ஒரு கொள்ளை – இன்னொரு கொள்ளைக்கு – சர்டிபிகேட் கொடுக்கிறது …!!!

RAJE-GADKARI_

Enforcement Directorate –
விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது,

திருவாளர்கள் ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி, கட்காரி
என்று ஒவ்வொரு கேபினட் அமைச்சராக, வரிசையில் வந்து
எல்லாம் சட்டப்படியே நடந்திருக்கிறது – விதிமீறல் ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பது உலகில் எந்த ஜனநாயகத்திலாவது ஏற்கப்படுமா?

கேள்வி கேட்டால் – எங்களுக்கு 282 சீட் இருக்கிறது.
மக்கள் 5 ஆண்டுக்காலம் ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உங்களால் எங்களை அசைக்கக்கூட முடியாது என்கிறார்கள்…
அசைக்க முடிகிறதா இல்லையா என்பது பாராளுமன்றம்
கூடும்போது தான் தெரிய வரும்….

அதற்கு முன்னரே கூட யாராவது பொது நல மனு (PIL ) மூலம்
உச்சநீதிமன்றம் சென்றாலும், கொஞ்சம் அசைக்க வாய்ப்பு இருக்கிறது.

“ஜீரோ லாஸ்” கபில் சிபல் காணாமல் போனது எதனால் என்பது இவர்கள் ஞாபகத்திற்கு வர மாட்டேனென்கிறது.
மக்கள் நினைத்தால் – இவர்களுக்கும் அதே கதி தான் என்பது
புரியாமல் தலைகால் தெரியாமல் குதிக்கிறார்கள்.

“The allegations against Vasundhara Raje are
baseless…. Vasundharaji legally, logically, ethically
is completely correct. There is no fault of hers
anywhere,”

“All transactions connected to Dushyant singh
are legal, everything is shown in I.T.returns.
There is no corruption – no fraud….”

( பத்து ரூபாய் ஷேர் ஒன்று 96,180 ரூபாய் என்று 7.83 கோடி ரூபாய்க்கு விற்றதும் / வாங்கியதும் எதில் சேரும் என்பதற்கு மட்டும் ஒரு பயலும் வியாக்கியானம் சொல்லக் காணோம். )

இனி, பாஜக ஆட்சி முடியும் வரையில் –
வருகின்ற புகாருக்கெல்லாம் –
புர்தி புகழ் கட்காரிஜியே சான்றிதழ் கொடுத்து விட்டால் போதும்.
CBI, Enforecement Directorate,Income Tax Department,
Court எல்லாவற்றிற்கும் 4 வருடம் லீவு கொடுத்து விடலாம்.

பாஜக தலைமைக்கு கொஞ்சமாவது முன்யோசனை இருந்தால் –
சர்டிபிகேட் கொடுக்க கட்காரிஜியை அனுப்புமா ?

கட்காரிஜி ஏற்கெனவே பல விஷயங்களில் பிரசித்தி
பெற்றவர் ஆயிற்றே …? ஏற்கெனவே பலமுறை விமரிசனம்
தளத்திலேயே அவர் புகழ் பாடி இருக்கிறோமே ……

சாம்பிளுக்கு சில –

– நிதின் கட்காரியை தூக்கி எறிந்திருக்க வேண்டும் பாஜக –
ஆர் எஸ் எஸ் தலைமை !

( vimarisanam.wordpress.com/2012/10/26/ )

காங்கிரஸ் கட்சிக்கு -ஊழலைப் பொறுத்த வரையில் –
நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்
காட்டாமல் பாஜக தலைமை விடாது போலிருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக கர்னாடகாவில் எடியூரப்பா
போட்ட ஆட்டங்களை எல்லாம் சகித்துக் கொண்டு
அவர் தாடையைப் பிடித்து கொஞ்சிக்கொண்டிருந்தது
பாஜக தலைமை. வந்தது வரட்டும் என்று அப்போதே
அவரைத் தூக்கி எறிந்திருந்தால் பாஜகவுக்கு கர்னாடகாவில்
லிங்காயத்து ஓட்டுக்கள் போனாலும், மரியாதையாவது
மிஞ்சி இருக்கும். அவர் சொன்னதற்கெல்லாம் ஆட்டம்
போட்டது போக இப்போது அவர் தனிக்கட்சி துவங்குவதாக
வேறு அறிவித்து விட்டார்.
இப்போது லிங்காயத்து ஓட்டும் போச்சு –
மக்களிடையே மரியாதையும் போயிற்று !

அடுத்து -இப்போது நிதின் கட்காரி. பாஜக கட்சியின்
தேசியத் தலைவர் மீதே அடுக்கடுக்கான புகார்கள்.
அவரது டிரைவரும், அக்கவுண்டண்டும்
ஆளுக்கு 6 கம்பெனிகளில் டைரெக்டர்கள்
ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறபோது,
கொடுத்திருக்கிற அட்ரஸ் எல்லாம் போலி என்கிறபோது,
அரசாங்க காண்டிராக்டர்கள் மறைமுகமாக
அவர் நிறுவனத்தில் முதல் போட்டிருக்கிறார்கள்
என்கிறபோது –
முதல் நிலையில் – prima facie –
இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?

———————

உத்தமரா… வில்லனா ..?
நிதின் கட்காரியின் கதை சொல்வதென்ன ….?

( https://vimarisanam.wordpress.com/2015/05/22/ )

…….
………பொதுவாக கரும்புச்சக்கையை பயன்படுத்தி தான் மின் உற்பத்தி
செய்யப்பட வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத சமயங்களில்
25 % வரை நிலக்கரியையும் சேர்த்து பயன்படுத்தலாம் என்பதும்
சலுகை கொடுக்கப்பட விதிக்கப்பட்ட நிபந்தனைகள்.

ஆனால், ஜூன் 2009-ல் – இந்த நிறுவனம் முழுக்க முழுக்க
நிலக்கரியையே பயன்படுத்துகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட சலுகை சட்ட
விரோதமாகிப் போனது.

வாங்கிய கடனின் தவணைகளை உரிய காலத்தில் செலுத்தத்
தவறியதால், மார்ச் 2007-லேயே இந்த நிறுவனத்தை,
வாராக் கடன் ( non-performing assets ) வகையில்
சேர்த்திருக்கிறார்கள்.

சில தரித்திர கடங்காரர்களிடம்,(சாவு கிராக்கி ….? )
கடன் கொடுத்தவர்கள் – இருப்பதை கொடுத்துத் தொலை என்று
கிடைப்பதை வாங்கிக்கொண்டு, மீதி கடனையும் வட்டியையும்
தள்ளுபடி செய்வது போல்,

ஒரு முயற்சி, வேண்டுமென்றே இந்த நிறுவனத்தின் கடனில்
மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ( அதற்கு இவரது அரசியல் செல்வாக்கு
பயன்படுத்தப்பட்டிருக்கலாம் ..! )

Non-Performing Asset -லிருந்து, இயன்ற வரை
வசூல் செய்கிறோம் என்கிற போர்வையில்
கடன் கொடுத்த IREDA நிறுவனம், “புர்தி” நிறுவனத்திடமிருந்து
வரவேண்டிய 84.12 கோடி ரூபாய்க்கு பதிலாக 71.35 கோடி ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டு கணக்கை செட்டில் செய்து விட்டது.

( மிச்சப்பணம் 12.77 கோடியை நீங்களும் நானும், நமக்கு தெரியாமலே மறைமுகமாக கொடுத்திருக்கிறோம்… அம்புடுதேன் விஷயம் …!!! மந்திரி அல்லவா … கெட்டிக்காரராகத்தானே இருப்பார் …!!! )

இப்போது வெளிவந்திருக்கும் CAG ரிப்போர்ட்டில் இந்த முறைகேடுகள் எல்லாம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

——————

மாண்புமிகு நிதின் கட்காரிஜி’ யின் முன்னாள் விவகாரங்கள் ……
( https://vimarisanam.wordpress.com/2015/05/24/ )

“காசு வாங்கினாலும் கூட வேலையை கச்சிதமாக முடித்து
விடுவார் ” – இது கட்காரிஜி பற்றி அவரது பாஜக அன்பர்கள்
பெருமையுடன் பேசும் விஷயம்.

கமிஷன் வாங்குவதை பெருமையுடன் கூறும் அளவிற்கு
சென்று விட்டார்கள் பாஜக நண்பர்கள் ……….

…..

ஏன் அந்த கம்பெனியின் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணம்
செய்தீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு –
அந்த மந்திரி பதில் கேள்வி கேட்கிறார் ” நடுக்கடலில் இருந்த
அந்த கப்பலுக்கு நானென்ன நீந்தியா போக முடியும் …? “

மந்திரி இதற்காக பணம் எதாவது கொடுத்தாரா ?
( கொடுத்தால் -அப்புறம் அவர் மந்திரியாக இருப்பதற்கே
லாயக்கில்லை என்று அர்த்தமாகி விடுமே….. எனவே
…… கொடுக்கவில்லை !!!)

ஆனால் “அது அவர்களின் சொந்த விமானம்.
நான் அவர்களது விருந்தினராக அங்கு சென்றேன்..
டிக்கெட்டு வாங்கி பயணம் செய்யக்கூடிய விமானமாக
இருந்திருந்தால், நானே பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி
இருப்பேன்” என்கிறார் மந்திரி.

தன் செயலை இன்னும் நியாயப்படுத்த அய்யா மேலும் கூறுகிறார் –
” 2013- ஜூலையில் நான் மந்திரியாக இல்லை,
பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை…
எனவே எந்த பதவியையும் பயன்படுத்தி நான் இந்த சலுகைகளை
அனுபவித்ததாக எவனும் குற்றம் சாட்ட முடியாது…!!!

—————————

மேலே கூறப்பட்டிருப்பதெல்லாம் சாம்பிள்கள் தான்.
முழு இடுகையையும் இன்னும் படிக்காத நண்பர்கள்,
மேற்கண்ட தளங்களுக்குச் சென்றால், கட்காரிஜி அவர்களின்
அருமை-பெருமைகளை ஓரளவு விவரமாக அறியலாம்.

“எந்தவித ஊழல் புகாரும் இல்லாமல் ஒரு ஆண்டை முடித்து விட்டோம்” என்று பாஜக தலைவர்கள் பெருமை பேசி
வாய் உலர்வதற்குள் வரிசையாக புகார்கள்
வலம் வரத்துவங்கி விட்டன. இன்னும் வந்துகொண்டே இருக்கின்றன…..

——————–
….மக்கள் நினைத்ததும் …. நிகழ்ந்ததும்….!!!
(வலையில் பார்த்த ஒரு நல்ல கார்ட்டூன் …)

nm and mm comparison

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஒரு கொள்ளை – இன்னொரு கொள்ளைக்கு – சர்டிபிகேட் கொடுக்கிறது …!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  Did anybody came across the opinion reg this from current ” Uththamar Ganthi” from our state who has the feasibility to enter all dept in central govt?.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் திருவேங்கடம்,

   நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை.
   தயவு செய்து தெளிவாகச் சொல்லுங்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்.

 2. Pingback: ஒரு கொள்ளை – இன்னொரு கொள்ளைக்கு – சர்டிபிகேட் கொடுக்கிறது …!!! | Classic Tamil

 3. paamaran சொல்கிறார்:

  இனம் — இனத்தோடு சேர்கிறது ! இதற்கு எல்லாம் அசரமாட்டான் — இந்தியன் !! அவன் பார்க்காததா ? என்ன – காங்கிரஸ் செயலின் ” மறு ஒலிபரப்பு ” என்று கூறிவிட்டு ” யோகா ..யோகா..யோகா…யோஹைய்யா ” என்பான் …!!

 4. Siva சொல்கிறார்:

  It’s very painful to read that every government servants (from The President to Prime minister to Chief-ministers to small ministers to officers to clerk to door-keepers) and most of the private business men and women are corrupt in India. They all are involved in one or other unethical practices of money-making!

  I do not see any light in the dark tunnel of country’s progress! Because those who has showed up as saviour of people from the corruption and malpractices (example AAP) are also involved in these dirty things.

  So all mattai (human) in India are same as those from the same dirty kuttai (practice).

  God bless the country from unknown/unseen place!

 5. A சொல்கிறார்:

  Cartoon is Excellent Sir

 6. ravi சொல்கிறார்:

  km.. not relevant to this article.. but really a serious issue..
  this will escape easily from main stream media

  http://www.firstpost.com/world/zaki-ur-rehman-lakhvi-released-this-wont-be-the-last-time-china-protects-pakistan-from-un-action-2309136.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.