சந்திராசாமியும் – மார்கரெட் தாட்சரும் …..!!! (சாமிகளின் சாகசங்கள் -( பகுதி-2 )

அப்போது சந்திராசாமிக்கு இந்தியைத் தவிர வேறு எந்த
மொழியும் தெரியாது.( பிற்காலத்தில், தொழில் தேவைக்காக ஆங்கிலம் கற்றுக்கொண்டார்…) எனவே சந்திப்பின்போது, மொழி பெயர்ப்பாளர் வேலையையும் நட்வர்சிங்கே மேற்கொண்டிருக்கிறார்.

அப்போது, முப்பது வயது கூட நிரம்பாதவராக இருந்தார் சந்திராசாமி. அவரை கடனே என்று அழைத்துக் கொண்டு, சொன்ன நேரத்திற்கு நட்வர்சிங் மார்கரெட் தாட்சரை சந்திக்கச் சென்றிருக்கிறார்.

margaret thatcher,chandraswamy, natwarsingh -cartoon

மார்கரெட் தாட்சரின் உதவியாளர் ஒருவர்,
இவர்களை ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று
உட்கார வைத்து விட்டு, எதற்காக தன்னைச் சந்திக்க சந்திராசாமி விரும்புகிறார் என்று தாட்சர் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்று கேட்டிருக்கிறார்.. இதற்கு “மேடம் சற்று நேரத்தில் தானாகவே தெரிந்து கொள்வார்” என்று சொல்லி இருக்கிறார்
சந்திராசாமி.

சில நிமிடங்கள் கழித்து இவர்களை சந்தித்த தாட்சரிடம்,
நட்வர்சிங்கின் மனைவியிடம் செய்தது போலவே,
ஒரு வெள்ளை காகிதம் கொண்டுவரச்செய்து, அதை கோடிட்டு, 5 பகுதிகளாக்கி, சந்திராசாமி, தாட்சரிடம் நீங்கள் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை எழுதி வையுங்கள் என்றாராம்.

அதே போல் தாட்சரும் செய்ய, முதல் தாளில் தாட்சர் எழுதி இருந்த விஷயத்தை காகிதத்தைப் பார்க்காமலே சொன்னாராம். பின்னர் தாட்சரை காகிதத்தை பிரித்து சரி பார்த்துக் கொள்ளச் சொன்னாராம். இதே போலவே, இரண்டு, மூன்று, நான்கு என்று 5 காகிதங்களையும் கரெக்டாகச் சொன்னாராம் ச.சாமி. அசந்து போன மார்கரெட் தாட்சர் –

“உங்களிடம் மேலும் சில கேள்விகள் கேட்கட்டுமா” என்று
கேட்க, சந்திராசாமி சரியாக பதில் சொல்லிகொண்டே வர,
நட்வர்சிங் மாற்றி மாற்றி மொழி பெயர்த்து சொல்ல
நேரம் ஓடிக்கொண்டே இருந்ததாம்.

ஒரு குறிப்பிட்ட கேள்வியுடன் “சன் செட்” (சூரிய மறைவு)
ஆகி விட்டது. கேள்விகள் போதும் இனி வேண்டாம் என்று
சந்திராசாமி முடித்துக்கொண்டாராம்.

ஆரம்பத்தில் 10 நிமிடம் தான் தருவேன் என்ற தாட்சர்,
நேரம் காலம் பற்றி எல்லாம் நினைக்கும் நிலையிலேயே இல்லையாம்.
அந்த அளவிற்கு பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்ததாம். நட்வர்சிங்க்குக்கு ஒன்றும் புரியவில்லையாம். நாம் சந்திராசாமியை மிகச் சிறியவராக எடைபோட இங்கு மார்கரெட் தாட்சரே இவருக்கு கீழ் படிந்து விட்டாரே – என மலைப்பு எய்த, தாட்சர் “மறுபடியும் உங்களை சந்திக்கமுடியுமா?” எனக் கேட்க நட்வர்சிங் மொழிபெயர்ப்பு செய்வதற்குள் சந்திராவே “ட்யூஸ்டே
ஈவ்னிங் – 5 ஓ க்ளாக் அட் நட்வர்சிங் ரெசிடன்ஸ்”
(செவ்வாய் மாலை 5 மணிக்கு நட்வர்சிங் இல்லத்தில் ) என்று உடைசல் ஆங்கிலத்தில் சொல்லி விட்டாராம்.

அதை விட ஆச்சரியமான ஒன்று – சந்திராசாமி அலுவலகம் வரும்போதே கையில் இருந்த திருநீறை இறைத்தபடி, தெளித்தபடி வந்தாராம். ஏய், இங்கெல்லாம், இதெல்லாம் இப்படி செய்யக் கூடாது என்று நட்வர்சிங் எச்சரித்தாராம். கையில் திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டையுடன் இருந்த சந்திராசாமி ஒரு தாயத்தை எடுத்து தாட்சரின் இடதுகையில் கட்டிக் கொள்ளச் சொன்னாராம்.

அதை நட்வர் சிங்க் மொழிபெயர்க்க மறுக்க – அந்த அம்மாவே தானாகவே “என்ன இது ..?” என்று விளக்கம் கேட்டு,வாங்கி கட்டிக் கொண்டாராம். அடுத்த அதிர்ச்சியாக சந்திரா,இந்த அம்மாவை செவ்வாய் கிழமை வரும்போது சிவப்பு வண்ண ஆடை அணிந்து வரச் சொல்லுங்கள் என்றாராம்.

நட்வர்சிங்க் கோபம் அடைந்தாராம். இங்கிலாந்தின்
இரும்புப் பெண்மணி என கூறப்படும், எதிர்கட்சித் தலைவராய் இருக்கும் ஒருவரிடம் நாம் எப்படி சிவப்பு ஆடை அணிய வேண்டும் எனச் சொல்வது , இதெல்லாம் அதிகமாகத் தெரியலையா உனக்கு என சந்திராவை திட்ட ஆரம்பிக்கும்போது அது என்ன என தாட்சரே நட்வர்சிங்கிடம் கேட்டு தெரிந்து  கொண்டாராம். பிறகு அப்படியே ஆகட்டும் என்றாராம்.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சிவப்பு ஆடையுடன் கையில் கட்டிய தாயத்துடன் மார்கரெட் தாட்சர் சரியாக நட்வர்சிங்க் இல்லம் வந்து விட்டார்.
பேசும்போது – சந்திரா சாமியிடம், நான் இங்கிலாந்தின் பிரதமர் ஆவேனா? எப்போது ? என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு சந்திராசாமி இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் பிரதமர் ஆவீர்கள். நீங்கள் 9,11,அல்லது 13 ஆண்டுகள் நீங்கள் இந்த இங்கிலாந்தை பிரதமராக ஆள்வீர்கள் என்றாராம்,

இது நடந்தது 1975ல். அதன்பிறகு 1979ல் ஜாம்பியாவில்
காமன்வெல்த் சம்மிட் நடைபெறும்போது இங்கிலாந்தின் பிரதமராக மார்கரெட் தாட்சரை வரவேற்கும் பொறுப்பில் நட்வர்சிங்   இருந்தாராம்.

ஜாம்பியாவுக்கு இந்திய தூதராக 1977ல் நட்வர் சிங்அனுப்பப்பட்டு அதுமுதல் அங்கே பொறுப்பில் இருந்தாராம்.

நட்வர்சிங் மற்றும் மிஸஸ் நட்வர்சிங்கும் இங்கிலாந்தின்
பிரதமர் மார்கரெட் தாட்சரை விமானத்தில் இருந்து
இறங்கும்போது வரவேற்க நின்று கொண்டிருக்கும் போது
தாட்சர் விமானத்திலிருந்து இறங்கி வர,
“சந்திராசாமி சொன்னது அப்படியே பலித்துவிட்டது போலிருக்கிறதே” என்று மனைவியிடம் மெதுவாக
சொன்னாராம்.
அருகில் அதைக்கேட்டுக் கொண்டே வந்த
மார்கரெட் தாட்சர் –

நட்வரை தனியாக அழைத்து , “அதைப்பற்றி எல்லாம் இனி வெளியே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்” என்றாராம்.
அதற்கு நட்வர்சிங்கும் , “சொல்ல மாட்டேன், ஒருபோதும்
சொல்ல மாட்டேன்” என்றாராம்.

-சந்திராசாமி கூறியதை உறுதிப்படுத்தும் வண்ணம் –
இங்கிலாந்தின் பிரதமராக 11 ஆண்டுகள்
6 மாதங்கள் பதவி வகித்தார் தாட்சர்.

ஆச்சரியமாக இல்லை ….?
இந்தியாவின் உச்சத்தில் இருந்த அரசியல்வாதிகள் பலர்
இவருக்கு அடிமையானதன் பின்னணி சந்திராசாமியின்
இந்த சாமர்த்தியம் தான்.

இப்பேற்பட்ட அசகாய சூரர்களான சாமிகள் இருவரும்
மே-21 ந்தேதி ராஜீவ் காந்தியின் மரணம் நிகழ்ந்த அன்று சென்னையில் இருந்தார்கள் என்பது ஒரு செய்தி.

இந்த செய்தியை உறுதி செய்பவர் யார் ….?
ஜெயின் கமிஷன் முன்பாக திரு.சுப்ரமணியன் சுவாமியிடம் இது குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது –
அவரது “ரீ-ஆக்-ஷன் என்ன ….?

(தொடர்கிறது -பகுதி-3-ல்)

சாமிகளின் சாகசங்கள் –
மற்ற பகுதிகளுக்குப் போக சொடுக்கவும் –
Part1

Part3

Part4

Part5

Part6

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to சந்திராசாமியும் – மார்கரெட் தாட்சரும் …..!!! (சாமிகளின் சாகசங்கள் -( பகுதி-2 )

 1. எழில் சொல்கிறார்:

  Super sir… eagerly waiting for the other parts! 🙂

 2. visujjm சொல்கிறார்:

  அருமை … விறுவிறுப்பும் அதிகம் ஆனால் வழக்கு ————————— என்னவாகி?

 3. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  சந்திராசாமி செய்தவை கூட எனக்கு வியப்பாக இல்லை. ஆனால், இதை விடப் பன்மடங்கு மயிர்க்கூச்செறியும் மாயங்களை (Magics) நிகழ்த்த வல்லவர்கள் தங்களை வெறும் மாயக்கலைஞர்கள் (Magicians) என மட்டும்தான் சொல்லிக் கொள்கிறார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் நிறைய இருப்பதே இங்கிலாந்தில்தான். ‘மாயக்கலையின் தலைநகரம்’ என்றே ஒருமுறை இங்கிலாந்தைப் பற்றிக் கேள்விப்பட்டதாய் நினைவு. அப்பேர்ப்பட்ட ஒரு நாட்டில் பிறந்துவிட்டு, சந்திராசாமியின் இந்த மொக்கை மாயத்துக்கே விழுந்து விட்டாரே அப்பேர்ப்பட்ட இரும்புப் பெண்மணி! அதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது!

 4. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய காவிரிமைந்தன் ஐயா அவர்களே! பதிவுலகில் புதுக்குருதி பாய்ச்சி வரும் ‘பன்முகப் பதிவர்’ விருதைச் சிறியேன் பணிவன்போடு தங்களுடன் பகிர்ந்துள்ளேன்!

  தங்களுக்கு விருதளிக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை. ஆனால் தகுதியைப் பாராமல், என் அன்பையும், தங்கள் எழுத்துக்கள் மீதான என் விருப்பம், மதிப்பு ஆகியவற்றையும் மட்டும் பார்த்து, சிறியவன் பகிரும் இந்த விருதினைப் பேருள்ளத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்!

  விருதினை ஏற்கவும் மேலும் விவரங்களுக்கும் http://agasivapputhamizh.blogspot.com/2014/09/drop-of-award-fell-on-me.html எனும் முகவரியிலுள்ள என் பதிவைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

  நன்றி! வணக்கம்!

  • unmai சொல்கிறார்:

   I read somehwere that they both were in B’lore

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் திரு. ஞானப்பிரகாசன் அவர்களே,

   உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
   ஆனால் நான் இதனை ஏற்க இயலாத நிலையில் உள்ளேன்.
   தயவு செய்து என்னைமன்னியுங்கள்.
   இந்த விமரிசனம்வலைப்பதிவு இயன்ற அளவு
   நேர்மையாக இருக்கிறது என்று நீங்கள்
   கூறும் சொல் ஒன்றே எனக்கு போதுமானது.
   நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    நீங்கள் இப்படிக் கூறிவிட்டது எனக்கு வருத்தம்தான்! ஆனாலும், உங்களுக்கு விருதளிப்பது எனக்குப் பெருமை என்றால், அதை ஏற்பதோ, மறுப்பதோ உங்கள் உரிமை! மதித்துப் பதிலளித்ததற்கு நன்றி ஐயா!

 5. gopalasamy சொல்கிறார்:

  I appreciate Sri KM for not accepting award.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.