மோடிஜி – பிரான்ஸில் …மணல் கயிறு …..!!!

.

.

மணல் கயிறுக்கும், மோடிஜியின் பிரான்ஸ் விஜயத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா …?

என்ன இருந்தாலும் – மோடிஜி நமது பிரதமர்.
அவருக்கென்றே ஆதரவாளர்கள் / ரசிகர்கள்
நிறைய பேர் இருக்கிறார்கள்.

எனவே, அவர்களது மகிழ்ச்சிக்காக பிரான்ஸ் நாட்டில்
மோடிஜி அவர்கள் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகள்
தொடர்புடைய புகைப்படங்கள் சிலவற்றை கீழே பதிபித்திருக்கிறேன் –

இவற்றைக் குறித்த சில முக்கியமான இடுகைகளும் உண்டு.
தற்போது வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பதால் அவற்றை
உடனடியாக எழுத முடியவில்லை. எங்கே போகிறது….
பின்னர் எழுதுகிறேனே…!!!

ஆனால், சாம்பிளுக்காக, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கு சொல்ல விரும்புகிறேன். முதலில் புகைப்படங்களைப் பார்த்து நண்பர்கள் சந்தோஷப்பட்டு முடியட்டும்.
கீழே, கடைசியில் அந்த விஷயம் –

arrival in france-1

345146-modi-hollande

modi river travel - effil tower behind

modiji in paris banquet

modiji - mayor of paris

modiji in airbus factory

modiji in w.w.1 memorial

narendra-modiji-naav pe charcha paris mayor ke saat

amarujala photos-1

பிரான்ஸ் விஜயத்தின் வெற்றி அடையாளமாக சில “டீல்”கள்
அறிவிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமான ஒன்று – ஏர்பஸ்
தயாரிப்பாளர்கள் இந்தியாவில் outsourcing திட்டத்தில்
அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக 500 % முதலீட்டை
உயர்த்துவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

புத்திசாலித்தனமாக, ‘மோடிஜி டீமு’ம், முட்டாள்தனமாக பல செய்தி ஏஜென்சிக்களும், பிரான்ஸ் இந்தியாவில் ஏர்பஸ் விமானங்களையே தயாரிக்க மோடிஜி ஏற்பாடு செய்து விட்டார் என்று செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இதில் -முதல் முட்டாள்தனம், ஏர்பஸ் விமானங்கள் இந்தியாவில்
தயாரிக்கப்படப் போவதில்லை. ஏர்பஸ் நிறுவனத்திற்காக சில
விமான உதிரி பாகங்களை ஏற்கெனவே இந்தியாவில்
இரண்டு இடங்களில் அந்த நிறுவனம் வாங்கிக்கொண்டிருக்கிறது.
அவ்வாறு ஏற்கெனவே வாங்கப்படும் உதிரிப்பொருள்களின்
மதிப்பை – அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்துவதாக
ஏர்-பஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது….. அவ்வளவே…!!!

ஆனால் – இந்த ஏற்பாட்டிற்கும் பதிலாக மிகப்பெரிய விலை
ஒன்றை கொடுக்க மோடிஜி ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கு
கைம்மாறாக, பிரான்சில் விமான உற்பத்தி நிலையத்தின்
ஹேங்கர்களில், ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்னராக
தயாரிக்கப்பட்டு, வாங்குவாரின்றி தொங்கிக் கொண்டிருக்கும்
36 ரபேல் (rafale fighter jets ) போர் விமானங்களை உடனடியாக வாங்க இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது.

( 17 ஆண்டுகளாக இந்த விமானங்களை வாங்குவது குறித்து
பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும் – பலவித
காரணங்களால் “டீல்” முடியாமல் இருந்தது. இந்த விமானங்களின்
“போர்த்திறன்” குறித்து உலக நாடுகளுக்கு சந்தேகம் இருந்ததால்,
வேறு நாடுகள் எதுவும் வாங்க முன்வரவில்லை. 36 rafale
விமானங்களை வாங்குவதாக ஒப்பந்தம் போட்டிருந்த பிரேசில்
நாடும் அண்மையில் – தன் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது.
இந்தியாவில் போர் விமானங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் தயாரிக்க பிரான்ஸ் முன்வந்தால்இந்தியா சில விமானங்களை வாங்கிக்கொள்வதாகத்தான் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இப்போது ‘மேக் இன் இந்தியா’ காவு கொடுக்கப்பட்டு, 36 rafale வாங்கப்படுகிறது. )

“மணலைக் கயிறாகத் திரிப்பது” என்று ஒரு வாசகம் தமிழில் உண்டு. இதை அத்துடன் ஒப்பிடலாமா நண்பர்களே…?

————————————————————-

பின்சேர்ப்பு –

வாசகர் விருப்பம் –
நண்பர் டுடேஅண்ட்மீ- விருப்பப்படியே –

modi-selfie-1

_modiFrance-Selfie

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to மோடிஜி – பிரான்ஸில் …மணல் கயிறு …..!!!

 1. Killergee சொல்கிறார்:

  மணல் கயிறேதான் நண்பரே… ”திரி”க்கட்டும்.

 2. LVISS சொல்கிறார்:

  Going through some articles on this deal one could see that the Air force needed these badly —The deal was hanging fire for too long for comfort — The defence minister Mr Manohar Parikar who knows best as to what is needed urgently for the armed forces has hailed the decision taken by the PM to push through the deal –In the choice between make in India and acquiring the fighters asap the latter won —Even now it will take about two years to get these 36 jets —Even though it may look that the decision was taken in the last moment negotiations must have been going on between the representatives of the two countries to break the deadlock and to finalise the deal through during the PMs visit – -For the record we understand that about 17 agreements were signed during the visit —

  • today.and.me சொல்கிறார்:

   உலகத்தில் எந்தநாட்டுக்குமே ஏன் அவர்களுக்குமே வேண்டாத காயலான்கடைச் சரக்கு நமது இந்திய வான்படைக்கு, உயிர்வாழத்தேவையான ஆக்ஸிஜன் என்றால், இத்தனைநாட்கள் அதன் நிலைமை என்ன? பாஜக தான் எதிர்க்கட்சியாக குப்பைகொட்டிய 10 ஆண்டுகளில் ஏன் இதைப்பற்றி எந்த விவாதமும் முன்வைக்கவில்லை?

   இந்த ரேபல் விமானங்களை பாஜக ஆளும் அரசு ஒருவேளை வாங்கினால், தானே (!) கேஸ் போடப்போவதாக சுவாமி சொல்லியிருக்கிறாரே, பின்னணியில் என்ன? யார்? சோனியாஜியும் அவரது இத்தாலியக் குடும்பமும் நண்பர்குழாமும் இருக்கிறார்ப்போலத் தெரிகிறதே! காங்கிரஸ், பாஜகவின் பினாமிதானே.

 3. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,
  இந்தப் படங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ், செல்பி(ஷ்) பிஎம்-ஐப்பார்த்து அவரது ஆதரவாளர்களாவது சந்தோஷப்படட்டும்.

  http://www.ndtv.com/india-news/pm-narendra-modi-clicks-selfie-with-indian-students-in-france-754125

  http://www.fourthpoint.in/story/Modi-clicks-selfie-with-Indian-students-in-France-1-10-1-29236.html

 4. taru சொல்கிறார்:

  I request people not to write as if they know how we define our foreign policy and arms plan.
  If any Tom dock Harry could counsel about these things, then we font need policy experts and officials.
  Behind the scenes, some of the countries that are against India wellfare were trying to buy these planes. It was highly essential to keep them in check, and there are many factors like these.
  PM made the smart move by not only blocking them buy but also strenghthen our might. Sonia could have tried to make money as broker. But that doesn’t mean we should do the smart thing.
  I am not with Dr.swamy in this. His views May be clout with Sonia’s mediation.

  Taru

  • Kauffman சொல்கிறார்:

   You guys do not want to have efficient fighters. But because some country teased that they would buy it, you guys bought it. What a intelligent move!

   By the way, why we cannot discuss and write about foreign policy? Is foreign policy is your maternal or paternal property?

   Do you want suppress the freedom of speech by citing that no one should write about foreign policy or arm purchase. Do you want to keep this all in secret? Why is that so?

   • today.and.me சொல்கிறார்:

    Dear Taru,
    I request you, the Modi supporters, not to discuss about this or waste your comments with us.

    //By the way, why we cannot discuss and write about foreign policy? Is foreign policy is your maternal or paternal property?// thanks Kauffman.

    Better start a new blog, support Modi.

    If you have valid answers to our blogger’s and friends questions please answer, yet those should satisfy us, with truth – not with decorative wordgames or modimagics. If you know something about the ‘behind the screen scenes’, please note here with evident proofs.

    //I am not with Dr.swamy in this.// Thanks for accepting that you are with Dr Swamy in all matters, and not in this.

 5. Kauffman சொல்கிறார்:

  Not only manal (sand), we can make kayiru from kaatru (air) also. No body can beat us!

 6. taru சொல்கிறார்:

  All

  We are making a mistake by discussing nationally important matters in some blog. For God’s sake, this blog could stored in Chinese or Dubai servers.

  I can’t reveal much as this might be sensitive to national security.

  Please take a nationalist view than a separatist view, keeping in mind that we are fed Bharat whether we like it or not

  Taru

  • Rajagopalan. R. சொல்கிறார்:

   Mr. TARU,

   Undoubtedly you are a DISTILLED IDIOT.

   Even after reading all these endorsements still you wish to comment like this ?
   How there can be such a Shameless person like you ?

   You are UNFIT to make any comments in this column.

   PLEASE GET OUT OF THIS SITE and NEVER COME BACK TO WRITE
   ANY MORE NONSENSE.

   JUST READ AND GO OR DONOT COME HERE AT ALL.

  • today.and.me சொல்கிறார்:

   Dear Taru,
   //We …………// நீங்கள் ஏன் இந்த மிஸ்டேக்குக்குள் வரவேண்டும்? டிஸ்கஸனில் கலந்துகொள்ளவேண்டும்?

   // For God’s sake, this blog could stored in Chinese or Dubai servers. // இருக்ககட்டும். மோடிஜி நேரடியாகக் களத்தில் சென்று செய்ததைத்தானே சொல்கிறோம். இந்த விமரிசனத்தை சைனீஸ் மற்றும் டுபாய் சர்வர்கள் பதிவுசெய்வார்கள் என்றால், இந்தியப்பிரதமரின் அதிகாரப்பூர்வ-மிக முக்கிய அரசு அறிவிப்புகளை வெளியிடும் ட்விட்டரின் சர்வர் எங்கே இருக்கிறது? உங்களால் பதிலளிக்கமுடியுமா?

   //I can’t reveal much as this might be ,,,,,,,,,,,,,,//ஆதாரங்களுடன் வெளியிடத்தயாராக இல்லாத எதையும் வெளியிடாதீர்கள். (அப்படிஒன்று இல்லவே இல்லை என்பது உங்கள் தலைமைக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு???)

   //,,,,,,,,,,sensitive to national security.// எங்கள் கடவுளைக் குறித்து மறுப்பாக எழுதாதீர்கள் என்று முதலில் சாடிஸம் பேசினீர்கள். அடுத்து ப்ளீஸ் டோண்ட் ரைட் என்று கெஞ்சிப்பார்த்தீர்கள். இப்போது தேசியப் பாதுகாப்பு என்று மிரட்டப்பார்க்கிறீர்களா?

   //Please take a nationalist view than a separatist view, keeping in mind that we are fed Bharat whether we like it or not// கடைசியாகத் திரும்பவும் கெஞ்சலா?

   நீங்கள் எழுதிய நாலுவரியில் என்ன சொல்லுகிறோம்? என்ன செய்கிறோம் என்று புரிந்துதான் செய்கிறீர்களா? உங்களுக்கு பிரதமர்மீது அவ்வளவு அளவு கடந்த, கண்ணை மறைத்த அன்பு இருந்தால் …..

   ஒன்றும் பிரச்சினையில்லை. ஒரு பிளாக் ஆரம்பியுங்கள். உங்கள் தலைவரைப் பற்றி ஆதாரமில்லாமல் என்னவேண்டுமானாலும் எழுதுங்கள். உங்களைப் போன்ற கண்(மூ)மோடிபக்தர்களின் கூட்டம் இருக்கும்வரை அவர்கள் வியாபாரமும் நன்றாகப் போகும். உங்களுக்கும் பொழுதுபோகும்.

   ஏன் இங்கே வந்து எதையாவது எழுதி
   நாங்கள் ஆதாரங்களைக் கேட்டு
   உங்களை வருத்தி…….
   மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல்
   நீங்களும் வருந்தி…………ம்.

 7. சக்தி சொல்கிறார்:

  நண்பர் தரு? taru, பலரும் உங்களைப் பற்றி விமர்சித்த நிலையிலும், உங்களுக்காக காமை அவர்களிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தாத வரை கருத்துகளை நீக்காது பதிவிட வாதிட்டிருக்கிறேன்.

  ஆனாலும் தொடர்ந்து உங்களின் சில கருத்துகளைப் படிக்கும் போது பத்திரிகைகள் சில ஊடகங்களில் வரும் செய்திகளைப் படித்து விட்டு அப்படியே கருத்திடுவதாகத் தெரிகிறது. மூன்று வாரங்கள் ஓய்வெடுங்கள். சிந்தியுங்கள்,வரலாற்றைப் படியுங்கள்,ஆய்வு அறிக்கைகளைப் படியுங்கள். ஒரு தெளிவு பிறக்கும். பின்னர் பதிவிடலாமே. அப்போது நடு நிலையுடன் கருத்திட உங்களால் நிச்சயம் முடியும்.

  விவேகானந்தர் நூல்களை,மறைந்த சங்கராச்சாரியார் நூல்களை, கல்வெட்டுகள், ஏட்டுச் சுவடிகள் படியுங்கள். இந்து தர்மம் என்று ஒன்றில்லை என்கிறார் சங்கராச்சாரியார். ஐரோப்பிய மொழியான சம்ஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் தாய் மொழியாம் தமிழை மறந்து விட்டீர்கள்.சமஸ்கிருதம் தமிழுக்குப் பிந்தையது என்று நிரூபித்தாகி விட்டது. இனியும் ஏன் அதில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.மொழியைப் படியுங்கள் .அதற்காக இன்னொரு மொழியை தாயாக கடவுளாக்காதீர்கள். அது அசிங்கம்.

  எல்லாரிடமும் அறை ஏன் வாங்க வேண்டும்? சிந்தியுங்கள்.

  மற்றவர்கள் சொல்வது போல் மறைந்து இருந்து எழுதுவதாக உங்களை நான் சொல்ல மாட்டேன். புனை பெயரில் எழுதுவதில் தப்புக் கிடையாது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உங்கள் பெயர், முகவரி,வாழும் இடம், பதிவிடும் இடம் அனைத்தையும் இரண்டு நிமிடத்தில் கண்டறிய முடியும். அப்படி உங்களைப் பற்றி அறிய நான் விரும்பவில்லை. உங்கள் பெயருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராவேட்டரை வைத்தே உங்களைப் பற்றியும் நீங்கள் எங்கிருந்து பதிவிடுகிறீர்கள்,மற்றும் பெயர் விபரங்களை மிகச் சுலபமாக அறிய முடியும்.

  தயவு செய்து என்னைத் திட்ட முயற்சிக்காது இனிமேலாவது விதண்டாவாதங்களை நிறுத்தி, நல்ல கருத்துகளை ஆதாரங்களுடன் தருவீர்கள் என நம்புகிறேன்.தஞ்சாவூர் பொம்மை போல் நீங்கள் சார்ந்த கட்சிக்காக தலையாட்டுவதை நிறுத்தி சிந்தித்துப் பதில் கொடுங்கள்.அது பலருக்கும் பயன்படும்.உங்களிடம் இருந்து நான் பலவற்றைக் கற்றுக் கொள்ளவும் முடியும்.
  …………………….
  இது பதிவுக்கு ஒவ்வாத கருத்தென நினைத்தால், வலை நடத்துனர் காமை ஐயா அவர்கள் நீக்கி விடலாம். தரு அவர்களின் ஆதாரமற்ற பொய்யான தகவல்கள் மன உளைச்சலைத் கொடுத்ததால் எனது கருத்தை இங்கு பதிவு செய்துள்ளேன்.

 8. yathavan nambi/puthuvai velou சொல்கிறார்:

  வெளுக்காத “சாயம்”
  வெகு சிறப்பு

  நட்புடன்,
  புதுவை வேலு

 9. yathavan nambi/puthuvai velou சொல்கிறார்:

  மோடியின் மேக் இன் இந்தியா
  கனவா?
  காவா?
  பட்டிமன்றத் தலைப்பினை படு ஈஸியாக தந்து விட்டீர்கள் அய்யா!
  இன்றைய ஆயுத எழுத்து நிகழ்ச்சிக்கு!
  ஆனால்?
  முடிவுமட்டும் தங்களது இந்த பதிவில் உள்ளது!
  விடை???
  வாருங்கள்! வந்து பதிவினை படியுங்கள்!

  நட்புடன்,
  புதுவை வேலு

 10. Siva சொல்கிறார்:

  Taru and her/his groups,

  I appreciate you guys for fighting constantly (in debate) with other readers despite you are losing the ground for many times!. keep it up!.

  i want to make one thing clear that we are not intruding into the decision making process of external ministry or internal ministry. we are not influencing the outcome of decision making in these offices. in fact, we are discussing the matter already discussed by these offices and taken decision on any matter. we are discussing the pros and cons of a matter (policy) that is expressed by these offices.

  Taru, you know one thing about how the policy matters are discussed (or to be discussed) in these offices. Read below,

  For any subject/policy/matter, the officers/ministers will consider several options/alternatives (say it is 100%). From these, they will consider 10% of them for detailed discussion. From these, they will select 1% of them for possible implementation. From these, they will finally narrow down 0.1% of them for execution. Thus, what you hear from the ministry is filtered out matter of many options (probably 0.1% of 100% alternatives). so there is no misguidance or leaking the secret of confidential matters.

  You guys need to grow up! That you will not do, because your vision is blinded narrowly to write only supporting bjp agenda.

 11. PsM சொல்கிறார்:

  செல்பி புள்ள “மோடி மோடி. . .”

 12. seshan சொல்கிறார்:

  ரசிகர்கள்…….i like the word…. He is very Good Actor….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.