“இருக்கிறது காட்டுகிறேன் -உனக்கென்ன..?” – சரியான அணுகுமுறையா…?

முன் குறிப்பு –
இலங்கை, ராஜீவ் கொலைவழக்கு பற்றிய, இதுவரை
அதிகம் பேர் அறியாத, விவாதிக்காத –
சில தகவல்களை அண்மையில் நான் காணக் கூடி வந்தது. அவற்றைப் பற்றி விரிவாக எழுத விரும்பினேன்.
இரண்டு மூன்று பகுதிகளாகத் தொடரக்கூடிய அளவுக்கு
செய்திகள் அதில் உண்டு.

ஆனால், அதற்குள் இந்த விஷயம் ……
பொதுவாக, நான் ஈடுபாடு காட்டும் விஷயம் அல்ல இது.  ஆனாலும் பண்பாட்டுச் சீரழிவுக்குத் துணை
போகும் சில நடப்புகளை யாரும் கண்டிக்காமல்,
தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப்
பார்க்கிறேன். எனவே மற்ற விஷயங்களுக்குள் போகும் முன்னர், இதைப்பற்றி எழுதவேண்டியதும் என் கடமையே என்று எண்ணுகிறேன்..

———————————–

பெண்களை உயர்வாக மதிக்கும் நாடாகத்தான் இருந்தது இது. கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள எலெக்ட்ரானிக்
சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சி,
நாகரீகம் என்று நினைத்து அரங்கேற்றப்படும் அநாகரீகங்கள் –

தவறையே சரி என்று வாதிக்கும் தவறான போக்கு…..
பணம் இருந்தால், புகழ் இருந்தால்,
என்ன வேண்டுமானாலும் செய்யலாம் –
எதையும் ஏற்றுக் கொள்ள வைக்கலாம் – என்கிற மனோபாவம்,

5 வயதுச் சிறுமியைக் கூட சீரழிக்கும் மனசாட்சி அற்ற
மனித மிருகங்களின் எண்ணிக்கை – எல்லாமே
அண்மைக்காலங்களில் வேகமாக வளர்ந்து வருகின்றன.

திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு அளவுக்கு மிஞ்சிய
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களது உளரல்கள் எல்லாம் தத்துவங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ட்விட்டர், பேஸ்புக், இத்யாதி தொடர்புகளால் விஷவேகத்தில்
இவை விரிவாகப் பரப்பப்படுகினறன.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று – ஒரு நடிகை ஒரு காட்சியில், மார்பு வளைவுகளை நன்றாகக் காட்டுகிறார் என்று எழுதி இருந்தது. அதற்கு பதிலாக அந்த நடிகை -( ட்விட்டர் – இந்த மாதிரி விஷயங்களுக்குத் தானே இன்று பயன்படுகிறது…?)
“நான் ஒரு பெண், எனக்கு மார்புகள் இருக்கின்றன,
காட்டுகிறேன் – இதில் உனக்கு எதாவது பிரச்சினையா …?” 
என்று கேட்கிறார்.

சில சமயங்களில், ஒரு நபரின் ஒற்றை வார்த்தையே அவரது குணாதிசயத்தை பிரதிபலிப்பதாக அமைந்து விடுகிறது.

என்ன சொல்லி இருக்க வேண்டும் இவர் ….?

” அந்த காட்சியில், என் மார்பு வளைவுகளைப்பற்றி
கவலைப்படாமல், என் நடிப்பு எப்படி இருக்கிறது என்று பார். அதைப்பற்றி விமரிசனம் செய்”
என்றல்லவா சொல்லால் அடித்திருக்க வேண்டும்….?

இவர் சொன்னதில் என்ன தவறு என்கிறீர்களா …?
நினைப்பிலேயே தவறு…. அணுகுமுறையிலேயே தவறு.

பெண்களுக்கு மார்பகங்கள் இருப்பது – அதை வைத்து
பணமும், பெயரும் – சம்பாதிப்பதற்காக அல்ல.

இந்த மனித குலம் அழியாமல், தொடர்ந்து நீடிப்பதற்காக, இறைவன் பெண்களுக்குக் கொடுத்துள்ள வரப்பிரசாதம் தான்
மார்பகங்களும், முலைக்காம்புகளும். அவை தாய்மையின் வெளிப்பாடு. பச்சிளங் குழந்தை பிறந்தவுடன், பாதுகாப்பான
உணவிற்காக எங்கும் தேடி அலையாமல்,
தாயின் உடலிலேயே அதற்கான பாத்திரத்தையும் வைத்து, குழந்தை பிறந்த உடனேயே, அதில் சுவைமிக்க, சத்துமிக்க, சுகாதாரமான பாலையும் சுரக்க வைக்கிறான் இறைவன்
( இயற்கை என்று சொன்னாலும் சரி தான் ….)

இவ்வளவு மதிப்பும் பெருமையும் வாய்ந்த பெண்மையின்
பொக்கிஷங்களை, தாய்மையின் சின்னத்தை –
அதன் பெருமை புரியாமல் “எனக்கு இருக்கிறது-காட்டுகிறேன்” என்று சொல்லலாமா ….?

காட்டுவதற்கென்ன கண்காட்சிப் பொருளா அது ….?
தன் திறனில், கலைத்திறனில், நடிப்புத்திறனில் –
நம்பிக்கையுள்ள பெண், சதைப்பற்றை
காட்சிப் பொருளாக்கி பணம் சம்பாதிக்க மாட்டாள்….

“இருக்கிறது – காட்டுகிறேன்” – என்று சொல்லி இவர்கள்
காட்டும் விஷயத்தை, இன்றைய தினம் 10-15 வயது சிறுவர்கள் எல்லாம் கூட பார்க்ககூடிய அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. மீண்டும் மீண்டும் அந்த சிறுவர்களை, இளைஞர்களை – இவர்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரத்தூண்டுவது, இவர்களது கலைத்திறமையா அல்லது
“காட்டும்” திறமையா ….?

நான் காட்டினால் உனக்கென்ன கவலை
என்று இவர் கேட்கிறாரே….

15-20-25 வயதில் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களுக்கல்லவா தெரியும் அந்தக் கவலை. மீண்டும் மீண்டும் கம்ப்யூட்டரில் போய் உட்காரும் பையன் எதைப் பார்க்கிறானோ, என்ன செய்கிறானோ என்று சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் ரெண்டுங்கெட்டான் நிலையில் தவிக்கும் எத்தனையோ பெற்றோர்களை நான் பார்த்துக் கொண்டு
தான் இருக்கிறேன்.

சில காட்சிகளையும், விளம்பரங்களையும் பார்க்கும்போது, நான் கூட தவிப்பேன் – “என்னடா இது பாவம் பெண்களை இந்த அளவிற்கு எக்ஸ்ப்ளாயிட் பண்ணுகிறார்களே” என்று. பாவம் – பணத்துக்காக அந்தப் பெண்கள் எதையெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்று கூட நினைத்துக் கொள்வேன்.

“இருக்கிறது – காட்டுகிறேன்” என்று திமிர் பிடித்துச் சொல்லும் இவரைப் போன்ற பெண்களால், வேறு வழி இல்லாமல், பொருளாதாரத் தேவைகளுக்காக நடிப்பிற்கும், விளம்பரத்திற்கும் வருகிற மற்ற பெண்களுக்கும் அவக்கேடு.

இவரை ஆதரித்து எழுதுகின்ற கூட்டம் எதுவெண்று பாருங்கள். அங்கும் ஹீரோயினைக் “காட்டி” ஐம்பது வயதானாலும் ஹீரோவாகவே தொடர்கின்ற ஷாரூக் கான் போன்றவர்கள் தான் முன்னால் நிற்பார்கள்.

இந்தப் பெண் பேசுவதும், எழுதுவதும் –
நடந்து கொள்ளும் முறையும் – எல்லாமே
தவறான முன்னுதாரணங்கள். சமுதாயத்திற்கு கேடானவை….
அவர் போக்கிற்கு காரணம் – பெற்றோரின் வழிகாட்டுதல் இன்மையாலா அல்லது தவறான சகவாசங்களா தெரியவில்லை….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to “இருக்கிறது காட்டுகிறேன் -உனக்கென்ன..?” – சரியான அணுகுமுறையா…?

 1. தெனாலி சொல்கிறார்:

  ஏன் தீபிகா எங்கே இருக்கிறது காட்டுகிறேன் என சொல்லி இருக்கிறார். அவரது டிவீட் இதுதான்
  //YES!I am a Woman.I have breasts AND a cleavage! You got a problem!!??//

  நான் பெண் எனக்கு மார்பகம் இருப்பதால் அதில் பிளவும் இருக்கிறது, உனக்கு என்ன பிரச்சனை என்பதுதான் இதுக்கு அர்த்தம். அவரது மார்பகத்தை வட்டம் போட்டு காட்சிப்பொருளாக வைக்காதே என்று ஒரு பெண் சொல்லக்கூடாதா? இல்லாததை எழுதி ஒரு பக்க பதிவு தேற்றி இருப்பதில் உங்களின் வக்கிர புத்திதான் தெரிகிறது, மன்னிக்கவும். மேலும் இன்று அவர் அளித்த விளக்கத்தை பார்க்கவும். http://t.co/5aiRUSRwMJ

  • todayandme சொல்கிறார்:

   நண்பர் தெனாலி !

   //நான் ஈடுபாடு காட்டும் விஷயம் அல்ல இது//
   //மற்ற விஷயங்களுக்குள் போகும் முன்னர், இதைப்பற்றி எழுதவேண்டியதும் என் கடமையே என்று எண்ணுகிறேன்..//

   எனக்கென்னவோ கா.மை. தன் நிலையை முதலிலேயே விளக்கியிருந்தும் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால்,

   உங்கள் கருத்து கா.மை.யுடன் வேறுபடுகிறது என்றால் அதைச் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லாமல்,

   அவசர அவசரமாக முதல் பின்னூட்டமாக அவரை தனிப்படத் தாக்கி எழுதியிருப்பதைப் பார்த்தால்,

   விமரிசனத்தின் பதிவுகளின் எண்ணிக்கையை மனதில்கொண்டு எழுதியுள்ளது நன்கு புரிகிறது. நீங்கள் கூறியுள்ள வக்கிரபுத்தி எங்கே இருந்து புறப்படுகிறதும் என்று புரிகிறது.

   நீங்கள் இந்த வலைப்பூவை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

   மற்றபடி கா.மை. தான் செய்வதற்காக ஒருவேலையை பிரையாரிட்டியில் அசைன் பண்ணிவைத்தபின்பும் அவரை திசைதிருப்ப முடியுமென்றால்…..

   என்னுடைய பின்னூட்டத்தைப் படியுங்கள்.

 2. kinarruthavalai சொல்கிறார்:

  எனக்கென்னவோ இவளுங்களைப் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதே உங்களுக்கு மரியாதை எனப் படுகிறது. நம் நாட்டில் தாயை பற்றி சொன்னால்கூட சிலதுகளுக்கு கோபம் வாராது. ஆனால் நடிகை, நடிகர்களை பற்றி பேசினால் சாலை மறியல் அளவுக்கு போய்விடுவார்கள். திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களது உளரல்கள் எல்லாம் தத்துவங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்கின்ற உங்களின் வாக்கு நிறுபிக்கப் படும்.

 3. todayandme சொல்கிறார்:

  அன்பின் கா.மை.,

  ஒரு நடிகர் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்துவிட்டுப்போகட்டும். அவர் நடிக்கிறாரோ அல்லது அந்தக் கதாபாத்திரமாகவேயாகவோ மாறிவிட்டுப்போகட்டும். அது நமக்கு எப்படித் தெரியவருகிறது? அந்த சினிமாவை நாமாகப்போய் பார்க்கும்போது அல்லது பார்க்கவைக்கப்படும்போதுதானே. அந்த முதல் மீடியேட்டர் ஆன சினிமா அப்படித்தான்-கமர்சியல்தான்-பணம்தான் அங்கு எல்லாம்-அதைவைத்து வியாபாரம்பண்ண நடிக-நடிகையரின் உடம்புதான் (1)முதல் மூலதனம் அது சிக்ஸ்பேக் ஆக இருந்தாலும் மொட்டைத்தலை ஆக இருந்தாலும் விபச்சார வேடமாக இருந்தாலும். (2). தயாரிப்பாளரின் கறுப்புக்கோடிகள், (3). இயக்குநரின் திறமை (இவரிடம் இருக்கும் இதைக்காட்டினால் அல்லது இல்லாத இதை மறைத்தால் படம் நன்கு ஓடும் என்று ஜட்ஜிக்கிற அறிவு), (4)வதாக வருகிறது வியாபார விளம்பர உத்தி. இதற்கு உதவும் மீடியாக்கள் பலவிதமாக இவற்றைச் செய்துவருகின்றன. 1. டைரக்ட் ஆக இந்தப்படம் நல்லா இருக்குப்பா-போய்ப்பாருங்க. 2. நெகட்டிவ் ஆக இந்தப்படம் குடும்பத்தோடபோய்ப் பாக்கவே முடியாது (தனியா / ப்ரெண்ட்ஸ் கூடப்போய்ப் பாத்தா செம்மயா இருக்கும் 3. ஆடியோ/வீடியோ ரிலீஸில் நடி-கள் சினிமாவில் எப்படி வருகிறார்களோ அப்படியே வரவழைத்து பப்ளிசிட்டி தருவது. 4. கதைதிருட்டு பாடல் திருட்டு இசை திருட்டு என போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுப்பது 5. மல்லாக்கப்படுத்துக்கிட்டு எச்சில் துப்பறாமாதிரி தான் சம்பந்தப்பட்ட துறையையே தாறுமாறாகாட்டி படம் பண்ணுறது. இப்படிப் பல…… (ரூம் போட்டு யோசிக்கிறாய்ங்களோ)

  ஆக, தாம் செய்துகொண்டிருக்கும் எப்படிப்பட்ட வேலையையும் விட்டுவிட்டு வயதுவித்தியாசம் இல்லாமல் எல்லாத் தரப்பு மக்களின் கவனத்தையும் தன்புறம் திசைதிருப்பும் வண்ணம், இந்த 4-வதாப் போடற மூலதனமான விளம்பரம் ரீச் ஆனாத்தான் முதல் மூணு மூலதனமும் நல்லபடியா மகசூலத் தரும். (10செகண்ட் தொலைக்காட்சில வர்ற விளம்பரத்துக்கு 10கோடி மூலதனம் சாதாரணம் அப்டின்னா அதோட பவர் என்னன்னு நினைக்கிறீங்க)

  அதுக்காக விளம்பரம் வெளிவரக்கூடிய பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய மீடியாக்கள் பொதுமக்களோட நன்மை, நாட்டின் கலாச்சாரம் பத்தியெல்லாம் பொறுப்போட செயல்படணும்னு நாம எதிர்பார்க்கமுடியுமா?

  நிகழ்ச்சியைக் கவரேஜ் பண்ணி விசயத்தை எழுதுய்யா என்று சொன்னால் பணத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்த நடிகையைப் பார்த்து ஜொல்லையும் விட்டுவிட்டு OMG: Deepika Padukone’s cleavage show என்று தலைப்பைப் போடுவதால் யாருக்கு லாபம்? நிச்சயமாக அந்த மீடியாவுக்குத்தான் முதல் லாபம். எகிறும் டிஆர்பி ரேட். இரண்டாவது லாபம் தான் படத்துக்கு. இயக்குநர்களாவது ஏதேனும் முதலீட்டைப்போட்டுவிட்டு நடி-களிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள். இந்த மீடியாக்கள் என்ன முதலீடைப் போட்டார்கள், பலமடங்கு அறுக்கிறார்கள். அதற்காக விவஸ்தையே இல்லாமல் யார் யார் ஈரக்குலையையெல்லாம் அறுப்பார்கள்? நடிகையரின் கெண்டைக்காலில் தொடங்கி தொப்புளில் இறங்கி முலைகளில் முகம் பார்க்கும் இந்த மீடியாக்கள் முதலில் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். இதிலே எந்தப் பொதுஜனம் செத்தால் என்ன? வாழ்ந்தால் என்ன? செத்தால் மீடியாவுக்கு நன்மைதான். அதையும் ஒரு விளம்பரமாக்கி காசுபண்ணும் உத்தி.

  பாலிவுட் நடிகைகள் காட்டாத தாராளமா? அதற்குத்தானே அவார்ட் கொடுக்கிறார்கள். தமிழ் கவர்ச்சி நடிகையும் கலைமாமணி வாங்கியிருக்கிறாரே.

  நித்தி-ரஞ்சி யை நம்வீட்டு முற்றங்களில் மீண்டும்மீண்டும் துகிலுரிந்த தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் இந்தத் தொலைக்காட்சிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை, மொழியைத் தவிர. இந்த இணைக்கு சொல்வதற்கு ஒரு நியாயமும் இல்லை. அந்த நடிகை தன் பங்கு நியாயத்தைச் சொல்லியிருப்பதைப் பார்த்தால் மீடியா இதை வைத்தே இன்னும் விளம்பரம் செய்து தன் டிஆர்பியைக் கூட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிகிறது.

  இதை நடி உணர்ந்திருந்தாரென்றால், நீங்கள் யோசித்து இப்போது சொல்வதைப்போல, என்னைப் பார்க்காதே என் நடிப்பைப் பார் என்று சொல்லியிருந்திருப்பார். புத்தியிருந்தும் சமயோசித புத்தி இல்லாததால் அவசரப்பட்டுவிட்டார்.

  அவசரப்படவைத்து அவர்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

  நான் நடிகைக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் என்பதைவிட அந்த நடிகைக்கு-நடிகை காட்டிய கவர்ச்சிக்கு இந்த அளவுக்கு அந்த மீடியா சப்போர்ட் பண்ணியிருக்கக்கூடாது என்கிறேன். அவர்கள் தலைப்பாகப் போட்டதை, அந்தப் பர்ட்டிகுலர் போட்டோவை பெரிதாக்கி விழாவுக்கு வந்தவர்களில் அருகில் இருந்தவர்கள் பார்த்ததை (படம் எடுத்தவரே பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர் தானாம்) ஊரறிய உலகறிய பார்க்கவைத்த கொடூரத்தை, அதன்மூலமாக நமது கலாச்சாரத்தின் பெயரைக் கெடுத்து உலக மக்கள் (இன்றைக்கு theindependent.co.uk தலைப்புச் செய்தி இதுதான்) அனைவருக்கும் இந்த விளம்பரத்தைக் கொண்டுசென்ற குயுக்தி கொண்ட மீடியாவை ……….. என்ன செய்யமுடியும். நான் பார்க்காமல் இருக்கலாம், படிக்காமல் இருக்கலாம்.

  (பி.கு. இந்த ரிபோர்டைப் பார்த்து நடி கோபத்துடன் பதில்ட்வீட்டியதை பார்த்தவுடன் toi பதில்சொன்னார்களாம் ‘இந்த கமெண்டை நீங்கள் காம்ப்ளிமெண்ட் ஆக எடுத்துக்கொள்ளவேண்டும்’ / http://www.independent.co.uk/news/people/bollywood-actress-deepika-padukone-cleavage-show-tweet-provokes-anger-online-9735547.html)

  • தெனாலி சொல்கிறார்:

   @ நண்பர் todayandme,
   பதிவரை பர்சனலாக தாக்கி அதில் மனவக்கிரத்தை குறைக்கும் சைக்கோ அல்ல நான். பதிவரை போன்ற பலர் பொது பிரச்சனை குறித்து தொடர்ந்து எழுதினாலும் பெண்கள் விடயத்தில் சறுக்கி விடுகிறார்கள்.
   நீங்களே குறிப்பிட்டது போல நடிகைகளை போலவே நடிகர்களும் உடலை காட்டிதான் நடிக்கிறார்கள், புகைப்படத்திற்கு ஜட்டியோடு போஸ் தருகிறார்கள். கலாச்சார காவலர் வேடமிடும் ஒருவரும் அந்த நடிகரைப் பார்த்து ஏண்டா அவுத்து காட்டுகிறாய் என இதுவரை கேட்டதில்லை. அது என்ன நடிகையருக்கு மட்டும் ஒரு நியாயம்? நம் வீட்டு பெண்களை அந்நடிகர்களை ரசிப்பது மட்டும் கலாச்சார காவலர்களுக்கு சம்மதமா?
   டைம்ஸ் ஆப் இண்டியா தனது தரத்தை இழந்து பல வருடமாகி விட்டது. அந்த பத்திரிக்கையின் இணையதளம் ஒரு போர்ன் தளம் போலத்தான் இருக்கும். அங்கு 18 வயதுக்கு கீழானா ஒருவர் செல்லுவதே பாவம். இந்த விடயத்தில் தீபிகாவை அசிங்கமாக படமெடுத்து போட்டிருக்கிறார்கள். ஆனால் இன்னொரு மலையாள நடிகை விடயத்தில் அது இன்னும் மோசம். அவரின் மார்பை எவனே அமுக்குவது போலவும் அதை நடிகை கண்டிப்பது போலவுமான ஃபேக் படம் பலநாளாக அத்தளத்தில் இருந்தது. அந்நடிகை அதை கண்டித்தால் தனக்குதான் அசிங்கம் என சும்மா இருந்துவிட்டார்.
   மேலும் அவர்கள் போட்ட படம் அப்பெண் (தீபிகா) கொடுத்த ஆபாச போஸ் அல்ல. ஒரு விழாவில் டாப் ஆங்கிளில் எடுத்த படம். இப்படி ஜாக்கெட்டுக்குள் எட்டி பார்க்கும் பத்திரிக்கைக்கு செருப்படி கொடுத்தால் ஒரு பெண், நடிகை எனும் ஒரே காரணத்தினால் எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தபடுகிறார் என்பதை சுட்டவே எனது பின்னூட்டம். இந்த பயத்தினால்தான் மலையாள.நடிகை ஊமையாகிவிட்டார், பொறுத்து போவது இப்படி எவ்வளவு பெண்களோ!
   அப்பெண் கண்டனம் தெரிவித்ததை திரித்து எழுதியது குறித்து கேட்டதற்கு இதுவரை ஒரு விளக்கமுந்தரவில்லை பதிவர் (தனிப்பட்ட தாக்குதல் என்பது நல்ல எக்ஸ்கியூசாக போய்விட்டது).இங்கு பிரச்சனை ஒரு பெண் சொல்லாத ஒன்றினை கற்பனை செய்து எழுதுவது தவறா இல்லையா என்பதுதான் நடிகை உடலை காட்டுவது தவறா சரியா என்பது வேறு பிரச்சனை, அதை பின்னர் விவாதிப்போம்.
   தீபிகா அப்பத்திரிக்கைக்கு செருப்படி கொடுத்ததில் மகிழ்ச்சி. செருப்படியில் மற்றவரும் சேர்ந்ததால் நீங்கள் குறிப்பிட்ட அந்த கம்பளிமென்ட் டீவிட் மட்டுமல்ல, அசிங்கம் பிடித்த படத்தையும் எடுத்துவிட்டதாம் TOI.

  • தெனாலி சொல்கிறார்:

   //நான் நடிகைக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் என்பதைவிட அந்த நடிகைக்கு-நடிகை காட்டிய கவர்ச்சிக்கு இந்த அளவுக்கு அந்த மீடியா சப்போர்ட் பண்ணியிருக்கக்கூடாது என்கிறேன். //
   மேலும் நடிகையோ அல்லது வேறு யாரோ பெண் எப்படி உடை அணிவது என்பதை தீர்மானிப்பவர் அவரே. அதை தாக்க ஒரு உரிமையும் ஆண்களுக்கு இல்லை. வேணும்னா மேலைநாட்டில் இப்படி உடையணியும் பெண்ணிடம் சொல்லுங்கள். அப்புறம் மாமியார் வீட்டு மரியாதைதான் கிட்டும். இல்லை என்றால் ISIS ஆளுகளை ஆட்சிக்கு வைத்து கொள்ளுங்கள். உடம்பின் ஏதாவது பகுதி தெரிந்தாலும் பெண்களை கல்லாலடித்து கொன்றுவிடுவார்கள்!!! உங்களின் போலி கலாச்சாரத்தை காக்க வேறு வழி இல்லை!!!

   டிஸ்கி; நீங்க நினைப்பது போல் நான் சினிமா பைத்தியமோ நடிகை பைத்தியமோ இல்லை. சினிமா பார்த்தே வருடமாகிவிட்டது. கடைசியாக பார்த்த படம் எந்திரன்!!!

 4. todayandme சொல்கிறார்:

  Reblogged this on todayandme and commented:
  OMG: Show off. Its Compliment.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே ( todayandme )

   அனைத்திற்கும் சேர்த்து – மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. kalakarthik சொல்கிறார்:

  அருமையான கருத்துகளை ,தெளிவான நடையில், கண்ணியமான வார்த்தைகளில் வெளிப் படுத்துகிறீர்கள். நான் எழுத நினைப்பதை அப்படியே எழுதி விடுகிறீர்கள்.பின்னூட்டங்களும் தங்கள் கருத்துகளுக்கு வலு சேர்க்கின்றன.அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

 6. Arun சொல்கிறார்:

  Sir, people like you should not bring attention to these things. The article which was published a year ago has got her attention now. There could be a hidden agenda behind this outburst. Better to ignore it.

 7. Dr k g palaniappan சொல்கிறார்:

  When there is a sizable young population blindly follow cine personalities it is a social
  obligation for the actors to move their followers in the right direction.

 8. chandraa சொல்கிறார்:

  the outburst of the actress is not unnatural

 9. visujjm சொல்கிறார்:

  பெண் என்பதற்கு தாங்கள் மகளிர் தினம் அன்று ஒரு இடுகை (அது இடுகை அன்று) போட்டதை முதல் பின்னூட்டத்துக்கு பதிலாக விளக்குகிறேன். பெண் என்பதால்…

 10. Viji சொல்கிறார்:

  Completely taken out of context,what times of India did was to take a top angle shot making a fairly decent dress into something very sleazy,she was actually protesting that.

 11. chandraa சொல்கிறார்:

  Tenalis relevant explanationshould be an eye opener to the critics I am reminded of the WISE tenali raman …..

 12. gopalasamy சொல்கிறார்:

  I am not writing relevant to this article.
  But I want to mention about a mobile advt in TV. The father does not care who is in her daughter’s bed. Instead of that he is attracted towards the cell phone he is holding. What a shameful family and shameful advt? Why nobody condemned it?

 13. todayandme சொல்கிறார்:

  நண்பர் தெனாலி !

  நடிகர் என்றால் கண்டிக்கக்கூடாது என்றும் நடிகை என்றால் கண்டிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் சொல்லவில்லை, இதை இந்த மீடியா தான் எட்டிப்பார்த்தது மட்டுமில்லாமல் நம்வீட்டு முற்றத்தில் ஒளிபரப்பி உலகஅளவில் கவனத்தை ஈர்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறேன். ஆனால் நீங்கள் ! பரவாயில்லையே. ..…தளம் மாதிரி இருக்கும் என்று தெரிந்தும் அவர்களது செய்திகளை விலாவாரியாத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், எழுத்துக்களிலும் இரசனையோடு வடித்திருக்கிறீர்களே. இதிலே இன்னும் சுவை ! திரைப்படங்களை நான் பார்ப்பதில்லை என்று இரண்டாம் (3ம்) பின்னூட்டம் வேறு. நடத்துங்கள் நடத்துங்கள். 🙂 🙂

  ISIS க்கும் இந்த இடுகைக்கும் பின்னூட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. நடிகருக்கு வக்காலத்து வாங்காத நீங்கள் நடிகைக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். ஆணுக்கு வக்காலத்து வாங்காத நீங்கள் பெண் என்றால் உடனே அடித்துப்பிடித்து வக்காலத்து வாங்குகிறீர்கள். அதிகமான பதிவுகளை இடுகிறார் என்று பதிவரையே ‘ஒன்றுக்குமில்லாததை ஒரு பக்க பதிவு ஆக தேற்றி’ என்றும் ‘வக்கிரம்’ என்றும் விஷ வார்த்தைகளால் விளையாடுகிறீர்கள். 😦

  பதிவர் எழுதியிருந்தாலும் அதை ignore பண்ணியிருக்கலாமே நீங்கள். உங்கள் வார்த்தைகளின்படி ஒன்றுமில்லாத பதிவை உபயோகப்படுத்தி விமரிசனத்திற்கு அநாவசியமாகவும் உங்களுக்கு அத்தியாவசியமாகவும் ஒரு பப்ளிசிட்டி கொடுத்துவிட்டீர்களே! நீங்கள் செய்த இதைத்தானே அவர்களும் செய்திருக்கிறார்கள். 🙂

  No comments என்று எழுதியிருந்தாலேயே உங்களது எதிர்ப்பை நாசூக்காகத் தெரிவித்தது மாதிரிதானே. உங்களுக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக <>

  உங்கள் வார்த்தைகள் நாகரிகமாக இருந்திருந்தால் உங்கள் பின்னூட்டத்திற்கு ஒரு பின்னூட்டமே வந்திருக்காது. ஏனென்றால் விமரிசனம் வலைப்பூவைப் பொறுத்தவரை எதிர்க்கருத்துகளும் திறந்தமனதுடன் விவாதிக்கப்பட்டுத்தான் வருகின்றன.

  சமுகப் பொறுப்புணர்வு முதலில் மீடியாக்களுக்கு வேண்டும். அவைதான் நடப்புகளை மக்களுக்குக் கொண்டுசேர்க்கின்றன. அது பத்திரிகை ஆனாலும் சரி, வானொலி ஆனாலும் சரி, தொலைக்காட்சி ஆனாலும் சரி, நியூமீடியா எனப்படுகிற இணையம் ஆனாலும் சரி.

  மீடியா மனிதர்களுக்கு புதிதாக யாரும் வந்து இவற்றை சொல்லித்தரவேண்டிய-கண்டித்து உணர்த்தவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களும் படித்தவர்கள்தாம், சமூகத்தில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள்தாம், குடும்பம் என்னும் அமைப்பிற்குள் இருப்பவர்கள்தாம், பிள்ளைகளாகவோ அல்லது பிள்ளைகளைப் பெற்றோராகவோ இருப்போர்கள்தாம். வேற்றுகிரகத்துவாசிகளா அவர்கள்? இல்லையே பாரதமணித்திரு நாட்டின் புதல்வர்கள்தானே.

  என்றாவது ஒருநாள் மாறுவார்கள் என்ற நம்பிக்கைதானே வாழ்க்கை!

 14. தெனாலி சொல்கிறார்:

  //ஆணுக்கு வக்காலத்து வாங்காத நீங்கள் பெண் என்றால் உடனே அடித்துப்பிடித்து வக்காலத்து வாங்குகிறீர்கள்.//

  ஏனெனில் நான் பெண் குழந்தைக்கு தகப்பன். உடனே உன் பெண்ணை அறைகுறை ஆடை அணிய அனுமதிப்பாயா என்று கேட்காதீர்கள். அதுவும் பர்சனல் அட்டாக் வகையில்தான் வரும் ;). 18 வயதுக்கு மேல் எப்படி உடை அணிவது என்பது அவளின் விருப்பம். மேலும் நான் வசிப்பது அயல்நாட்டில். தீபிகா போட்டது போலத்தான் பெண்கள் உடை அணிகிறார்கள். அவர்களை உற்று பார்ப்பது அல்லது கேலி செய்வது இங்கு அநாகரீகம், யாரும் செய்வதில்லை – நான் உட்பட. ஆனால் பர்தா அணிந்திருந்தாலும் அப்பெண்ணை முறைக்கும் பலரை கண்டிருக்கிறேன் நம்மூரில். எல்லாம் ஆணின் மனதில்தான் இருக்கிறது.

  //தளம் மாதிரி இருக்கும் என்று தெரிந்தும் அவர்களது செய்திகளை விலாவாரியாத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், //

  என்ன செய்து தொலைப்பது? செய்திகளுக்காக அத்தளம், ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ்,NDTV என பல தளங்களை மேய்ந்தால்தான் ஒரு முடிவுக்கு வரமுடிகிறது. உதாரணமாக ஹிந்துவை எடுத்தால் தரம் நன்றாக இருக்கிறது ஆனால் ஜெமோ சொன்னா மாதிரி அவர்கள் பெய்ஜிங்குக்காகத்தான் செய்தி போடுகிறார்கள்.

  //உங்கள் வார்த்தைகள் நாகரிகமாக இருந்திருந்தால் உங்கள் பின்னூட்டத்திற்கு ஒரு பின்னூட்டமே வந்திருக்காது..//

  வக்கிரம் என்கிற வார்த்தை அநாரீகமாக இருந்தால் ஒரு பெண் ‘காட்டுகிறேன் என சொல்கிறாள்’ என பொய்யாக எழுதுவது எம்புட்டு பெரிய அநாகரீகம்?

  //பதிவர் எழுதியிருந்தாலும் அதை ignore பண்ணியிருக்கலாமே நீங்கள். உங்கள் வார்த்தைகளின்படி ஒன்றுமில்லாத பதிவை உபயோகப்படுத்தி விமரிசனத்திற்கு அநாவசியமாகவும் உங்களுக்கு அத்தியாவசியமாகவும் ஒரு பப்ளிசிட்டி கொடுத்துவிட்டீர்களே! நீங்கள் செய்த இதைத்தானே அவர்களும் செய்திருக்கிறார்கள்.No comments என்று எழுதியிருந்தாலேயே உங்களது எதிர்ப்பை நாசூக்காகத் தெரிவித்தது மாதிரிதானே. உங்களுக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக//

  ஒன்றுமில்லாத பதிவு அல்ல. ஒரு பெண்ணினை அசிங்கப்படுத்தும் பதிவு. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் முறை. பப்ளிசிட்டி தேடுகிறேன் என்பது நல்ல ஜோக்!!! பப்ளிசிட்டி தேட சில நூறுபேர் படிக்கும் வலைப்பதிவுகளைவிடபல உருப்படியான வழிகள் இருக்கிறது. ஆனால் ஒன்று – குறைந்தபட்சம் உமது பின்னூட்டத்தையாவது நான் அலட்சியப்படுத்தி இருக்கலாம்தான், அதில் சாரமில்லை சும்மா வெற்றுக்கூச்சல்தான் தெரிகிறது.

 15. தெனாலி சொல்கிறார்:

  @vimarisanam – kavirimainthan

  தீபிகா ஒன்றும் இந்த பதிவினை படிக்க போவதில்லைதான். ஆனாலும் இந்த மாதிரி விக்டோரியன் காலத்து நாகரிகத்தை தூக்கி பிடித்து பெண்களை அவமதிக்கும் பதிவுகளை எதிர்க்க வேண்டியிருக்கிறது என் தோன்றியதால்தான் பின்னூட்டம் போட்டேன்- பெரும்பாலும் பின்னூட்டமே போடமாட்டேன்.

  ஒரு பெண்ணை அவமதிப்பு செய்ததால்தான் அந்த குட்டு. ஆனால் எல்லாப் பின்னூட்டத்தையும் நீக்காமல் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளித்தற்காக (க.சுந்நதிரம் தமிழ்நாட்டில் அரியதொரு விடயம்) உமக்கு உண்மையாக எனது வணக்கங்கள்!!!நன்றி.

 16. todayandme சொல்கிறார்:

  நண்பர் தெனாலி,

  பின்னூட்டத்தில் : வட்டம்போட்டு காட்சிப்பொருள் என்றும், இல்லாததை பதிவாகத் தேற்றி என்றும், பதிவரின் வக்கிர புத்தி என்றும்,

  பின்னூட்டத்திற்குப் பின்னூட்டத்தில் : சைக்கோ, …. போடும் நடிகர், அவுத்துக் … கலாசார காவலர் வேடம், நம்வீட்டுப் பெண்கள் அந்த நடிகர்களை ரசித்தால்..(?), …. தளம், …… fake படம், கல்லாலடித்துக் கொல், போலி கலாச்சாரம், சினிமா /நடிகை பைத்தியம் etc. என்றும்

  உங்கள் ¬பின்னூட்டங்களை தொடர்ந்து படித்துவந்தால் நீங்கள் வெற்றுக்கூச்சல் போடுவதாகத் தெரியவில்லை, வேண்டுமென்றே கூச்சலிடுவதாகத்தான் தெரிகிறது.

  எல்லாவற்றும் மேலாகப் பெண்ணைப் பெற்றவன் என்ற கூடுதல் தகுதிவேறு. நல்லவேளையாக பெண்ணை பெண்ணாகப் பார்க்கும் அயல்நாட்டில் வசிக்கிறீர்கள் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

  எங்கே இருந்துகொண்டு மொழியைப் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்து மதிப்பு/அவமதிப்பு, மரியாதை/அவமரியாதை, வக்கிரம்/அவக்கிரம் போன்றவையும் அவற்றின் வார்த்தைகளும் பொருளும் மாறத்தான் செய்யும், ஒப்புக்கொள்கிறேன்.

  அதற்காக பதிவையும் பின்னூட்டத்தையும் நீக்காமல் இருப்பதே, பதிவைப் பற்றியும், பதிவரைப் பற்றியும், பின்னூட்டமிடுபவர்களைப் பற்றியும் இப்போது மட்டுமல்ல, எப்போது இங்கு வந்து படித்தாலும் படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள உதவும்.

  அனைவரும் (அட்லீஸ்ட் சிலநூறு பேராவது) படிக்கக்கூடிய வலைப்பூவில், உங்கள் பின்னூட்டங்களில் கண்ணியமான (இந்தியாவில், தமிழ்நாட்டில் படிப்பவர்களுக்கு) வார்த்தைகளைப் உபயோகப்படுத்த முயலுங்கள்.

  “இனிய உளவாக இன்னாத கூறல்
  கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ”
  என்று ஒரு தாடிக்காரப் புலவர் தமிழில் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கிறாரே.

  நன்றி.

 17. A.Raghavan சொல்கிறார்:

  திரு தெனாலி அவர்களுக்கும்,
  மற்றவர்களுக்கும் –

  தெனாலி அவர்கள் இந்த பெண்ணின் பின்னணி அரியாமல் தொடர்ந்து வாதம் செய்துகொண்டே இருக்கிறார். இதைப்பற்றி ஒரு அருமையான கட்டுரை 3 வருடங்கள் முன்னரே இதே விமரிசனம் வலையில் வந்திருக்கிறது. அருமையான கட்டுரை. அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது. பார்க்கவும் –

  (“பணக்கார பரத்தைகளும், சாராய வியாபாரிகளும் சமூகத்தில் பெறும் மரியாதை ……… Posted on மே 29, 2011 by vimarisanam – kavirimainthan” -)
  https://vimarisanam.wordpress.com/2011/05/29/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/

 18. chandraa சொல்கிறார்:

  ragavan ji this actress would have behaved indecntly on an another occasion.but to condemn her speak ill of her at the every available opprtunity is not FAIR. k.m ji who would take enormous cauion and responsibility in his creations had faied this time thoroughly. the first shock we experienced…. he had quoted certain words sarca..stically and those wordswere not uttered by her. and the photographer had playeda nasty trick which all knew… and finally have we not heard LORD JESUS begging the people not to stone a call girl…. and if anybody done no harm or not done bad things in their lives canstone the call girl.

 19. Ganpat சொல்கிறார்:

  நம் நாட்டில் ஒரு பிரமாண்டமான கலாசார மாறுதல் ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என ஊகிப்பது மிக கடினம்.கற்பு,கல்யாணம்,குடும்பம்,கணவன் மனைவி பொறுப்புகள் போன்ற பல சொற்களுக்கு புதிதாக பொருளும் எல்லைகளும் வரையறுக்கப்படுகின்றன.இதை ஐம்பது வயது கடந்தவர்கள் ஜீரணிப்பது கடினம்.பல நூற்றாண்டுகளாக சமூக,பொருளாதார உடல் ரீதியாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் இப்பொழுது கிடைத்திருக்கும் சுதந்திரத்தை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.அவர்கள் தங்கள் அறிவு ஆற்றல் உடல் மனம் ஆகிய அனைவற்றையும் உலகிற்கு வெளிகாட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அப்படியானால் அறிவுரை கூறுவது?கூறலாம் ஆனால் வெளியே கேட்கும் கூச்சலில் அது எடுபடாது.

  தெனாலி:வக்கிர புத்தி என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.உங்களுக்கு காவிரிமைந்தனைப்பற்றி என்ன தெரியும்?சமூகத்தில் அக்கறை கொண்ட எந்த நேர்மையான மனிதனுக்கும் இப்பொழுது நாட்டில் நடப்பதைப்பார்த்தால் ரத்தம் கொதிக்கத்தான் செய்யும்

  todayandme:மிக அருமையாக உங்கள் பின்னூட்டங்கள் அமைந்துள்ளன .நன்றி.

  கா.மை ji: ஒரு வியாபாரி நடத்தை சரியில்லை என்று ஒரு பெண்ணை கண்டிக்கும்போது அவள் “mind your business” என்று சொன்னால் “நீ உன் வியாபாரத்தில் கவனம் செலுத்து ” என்றே பொருள் கொள்க (“உன் வேலையைப் பார்த்துகொண்டு போ!” என்றல்ல)..

  ம்ம்ம்ம்ம்ம்ம் நேரம்தான்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.