எத்தனையோ கமிஷன்கள் நியமிக்கப்பட்டன….
எவ்வளவோ விசாரணைகள் நடந்தன….
எத்தனையோ ரிப்போர்ட்டுகள் அளிக்கப்பட்டன ….
ஆனால் ஒரு முக்கியமான,
மிக மிக முக்கியமான கேள்வி –
இரண்டு (ஆ) சாமிகளும் – ராஜீவ் கொலை நிகழ்ந்த நேரத்தில் எங்கே இருந்தார்கள் ….?
-என்பதற்கான விடை இன்று வரை காணப்படவே இல்லை என்பதே உண்மை. இதற்கான விடையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், இதுவரை எந்த அரசும் தீவிரமாக ஈடுபடவில்லை….. ஏன் …?
இந்த கேள்விக்கான சரியான விடைகடைசி வரை
காணப்படாமலே போகக்கூடும்..
ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களின் கையில்
சிக்கி இருக்கும் ரகசியங்கள் எக்கச்சக்கம்…!
தீவிரமாக விடை காணும் முயற்சியில் எந்த அரசு
இறங்கினாலும், அதை ஒரே வாரத்தில் கவிழ்ப்பதற்கான
ரகசியங்கள் ஒருவரின் கைவசம் இருக்கிறது
என்பதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்குமோ
எனக்குத் தெரியாது…! ஆனால், சில சமயங்களில் உண்மை – கற்பனையை விட அதிசயமாக இருக்கும் என்பதும்
நிஜம் தானே …?
முதல் சாமியை அவரது இன்றைய வடிவத்தில் – பலருக்கும் தெரியும். ஆனால், அவரது முன் கதை அநேகமாக -இன்றைய பலருக்குத் தெரிந்திருக்காது. இரண்டாவது ஆசாமியை – அனேகமாக எல்லாரும் மறந்தே போயிருப்பார்கள்.
இரண்டாவது ஆசாமியைப் பற்றி முதலில் சில செய்திகள்.
இவரை தாந்த்ரீக் என்று சொல்வாகள் ( மந்திரவாதி …..?)
முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர்,
பி.வி.நரசிம்மராவ் இரண்டு பேருக்கும் “ராஜகுரு”….
நமது முதல் சாமிக்கு “ஜிக்ரி தோஸ்த்” – அதாவது,
“என்னுயிர்த் தோழன் “
இந்திரா காந்திக்கும் வேண்டியவர் ( இந்திராவுக்கு மிகவும்
வேண்டப்பட்டவர் வேறோரு மந்திரவாதி – அவர் பெயர்
திரேந்திர பிரம்மச்சாரி )
படித்தால் நம்ப மாட்டீர்கள்.
ஆனால் – இதைச் சொல்லி இருப்பவர் முன்னாள்
வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்.
இப்போது தான் சொன்னார் என்றாலும், நம்பிக்கை குறையும்.
ஆனால் 09/04/2013 -அன்று – பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் இறந்த மறுநாள் ‘இந்து’ ஆங்கில செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரை இது – எனவே நம்பலாம் தானே –
சந்திராசாமியுடனான ஒரு அனுபவம் பற்றி நட்வர் சிங்
சொல்வதை, அவரது வழியிலேயே படிக்கலாம் –
( from K. Natwar Singh’s book
“Walking with Lions -Tales from a Diplomatic Past”)
நட்வர்சிங் இங்கிலாந்தில் படித்தவர்.
படிக்கும்போது, இங்கிலாந்தில் இந்திய தூதரகத்தின் வனப்பை பார்த்து வியந்தவர் பின்னாளில் தமது படிப்பை முடித்தபிறகு indian foreign service -ல் தேர்வு செய்யப்பட்டு,
ஒரு நாள் அதே இங்கிலாந்தின் இந்திய தூதரகத்திற்கே
துணை உயர் ஆணையர் (டெபுடி ஹை கமிஷனராக) ஆகிறார்.
அடிக்கடி, இந்தியாவில் இருந்து வரும் நண்பர்கள் அவரைப் பார்க்கவேண்டும், இவரைப் பார்க்க வேண்டும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று தொல்லை கொடுப்பது வழக்கம் என்றும் அதற்கு தாம் வளைந்து கொடுத்ததில்லை என்றும் கூறுகிறார்.
அப்படி இருந்த காலக் கட்டத்தில், 1975ல் ஒரு நாள்
சந்திராசாமி என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு :
“நான் இங்கிலாந்து வந்திருக்கிறேன். யஷ்பால்கபூர் உங்களை சந்திக்கச் சொன்னார். வந்து சந்திக்க முடியுமா” என்று.
“நான் எல்லாம் உங்களை வந்து சந்திக்க முடியாது.
நீங்கள் வேண்டுமானால் வந்து என்னை இந்தியத் தூதரக
அலுவலகத்தில் அல்லது என் இருப்பிடத்தில் சந்திக்கவும்” என்று சொல்லிவிட்டேன்.
அடுத்த நாள் சந்திராசாமி இவரை வந்து சந்தித்தது மட்டும்
இல்லாமல் அவரது இருப்பிடத்திற்கு விருந்துக்கு வருமாறு அழைத்து பிரமாதமான விருந்தொன்றும் அளித்திருக்கிறார்.
விருந்துக்குப் போன இடத்தில்,
சந்திராசாமி, நட்வர்சிங்கின் மனைவியை அழைத்து –
ஒரு வெள்ளைத் தாளில் 5 கோடுகளை கிழித்து
அதை 5 ஆகப் பிரித்து கிழித்து ஒவ்வொன்றிலும்
ஒரு கேள்வி எழுதவைத்து அவற்றை ஒரு சதுரங்க
பலகையில் வைத்து அதிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அந்த சுருட்டப்பட்ட காகிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது
என்று பார்க்காமலேயே சொல்லிவிட்டு –
மிஸஸ் நட்வர்சிங்கை அந்த சுருட்டப்பட்ட காகிதத்தை பிரித்துப் பார்க்கச் சொல்ல, அந்த கேள்வி அந்த காகித துண்டில் அப்படியே இருந்தது கண்டு சந்திராசாமி விஷேச சக்தி பெற்றவர்
என வியந்தாராம் மிஸஸ் நட்வர்சிங்.
இதெல்லாம் நட்வர்சிங்குக்கு அறவே
பிடிக்கவில்லை என்றாலும் வேண்டாவெறுப்பாக
பார்த்துக் கொண்டிருந்தாராம்.
அடுத்ததாக சந்திராசாமி, இங்கிலாந்தில் மௌண்ட்பேட்டன் மற்றும் மார்கரெட் தாட்சர் ஆகியோரைச் சந்திக்கவேண்டும்
ஏற்பாடு பண்ண முடியுமா என்று கேட்டிருக்கிறார்…..
வேறு வழியின்றி முயற்சித்திருக்கிறார் நட்வர் சிங்.
நல்ல வேளையாக மௌன்ட் பேட்டனுக்கு வெளியூர்
செல்ல வேண்டியிருந்ததால் தப்பித்தார்.
மார்கரெட் தாட்சர் கன்சர்வேடிவ் கட்சியின் சீனியர் தலைவர். அப்போதைய – பார்லிமெண்டில் எதிர்க்கட்சித் தலைவர்…
நம்பிக்கையின்றியே, நட்வர் சிங், மார்கரெட் தாட்சரிடம் முயற்சி செய்தபோது, அவர் கூலாக, “பார்க்கலாம் – ஆனால் 10 நிமிடம்
தான் ஒதுக்க முடியும்…. ஆமாம் எதற்காக சந்திராசாமி
என்னைச் சந்திக்க விரும்புகிறார்” என்றாராம்.
(தொடர்கிறது ….பகுதி-2-ல் )
சாமிகளின் சாகசங்கள் –
மற்ற பகுதிகளுக்குப் போக சொடுக்கவும் –
Dear Mr. Kavirimainthan,
I was eagerly awaiting for this from you.
Hope will bring out some interesting,
hidden facts. thanks.
I am also eagerly awaiting
நியாயமாக விசாரணை நடத்தினால், சந்திர சாமி, சுப்ரமணிசாமி, சந்திர சேகர் மற்றும் முக்கியமாக சோனியாவும் தண்டனைககுறியவர்கள் ஆகிவிடுவார்கள். இது நடக்குமா? எந்த அரசாண்டாலும் ஒரு எழுதப் படா விதிமுறை உள்ளது. ஒருத்தரை ஒருத்தர் எந்தக் காரணம் கொண்டு காட்டிக் கொடுக்கக் கூடாது என்று. மாநிலத்தில் மட்டும் இல்லை இது மத்தியிலும் உண்டு. இல்லையென்றால் சகாயம் கேசில் நமது முதல்வர இப்படி தலையிடுவாரா? எல்லாம் அரசியல் மயம்.
நாம் இளிச்சவாயர்கள். நன்றி.
Sir,
ippudi ellam appu vachi nippattathinga.
இதைப் பற்றியும் தொடர் எழுதத் தொடங்கி விட்டீர்களா? சரவெடிதான் போங்கள்!