” டான் அசோக் ” யார் ….? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்…!!!

.

.

ஒரு இடுகை waste ஆனாலும் பரவாயில்லை.
என்னை ஐந்து வருடமாக அறிந்து வைத்திருக்கும் ரிஷி போன்ற
பல நண்பர்களும் ஒரு விஷயத்தை அவசியம் தெரிந்து
கொள்ள வேண்டும் என்பதால் இந்த இடுகையை எழுதுகிறேன்.

http://donashok.blogspot.com/2015/12/
blog-post.html -ல் வெளிவந்துள்ள

” சென்னை வெள்ளம் நடந்தது என்ன? -டான் அசோக் ”

என்கிற கட்டுரையைப் பற்றி நண்பர்கள்
என் கருத்தைக் கேட்டிருந்தார்கள்….

ஒரு தனிப்பட்ட நபரின் வலைத்தளத்தில் எழுதப்பட்ட
இந்த கட்டுரையை –
தினமலர், தினகரன், விகடன் போன்ற
பல செய்தி இதழ்களிலும் பெருமுயற்சியுடன்
வரச்செய்து –

அடையாற்றில் அவ்வளவு வெள்ளம் வந்ததற்கான காரணம்,
தமிழக அரசின், குறிப்பாக பொதுப்பணித்துறையினரின்
அலட்சியம் தான் என்று திரும்பத் திரும்ப பொய் கூறி –
ஒரு மிகப்பெரும் வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

இன்று ஊடகங்கள் பரவலாக அனைவரையும் சென்றடைவதால்,
இந்த பொய்ச்செய்திகள் உண்மை போல் மக்களிடம்
போய்ச்சேர்ந்து விடுகின்றன. இத்தனை பேர் சொல்கிறார்களே,
இத்தனை ஊடகங்கள் சொல்கின்றனவே –
இந்த செய்தி
நிஜமாகத்தான் இருக்கும் என்று படித்த இளைஞர்கள் கூட
( நமது நண்பர் ரிஷி உட்பட ) நம்பி விடுகிறார்கள்.

என்ன செய்வது -பரபரப்பான செய்திகளையே விரும்பும்
நம் மக்களின் இயல்பு இது.

ஒரு உண்மையை யாராவது சொன்னால் – லேசில்
ஏற்றுக் கொள்ளாமல் ஆயிரத்தெட்டு சந்தேகங்களை எழுப்பும்
நம் மக்கள் – வதந்திகளையும், பொய்களையும் மட்டும் –
எந்தவித கேள்வியும் கேட்காமல் உடனே நம்பி விடுகிறார்கள்.

அதே வேகத்தில், தங்களுக்கு தெரிந்த அத்தனை பேருக்கும்- தங்களிடமுள்ள அத்தனை தொடர்பு சாதனங்கள் வழியேயும் தெரிவித்து விடுகிறார்கள்.

திருவாளர் டான் அசோக் என்பவரின் பின்னணியைப் பற்றி
எனக்கு தெரியாத நிலையில் – நான் “( பகுதி-2 ) தமிழ்நாட்டில்
பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!
இடுகையை எழுதி இருந்தேன்.

இப்போது தான் எனக்கு திருவாளர் டான் அசோக் யார்
என்கிற விவரங்கள் தெரிய வந்தன …!!!

நான் அவரைப் பற்றி ஒன்றுமே எழுதப்போவதில்லை.
அவரே தன்னைப்பற்றி சொல்லிக் கொள்வதைப் படித்தால்-
தானே விளங்கும்.

கீழே இருப்பது –
கலைஞரை தான் நேரில் சந்தித்தபோது தனக்கு ஏற்பட்ட
உணர்வுகள் – அனுபவங்களைப் பற்றி அவர்
எழுதியிருப்பதிலிருந்து ஒரு பகுதி –

——————————————————-

மறைந்த திமுக மாநில அமைப்பாளர் சிறுகதை மன்னர்
எஸ்.எஸ்.தென்னரசு அவர்கள் எனது தந்தையின் தாய்மாமா
என்ற அறிமுகம் இருந்தாலும், இப்போது எங்கள் குடும்பத்தில்
யாருமே அரசியலில் இல்லாததால் கலைஞரை சந்திப்பற்கான
வாய்ப்பு ஏற்படவே இல்லை.

சிலரை நாம் இறப்பதற்குள் நேரில் சந்தித்துவிட வேண்டும்
என்று நமக்கு தோன்றுவது இயல்பே. எனக்கு அப்படி தோன்றும்
வெகுசிலரில் முதலானவரும், முக்கியமானவரும் கலைஞர்.

கோபாலபுரம்! நான் என் வாழ்நாளெல்லாம் ரசித்த, ரசிக்கும்
ஒரு மிகப்பெரும் எழுத்தாளரின், மாபெரும் தலைவரின்
இல்லம் அது.

ஏறத்தாழ 60 ஆண்டுகாலமாக இந்தியாவின் தலையெழுத்தை
தீர்மானித்த இல்லத்தின் வரவேற்பறையில் அமரவைக்கப்பட்டேன்.

வரவேற்பறையைச் சுற்றி பல புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன.
அதில் கோபாலபுரத்தில் கலைஞர் வளர்த்த இரண்டு நாய்களின்
படங்களும் இருந்தது. எனக்கு கோபாலபுரம் அளித்த
முதல் ஆச்சரியம் அது!

புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் பெயர் (Don Ashok (a)
Ilavarasan)என்றிருந்தது. அதை ஒருநிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு,

“இளவரசன் மதுரையில் என்ன பண்றீங்க?” என்றார்.
(டான் அசோக் அவருக்கு பிடிக்கவில்லை போலும் 🙂 )
“மதுரையில் வியாபாரம் செய்கிறேன் மற்றும் விளம்பரப்படங்கள்,

குறும்படங்களுக்கு கதை, வசனம் எழுதுகிறேன்” என்றவுடன்
மகிழ்ச்சியை தெரிவித்தார். அடிக்கடி, “ரொம்ப மகிழ்ச்சி தம்பி”
என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார்.

பின் என் தந்தையின் தாய்மாமாவான எஸ்.எஸ்.தென்னரசு பற்றி
தெரிவித்துவிட்டு,

இந்திராகாந்திக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில்
கலைஞருக்காக ஆஜரான என் அம்மா வழி தாத்தா வழக்கறிஞர்
எஸ்.கண்ணனின் பெயரையும் கூறினேன்.

பின் அவரது பிறந்தநாளிற்காக நான் எழுதிய ‘கலைஞர் வாழ்த்து’
என்ற கவிதையை காண்பித்தேன்.

இரண்டு முறை ரசித்துப் படித்தார்.

பின் நக்கீரனில், அவரது முகநூல் பக்கத்தில் சிலர் வரம்பு மீறி
பின்னூட்டமிடுவது குறித்து நான் அளித்திருந்த சிறிய
பேட்டியைக் காண்பித்தேன்.

நான் போதிமரத்துடன் ஒரு 15நிமிடங்கள்
உரையாடிவிட்டு வந்தேன்!

( http://donashok.blogspot.com/search/label/kalaignar
%20austrian%20stamp )

——————–

கீழே இருப்பது டான் அசோக் எழுதிய –
‘கலைஞர் வாழ்த்து’ என்ற கவிதை…!!!

“கலைஞர் வாழ்த்து” -டான் அசோக்

தலைவன் நீ
தமிழின் தலைவாய்!
உன் வாயை
தன் வாயாய்க் கொண்டு
தன்னைத் தானே
பேசி மகிழ்கிறாள் தமிழ்த்தாய்!
தமிழுக்கே வாயாய்
வாய்த்த வாய்
உன் திருவாய்!
வையம் இருக்கும் வரை
உன் தீந்தமிழ் அருள்வாய்!

தன் புகழுக்குத் தன்பெயர்
போதாதென்று
தமிழ் தனக்குத்தானே சேர்த்துக்கொண்ட
பெயரடை நீ!

திராவிட எழுதுகோலால் அடித்து
ஆரிய மந்திரக்கோல்களை
உடைத்தவன் நீ!

மனிதர்க்கு
தோன்றின் புகழோடு தோன்றுவதே
பெரும் பாடு;
உனக்கோ
தோன்றியதிலெல்லாம் புகழோடு தோன்றுவதும்
தண்ணீர் பட்ட பாடு!

தொண்ணூறு தொட்டாலும்
நிலவை தூங்க வைக்கிறாய்
சூரியனை எழுப்பி விடுகிறாய்
இரண்டிற்கும் இடைப்பட்ட
நேரத்தில் கொஞ்சமாய்
தூங்கிக் கொள்கிறாய்;
இதை பேராசை என்பார்
சோம்பலுக்குச் சொந்தக்காரச் சிறியார்!
அவர் உழைப்பின் வயது 90
என அறியார்!

பதிமூன்று வயதில்
உன் நண்பர்குழாம் பம்பரம் சுற்றியது;
நீயோ கையெழுத்துப் பிரதிகளுடன்
பம்பரமாய்ச் சுற்றினாய்;
ஒரு சுற்றுக்கு
ஓரடி வளர்ந்தாய்;
எழுபத்தேழு ஆண்டுகளாய்
சுற்றிக் கொண்டிருக்கிறாய்;

பத்தாண்டுக்கு ஒருமுறை
ஒருவயதேறும் பாலகன் நீ!
அரசியலில்
அம்பெறிவோர்க்கும் அன்பெறியும்
பால் அகன் நீ!

சால்வைக்குப் பிடித்தவன் நீ!
அட
சாவுக்கும் பிடித்தவன் நீ!
அதனால்தான்
உன் சாவைப் பிடித்தவர்கள் எல்லாம்
சாவுக்குப் பிடித்தவர்கள் ஆகிறார்கள்!
நீ கட்டவேண்டிய மணிமண்டபங்கள்
இன்னும் சில மீதமுண்டு!

வாழ்வோருக்கு ஒன்பதே போதும்;
வாழவைப்போர்க்கு
தொண்ணூறும் போதாது;
உன்னைவிட்டால் தமிழகம் பாழ்;
இன்னும் தொள்ளாயிரம் வாழ்!

-டான் அசோக்

(பெயரடை – உரிச்சொல்- adjective)

———————————————————

இந்த திமுக வெறிஞரின் ஒரு கட்டுரையை வைத்துக் கொண்டு
தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்… அமர்க்களம்….!!!

பத்திரிகைச் செய்திகளையும், வதந்திகளையும் உருவாக்குவது
எத்தகைய பின்புலன்கள் என்று ஒரு சிலராவது
தெரிந்துகொள்ள இந்த இடுகை உதவினால் சரி…

பின்குறிப்பு –
நண்பர் ரிஷி – போதுமா நீங்கள் மிகவும் ரசித்து
விவாதத்திற்கு இழுத்த வரிகளின் பின்புலம் …..?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

28 Responses to ” டான் அசோக் ” யார் ….? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்…!!!

 1. Sampathkumar.K. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இது குறித்து எதாவது சொல்லுங்களேன் :

  “இயற்கைப் பேரிடரா, செயற்கைப் பேரிடரா என்று வரலாறு காணாத மழைப் பொழிவையும், அதனால் ஏற்பட்டிருக்கும் வெள்ளச் சேதங்கள் குறித்தும் புரட்டுக் கருணாநிதி குரளி வித்தை செய்து புரளி விதைக்கப் பார்க்கிறார்.
  ……
  …….
  போலீசார் ஓடிவந்து ஆஷ் துரையின் பிணத்தையும், வாஞ்சிநாதன் பிணத்-தையும் கைப்பற்றுகிறார்கள். வாஞ்சி-நாதனின் உடுப்புகள் சோதனை இடப்-படுகிறது. அவன் சட்டைப் பையில் கொஞ்சம் சில்லரையும், கூடவே தூத்துகுடியிலிருந்து மணியாச்சி சந்திப்பு வரைக்குமான ரயில் டிக்கெட்டும் கண்டெடுக்கப்பட்டது.

  ஆம். ஆஷ் துரையை சுட்டுக் கொன்று-விட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள தீர்க்கமாய் முடி-வெடுத்து புறப்பட்டவனுக்கு அதுதான் தனது கடைசி ரயில் பயணம் என்றாலும் அந்தப் பயணம் ஓர் வீரச் சாவை எய்து-வதற்கான விடுதலைப் போராட்டத்தின் இறுதிப் பயணம் என்றாலும், அவன் ‘வித்தவுட்’டில் போகவில்லை. செத்துப் போகத்தான் போகிறோம் என்றபோதும் பயணச்சீட்டோடு பயணித்தான்.

  இதுதான் போராளியானாலும் ஓர் மனிதனின் நேர்மை, ஒழுக்கம் என்பது.

  இந்த தூய வரலாற்றை மனதில் நிறுத்திக்-கொண்டு இதோ அடுத்தொரு கழிசடை வரலாற்றை கவனிப்போம்.

  பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்க வக்கில்லாமல் திருட்டு ரயிலி-லேறி திருவாரூரிலிருந்து புறப்பட்டு வந்த அந்தத் தீயசக்தி ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்யும் அவலம் நிகழ்ந்தது. அதன்மூலம் ஆசியாவைக் கடந்து உலகப் பணக்காரராய் அது உருவெடுத்தது.

  இந்தியாவில் விமானக் கம்பெனி வைத்திருக்கும் ஒரே அரசியல் தலைவர் என்கிற உச்சத்தில் இன்று அது நிற்கிறது என்றால் இதற்குப் பெயர்தானே இயற்கைப் பேரிடர்.

  சரி, அடுத்து செயற்கை பேரிடருக்கு வருவோம். அந்த செயற்கை பேரிடரை-யும் உருவாக்கியது தீயசக்தி என்கிற இயற்கை பேரிடர்தான்.

  ஆம். 2006-லே தமிழகத்தின் போதாத காலத்தால் மைனாரிட்டி ஆட்சி அமைத்த கருணாநிதி, தன் குடும்பமும், குறிப்பாக தனது தில்லுமுல்லு கட்சியினரும் வெகுவாக செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழில்கள் மூலம் குறைந்த காலத்தில் கோடானு கோடிகளைக் குவிப்பதற்காக ஏதுவாக அவர் கொண்டுவந்த அரசாணை-தான் அந்த செயற்கை பேரிடர் என்பதும்.

  ஆம், 30.12.2006-ல் அரசு புறம்-போக்கு நிலங்களில் குடியிருப்பவர்-களுக்கெல்லாம் பட்டாக்கள் கொடுக்க-லாம் என்று அரசாணை போட்டது அப்போதைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி.

  இதனால்தான் ஏரிகளும், குளங்களும், நீர்நிலைகளும், நீர்ப்பிடிப்பு பகுதிகளும் புயல் வேகத்தில் விற்றுத் தீர்ந்தன பகுத்தறியப்படாது பொத்தாம் பொதுவாக கத்தை பணத்திற்கு அள்ளிக் கொடுக்கப்பட்ட பட்டாக்கள் துணையோடு.

  இதன்மூலம் அப்பாவிப் பொதுமக்கள் அந்த நிலங்களை தங்கள் வியர்வை சிந்திய பணத்தைக் கொடுத்து வாங்கவே, கருணாநிதி கட்சிக்காரர்களின் சட்டைப் பைகளிலோ கத்தை கத்தையாய் குவிந்தது பணம்.

  அப்படி, ஏமாந்த மக்கள்தான் இன்றைய மழை வெள்ளச் சேதங்களில் நீரில் மூழ்கி நிம்மதி இழந்திருக்-கிறார்கள் என்றால் இப்போது சொல்லுங்கள், கருணாநிதி குறிப்பிடுற இயற்கைப் பேரிடரும், செயற்கைப் பேரிடரும் அவரும் அவரது அன்றைய அரசாட்சியும்தானே!

  http://patrikai.com

  • today.and.me சொல்கிறார்:

   செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பப் போகிறது தண்ணீர் அதிகப் படியாக வெளியேறப் போகிறது என்று எனக்கு சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்னரே தெரிய வந்தது என்று மு.கருணாநிதி இப்போது சொல்லுகிறார். ஒரு வாரம் முன்னரே தெரிந்திருந்தும் ஐந்துமுறை இதே தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் தமிழர்களைப்பற்றியே சதாகாலமும் கவலைப்படுபவர் அந்தத் தகவலை பொதுவில் வைக்காமல் போனது குறித்து நீதிமன்றம் தானே முன் வந்து வழக்கு பதிவு செய்யவேண்டும்.

 2. Sampathkumar.K. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  ஒரு திமுக தீவிரவாதி பினாமி பெயரில் எழுதுகிற கட்டுரை
  எல்லா மீடியாக்களிலும் செய்தியாக வருகிறதே எப்படி ?
  இன்று தினமலரில் முதல் பக்கத்தில்,
  விகடனில், தினகரனில் – எல்லாவற்றிலும் திட்டம்போட்டு
  பொய்ச்செய்திய பரப்புகிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது.
  விளம்பரம் போடுவது மாதிரி, பணம் கொடுத்து இதையெல்லாம்
  பிரசுரம் செய்கிறார்கள் ?
  காசு வாங்கிக்கொண்டு இந்த மாதிரி பொய்யை வியாபாரமாக்கும்
  தினப்பத்திரிகைகள் எல்லாம், நீங்கள் சொன்னது மாதிரி “வேறூ”
  வேலை பார்க்கப் போகலாம்.

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  well said, can we ignore the Theeya sakthi? Pls recollect – Ethanai kaalam manithan vazhthan enbathu kelviyillai,avan eppadi vazhthan——-

 4. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  பின்குறிப்புக்குப் ஒரு பின்குறிப்பு: 🙂

  //போதுமா நீங்கள் மிகவும் ரசித்து
  விவாதத்திற்கு இழுத்த வரிகளின் பின்புலம் …..?//

  இவரது பதிவாக வந்த ஆபாசப் பதிவில் உள்ள புகைப்படங்களையும் போட்டிருந்தீர்களானால் இன்னும்கூட ரசித்திருக்கலாம்தான். 🙂

  என்ன செய்வது, இருக்கும் இடம் விமரிசனமாயிற்றே…
  விழுங்கிக்கொள்கிறேன், தொண்டைவரை வந்ததை….
  😀

 5. thiruvengadam சொல்கிறார்:

  முதலில் நான் எந்த கட்சியிலும் உறுப்பினரோ அல்லது அனுதாபியோ இல்லை. சோ துக்ளக் இதழில் ஜெ கட்டுரைகளை பெயர் அறிவிக்காமல் வெளியிட்டது கா.மை. நினைவுக்கு. எழுதுபவரின் பின்புலம் தான் அவர் எழுத்தின் நம்பகத்தன்மை அளவுகோல் என்றால் அதேபோல மற்றவர்கள் கருத்தை ஆய்வு செய்து , எதிர் விளைவுகளை சந்திக்கமுடியுமா? இணையத்தில் என்னைப்போன்ற சாதாரண பதிவர் : அச்சமயத்தில் குடிநீர் விடுவதை அதிகரிக்கலாமே என்று கேட்டபோது மேலிட அதற்கு மேல் அதிகாரி அனுமதி இல்லை என பதில். பிறிதொரு தகவல் : இரவில் அலை வேக அதிகரிப்பால் பகல் நேரங்களில் தான் கடல் விரைவாக வாங்கிக்கொள்ளும் என்ற வழக்கம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திருவேங்கடம் அய்யா,

   “என் பதில் வித்தியாசமாக இருக்கும்” – என்று ஒரு தடவை
   சொல்லி இருந்தீர்கள். உண்மை. ஆனால் எப்போதுமே
   குழப்புவேன் என்று நீங்கள் சொல்லவே இல்லையே.

   உங்கள் பின்னூட்டத்திலிருந்து –

   // சோ துக்ளக் இதழில் ஜெ கட்டுரைகளை பெயர்
   அறிவிக்காமல் வெளியிட்டது கா.மை. நினைவுக்கு //

   நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று
   எனக்குப் புரியவில்லை. சோ எப்போது
   துக்ளக் இதழில் ஜெ. கட்டுரைகளை வெளியிட்டார் …?
   அதுவும் பெயர் அறிவிக்காமல்…?

   //எழுதுபவரின் பின்புலம் தான் அவர் எழுத்தின் நம்பகத்தன்மை அளவுகோல் என்றால் அதேபோல மற்றவர்கள் கருத்தை ஆய்வு
   செய்து , எதிர் விளைவுகளை சந்திக்கமுடியுமா?//

   இங்கும் நீங்கள் கூறுவது சரியாக விளங்கவில்லை.
   இருந்தாலும் புரிந்த வரையில் பதில் சொல்கிறேன்.

   ஆம். எழுதுபவரின் பின்புலன் தான் அவரது
   எழுத்துக்களின் நம்பகத்தன்மை. நான் எழுதுகிற
   ஒவ்வொரு இடுகைக்கும் நான் முழுப்பொறுப்பு ஏற்கிறேன்.
   நான் நிச்சயமாக பொய் சொல்ல மாட்டேன்.
   நிச்சயமாக நழுவி ஓட மாட்டேன். எங்காவது தவறிருந்தால் –
   வெளிப்படையாக ஆம்-தவறி விட்டேன் என்று
   ஒப்புக் கொள்வேன். அந்த நம்பகத்தன்மை தான்
   இந்த வலைத்தளத்தையும், என் எழுத்தையும் நம்பி வர
   பல நண்பர்களையும் தூண்டுகிறது.

   // இரவில் அலை வேக அதிகரிப்பால்
   பகல் நேரங்களில் தான் கடல் விரைவாக வாங்கிக்கொள்ளும்
   என்ற வழக்கம். //

   இரவு நேரம் தான்….செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிகிறது. உள்ளே புதிதாக வரும் தண்ணீர் அத்தனையும் அப்படியே வெளியேற்ற வேண்டிய கட்டாயம்.

   இவர்களாக மதகுகளை திறக்கவில்லை என்றால்,
   ஏரியே உடையும்.
   அங்கே திறக்கலாமா வேண்டாமா என்கிற “சாய்ஸ்” ஏது ?

   பகல் நேரங்களில் தான் கடல் விரைவாக உள்வாங்கிக்கொள்ளும்
   என்று overflow ஆகும் 30,000 கன அடி தண்ணீரை அங்கே
   இருக்கும் PWD எஞ்சினீயர்களில் கைகளில் பிடித்து வைத்துக்
   கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • thiruvengadam சொல்கிறார்:

    விரிவான பதிலை மின்ன்ஞ்சலில் பிறகு அனுப்புகிறேன். தற்போதைய அசதாரண நிலை சீர்படுத்த என் கருத்தை தங்களின் முந்தைய பதிவுக்கு என் கருத்தின் மேல் நண்பர்கள் & தங்கள் கருத்து தொடர்பாக என் எதிர்பார்ப்பு பதிவு செய்துள்ளேன். மேலும் பு.தலைமுறை இருதின முன் தமிழக அனைத்து கட்சி பங்களிப்பில் ஒளிபரப்பு பல கருத்துக்கள் கவனிக்க வேண்டியவை. அதிமுக சார்பில் மேல்மட்ட தலைவர் மூலம் அரசு சார்பான தகவல் கிடைக்கச்செய்திருக்கலாம். இந்த அரசு நிர்வாகத்தில் மந்திரிசபை கூட்டுப்பொறுப்பு / அதிகாரப்பரவல் இருப்பதை தாங்கள் உறுதி செய்வீர்களா ?

 6. today.and.me சொல்கிறார்:

  பிணந்திண்ணி அரசியல் நடத்த விரும்பும்
  இந்த ஊடகங்கள் என்ன வேலை பார்க்கப்போகலாம்………
  ——————————–
  01/12/2015 அன்று காலை 11.50 இற்கு மாவட்ட கலக்டர் ஏரியிலிருந்து 5000 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளதாகவும் மேலும் 7500 கன அடி தண்ணீர் திறந்து விடப் படவுள்ளது என்றும் ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பை மேற்கொண்டார் என்பதை மட்டுமே முன் வைத்து பின்னர் எப்படி 28000 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டது என்று வினவியுள்ளனர் …. அவர்கள் முதல் அறிக்கையைப் பற்றி சொல்லியிருப்பது உண்மையே , ஆனால் அவர்களது உண்மை அத்துடன் நிற்கிறது

  ….. முழு உண்மை என்னவென்றால் அதே நாள் மதியம் 1.39 அளவில் இன்னொரு அறிவிப்பையும் மாவட்ட கலக்டர் வெளியிட்டார் … அதில் மிகத் தெளிவாக 20000 கன அடி வரை நீர் திறப்பு அதிகரித்துள்ளதை குறிப்பிட்டும் , அப்பகுதி மக்கள் வெளியேறுமாறும் தெரிவித்துள்ளார் …. அதாவது …. ஊடகங்கள் சொல்வது 01/12/2015 அன்று இரவு தான் வெள்ளம் அதிகரித்தது என்று … ஆனால் அன்று மதியமே முழு அளவிற்கான முன்னெச்சரிக்கை விடப் பட்டுள்ளதே ?

  எதை எதையோ பரப்பி பரபரப்பை ஏற்படுத்த முடிந்த ஊடகங்களால் , இதை பரப்ப முடியாமல் போனதேன் ? மானாட .. மார்பாட ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்களா?

  ——————————–

  https://fbcdn-photos-e-a.akamaihd.net/hphotos-ak-xla1/v/t1.0-0/s240x240/12345685_10205502754676629_8361718906644856748_n.jpg?oh=f0f8e5b3f90c99fdca2f8ecb2c35803b&oe=56D7105B&__gda__=1456860462_c57691792c2b819eb147629123428c62

  https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/12347651_10205502755076639_3941042171037310728_n.jpg?oh=df92782eecaea38a6e17108b4f905b6e&oe=56D572E1&__gda__=1461880823_efc679930d755390434b1fe840134e10

 7. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  ஒழு தகவலை முழுமையாக அறிந்து வெளியிடும் தங்களது விவேகம் பிரமிக்கவைக்கின்றது.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

 8. selvarajan சொல்கிறார்:

  டான் அசோக்கின் தோலை உரித்து தொங்க போட்டு பலருக்கும் அந்த தி.மு.க. அபி {பே } மானியைபற்றி தெரியபடுத்திய உங்களுக்கு ஒரு ” சபாஷ் ” மற்றும் நன்றி …. ! இன்றைய தினமணி செய்தி : —
  // செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: விசாரணைக் கமிஷன் அமைக்கக் கோரி ஆளுநரிடம் கருணாநிதி மனு //
  By சென்னை,
  First Published : 12 December 2015 12:33 AM IST ……. பொதுப்பணி துறை அமைச்சர் மற்றும் —- 5 — முறை முதல்வராக இருந்தவர் ….. ! ஒரு ஏரியை எப்போது திறந்து உபரி நீரை வெளியேற்று வார்கள் என்பது நன்கு தெரிந்து இருந்தும் இவ்வாறு கூறிக்கொண்டு கவர்னரிடம் மனு கொடுப்பது என்பது கேவலமான அரசியல் பிழைப்புக்கு தான் …. !! ஏரியின் உபரி நீரை திறக்கவில்லை என்றால் எவ்வளவு பெரிய ” அழிவு ” ஏற்படும் என்பது இவருக்கு தெரியாதா ….? ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு தானே —- மற்ற அடையார் போன்ற இடங்களிலும் பெய்தது — அந்த நீரும் — உபரி நீரும் சேர்ந்து எவ்வளவு நீர் பெருகியிருக்கும் என்பது இவருக்கு தெரியவில்லையா …? ஏரியின் கால்வாய்கள் — ஆக்கிரமிப்பு ஏற்பட்டது இந்த ஆட்சியில் மட்டும் தானா ….? இவரது ஆட்சியில் நீர்வழிகள் எல்லாம் ஆக்கிரமிப்பு இல்லாமல் இலகுவாக போகும்படி இருந்ததா …? கூவம் சுத்தபடுத்தவும் — படகு சவாரி என்றும் இரண்டு முறை இவரின் ஆட்சியில் போட்ட திட்டங்கள் என்னவாயிற்று ….. ? சிங்கார சென்னை என்ற திட்டம் ” மெரினா வில் ” போட்டிருந்த நடைபாதை கற்களை பெயர்த்து விட்டு வேறு கற்களை பதித்ததோடு நின்று போனதா …. ? முன்பு திரு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போதும் —- சென்றமுறை இதே ஜெயலலிதா ஆட்சியின் போதும் தானே சென்னையில் இருந்த கால்வாய்கள் தூர் வாரப்பட்டன ….. ஒரு பெரிய ஏரியை மூடி தானே இவர் வள்ளுவர் கோட்டம் கட்டினார் ….. வரலாறு மறையாது …. என்னவோ ஜெயலலிதாவின் சொந்த வானத்தில் இருந்து மழையை பெய்ய விட்டது போல அனைத்து எதிர்கட்சிகளும் குற்றம் சொல்லுவது —- வோட்டுகளை பெற மட்டுமே தானே …. ? இவர்களின் இந்த அ . தி. மு. க . அரசு மற்றும் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் — ஆகாமல் இருக்க செய்கின்ற ஏமாற்று வேலைகளுக்கு இந்த விபசார ஊடகங்கள் { டு டே ஆண்டு மி பாணியில் } துணைபோவது வேதனையானது தானே …. ? { பி.கு. :— கணணி நனைந்ததால் சரி செய்த பின்னும் —- பின்னூட்டங்கள் பதியாமல் போகின்றன என்ன செய்வது } …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மன்னிக்க வேண்டும் நண்பரே.

   உங்களது சில பின்னூட்டங்கள் – நிறைய லிங்க்’ களை கொண்டிருந்ததால்,
   என் கணிணியில் இருக்கும் anti-virus software அதை திறக்க
   அனுமதிக்கவில்லை. ஒருவேளை அதுதான் உங்கள் பிராப்லமோ …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. ltinvestment சொல்கிறார்:

  Ithu pondra media kodumaikaluku enna thaan thervu.
  tamil nadu makkal parkum Tv, padikum news paper, ippothu magazine sernthu namathu parvayai oru pakkathirku thirupi, poi nijamakka padukinrathu…..enna seiya.,…

  we need to boycot and ignore those…let them loose market share then real comes out….

 10. k7 சொல்கிறார்:

  Sir, I really respected you very much..but everyone knows whose fault..but still you are supporting jayalalitha..its only one reason everyone knows it..
  Your logic will applied to editor guru murthy Also. Why you accep his article against Maran..really you hurt us very much

  Really I respected

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் k7 (… ? ),

  //but everyone knows whose fault //

  எல்லாருக்கும் உண்மை நிலை தெரிந்திருந்தால்
  நானும் பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கும் மற்ற
  நண்பர்களும் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறோம்…?
  மக்களுக்கு உண்மையை புரிய வேண்டும் என்று தான்
  இவ்வளவு முயற்சிகள் எடுக்கிறோம்.

  ஆனால் என்ன பயன் – ?
  என் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகச் சொல்லும்
  நீங்களே convince ஆகவில்லையே…!

  //Your logic will applied to editor guru murthy
  Also. Why you accep his article against Maran..//

  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் –
  உங்கள் கேள்வி பொருத்தமே
  இல்லாமல் இருப்பது உங்களுக்கு புரிய வரும்.

  நீங்கள் எதை வைத்து இந்த ஒப்பீட்டை செய்கிறீர்கள்….?
  திரு.குருமூர்த்தி அவர்களின் அயராத உழைப்பாலும்,
  தீவிர முயற்சிகளாலும் தான் இந்த வழக்கு
  இந்த நிலைக்காவது வந்திருக்கிறது.
  அவரது முயற்சிகளுக்காக – நாம் அனைவருமே
  அவருக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

  பின் குறிப்பு – தயவு செய்து திறந்த மனதுடன்
  இடுகைகளைப் படித்து வாருங்கள்…இங்கு கூறப்படுவது
  அனைத்துமே உண்மை என்பது –
  இன்றில்லாவிட்டாலும் – நாளையாவது -புரிய வரும்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 12. Vallavan சொல்கிறார்:

  There is no difference between K.M and Don Ashok..
  Both are ADMK and DMK jalraa’s .

 13. theInformedDoodle சொல்கிறார்:

  எழிலின் நேற்றைய பின்னோட்டம் மிக அழகாக இதற்கு விளக்கம் அளித்திருந்தது. திட்டமிட்டு ஒரு தவறான கருத்து பரப்பப் படுகிறது. ஏன் அதற்கு யாரும் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை? குறைந்த பட்சம் இது தவறானது என்று கூட யாரும் விளக்கம் அளிக்கவில்லையே, ஏன்?

  அதே போல, தொலைக்காட்சியிலாவது தோன்றி முதல்வர் மக்களுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். இது வெறும் சிம்பாலிக் தான் என்றாலும்!

 14. LVISS சொல்கிறார்:

  The floods coming close to the election time must be a worry for the ruling party –Any opposition party will try to make use of it to promote their causes –Having said that I wonder whether this will affect the prospects of the ruling party in a big way — Till now there has been no major complaint against the party —

 15. manudan சொல்கிறார்:

  செம்பரம்பாக்கம் ஏரி அதிகளவில் திடீரென திறக்கப்பட்டதாக என்னமோ டான் அசோக் தான் கண்டுபிடித்தது போலவும் அவர் திமுககாரர் என்பதால் தான் அவதூறு செய்வதாகவும் ‘நிறைய வேலை செய்து’ கண்டுபிடித்திருக்கிறீர்கள். இந்த விஷயத்தை முதலில் வெளியிட்ட வட இந்திய ஆங்கில செய்தி நிறுவனங்கள், அதை சுட்டிக்காட்டியே அறிக்கை வெளியிட்ட அன்புமணி, ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லோரையும் விட டான் அசோக் தான் உங்கள் டார்கெட். ஏனென்றால் அவர் திமுக, கருணாநிதி அனுதாபி?.நல்ல இருக்கு சார் உங்க துப்பறியும் பணி.அதெல்லாம் சரி இதெல்லாம் இட்டுகட்டிய பொய் என்பதை நிரூபிக்க உங்களிடம் வேறெந்த ஆதாரமும் இல்லையா? உங்களிடம் இல்லாதது குற்றமில்லை தான்.ஆனால் தொட்டதெற்கெல்லாம் அவதூறு வழக்கு போடும் தன்னிகரற்ற தலைவியோ அவரது பொ ப து அமைச்சரோ தங்கள் பக்கம் நியாயம் இருந்தால் ஒரு வழக்கை இத்துனை பேர் மேலும் போட்டிருக்கலாமே?அவர்களிடமும் ஆதாரம் இல்லையா?அப்படியானால் அவர்கள் தவறிழைத்திருக்கிறார்கள் என்பதாக நம்பலாம் தானே?

  டான் அசோக் தன்னை திமுக காரராக அறிவித்துக் கொண்டு முதுகெலும்போடு ஜால்ரா தட்டுகிறார்.ஆனால் நீங்களோ ?

 16. ரிஷி சொல்கிறார்:

  எனது கருத்தினை முந்தையப் பதிவினில் தெரிவித்திருக்கிறேன்.

 17. வளவன் சொல்கிறார்:

  நண்பர் கா.மை அவர்கள் இங்கு டான் அஷொக் அவர்கள் பற்றி தெரிவித்த கருத்துக்கள் யாவும் சட்டி பானையை பார்த்து கரி என்று சொல்லி சிரித்த கதைதான்..

 18. thiruvengadam சொல்கிறார்:

  Dear Sir,

  Due to my respect to your Postings & Regard to your Credibility on your
  Public interest, opted to respond privately to avoid embarrassment (even if
  you accept the errors).

  // சோ துக்ளக் இதழில் ஜெ கட்டுரைகளை பெயர்
  அறிவிக்காமல் வெளியிட்டது கா.மை. நினைவுக்கு

  When J was only an Actress, Mr. Cho , who personally know her caliber &
  passion on Reading, he invited her to present her ideas in his magazine. To
  get a correct impact ,he concealed the Writer for some issues & then only
  he revealed that was J. Since you have reader of Thuglak , hoped you might
  know this. You may please get this checked from other sources.

  //எழுதுபவரின் பின்புலம் தான் அவர் எழுத்தின் நம்பகத்தன்மை அளவுகோல் என்றால்
  அதேபோல மற்றவர்கள் கருத்தை ஆய்வு
  செய்து , எதிர் விளைவுகளை சந்திக்கமுடியுமா?//

  Politicians are plying Survival game. Whether the ADMK current Asst
  Propaganda Secretary`s previous opinions on J hold good now ? Likewise
  anybody can Express rather just refer the past deeds of J now, ?

  For a posting by this Don about his leader`s respect to Kamaraj, I asked
  him to his Cartoons in old issues of Murasoli how much insulted.

  When MGR was very serious, but before his end , they purposely spread
  rumors , the same was returned by ADMK when they have such situation.

  It is needless to remind , who taught about official procedures &
  processing Files & her fate for joining Swamy.

  Regarding my reference about opening Lake is based on Others postings, But
  your feedback is like Pattimanra argument.

  Lately some other friends also confirmed the points of Don from others also.

  We may differ from MK, but his quick response in processing files not
  questioned. What about the present ? Initial stages , he during travel in
  Trains for long journeys, the files signed will be sent to Secreatriat in
  opposite trains.

  In the same, when J assumed, the Officials felt happy about her caliber in
  understanding the problems. What happened to that now ?

  Regarding your suspicion on Control in Vikatan , it is a must to check with
  statuary bodies. In this connection, I request a msg abt Stalin was away
  at that time ( with negative caption ) . otherwise they would followed M K
  Tv on Kanimozhi news & Jaya Tv on J cases.

  In conclusion, I wish to inform that when we are neutral, consider the
  matter in all sides.

  *S.Thiruvengadam*
  Prayer-என் நிலையும், நினைப்பும் சமமாக இருக்க வேண்டுகிறேன்.இறைஅருளால்
  நினைப்பை விட நிலை உயர்ந்தால் மகிழ்ச்சி. நிலையைவிட நினைப்பை உயர்த்திவிடாதே.

 19. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இங்கு எல்லோருக்குமே (பத்திரிகைகள்), எப்படி முன்’கூட்டியே கருணானிதியுடனும், ஸ்டாலினுடனும் துண்டு போட்டு வைத்துக்கொள்வது என்பதுதான். எல்லாப் பத்திரிகைகளும் 2011 தேர்தலுக்கு 6 மாதம் முன்பு எழுதியதற்கும் அப்புறம் எழுதியதற்கும் உள்ள வித்யாசத்தைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். ஊடகங்கள் எல்லாம் அபரிமித பணத்தால் விலைக்கு வாங்கப்பட்டபின்பு, இவர்கள் ‘நடுனிலை எழுத்து என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

  விகடன் குழுமம், சன் தொலைக்காட்சியை நம்பி ஒரு தொழில் ‘நடத்துகிறது. அப்புறம் அதற்கு எப்படி நடுனிலைமை இருக்கும்? வைகோ ரொம்பகாலத்துக்கு முன்பே விகடன் பத்திரிகையில் தி.மு.கா பெரும் பங்கு வைத்திருக்கிறது என்று சொன்னார்.

  இன்றைக்கு, பாலன் அவர்கள் வளர்த்தெடுத்த பத்திரிகை நக்கீரன் நிலைமைக்குத் தாழ்வது வருத்தமாகத்தான் இருக்கிறது.

  தமிழ் மக்களும் (கணிணி ஊடக மக்கள்), கட்சி சார்பாகத்தான் சிந்திக்கிறார்கள்.

  கா.மை.. நீங்கள் தொடர்ந்து உங்கள் மனதிற்குப்பட்ட நேர்மையானவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவாருங்கள்.

 20. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  நெல்லைத் தமிழன் கருத்து மிகச்சாியாக உள்ளது.விகடனின் தரத்தை மிகச் சாியாக கணித்துள்ளார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.