இரண்டு பிரதமர்கள் ……

.

.
நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு தனிப்பட வந்திருக்கும்
மின்னஞ்சலையும், புகைப்படத்தையும்
கீழே பிரசுரித்திருக்கிறேன்…..

—————-

மண்ணையும் சொந்தங்களையும் இழந்து ஆதரவற்று நிற்கும் ஈழத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் இங்கிலாந்து
பிரதமர்,

28 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை சென்று கொலைகாரர்களை
சந்தித்து நலம் விசாரிக்கிறார் இந்திய பிரதமர்.

srilanka visit by 2 pms

பின் குறிப்பு –

எனக்கு நண்பர்களால், தனிப்பட அனுப்பப்பட்டிருக்கும் –
இந்திய மீடியாவில் வெளிவராத – இன்னும் சில
புகைப்படங்கள் –

modiji in srilanka-1

modiji in srilanka-2

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to இரண்டு பிரதமர்கள் ……

 1. ராம் சொல்கிறார்:

  பயணத்தின் குறிக்கோள்களை பொதுஜனமாகிய நாம் தீர்மானிக்க முடியாது. அனுதாபமா இல்லை சாமர்த்தியமா என்ற பட்டிமன்றத்திற்கு வர விரும்பவில்லை. எனக்கு புரிந்தவரை, நம்மை விட நம்மை அடிமைகளாக ஆண்டவர்கள் சாமர்த்தியசாலிகள். அவர்களை வைத்து எடை போடுவது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது.

 2. BC சொல்கிறார்:

  இங்கிலாந்து பிரதமர் மிக சிறந்த நடிகன். தாங்கள் காலனி ஆதிக்கத்தில் வைத்திருந்த ஒரு நாட்டை விட்டு செல்லும் போது அங்கே எப்படி பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உலக திறைமைசாலிகள்.

 3. சக்தி சொல்கிறார்:

  இங்கிலாந்துப் பிரதமர் அசலா நகலா என்பதல்ல. தலை வணங்கும் நபர் அசலா நகலா என்பது தான் சந்தேகம். ஏனென்றால் இந்தத் தளத்தில் வந்த ஆதாரப் பதிவுகளின்படி அசலாகத் தெரியவில்லை.
  இதைவிட மேலே படத்தில் இருக்கும் தேடப்படும் குற்றவாளி பிழைக்கத் தெரிந்த
  மனிதர்.
  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், உப தலைவராக கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.நேற்றைய கமிட்டித் தேர்வின் முடிவு.
  மகிந்த அடுத்து வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால் இவர் என்ன செய்வார்? மீண்டும் ராஜபக்சேயுடன் ஒட்டிக் கொள்வாரா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இவர் ஒரு தேர்ந்த நடிகர் …..
   இவரது பயணத்திற்கும், தமிழர் நலனுக்கும்
   எத்தகைய சம்பந்தமும் இல்லை என்பதைத்தான்
   இவை நிரூபிக்கின்றன….

   எனக்கு தனிப்பட நிறைய மடல்கள் வருகின்றன.
   பாதிக்கப்பட்ட மக்கள் மனம் வருந்தி எழுதுகிறார்கள்.
   மக்களை ஏமாற்றுவது மிகப்பெரிய பாவம்….
   இதற்கு மேல் இந்த விஷயம் குறித்து
   நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. சக்தி சொல்கிறார்:

  மோடி சென்ற வீதி வழி கண்ணீருடன் காத்திருந்த மக்கள்.கண்டு கொள்ளாத மோடி. இவர்கள் கண்ணீர் துடைக்கப்படுமா? தாயகம் திரும்பிய மோடி ஓரளவாவது சிந்திப்பாரா?

 5. yogeswaran சொல்கிறார்:

  Sir,

  Two great actors.

  When the war was over Ed Miliband minister under Blair or Gordon brown went to Sri lanka to enjoy the vistory.(who were campaigning against war)

  Running with the deer and hunting with the hound.

  Those people who created all problems during colonial era are shedding crocodile tears.

  These smiles shall go to oscar awards.

  Really we are ilichcha vaayans sir.

  rgs

  yogi

 6. Sharron சொல்கிறார்:

  Really they have more compassion than our people.That’s why the Srilankan Tamils don’t belive our politicians.I have both Singaleese & Srilankan Tamil friends.

 7. Killergee சொல்கிறார்:

  மக்களுக்குப்பபுரிந்தால் சரிதான்.
  தமிழ் மணத்தில் முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள் நண்பரே….
  கில்லர்ஜி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கில்லர்ஜி
   மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்,

   கில்லர்ஜி – ஒவ்வொரு முறையும் நீங்கள் தான் எனக்கு
   விமரிசனம் தளத்தின் ரேங்க் பற்றிய தகவலை
   முதலில் சொல்கிறீர்கள். மிக்க நன்றி.

   அனைத்து நண்பர்களுக்கும்,

   விமரிசனம் வலைத்தளம் என்னுடையதல்ல.
   இந்த தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும்
   சொந்தமானது இந்த தளம்.

   இந்த தளம் முதல் ரேங்க்-ல் வந்தால் அதற்கான
   பெருமை முழுவதும், இந்த வலைத்தளத்தை
   தங்கள் அருமையான பங்களிப்பின் மூலம்
   நடத்திச் செல்லும் நண்பர்களையே சாரும்.

   எனவே, நண்பர்கள் அனைவருக்கும் என்
   மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

   காவிரிமைந்தன்
   17/03/2015

 8. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  இருவரும் வேறு வேறு நோக்கங்களுக்காகச் சென்றவர்கள்.
  நோக்கங்களுக்கு ஏற்றாற்போல் சந்தித்த மக்களும் வேறுபடுகிறார்கள்.
  அவ்வளவுதான்.
  அதற்குமேல் சிந்திக்க ஒன்றும் இல்லை.

  பிரதமர் பதவியேற்பு விழாவிலே அழைக்கப்பட்ட விருந்தினர்களையும் அவர்களை அழைத்த முறையையும் (சார்க் என்ற காரணங்காட்டி),
  தமிழக (இந்திய?) மீனவர் விவகாரங்களிலேயும்,
  (தூக்குத்தண்டனை ரத்து?) மீனவர் விவகாரங்களிலேயும்,
  கச்சத்தீவு விவகாரங்களிலேயும்,
  இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜெயிப்பதற்கான வியூகங்களை வகுத்ததிலேயும்,
  ரா உளவுப்பிரிவு அலுவலர் மீதான சர்ச்சை தீர்க்கப்படாத விவகாரங்களிலேயும்,
  தற்போதைய இலங்கை சுற்றுப்பயணத்தின் வணிக நோக்கங்கள் மற்றும் சந்தித்த மக்கள் குறித்த விவகாரங்களிலேயும்,

  தற்போதைய இந்தியத் தலைமை அரசாங்கம், ‘முந்தைய காங்கிரஸை அரசாங்கத்தைப் பினாமியாகத்தான் பயன்படுத்தியிருக்கிறது’ என்பதைத் தெளிவாக்குகிறது.

  தற்போதைய இந்தியத் தலைமை அரசாங்கம், ‘தமிழர்களை மனிதர்களாகக் கூடப் பார்க்கவில்லை’ என்பதை உறுதியாக்குகிறது.

  அது இந்தியத் தமிழர்களானாலும் சரி,
  இலங்கைத் தமிழர்களானாலும் சரி.

  இது தமிழர்களுக்கு மிகவும் கவலைக்குரிய விசயம்தான்.

 9. gopalasamy சொல்கிறார்:

  Very good article. we can not compare British PM with Modi. Heis a good human being; really taking care of Srilankan tamils. Modi is unfit even for a councilor post. British people ruled India without any corruption. They did not allow any Indian to die due to famine or any other reason. Still we have to go to a long way to reach their standard.

  • Sharron சொல்கிறார்:

   Yes you are true.They built many schools,hostels,roads,dams,….They are still standing strong.It shows their standard.

   • Mona சொல்கிறார்:

    I would rather die of famine than living under British rule for that matter any colonial power. Please don’t glorify British rule, and thousands of people would not have fought and died for freedom if they believed under British -life was good. There were more than ten famines duing British rule, go read history. What you guys wrote is complete nonsense.

    • today.and.me சொல்கிறார்:

     நண்பர்கள் கோபால்சாமி,ஷரோன், மோனா,

     பதிவு முக்கியமாக வெளிப்படுத்த நினைப்பது….

     //மண்ணையும் சொந்தங்களையும் இழந்து ஆதரவற்று நிற்கும் ஈழத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் இங்கிலாந்து
     பிரதமர், மற்றும்
     28 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை சென்று கொலைகாரர்களை
     சந்தித்து நலம் விசாரிக்கிறார் இந்திய பிரதமர்.///

     we can not compare British PM with Modi. என்றும் கோபால்சாமிஜி சொல்லியிருப்பதைப் பார்க்கவில்லையா?.
     //They built many schools,hostels,roads,dams,….They are still standing strong.It shows their standard.// என்று ஷரோன் சொல்லியிருந்தாலும் அது உண்மைதானே. “I will live under the British rule with famine” என்று சொல்லவில்லையே?

     இதிலே பிரிட்டிஷ் ரூல்-ஐ க்ளோரிபை பண்ணுவது என்பது எங்கே வருகிறது?
     //What you guys wrote is complete nonsense.// நான்சென்ஸ் பற்றி நீங்கள் எழுதவேண்டுமானால் கொஞ்சம் சென்ஸ் உடன் எழுத வேண்டுகிறேன்.
     .

     பதிவுக்குச் சம்பந்தமான பின்னூட்டங்களை, குறிப்பாக ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தூண்டும்படியும் பதிவுக்குத் தொடர்பானவையாகவும் நண்பர்களின் பின்னூட்டங்கள் அமைந்தால் சிறப்பாக இருக்கும்.

 10. S.Selvarajan சொல்கிறார்:

  இன்னும்…. இன்னுமா ….. மோடி—- ” CLEAN IMAGE ” …..???…..!!!!

 11. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  மோடி இந்தக் கொலைகாரர்களை மட்டுமன்றி நம் விக்கினேசுவரன் அவர்களையும் சந்தித்ததாகவும், மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் விக்கினேசுவரன் அவர்கள் பேசிய சொற்பொழிவு பற்றிய நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஆங்கிலத்தில் இருந்ததால் எனக்குப் புரியவில்லை. இணைப்பை இதோ கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள் காவிரிமைந்தன் ஐயா! பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்! http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37691

 12. karan சொல்கிறார்:

  இன்று இந்திய அரசின் முன்பிருக்கும் தவிர்க்கவியலாத் தேவை, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், தொழில், சுற்றுலா ஆகியவற்றுக்கான அடிப்படை உறவுகளை முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு மீட்டெடுப்பதுதான். அத்துடன், இலங்கை வாழ் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், அரசியல் அதிகாரப் பகிர்வு பெற்றுத் தருதல், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது தாய்நாட்டுக்கு பாதுகாப்பாகத் திரும்புதல் ஆகியவையும் இடம் பெறுகின்றன. முதலாவது, நாட்டின் பொருளாதாரம் சார்ந்தது. இரண்டாவது, தமிழகம் மற்றும் தமிழர்தம் உணர்வுகளின் மீதான அக்கறை. இரண்டையும் சாதிக்க வேண்டும் என்றால்,காய்களை மெல்லத்தான் நகர்த்த வேண்டும்.http://www.dinamani.com/editorial/2015/03/16/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article2715307.ece

 13. today.and.me சொல்கிறார்:

  //முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு மீட்டெடுப்பதுதான்.//
  பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள்தானே ஆட்சியிலிருந்தார்கள். அப்போது என்ன செய்தார்கள்?

  தினமணியின் செய்திகளில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை உண்மையில் அவ்வாறு இல்லை.

  அது அமைக்கப்படும் என்று சொல்லப்படும் இடங்களுக்கும் தமிழர்களுக்கும் எவ்வளவுதூரம் தொடர்புள்ளது என்பது நாளிதழுக்கும் தெரியும்.அவர்களே இலங்கைப் பதிப்பும் நடாத்துகிறார்கள் அல்லவா?

  //எனது உச்சபட்ச முன்னுரிமை, இந்தியாவில் மாநிலங்களை வலுப்படுத்துவதற்குதான்.// என்று மோடிஜி இலங்கையில் பேசியதாக செய்தி சொல்கிறது. உண்மையில் அப்படித்தான் இங்கு இந்திய மாநிலங்களில் தங்களது பாஜக தலைவர்களைக் கொண்டு ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறாரா?

  நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் உடையவர்கள்
  //நெளிவு சுளிவுகளுடன்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும்.//என்று மாற்றுவது ஏன்?

  ஒரு தமிழரால், தமிழர்களுக்காகப் நடத்தப்படும் பத்திரிகை தமிழர்களை இதைவிட மோசமாகக் கேவலப்படுத்தமுடியுமா? // தமிழ்நாட்டு அரசியல் அமைப்புகள் அனைத்துமே நரேந்திர மோடியை இந்தியப் பிரதமராகப் பார்க்காமல், தமிழகப் பிரதிநிதியாக பார்ப்பதால்தான் இத்தகைய வருத்தங்கள் ஏற்படுகின்றன//

  வெறும் புண்களாக இருந்தால், கிளறாமல் இருந்தால் ஆறிவிடும்தான். ஆனால் புற்றாக இருந்துவிட்டால்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.