தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ……? (தீர்ப்பும் -விவாதங்களும் தொடர்ச்சி-2 )

fort st. george in 1640

tn foto

தமிழ்நாட்டின் வித்தியாசமான சில பிரச்சினைகளுக்கு சரியான
தீர்வு காணப்பட வேண்டும்….
என்ன வித்தியாசமான பிரச்சினைகள் …?

– காவிரி நதி நீர் பங்கீட்டில் கொடுக்கப்பட்ட இறுதித்தீர்ப்பு நடைமுறைப்
படுத்தப்பட வேண்டும். அதற்கு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம்
விரைவாக அமைக்கப்பட வேண்டும்…..

– கர்நாடகா புதிய அணைகளை தன்னிச்சையாக கட்டுவது
தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

– முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பிற்கு மத்திய போலீஸ்
நிறுத்தப்பட வேண்டும். கேரள அரசு தன்னிச்சையாக அங்கே இயங்குவது
தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

– விரைவில் பேபி அணையை பலப்படுத்தும் வேலைகளை முடித்து விட்டு,
நீரை 152 அடி வரையில் தேக்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

– காவிரியிலும், கொள்ளிடத்திலும் – மேட்டூர் தொடங்கி, கடைமட்டம்
வரை ஒவ்வொரு 20 கிலோமீட்டர் தொலைவிலும் ஒரு சிறிய
தடுப்பணை கட்டப்பட்டு, வெள்ளம் வரும்போது நீரை அவற்றில்
தேக்கி நிறுத்திக் கொண்டு- பின்னர் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு
செய்யப்பட வேண்டும்.
( இதற்கான திட்டம் ஓரளவு ஏற்கெனவே
தமிழக அரசால் தயார் செய்யப்பட்டு விட்டது – நிதி ஒதுக்குவதும்,
செயல்பாட்டில் இறங்குவதும் தான் விரைவு படுத்தப்பட வேண்டும். )

– தமிழ்நாட்டிற்கு உள்ளேயே, காவிரி, வைகை, தாமிரபரணி, ஆறுகளை
இணைக்க ஏற்கெனவே போடப்பட்டு நிதி இல்லாததன் காரணமாக
காத்திருக்கும் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.

– தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
மீனவர்களை – கள்ளக்கடத்தல் செய்கிறார்கள், போதை பொருட்களை
கடத்துகிறார்கள் என்று சொல்லி அவமானப்படுத்தும் மத்திய அரசுக்கு
பாடம் கற்பித்து, வழிக்கு கொண்டு வரவேண்டும்.

– தமிழகம் சம்பந்தமாக உச்ச நீதி மன்றத்தில் நீண்டகாலமாக
கிடப்பில் கிடக்கும் – காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது,
முல்லைப்பெரியாறு காவல் / மத்திய போலீஸ் பாதுகாப்பு,
கச்சத்தீவை மீண்டும் பெறுவது போன்ற வழக்குகள்
விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட முயற்சிகள்
மேற்கொள்ளப்பட வேண்டும்.

– 24 ஆண்டுகளாக முதலில் தூக்குதண்டனையை எதிர்நோக்கியும்
பிறகு தனிமைச்சிறையில் ஆயுளைக் கழித்துக் கொண்டும் இருக்கும்
5 தமிழர்களின் வழக்குகளுக்கு விரைவாக விடிவு காண உச்சநீதிமன்றம்
(சுப்ரீம் கோர்ட் ) உரிய முறையில் அணுகப்பட வேண்டும்.

– வட இந்தியாவிலிருந்து ( ஹிமாசல் பிரதேசம் மற்றும் ஒடிஷா )
( உபரி மின்சாரம் ரெடியாக இருக்கும் மாநிலங்கள் … ) தமிழகத்திற்கு
மின்சாரம் கொண்டு வரும் வழித்தடங்கள் உச்சகட்ட வேகத்துடன்
நிறைவேற்றப்பட்டு, தமிழகத்தின் தற்போதைய மின் தேவைகள்
பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒடிஷாவில் உருவாக்கப்படும்
புதிய நிலக்கரி சுரங்களில் இரண்டு தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்பட
வேண்டும்.

– மதம், மொழி ஆகியவற்றில் எந்தவித அரசு / அரசியல் குறுக்கீடுகளும்
இல்லாமல் – அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும், அனைத்து மொழி
பேசும் மக்களும் – பாதுகாப்போடு வாழ வழி செய்யப்பட வேண்டும்.

– இந்தி / சம்ஸ்கிருதம் – இரண்டு மொழிகளையும், நேரடியாகவோ,
மறைமுகமாகவோ திணிக்கும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும்.

விரும்புவோர் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள தனிப்பட்ட
மொழி-பயிற்சி நிலையங்கள் ( தனியார் துறையில் – கம்ப்யூட்டர் செண்டர்,
டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போல ) அமைய ஊக்குவிக்கலாம்.

– மக்கள் அனைவருக்கும் நல்ல மருத்துவ வசதி அரசுத்துறையிலேயே –
வசதி குறைந்தவர்களுக்கு இலவசமாகவும், வசதி உள்ளவர்களுக்கு
நியாயமான அளவில் காசு வசூலித்தும் –
கிடைக்க ஏற்பாடு
செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசின் புதிய மருத்துவ கல்லூரிகளை உருவாக்கும்
திட்டத்திலிருந்து – தமிழகத்திற்கான உரிய உதவியை
போராடியாவது பெற வேண்டும்.

– தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 50 புதிய மருத்துவ கல்லூரிகளையும்,
அதனுடன் இணைந்த தரமான மருத்துவ மனைகளையும் மாநில அரசும்,
மத்திய அரசும் சேர்ந்து உருவாக்க வேண்டும்.

மேற்கண்டவற்றில் பல விஷயங்களுக்கு – மத்திய அரசுடன் –
சரியான அணுகுமுறையை மேற்கொண்டு, தேவைப்படும் நிதி மற்றும்
அனுமதிகளை பெற – சாதுரியமாகவும், தைரியமாகவும்
செயல்பட வேண்டும்.

மத்திய அரசுடன் பொதுவாக நல்ல உறவை பேணவும்,
தேவைப்படும்போது எதிர்த்து போராடி, தேவையானவற்றை பெறவும்

– தகுந்த சாமர்த்தியமும், துணிச்சலும் மாநில அரசுக்கு வேண்டும்.

-இவையெல்லாம் நமது உடனடி தேவைகள்.
கூடவே தேவை – சிறப்பான மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை
உருவாக்கி நிறைவேற்றவல்ல திறமையானஅரசு நிர்வாகம்.

———————————————————–

இவற்றை எல்லாம் முழுவதுமாக இல்லாவிடினும்,
ஓரளவாவது செயல்படுத்திக் காட்டக்கூடியவர் என்று
அடையாளம் காட்டக்கூடிய
தலைவர்கள் நம்மிடம் யார் உள்ளார் …?

நமது ஜனநாயக, தேர்தல் முறைகளில் – நாம் விரும்பும் ஒரு
நல்ல மனிதரை தலைமை நிர்வாகியாக ( முதலமைச்சராக )
கொண்டு வந்து விட முடியாது.

பெரும்பான்மை மக்களால் ( அதாவது தேர்தலில் பெரும்பான்மை பலம்
பெரும் கட்சியால் ) தேர்ந்தெடுக்கப்படுபவர் யாரோ – அவர் யாராக
இருந்தாலும், எத்தகைய தகுதியோ, குணங்களோ இருந்தாலும் –
அவர் தான் முதலமைச்சராக பொறுப்பேற்க முடியும்…..

எனவே – நம் விருப்பம் போல் யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது
என்கிறபோது – களத்தில் ( போட்டியில் ) இருப்பவர்களில்
யார் தேவலை … ( who is better among the lot – available ) என்று
யோசித்து தான் ஓட்டு போட வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் நல்ல, ஒழுக்கமான, நேர்மையான, திறமைசாலியான
தலைவர் களத்தில் இருக்கிறாரா – இல்லையா ? இருந்தால் அவர் யார் ?
இல்லையென்றால் – இருப்பவர்களுள் யார் தேவலை ….?
என்கிற ஒப்பீட்டின் மூலம் தான் தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது.

வெகு விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்கள் வரவிருக்கின்றன.

இப்போதைக்கு –
முதலமைச்சர் வேட்பாளர்களாக களத்தில் நிற்பவர்களின்

பெயர்கள் கீழே –
(வயதின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்)

கலைஞர் கருணாநிதி அவர்கள் –
செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் –
மு.க. ஸ்டாலின் அவர்கள் –
விஜய்காந்த் அவர்கள் –
டாக்டர் அன்புமணி அவர்கள் –
திருமதி தமிழிசை அல்லது வேறு யாராவது ஒரு பாஜக வேட்பாளர்…..

(திருவாளர்கள் வைகோ மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோரும்
சில சமயங்களில் எதிர்கால முதலமைச்சர் என்று
அடையாளம் காட்டப்பட்டபோதும், தற்போதைக்கு இருவருமே
அந்த பதவிக்கான போட்டியில் இல்லை என்பதால்
அவர்கள் பெயர் சேர்க்கப்படவில்லை…)

திரு விஜய்காந்த், திருமதி தமிழிசை ஆகியோரைத் தவிர மற்ற
அனைவருமே எதாவது ஒரு விதத்தில் ஊழல் வழக்கில் அடையாளம்
காணப்பட்டவர்களே. இவர்கள் இருவரும் இன்னமும் ஊழல் பட்டியலில்
சேராததற்கு காரணம் – அவர்கள் இது வரை எந்த பதவியும்
வகிக்கவில்லை என்பதாகக் கூட இருக்கலாம்.

————————-

இந்த இடுகையில் – இது தான் முக்கிய கட்டம் –

ஊழலைப் பற்றி நாம் நிறைய பேசுகிறோம்.
ஆனால், ஊழலில் சம்பந்தப்படாதவரை தேர்ந்தெடுக்க
நமக்கு வாய்ப்பு இருக்கிறதா ….?

வரப்போகிற தேர்தலில் உங்களிடம் முதலமைச்சரை
தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கொடுத்தால் –
நீங்கள் மேற்படி தலைவர்களில் -யாரை தேர்ந்தெடுப்பீர்கள் ….?
( பட்டியலில் இருப்பவர்களைத்தவிர வேறு சாய்ஸ் கிடையாது
என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ….!!!)

நண்பர்களின் சுருக்கமான, தெளிவான கருத்துக்களை –
பின்னூட்டங்களில் எதிர்பார்க்கிறேன்.
ஒரு நேர்மையான, வெளிப்படையான – விவாதத்தை எதிர்பார்க்கிறேன்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

43 Responses to தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ……? (தீர்ப்பும் -விவாதங்களும் தொடர்ச்சி-2 )

 1. Killergee சொல்கிறார்:

  நான் வந்தால் ? சரியாகும் ஆனால் ? மக்கள் கல்லாலே அடிப்பாங்களே… காரணம் நான் நல்லவன் சத்தியமாக நான் நல்லவன்தான்கோ…..

 2. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  If we have to select an able, situational-decision-making, making government machinery work the way he/she prefers, none can match MuKa, even in whole of India….. But unfortunately he is not helpful even to him and his partymen rather than to their family members….. Next assembly election could be a direct fight between DMK & ADMK…… I commented here long back that BJP may bend JJ through this case in high court or supreme court by means of getting seats in Assembly elections forming an alliance(releasing her saying they are against corruption, pointing hands on DMK) – I feel the situations are going along that way…. Next choice wud be DMK X ADMK X BJP alliance(with DMDK in alliance with DMK or BJP)……. in both the cases it is better to choose ADMK – not bcoz the present govt is doing well…… JJ’s good relations to RSS top brass, also if BJP is helped to open a/c in assembly, being a friend to central govt – are all good signs to select JJ…… These all are basis JJ may win the election 16….. but for that she shud do something in the next coming months and after that can face the elections – which would be better for her………

  Reason for not speaking about Stalin – I dont think the present crisis, with JJ out and to face her, Stalin may not be a right choice……MuKa has his known knowledge of doing politics, which has had a great intelligence in it…… Stalin’s way was very well aware in the last parliament election – candidate selection was one good example…… he neither trusts his own knowledge nor party’s district secretaries or senior hands…… Same is the case with JJ – but ADMK’s vote bank and DMK’s vote bank are entirely different and also how neutralists will see Stalin and JJ against each other will favor only JJ……

  Considering above all, JJ may be the right choice (provided nothing cooks up like calculation issue, appeal in supreme court etc)………

  Sanmath AK

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் சன்மத்,

   நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே பார்க்கிறேன்.
   என்ன ஆயிற்று … ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Sanmath AK சொல்கிறார்:

    KM Sir,

    Thanks for remembering!!

    Have been reading all your posts. Continuous work pushed me through with just reading. If I sit to put some comments, I want to do it with some sensibility as I do not want to waste your space.

    Sanmath AK

 3. Subramani Ravi சொல்கிறார்:

  vijayakanth than sariyanavar ean enral nadikar sanga thalaivara avar thiramai anaivarukkum thariyum

  • today.and.me சொல்கிறார்:

   ஆமாம். விஜயகாந்த் மற்றும் அவரது தொண்டர்களுக்கு ஆட்சி நடத்தத் தேவையான, அவசியமான, மேலும் ஒரு added தகுதி. மற்றவர்களின் கொண்டாட்டத்தை சகிக்கமுடியாத (அ)சகிப்புத்தன்மை.. வாழ்த்துக்கள்.
   http://www.seythigal.com/?p=6340

 4. Pingback: தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ……? (தீர்ப்பும் -விவாதங்களும் தொடர்ச்சி-2 ) | Classic Tamil

 5. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி
  ஜெ மீண்டும் தமிழக முதல்வரானால் தமிழகம் சிறப்பான நிலையை அடையும் – பொன்ரா – தினமலரில்
  http://www.dinamani.com/latest_news/2015/05/13/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/article2812357.ece

  so, தமிழிசை/பாஜகவை லிஸ்ட்ல இருந்து எடுத்துடலாமா??

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  விஜயகாந்துக்குத் தலைமைப் பண்பு இல்லை. அமைச்சர் அடிவாங்குவதைப் பார்க்கவேண்டுமென்றால், நகைச்சுவை Press Meeting வேண்டுமென்றால் இவரைத் தேர்ந்தெடுக்கலாம். இவருக்கு ஜெக்கு அப்புறம்தான் (காலத்துக்கு) வாய்ப்பு.

  அன்புமணி – சாதியை மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சி. வாய்ப்பு நிச்சயமாக இல்லை. ஆனால், முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவர். Looks sensible. (பேச்சிலும், நடத்தையிலும்). சுத்தி இருக்கும் கட்சிக்காரர்கள் ரவுடிகள் மாதிரித் தோற்றம் தருகின்றனர்.

  பா.ஜ.க – இதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. இந்துக்களை ஆதரிக்கும் அவர்கள் போக்கு நல்லதுதான். ஆனால் அது மட்டுமே இருந்தால், வெறும் கலவரம்தான் வரும்.

  மு.க ஸ்டாலின் – ஓரளவு சரியானவர். அவருக்கு இப்போது மிக முக்கியமானது, தனியாகக் கட்சியை மேனேஜ் செய்யும் திறமை. இது கருணானிதிக்கு அப்புறம்தான் தெரியும். ஒருவேளை அந்த சமயத்தில் தைரியமாகச் செயல்பட்டு, நல்லது செய்யமுற்பட்டால் நல்ல establish ஆக வாய்ப்புண்டு.

  கருணானிதி – சரியான அரசியல்வாதி. பல கட்சிகளும் அவருடன் உறவை அவர் தலைமையில் மரியாதையுடன் தொடர முடியும். ஆனால் அவர் தன்னுடைய மரியாதையை பொதுமக்களிடையே நிச்சயமாக இழந்து நிற்கிறார். அவருக்கு அவர் குடும்பம்தான் முக்கியம், அவர்களுக்குத்தான் பதவி, தன் சொந்த நன்மைக்காக எதையும் விட்டுக்கொடுப்பார் என்று மக்களுக்கு நிச்சயமாகத் தெரியும்படிதான் அவரின் கடந்த 15 வருட அரசியல் வாழ்க்கை இருந்தது.

  ஜெயலலிதா – நல்ல தேர்வு. அவருக்குத்தான் வாய்ப்பு. அவரின் ஒரே பிரச்சனை, அவரின் வயதுதான். நல்ல ஆரோக்கியமுடன் இருந்தால், மற்ற எல்லோரையும்விட மிகச் சரியானவர். தமிழ்னாட்டைப் பாதிக்கும் பிரச்சனையை அவர் compromise பண்ணிக்கொள்ள மாட்டார். மக்களிடம் கெட்ட பெயர் எடுக்காமல் பார்த்துக்கொள்வார். (இந்த குணத்தால் தமிழ் மக்களுக்குத்தான் நட்டம். அவர் செய்த பல நல்ல திட்டங்கள் அவருக்கு பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் வெறுப்பைக் கொண்டுசேர்த்தது 2004ல்). கெட்ட பெயர் எடுக்கும் அமைச்சரை எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளியேற்றுவார். Her way of managing her party is also commendable. ஜனனாயகம் என்றெல்லாம் பேசினாலும், கருணானிதிக்கு ஜெ.க்கு உள்ள தைரியம் சுட்டுப்போட்டாலும் வராது.

  ஜெவைத் தோற்கடிக்க கருணானிதி, கூட்டணியை மட்டுமே நம்பும். எனக்கு அது கைகொடுக்கும் என்று தோன்றவில்லை (Unless JJ decides to go with BJP, which she will not do)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் நெல்லைத்தமிழன்,

   நல்ல, வெளிப்படையான, விவரமான
   கருத்தூட்டத்துக்காக நன்றி.
   மற்றவற்றிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஊழல்:
  ஊழல் என்று பார்த்தால் கருணா, ஜெ, ஸ்டாலின், அன்புமணி என்று யாருக்குமே ஓட்டு போட முடியாது. மற்ற இருவர் பற்றியும் நீங்களே கூறிவிட்டதால், சொல்வதற்கு ஒன்றுமில்லை, காமை ஐயா!

  என்னை பொருத்தவரை முதல்வர் போட்டிக்கு ஸ்டாலின் கருணாவுக்கு பின்னரே!
  விஜய்காந்துக்கு அவர் வாயும் கண்ணும் உடல் மொழியும் சொல்லிவிடுகிறது… “இவன் இதுக்கு சரிவரமாட்டானென்று!”
  தான் மட்டும் ஒரேயொரு தொகுதியில் வென்றுவிட்டதால் முதல்வராகிவிடலாம் என்ற நினைப்பில் அன்புமணி. இவர் நினைப்பதும் நடிகர் விஜய் வருங்கால முதல்வர் என்று எண்ணுவதும் ஒன்றே!
  தமிழிசை என்பவருக்கு குஷ்பு எவ்வளவோ மேல்!
  So, என்னை பொருத்தவரை போட்டியில் கருணா அல்லது ஜெ மட்டுமே!

  குடும்ப தலையீடு:
  கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தின் தலையீடு கருணாவுக்கு தலைவலி என்றால், ஜெ-க்கு உடன்பிறவா சகோதரி & கோ-வின் தலையீட்டால் தலைவலி
  (ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்)

  நிர்வாகம்:
  நிர்வாகத்தை பொருத்தவரையில் ஜெ கருணாவை முந்திவிடுவார் என்று பலரும் கூறுவார்கள். நான் ஜெ-வின் நிர்வாகம் என்பது கொத்தடிமைகளை நடத்துவதுமாதிரி என்பேன். அது மன்னராட்சிக்கு ஏற்றது. மக்களாட்சிக்கு அல்ல. விரும்பியோ விரும்பாமலோ அதிமுகவினர் அடிமைகளைப்போன்றே நடந்து கொள்கின்றனர். கட்சிக்காரர்கள்தான் அப்படியென்றால் அதிகாரிகளின் நிலை அதைவிட கேவலம். ஒருவரை தட்டிக்கொடுத்து/ஊக்கப்படுத்தி வேலை வாங்குவதே நிர்வாக திறமை! அதை விட்டுவிட்டு “நீ இப்படி நடக்கவில்லை என்றால் உனக்கு இடமாற்றம் அல்லது ஆஸீட்/எஸ்மா etc etc” என்று பயமுறுத்தி வேலை வாங்குவது நல்ல நிர்வாகத்தில் சேராது! எனவே நிர்வாகத்தை பொருத்தவரை என் ஓட்டு கருணாவுக்கே!

  கடைசியாக சாதனைகள்:
  இலவசங்களை கொடுத்து மக்களை பிச்சைக்காரர்களாக்கியது அல்லது சோம்பேறிகளாக்கியது இருவருமே!

  1989-91 திமுக ஆட்சி
  தக்க காரணமே இன்றி ஆட்சியை கலைக்க மத்திய அரசு வலியுறுத்தியும் அன்றைய ஆளுணர் அப்படி ஆட்சியை கலைக்கவேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்படவில்லை என்று சொல்லியும் ஆட்சியை கலைத்தது ஏன்?

  1991-996 அதிமுக ஆட்சி
  ஒன்றும் சொல்வதிற்கில்லை. 18 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு… இரண்டு எதிர் எதிர் தீர்ப்பு… என்றாலும் முடிவு/எதிர்காலம் தெரியவில்லை!

  1996-2001 திமுக ஆட்சி
  திமுக-வினரே வெறுத்த ஒரு ஆட்சியை கொடுத்தார் கருணா! யாரும் எந்த ஊழலோ தவறோ செய்யக்கூடாது/செய்ய முடியாமல் புலம்பித்தீர்த்த ஆட்சி. மறுக்கவோ மறைக்கவோ முடியாது!

  2001-06 அதிமுக ஆட்சி
  கருணாவை சிறையிலடைத்ததும் கனிமொழியை அரசியலுக்கு இழுத்துவிட்டதும், ஜெயா டிவிக்கு உயிர்கொடுத்ததுமே சாதனை

  2006-11 திமுக ஆட்சி
  91 மற்றும் 2001-ல் நடைபெற்ற தேர்தலில் தன்னை பழிவாங்கிய “மக்களை” பழிவாங்கி சாதனை புரிந்தது! இது மனித இயல்புதானே!

  2011 முதல் இன்று வரை அதிமுக ஆட்சி
  மாபெரும் அடிமைக்கூட்டத்தையும் பகுத்தறிவற்ற கூட்டத்தையும் வளர்த்துவிட்டதே மாபெரும் சாதனை!

  ஆகவே கூட்டிக்கழித்து பார்த்தால் என் ஓட்டு என்பது ஜெ-க்கு கிடையாது. நான் தனிப்பட்ட வகையில் பாதித்திருந்தாலும்… no other go என்பதால் கருணாவுக்கே என் ஓட்டு!

 8. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

 9. avudaiappannavudaiappan சொல்கிறார்:

  karunanithi never come to power

 10. today.and.me சொல்கிறார்:

  urgent update:

  தீர்ப்பில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை.நீதிபதி நாளை மதிப்பீட்டின் விபரத்தினை தெரிவிப்பார் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டில் மாற்றம் இருக்கலாம் ஆனால் தீர்ப்பில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.

  குறிப்பு: தீர்ப்பையும், நீதிபதியையும் விமர்சிக்கும்போது அவர்கள் மீது கடும் வழக்கு பதியப்படும் என்று கூறப்பட்டுள்ளது.ஆக முதலில் விமர்சனங்களை நிறுத்திவிடுங்கள்….

  • today.and.me சொல்கிறார்:

   இது இன்றைக்கு பார்கவுன்சிலால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் உங்கள் விருப்பம்.

   • Surya சொல்கிறார்:

    நீதிபதிஐ பற்றி “விமர்சனங்களை நிறுத்திவிடுங்கள்” என்று சொல்வதக்கு பதிலாக “விமர்சனங்களை நிறுத்திவிடுகிரேன்” என்று சொல்லிருந்தால் மிகவும் சரியாக இருந்திருக்கும்!

    • today.and.me சொல்கிறார்:

     நான் சட்டத்துக்கு உட்பட்டுதான் நடக்கிறேன். நீங்கள் அப்படி இருக்கமாட்டேன் என்றால் அதற்கு நான் என்ன செய்வது?
     🙂

     • today.and.me சொல்கிறார்:

      இந்த மறுமொழி நண்ப சூர்யாவுக்காகவும் லாலாவுக்காகவும்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்களுக்கு,

      நான் இந்த இடுகையின் மூலம் விவரமாகச் சொல்ல வந்த
      விஷயத்தை நண்பர் கண்பத் அவர்கள் மிக அருமையாக
      ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்….

      “எரியும் கொள்ளிகளில் எது நல்ல கொள்ளி ”

      என தேர்ந்தெடுக்கும்
      நிலையில் தான் நாம் இருக்கிறோம்….!!!

      (இருந்தாலும், என்றாவது இந்த நிலை மாறும் என்கிற
      நம்பிக்கையுடனும் – )
      -வாழ்த்துக்களுடனும்,
      காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      //நண்பர் கண்பத் // பின்னூட்டச் சக்கரவர்த்தி டைட்டிலுக்குப் பொருத்தமானவர்தான்.
      🙂

     • Ganpat சொல்கிறார்:

      தொண்ணூறு வயதான பின்னும் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருப்பேன் என நினைத்தீர்களா நண்பரே? 😉 காமை ஜியும்(அதிபர்) நீங்களும்(பிரதமர்) செய்யும் அதகளத்தில் இந்த தளம் குடியரசாகி நெடு நாட்கள் ஆகிறது.முடியாட்சி க்கு வழியில்லை.. 🙂 🙂

     • Ganpat சொல்கிறார்:

      உங்கள் பதிவில் உள்ள உண்மையைத்தான் நான் வெளிபடுத்தியுள்ளேன் சார்! நிச்சயமாக நிலை மாறும்.நன்றி.

  • கந்தசாமி சொல்கிறார்:

   குன்ஹா படத்தை கீழ்த்தரமாக பேனர் போட்டு வைத்த போதே இதை சொல்லி இருக்கலாம்.

   • today.and.me சொல்கிறார்:

    அப்போது ஒருவர் நாடறிய மன்னிப்புக்கேட்ட கதையை மறந்துவிட்டீர்களா அல்லது தெரியாதா?

  • Mani சொல்கிறார்:

   இந்தப் பதிவுக்குத் தொடர்பில்லை என்றாலும், today.and.me அவர்களது மறுமொழியின் தொடர்பாக இதைப் பதிவிடுகிறேன். நீதியரசர் குமாரசாமி அவர்களது தீர்ப்பின் 852 ஆம் பக்கத்தில் உள்ள கணக்கைக் கொண்டு கணக்கில் தவறு என்கிறார்கள். அந்தக் கணக்கு அரசு சாட்சி எண் 182 ஒருவர் மட்டுமே கொடுத்த, அவரது வங்கியால் கொடுக்கப்பட்ட லோன் ஆகும். அவரைத்தவிர அரசு சாட்சிகள் எண் 201, 209, 211, 230, 235, 239, 160, 173. 176 ஆகிய ஒன்பது நபர்கள் தங்கள் வங்கிகளிலிருந்து ஜெ, முதலானோர் பெற்ற லோன் அளவுகளைக் கொடுத்துள்ள விவரம், அந்தத் தீர்ப்பின் முந்தைய பக்கங்களிலேயே இருக்கிறது. இவை அனைத்தையும் கூட்டினால் 24 கோடிக்கு மேல் போகிறது. இவற்றைக் கொண்டுதான் நீதிபதி தீர்ப்பின் முடிவுக்கு வந்திருக்கிறார். அந்தக் கணக்குகளைத் தனிப்பட்ட குறிப்புகளாகத் தீர்ப்பில் எழுதவில்லை. அதிகப்படியான லோனைப் பெற்ற ஒரே சாட்சியிடமிருந்து கிடைத்த விவரத்தை, 852 ஆவது பக்கத்தில் கட்டம் போட்டு எழுதியிருக்கிறார். மீதம் உள்ள லோன் மதிப்பையும் அவர் குறிப்புகளாகத் தன உதவியாளர்களிடம் கொடுத்திருக்க வேண்டும். அந்தக் குறிப்புகள் கவனக் குறைவால் விடுபட்டிருக்க வேண்டும். ஆக, கணக்கு சரிதான். இந்த மேல் முறையீடே, லோன் பெற்றதைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதே. அதை நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். எந்தக் காரணங்களுக்காக லோன் வழங்கப் பட்டது என்பதயும் சாட்சியங்கள் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளன. தீர்ப்பை முழுவதுமாகப் படிக்காமல் ஆசார்யா உட்பட இத்தனை பேர் இப்படி உளறிக் கொண்டிருக்கின்றார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. .

   • today.and.me சொல்கிறார்:

    ஆமாம் நண்ப மணி, நான் தீர்ப்பின் நகலை தீர்ப்பு வந்த அன்றே தரவிறக்கி, ஏதாவது நொள்ளை சொல்ல முடியுமா என்று தேடிப்பார்த்துவிட்டேன். நீங்கள் கூறியுள்ளபடிதான் இருக்கிறது. மற்றபடி அதைப் படிக்காமல் தொல்லைக்காட்சி விதண்டாவாத மேடைகளையும் உதிரிக்கட்சிகளின் ஊடகங்களையும் மட்டுமே பார்த்து படித்துக்கொண்டிருப்பவர்கள் இப்படித்தான் ஏதாவது உளறிக்கொண்டே இருப்பார்கள்.

    இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. காரணமே இல்லாமல் தங்கள் தலைவர்கள் மீது அன்புகாட்டும் தொண்டர்கள் இவர்கள்.

 11. today.and.me சொல்கிறார்:

  சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெ., வை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியின் மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என்றும் அவற்றின்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும் – தமிழகம் மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் எச்சரிக்கை

  • NS RAMAN சொல்கிறார்:

   Same bar council of Tamil Nadu threating CJ Madras High Court and now they are voicing for Karnataka HC judge !!!
   As long as touching technical and legal points of judgement no contempt of court!!!!
   This is warning for blogger earlier giving all linguistic, political colours to the earlier judgement and bail application

   • today.and.me சொல்கிறார்:

    சொல்லவற்றதை தமிழ்ல புரியறாமாதிரி சொல்லுங்க ராமன்.

   • today.and.me சொல்கிறார்:

    நண்பர் என்எஸ் ராமன்

    பின்னூட்டமிடும் நண்பர்களும் சேர்த்துத்தான் எச்சரிக்கை. உள்நோக்கம் கற்பிக்கும் முறையிலோ தனிப்பட்டமுறையிலோ நீதியரசர்களை விமரிசிக்கும் யாராக இருந்தாலும் எச்சரிக்கவேண்டியது எனது கடமை என எண்ணுகிறேன்.

    நான் அறிந்தவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன். எனது கருத்தைப் பிடிக்காதவர்கள் கூட தங்கள் அறியாமையினால் துன்பம் அனுபவிக்கக்கூடாது என்பது எனது இயல்பு.

    ஆனால் அவரவர் இயல்புக்கு ஏற்றார்போல என்கருத்துக்கு வர்ணம் பூசுவதும், கேட்பதும், கேட்காமல் நாசமாகப்போவதும் அவரவர் விருப்பம்.

 12. Ganpat சொல்கிறார்:

  நம் எழுபது ஆண்டு கால சுதந்திரத்தின் சாதனை “எரியும் கொள்ளிகளில் எது நல்ல கொள்ளி ” என தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதுதான்.வாழ்க ஜனநாயகம்.

 13. senthil kumar சொல்கிறார்:

  இந்த கால கட்டத்தில் ஜெயலலிதா அவர்களை விட்டால் வேறு வழியில்லை…..

 14. கந்தசாமி சொல்கிறார்:

  ஸ்டாலின் அவர்கள் மட்டுமே.கே.ஏ.கே. மறைவிற்குப் பின் நடந்த ஒரு தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் என்ற முறையில் ‘சோ’ அவர்களிடம் பேட்டி கண்ட பொழுது, கருணாநிதியை முழுமையாக எதிர்த்தாலும், எங்கள் தொகுதிக்கான சிறந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஸ்டாலினை ஆதரிப்பதாக சொல்லியிருந்தார்.
  சென்னை மாநகர மேயராக பொறுப்பிலிருந்த போதாகட்டும், உள்ளாட்சித்துறை அமைச்சராக ஆற்றிய பணியாகட்டும், துணை முதல்வராக அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய பாங்காகட்டும், இதில் எங்குமே தாந்தோன்றிதனமாக நடந்து கொண்டதான குற்றச்சாட்டோ, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டதாக பேச்சோ அடிபடவில்லை. சென்னையில் கட்டிய மேம்பாலங்களில் ஊழல் நடந்ததாக ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்து, கட்டிய பாலங்களை உடைத்து பரிசோதித்தும் குற்றம் நிரூபிக்கப்படாமல் திருவாளர் பரிசுத்தமாக பரிமளித்தவர் தான் ஸ்டாலின் அவர்கள்.

  @ வெளிநாட்டு தொழிற் குழும பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பெரிய பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டுவர அவர் காட்டிய ஆர்வம், அவர் ஆளுகையின் கீழ் தமிழகம் வந்தால் தொழில் துறையில் தமிழகம் தன்னிறைவடையும் என்பதை திட்டவட்டமாக உணர்த்துகின்றது.

  @ ‘சிங்காரச் சென்னை’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரபலமாக்கிய அவர் ஆட்சிப் பொறுப்பேற்றால் கூவம் ஆற்றில் குட்டிக் கப்பல் ஓடலாம், மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப் படலாம்

  அதேப்போல் சுனாமி நிவாரண நிதியை வீண் கௌரவம் பார்க்காமல், நேரில் சென்று, காத்திருந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கொடுத்தது…

  இவை எல்லாமே எதிர்ப்பாளர்களிடமும், எதிரிகளிடமும் தன்னுடைய நிதானமான, தெளிவான செயல்பாடுகளால், தமிழகத்தின் பொது பிரச்சினைகளான இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு, போன்ற இன்னபிற பிரச்சினைகளில், முக்கிய எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தமிழக கட்சியினருடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கோரிக்கைகளை ஒரே குரலாக தமிழகத்திலிருந்து எழுப்பி தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் உண்மையான நியாயம் கிடைக்கப் போராடும் தலைவராக திகழ்வார் என்பதையே காட்டுகிறது.

  கலைஞர் அமைச்சரவையில் ஒரு அமைச்சர் என்ற வகையில் அவர் தன்னுடைய கடமைகளை உள்ளாட்சியில் மிகத்திறமையாகவும், எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக, கிராமத்துப் பெண்களிடம் பெரிய அளவிற்கு அபிமானத்தையும், ஆதரவையும் பெற்ற நபராகத் திகழும் அளவிற்குமாகவும் செயல்பட்டிருக்கின்றார்.

  வசதி வாய்ப்புகளையும், பதவி பந்தாக்களையும், சிறைக் கொடுமைகளையும், தோல்விகளின் தாக்கங்களையும் மாறி மாறி அனுபவித்து வளர்ந்தவரான ஸ்டாலின், அழகான அளவான குடும்பத்தோடும், தான் மட்டுமன்றி தன் குடும்பத்தாரும் எந்தவொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத வகையிலும் வழி வகை செய்து கொண்டு…..

  தான் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் மற்றும் தமிழர்களின் வளர்ச்சிக்கு மட்டுமே தன்னை பொறுப்பாளியாக உருவகித்துக்கொண்டு, அதற்கான எந்த மாதிரியான சமரசங்களுக்கும் இடமளிக்காமல் செயல்படுவார் என்பதை அவரது முந்தைய செயல்பாடுகளும் மக்களுக்கு உணர்த்தியிருக்கின்றது. அதேப் போன்று இப்பொழுது எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத நிலையிலும் கூட….

  மக்களுக்கோ, கட்சிக்கோ, இயக்கத்திற்கோ ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகும் போது அனைவரையும் ஒருங்கிணைத்து துவண்டுவிழாமல் உற்சாகப்படுத்தி செயல்பட்டு, செயல்பட வைப்பதே…. ஒரு சிறந்த தலைவனுக்கான இலக்கணம்.

  அந்த இலக்கணத்திற்கு உவமானமாய் இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஒப்பற்ற தலைவனாக தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரக்கூடிய தகுதி படைத்தவர்….ஸ்டாலின் அவர்கள் மட்டுமே.

  • paamaran சொல்கிறார்:

   குற்றங்கள் செய்தாலும் எப்படியாவது வெளியில் வர எதை வேண்டுமானாலும் செய்து —- சமரசம் செய்து கொள்வதில் கில்லாடிகள் —-
   1. ‘சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வேணுகோபால் ரெட்டி என்கிற தங்களின் பினாமியின் பெயருக்கு மிரட்டி வாங்கியதாக’ சென்னை ஐகோர்ட்டில் சேஷாத்ரி என்பவர் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

   பின்னர் இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் மற்றும் மனுதாரர் சேஷாத்ரி தரப்பில் பரஸ்பரம் சமரசம் செய்து கொண்டதாக இருவரும் ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனால் அந்த வழக்கை ஐகோர்ட்டு முடித்து வைத்தது. 2. ஸ்டாலின் வீட்டில் 17 கார்கள் பறிமுதல், 48 கோடிரூபா வரி மோசடி வழக்கு — இது சி.பி.ஐ. ரெய்டு நடத்திய வழக்கு —அப்புறம் ப.சி. — மன்மோஹன்சிங் எல்லோரும் எங்களுக்கும் ரெய்டுக்கும் சம்மந்தம் இல்லை என்று மாறி — மாறி அறிக்கை விட்டது எல்லாம் மறந்து போச்சா மக்களுக்கு ….! எல்லோருமே ஊழல்வாதிகள் தான் …..? ஸ்டாலினின் அப்பா அந்த காலத்தில் ” கூவம் ஆற்றில் படகு விட்டார் — அங்கங்கே மக்கள் இளைப்பாற மண்டபம் கட்டினார் — சிறு — சிறு ஓட்டல்களும் அடக்கம் ” இவர் குட்டி கப்பல் விடுவார் ? மக்கள் பணத்தை வீணடிப்பதில் யாரும் சளைத்தவர்கள் அல்ல ….!!

 15. மணிச்சிரல் சொல்கிறார்:

  காந்தம் உதிரிகளை ஈர்த்தால் நன்றாக இருக்கும்.உதிரி பூக்களானால் கழக கதம்பம் தான். மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. சுழற்சியில் முதல்வர் பதவி இருந்தால் , நல்வழிகாட்டியான பயம் என்றும் உடனி௫௧்கும். காந்தம்/ இல./ வை க்கு என் வாக்கு.
  தங்களுடைய விரலை தொடுவதை விட்டு, என்னுடைய எந்த விரல் என்று சொல்லிவிட்டேன். முன்னது கஷ்டம் பின்னது சுலபம். நன்றி.

 16. N.S.M. Shahul Hameed சொல்கிறார்:

  கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யவேண்டுமென்றால் நான் திருமதி.தமிழிசையைத்தான் தேர்வு செய்யவேண்டியிருக்கும். காரணங்கள்:
  1. நான் எக்கட்சியையும் சாராதவனாக இருந்தாலும், பாஜகவை பெரும்பாலும் எதிர்ப்பவனாக இருந்தாலும், உங்கள் பட்டியலில் ஒரு தேசியக் கட்சியைப் பிரதினிதித்துவப் படுத்துபவராய் அவர் மட்டுமே இருக்கிறார்.
  2, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
  3. அவரது தந்தையார், மிகச்சிறந்த தேசபக்தர், நல்ல அரசியல்வாதி.
  4. குடும்ப அரசியலுக்கு வாய்ப்பில்லாத கட்சியைச்சேர்ந்தவர்.
  5. மற்றவர்களைக் காட்டிலும், நன்றாகப் படித்தவர்.
  6. ஊழல் வாதிகளுக்கு மாற்று ஊழல் செய்யாத யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அவ்வகையில் இவரோடு போட்டியிடுவது விஜயகாந்த் மட்டுமே. அந்த வகையில் விஜயகாந்திடம் குடும்ப அரசியல் வரும் வாய்புள்ளதால் தமிழிசை அவரை வென்றுவிடுகிறார்.
  7. ஆகவே, நீங்கள் கொடுத்த இரண்டில் ஒருவராக தமிழிசை என் ஓட்டைப் பெறுகிறார்.

 17. D. Chandramouli சொல்கிறார்:

  It’s a pity that the people have such poor choices to make. How long the electorate would be forced to select the best of the worst? The game changer could be one like Rajini but then we thought as much when MGR took over. Ultimately MGR’s rule was also not something to be commended. It is not that genuine leaders are not available but they may not have mass base to get themselves elected. If they align themselves with any established party, it is as good or as bad as electing the same old party. After Kamaraj, the downhill started with no light seen at the end of the tunnel! Perhaps KM could seek the views of the readers on who could be the selfless leaders with some potential to become CM at least in the distant future.

 18. sivakumar சொல்கிறார்:

  Stalin

 19. VINITHA சொல்கிறார்:

  JJ could be the best.She can eliminate the Maffia and may become the best because she has no other relations except Maffia.So she can improve her position and can be the best.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.