chief Justice of Karnataka
High Court of Karnataka

Bangalore – 560001

Director General and I.G. of Police
Nrupathunga Road

Bangalore – 560002

Dear Sirs,

Sub :

What is ailing our Judiciary and Police Department?
Why do they protect criminals and anti- Social elements?
Ref :

Forgery committed by Advocate M.P. Noronha in the court documents, cheating, murder, forged will, misappropriation etc.

We are bringing to your notice several reminders sent by us to you and your sub-ordinates connected to the cases mentioned hereunder pertaining to advocate M.P. Noronha of Mangalore.

C. No. 177/2004, Court of Principle Civil Judge (Sr. Dn.) Mangalore in which forgery of a Divorce Decree is involved, processed by Advocate Asha Nayak in collaboration with M.P. Noronha.
Missing UDR file No. 17/2005 dated 14.09.2005 connected to the murder of Everest Pereira from the Thasildars office, Mangalore
A fabricated settlement Deed and a forged will of Everest Periera prepared by Gadys Almieda under the guidance of advocate M.P. Noronha
The murder of Mr. Everest Pereira, connected to M.C. 177/2004 Gladys Almeida is under judicial custody in this case.
A fabricated marriage certificate for a marriage (which never took place) in France between Everest and Gladys and produced in Mangalore Court by M.P. Noronha.
Complaint dated 03.08.2012 to Registrar of Vigilance High Court of Karnataka by Mrs. Carmeline Pereira.

Inspite of several reminders the cases are stuck up somewhere without any movement.

After much efforts the sheristedar of Principle Civil Court Mangalore filed a private complaint No. 61/2014 on 30th October 2014 naming Mr. M.P. Noronha as the Prime accused but till date Police have neither arrested him nor even made any enquiries, inspite of 8 months have elapsed.

In normal cases Police arrest ordinary criminal in a lightning speed. But this case which involves forgeries in the court, murder, cheating fabrication of wills, settlement deed and marriage certificates remains in the cold storage, thus tarnishing the name of the court.

If immediate action is not taken and culprits are not arrested without further delay, we will be compelled to agitate in public in the interest of Justice and fair play.

Mr. Tilak Chandra, D.C.P Mangalore also requires to be arrested as he is the main person in the Police Dept who has sabotaged the case so far, destroyed evidence, and protected the culprits.

Your faithfully
For Peoples Union for Civil Liberties.

David D’Souza President

————————————————-

இது ஒரு வக்கீல்களின் நிறுவனம் என்பதை விட
கொள்ளையர்களின் கூடாரம் என்றே தெரிகிறது.
இவர்களில் ஒருவர் தான் மெனக்கெட்டு ஜட்ஜாக
தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்படி வழக்கு (மட்டும்)
அவரிடம் ஒப்படைக்கப்பட்டு, தீர்ப்பும் பெறப்பட்டுள்ளது.

இதில் மேற்கொண்டு விவரங்கள் – நம்மை விட –
கலைஞருக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் –
அதிகமாகத் தெரிய வாய்ப்பிருக்கிறது.

இப்போதைக்கு கிடைத்த விவரங்களை இங்கு
தொகுத்து தந்திருக்கிறேன். இந்த தகவல்கள் இன்னும்
முழுமை பெறவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

படிப்பவர்கள் மனதில் இது எந்தவித தாக்கத்தை
ஏற்படுத்தினாலும் சரி…
இதுவரை கிடைத்த தகவல்களை இங்கு பதிவு
செய்வது அவசியம் என்று தோன்றியது.

இன்னும் கூடுதல் விவரங்களை நண்பர்கள் யாராவது
தரக்கூடுமானால் -அவற்றையும் இங்கு பதிவிட தயாராக
இருக்கிறேன்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to தீர்ப்பளித்தவரின் திடுக்கிட வைக்கும் பின்னணிகள் –

 1. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  We Tamilians are proud of many things .On the other side of ugly face of one Tamilian Judge was a Pioneer in Impeachment & third one from us also went to that stage. By this whether we have to contradict their Judgments ?Likewise Gunha has to meet the case against him. Some time back there were many Fraud Marriage Regns heped by Lawyers, by virtue of that Claim cases in Tamilnadu. As a lawyer one will do all his possible for his client. As regards this subject, when a Local Administration has the option to condemn the Judge ( later all set right) for the suffering of their leader , why not the same Criteria be given to the opposite to praise when he get the expected one ? In this case it was evident that the Defense side appealed for a particular person to be Prosecution Lawyer. But how far it is possible on the opposite to succeed in appointing a particular person to deal is a new concept..But as a public , we see both the Dravidian Parties are worried on their legal clearances.

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  this what is waned every day shri km..

 3. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நேற்றே, ஜோதி அவர்களின் பின்னூட்டத்தை பார்த்த பிறகு, நான் பங்களூரில் வசிக்கும் ஒரு நண்பரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததில் சில விஷயங்கள் தெரியவந்தது.

  நானே உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென்று
  நினைத்தேன். இந்த நீதிபதியின் பின்னணி சரித்திரம் குறித்து
  நீங்கள் விரிவாக ஒரு பதிவு போட வேண்டும் என்று. அதற்குள்ளாக நீங்களே இந்த இடுகையை போட்டு விட்டீர்கள்.
  அந்த நண்பர் ஏற்கெனவே சில விஷயங்கள் இது குறித்து
  படித்ததாக நினைவிருக்கிறது என்றும் ஆனால் எதில் படித்தென் என்பது நினைவில் இல்லை என்று சொல்லி சில விஷயங்கள்
  கூறினார்.

  இந்த நீதிபதியின் நண்பர் -பார்ட்னர் வக்கீல் நொரான்ஹோ தனது client பெண்மணி ஒருவருக்கு சாதகமாக பல forgery
  வேலைகளை செய்திருக்கிறார். கொடுக்கப்படாத ஒரு ஜட்ஜ்மெண்டை certified true copy என்று நீதிபதியின்( அப்போது ரெஜிஸ்டிரார்) ஆபீஸ் சீலுடன் கோர்ட்டில் சமர்ப்பித்து,
  அதன் அடிப்படையில் ஜட்ஜ்மெண்ட் பெற்றிருக்கிறார். (இந்த
  forgery வேலையில் தான் மேற்படியாரும் தன் நண்பர்-பார்ட்னருக்கு
  உதவி இருக்கிறார்.
  அந்த பெண்மணியின் கணவர் மாடியிலிருந்து தவறி விழுந்து
  இறந்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால்
  எந்தவித வெளிக்காயமும் இல்லாமலே இறந்து விட்டாராம்.
  அந்த வக்கீல் நொரான்ஹோ மீது தனது client பெண்மணிக்காக,
  அவரது கணவரின் இறப்புக்கு காரணமாக இருந்தார் என்று வேறு
  புகார் கூறி இருக்கிறார்கள். இப்படி இன்னும் நிறைய விஷயங்கள்
  இருப்பதாகத் தெரிகிறது. என் நண்பர் இதிலெல்லாம் கவனம்
  செலுத்துபவர் அல்ல என்பதால் அவருக்கு மேற்கொண்டு விவரங்கள்
  அவ்வளவாகத் தெரியவில்லை. நீங்கள் இப்போது பதிவு போட்டிருப்பதால்
  வேறு நண்பர்கள் யார் மூலமாவது மேலதிக விவரங்கள் தெரிய வரக்க்கூடும்
  என்று நினைக்கிறேன். எனக்கு தெரிய வந்ததை இங்கு எழுதி விட்டேன்.நன்றி./

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி இளங்கோ.

   இது நண்பர் ஜோதிக்கு –

   நண்பரே மேலே இளங்கோ கூறியிருக்கும் தகவல்கள்
   குறித்து மேற்கொண்டு விவரங்கள் எதாவது உங்களிடம்
   இருக்கிறதா ..? இருந்தால் இங்கு பின்னூட்டம் மூலம்
   பதிவு செய்யுங்களேன்.

   பங்களூர் / மங்களூர் பக்கம் இருக்கும் விமரிசனம் வலைத்தள
   நண்பர்கள் யாரேனும் இது குறித்து மேற்கொண்டும்
   அறிந்திருக்கலாம். உள்ளூர் செய்தித்தாள்களில்,
   வலைத்தளங்களில் இது குறித்த செய்திகள் வந்திருக்கலாம்.
   தெரிந்தால் தயவுசெய்து எழுதவும். தமிழ்நாட்டிலிருந்து
   இது குறித்து வேறு விவரங்கள் எதுவும்
   கிடைக்கவில்லை.

   இந்த விஷயம் குறித்து நமக்கு தெரியவரும் தகவல்கள்
   அனைத்தையும் இங்கு பதிவு செய்வோம். படிப்பவர்கள்
   தாமே இது குறித்த உண்மைகளை புரிந்து கொள்ளட்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்.

 4. இளங்கோ சொல்கிறார்:

  சார் இது தான் லேட்டஸ்ட் நியூஸ் –

  எந்தக் கட்சி வந்தாலும் கூட்டணியில்
  சேர்த்துக்கொள்வோம்: திருவாரூரில் கருணாநிதி!

  http://www.vikatan.com/news/tamilnadu/58101-dmk-chief-karunanidhi-interview-in-thiruvarur.art

 5. இளங்கோ சொல்கிறார்:

  தயவுசெய்து மன்னித்து இதையும் அனுமதியுங்கள் கே.எம்.சார்.

  //திருவாரூர் மக்கள் சொன்னால், கழகம் அனுமதித்தால் மீண்டும் திருவாரூரில் போட்டியிடுவேன் என்றார் கருணாநிதி.//

  http://www.dinamani.com/latest_news/2016/01/25/

  • சேகரன் சொல்கிறார்:

   இது இப்போ:

   திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது…

   தமிழை காக்கவும், தமிழர்களை காக்கவும் இந்த கூட்டம் நடக்கிறது.

   சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம் என்ற கருத்துக்கணிப்புகளை உண்மையாக்க வேண்டும்.

   வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை வேண்டாம் என கூறுகிறவர்கள் அல்ல தமிழர்கள். மத்திய அரசிடம் போராடி ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதனை செய்யவில்லை. ஜல்லிக்கட்டு நடக்காததற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளே பொறுப்பு.

   ஜல்லிக்கட்டை ஆபத்தான விளையாட்டாக மாற்றியிருப்பதை மன்னிக்க முடியாது.

   தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரங்களை காக்க போராட வேண்டும் என பேசினார்.

   கலைஞர் கலைஞர் என்று தம்மைத்தாமே புகழ்ந்தேத்தும் கருணாநிதிக்கு மட்டும்தான்
   முத்தமிழையும் வித்தவர் என்ற அடைமொழி பொருந்தும்.

   • சேகரன் சொல்கிறார்:

    என் கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த நண்பர் சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி. நன்றி.-சேகரன்

 6. செந்தமிழன் சொல்கிறார்:

  “முத்தமிழையும் வித்தவர் ”

  சூப்பர் நண்பரே.

  தமிழ்நாட்டில் உள்ள சின்ன சின்ன கட்சிகள் கூட
  தாங்கள் யாரோடு எல்லாம் கூட்டணி சேர மாட்டோம்
  என்பதை தெளிவாக, வெளிப்படையாக அறிவிக்கின்றன.
  ஆனால், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்கும் ஆசையில்
  துடிக்கும் இந்த 93 வயது இளைஞர் மட்டும் தான்,
  “யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி சேரத்தயார்;
  எந்தக் கட்சி வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்:”
  என்றெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம்
  வெட்கத்தை விட்டு அறிவிக்கிறார். இன்றைய தமிழக
  அரசியலில் ஒரே ஒரு பெருமைப்படத்தக்க விஷயம்
  இத்தனை கெஞ்சல்களுக்கு பிறகும்,
  “எந்த கட்சியுமே திமுகவுடன்
  கூட்டணி சேரத் துடிக்கவில்லை” என்பது தான்.
  அந்த மட்டில் தமிழக அரசியல் கட்சிகளை பாராட்டித்தான்
  ஆக வேண்டும்.

  செந்தமிழன்

 7. paamaranselvarajan சொல்கிறார்:

  நண்பர்கள் இந்த லிங்க் சென்று ஜாலியா சிரித்து — சிந்திக்கலாம் : — DMK, Stalin and Kalaingar Karunanidhi Memes and Trolls
  http://www.memestimes.com/…/dmk-stalin-and-kalain...

 8. Suresh சொல்கிறார்:

  What do you want to suggest with this blog my dear friend? That Madam J is clean and innocent? You are like your master Cho (I got this feeling when I saw some of your blogs supporting that ACTOR). I pity you.

 9. thiruvengadam சொல்கிறார்:

  Since this posting trend seems to be track changing , i am once again recording my feeling : எல்லா கட்சிக்கும் டிவி சேனல் இருக்கிறது. தலைவர்களும் தொண்டர்களும் அதை பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு சேனலில் மட்டும் அ ஆ இ என்பதன் விரிவாக்கத்தை தவிர கேட்கமுடிவதில்லை. அரசியல் ஈடுபாடு புலிவால் பிடித்ததை ஒத்தது. சர்வைவல் என்பதற்கு அனைவரின் செயல்களும் விமர்சனத்துக்கு உரியவை.சார்பு நிலையை வெளிப்படையாக தெரிவிக்கலாம். சமநோக்கினால் பின்விளைவு தவிர்ப்பதன் மூலம் சேப் கேம் விளையாடலாம்.

 10. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  Reg this posting , I made a search in net & I noticed the following.
  He joined Judiciary in 2002.
  These exposed occurrences’ are nearly a decade after.
  It is natural to continue the same name even after some left in Firms like Auditors, Advocates & as well keeping the last post held of the higher status people with a small ( ex ) in name plates & Visiting Cards to continue enjoy importance in public.
  In this case the Advocates of that firm done crimes.
  As an in charge, he has directed the Judge to take action on the fraud, when that came to him. There was no follow up as per direction. Now it is raising point that he failed to take action himself since the persons are his friends.
  The renowned Judge Krishna Iyer came to Judiciary, after in Politics, Minister. Likewise one DMK Dt secretary was High Court Judge ,retired from SC after elevation. Is it acceptable to find fault with them in their verdicts?
  In a helping nature, or some other reasons a retired High Court Judge wrote a letter to Dt Judge to take action against that those Lawyers & also include the Registrar& PUCL following.
  The current judge arranged for case. This is all I found. There are many instances like this. Some may be clerical errors & fabricated to close the cases.
  I am unable get a clear zoomed images shown in here. There are many instances , a lawyer some times acts as a Defense for one case & in opposite to a same person for another case. If my remembrance if it is correct there was objections to one of Renowned Lawyer, to attend cases, since his son is in Judiciary.
  It is needless to remind, how many years, & how many judges dealt this case. As a general allotment , he would have been entrusted. Some possible assumptions cannt be recorded.
  He has to meet the consequences on that fraud case, ,but how his verdict is questionable ?

 11. chandraa சொல்கிறார்:

  Thiruvengadam iyyah ennanga iyya solla varinga….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.