அடுத்த நிதியமைச்சர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா…..??!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-9 )

 

திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் டாக்டர் சுப்ரமணியன்
சுவாமியை பேட்டி கண்டதும், அந்த பேட்டி தந்தி
தொலைக்காட்சியில் வந்ததையும் பலர் பார்த்திருப்பீர்கள்.  அப்போதே சுவாமி சொன்னது தான் …. தனக்கும் மோடி  அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும்,  தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில assignment- களை  முடித்த பிறகு, தான் மோடிஜியின் அமைச்சரவையில்  சேரப்போவதாகவும்……!!

நிதியமைச்சர் பதவி என்பது சு.சுவாமி அவர்களின்
நீண்ட காலக் கனவு….( முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம்
கேட்டு, கிடைக்காமல் போனதிலிருந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக – இன்னமும் தொடர்வது …..)
வாழ்க்கையின் உச்சபட்ச
லட்சியத்திற்கான முதல் படி …!!!
( உடனடித் திட்டம் – மத்திய நிதியமைச்சர்
நீண்டகாலத் திட்டம் – இந்தியாவின் பிரதம மந்திரி ….!!!! )

அந்த assignment -கள் என்னென்ன என்பதும் –
சு.சுவாமியால் உண்மையிலேயே அவற்றைச்
செய்து முடிக்க முடியுமா என்பதும்,

ஒருவேளை செய்து முடிக்கப்பட்டால் –
அவை நிறைவேற்றப்பட்டதும் சு.சுவாமி அவர்களை,
திரு.நரேந்திர மோடி அவர்கள் தன் அமைச்சரவையில்
நிதியமைச்சராகச் சேர்த்துக் கொள்வாரா என்பதும்

திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே (ஒரு வேளை  அமித் ஷாவுக்கும் கூட ) தெரிந்திருக்கக்கூடிய விஷயம்…..!!!

திரு சு.சுவாமி அவர்கள் தனிப்பட்ட முறையிலும் பலரிடமும் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம் தான் – நிதியமைச்சர் பதவி தனக்காகக் காத்திருப்பதாக…..!!!
(திரு அருண் ஜெட்லி தற்காலிகமாகவே பாதுகாப்பு, நிதி
ஆகிய இரண்டு முக்கியமான துறைகளையும் வைத்துக்
கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே…..).

இது எந்த அளவிற்கு நடைமுறையில் வருமோ –
நமக்குத் தெரியாது. ஆனால் சு.சுவாமி பல கனவுகளைக் கொண்டிருக்கிறார் …..

அவர் நிதியமைச்சராக பதவிக்கு வருவது நிச்சயம்
என்றும், அப்படி வந்தால் என்னென்ன நடக்கும் என்பதையும் அவரே கூறி இருக்கிறார்.
நான் சும்மா சொல்லிக்கொண்டே போவதை விட சிலவற்றை சு.சுவாமியின் வார்த்தை ஜாலங்களிலேயே பார்த்தால் –
இன்னும் சுவையாக இருக்குமல்லவா …?

அவரது ட்விட்டர் ஜாலங்கள் சில கீழே –

————–

ஒரு ரூபாய்க்கு ஒரு டாலர் நிலை 2014-ல்
வருமென்று முன்பு சொன்னீர்களே …..?

ஆம் – NDA ஆட்சிக்கு வரும்… அவர்கள் நான்
சொல்வதைக் கேட்கும் நிலை உருவாகும் என்கிற
நம்பிக்கையில் சொன்னேன்…..!!!

st-1

 

என் தாயின் கனவு – 2014-ல் மோடியை பிரதமராகவும்,
சுப்ரமணியன் சுவாமியை நிதியமைச்சராகவும் காண்பது ….!

-பெர்னார்ட் ஷா வே சொல்லி இருக்கிறார் ….
கனவு நிச்சயம் நிஜமாகும்…..!!!

st-5

 

 

நான் டாக்டர் சுவாமியை மட்டுமே நம்புகிறேன்.
இந்த நாட்டை அழிவிப்பாதையிலிருந்து மீட்டு,
உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உங்களால்
மட்டுமே முடியும் …..

விதி விரும்பினால் அதை யாரால் தடுக்க முடியும் …?

 

st-2

 

( நரேந்திர மோடி தலைமைக்கும் ஆபத்து ……!!!)

நாஸ்டர்டாம் சொன்னது அனைத்துமே அநேகமாக
நடக்கிறது. அப்படியென்றால், நாம் அனைவரும் உங்கள்
தலைமையில் புதிய இந்தியாவை காணப்போகிறோமா…?

நாஸ்டர்டாம் சொன்னார் – மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்திலிருந்து வரும் இறைவனடியார் பெயரைக்கொண்ட  ஒருவரால் அது நடக்கும் என்று – அது தமிழ்நாட்டிலிருந்து சுவாமி (யாகத் தானே இருக்க முடியும் ) ….??!!!

st-3————————————————–

பின் குறிப்பு –
அடுத்த பகுதியில்( பகுதி-10 ) – ராஜீவ் கொலை,
மற்றும் அதில் சம்பந்தப்பட்ட சிலர் குறித்து,
திருவாளர் சு.சுவாமி அவர்கள் நேரிடையாகக் கூறியவை – அவரது சொந்த வார்த்தைகளில் ……..

(தொடர்கிறது -பகுதி -10 -ல் )

 

 

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காமெடி, சமூகம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to அடுத்த நிதியமைச்சர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா…..??!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-9 )

 1. S.Selvarajan சொல்கிறார்:

  Which is his ambition — Tamilnadu Chief Minister or Indian Finance Minister or Srllanka Owner ? What ever it may be he wants only money & monopoly

  • Arun சொல்கிறார்:

   This is where most of his fans would defend him. Is there any corruption case against him? Is there any proof that he got money from anyone?
   If he has not got a lot of money the he should be good is the assumption. he most certainly is after power. He thinks he is qualified to be in the top posts of the government. He is ready to go to any extent to achieve that.

 2. T.Raghunathan சொல்கிறார்:

  BEST SELFIE OF THE YEAR
  from Dr.Subramanian Swamy…….

  -// “நாஸ்டர்டாம் சொன்னார் – மூன்று கடல்கள்
  சங்கமிக்கும் இடத்திலிருந்து வரும் இறைவனடியார்
  பெயரைக்கொண்ட ஒருவரால் அது நடக்கும் என்று –
  அது தமிழ்நாட்டிலிருந்து சுவாமி (யாகத் தானே இருக்க
  முடியும் ) ….??!!!”//-

 3. R.Palanikumar சொல்கிறார்:

  வேறென்ன சொல்றது?

 4. Ganpat சொல்கிறார்:

  மிகுந்த தேசபக்தியுடன் சு.சா வை உரித்துகொண்டிருக்கும் நண்பர் கா.மை.க்கு நன்றி.நண்பர் எவ்வளவு முனைந்துபதிவிடுகிறார் என்பது அவர் காட்டும் உண்மைகளை படித்தாலே தெரிகிறது.இந்த இடத்தில் சில நண்பர்கள் சற்றே குழப்பம் அடைந்துள்ளதாக தெரிகிறது.இங்கே நாயகன் சு.சா.மட்டுமே அவர் ஒவ்வொரு கால கட்டத்தில் எங்ஙனம் செயல் பட்டுள்ளார் என உணர்த்துவதே இத்தொடர் பதிவுகளின் நோக்கம்.அதனால் அதை மட்டும் மனதில் கொண்டு இவைகளைப்படிக்கவேண்டும்.உதாரணத்திற்கு சு,சா, சந்தன கடத்தல் வீரப்பனுடன் ஆரம்ப காலத்தில் நண்பராக இருந்தார் என வைத்துக்கொள்வோம்.பிறகு ஏற்பட்ட மனகசப்பில் அவர் வீரப்பனை காட்டிகொடுத்து விட்டார் என்றும் நண்பர் ஆதாரத்துடன் எழுதினால் இங்கு யாரும் அவர் வீரப்பனை நியாயப்படுத்துவதாக எடுத்துகொள்ளக்கூடது.சு.சா ஏன் அவனுடன் நட்பு வைத்திருந்தார் எனபதை மட்டுமே பார்க்க வேண்டும்.
  நன்றி.

 5. கவிப்ரியன் சொல்கிறார்:

  சுப்ரமண்யன் சுவாமியைப் பற்றிய அனைத்து செய்திகள் அனைத்தும் சுவாராஃயமாகத்தான் இருக்கின்றன.

 6. chennaiveeran சொல்கிறார்:

  Thanks for sharing the details of the Swamy and his friends…We are living in dangerous times and if one person is allowed to hijack the idea of India .. then GOD save India…

 7. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.