கோட்டை, கொத்தளங்கள் – அரண்மனைகள்…..

நாலைந்து நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில்
‘ஜோதா-அக்பர்’ ஹிந்தி திரைப்படம் பார்த்தேன்.
மொகலாய சக்கரவர்த்தி அக்பரின் திருமண வாழ்க்கையை பிரதானமாகச் சித்தரிக்கும் படம். இந்தப் படத்தின் பல காட்சிகள் உதய்பூரில், பிச்சோலா ஏரியுள்ளும், ஏரிக்கரையை ஒட்டியும் இருக்கும்
‘ஷிவ் நிவாஸ் பேலஸ்’ என்கிற – நட்சத்திர ஓட்டலாக
மாற்றப்பட்ட அரண்மனையில் எடுக்கப்பட்டவை.

ராஜஸ்தானில் எக்கச்சக்கமான பெரிய, அழகிய
அரண்மனைகள் இருக்கின்றன – அவற்றைக் காண
ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்….

இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது,
இந்தியாவில், தமிழ் நாட்டில் – இருக்கும் கோட்டைகள், அரண்மனைகள் பற்றி ( அவற்றில் நான் நேரில் பார்த்த சிலவும் அடங்கும் ) கொஞ்சம் எழுதுவோமே என்று தோன்றியது.

30 வருடங்களுக்கு முன்னரே ‘ஆக்டபஸி’ என்கிற
ஜேம்ஸ் பாண்ட் படம் இந்த உதய்பூர் ஓட்டலில்
‘சுட’ப்பட்டு
இந்த இடம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் ஆகி விட்டது …!
இப்போதைக்கு இந்த நட்சத்திர ஓட்டலில்
ஒரு நாள் வாடகை ரூபாய் 23,000/- ….!!!

1880-ல் துவங்கப்பட்டு, 1904-ல் ( சுமார் 110 வருடங்களுக்கு முன்) கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனையை ‘கட்டி மேய்க்க’ முடியாததால், மன்னர் ஃபதே சிங் மஹாராணா, நட்சத்திர ஓட்டலாக்கி விட்டார். இந்த ஓட்டலின் சில அழகான புகைப்படங்களை கீழே தந்திருக்கிறேன்….!

shiv nivas -taj lake pichola-udaypur-1

shiv nivas palace -2

shiv nivas-3

shiv nivas-4

shiv nivas -5

shiv nivas-6

shiv nivas-7

 

பொதுவாக ராஜஸ்தானில், டெல்லியில், பெரிய அளவில்
பல கோட்டைகளும் அரண்மனைகளும் இருக்கின்றன.
மஹாராஷ்டிராவில் சிறிதும் பெரிதுமாக நிறைய கோட்டைகள்……. ஹைதராபாத் அருகே மிகப்பெரிய கோல்கொண்டா கோட்டை…..

தமிழ் நாட்டில் சொல்லிக் கொள்கிற அளவில்
மிகப்பெரிய கோட்டைகள் எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பெரிதாக என்றால் – வேலூர்
கோட்டையை சொல்லலாம். அடுத்து செஞ்சிக் கோட்டையை, கிருஷ்ணகிரி கோட்டையை சொல்லலாம்.
மற்றவை எல்லாம் அனேகமாக மிகச்சிறிய கோட்டைகளே. அரண்மனைகள் – அனேகமாக இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

கீழே வேலூர், செஞ்சி, கிருஷ்ணகிரி, தரங்கம்பேட்டை
டட்ச் கோட்டை, ஆகிய கோட்டைகளின் புகைப்படங்கள்….
.

photos

1  – Vellore fort  2.    Ginjee fort  3.  Krishnagiri fort

4.  Krishnagiri fort drawing of 1764 kept in british museum

5 and 6 – Dutch fort in Tarangambadi

 

vellore forts-1

ginjee fort-2

krishnagiri fort-3

Kistnagherry_Krishnagiri -british library - 1764

-tarangambadi dutch fort-4

dutch fort-tarangambadi-2

 

இவற்றைப் பற்றி சொல்ல இன்னும் சில செய்திகள்
இருக்கின்றன. நாளை தொடர்கிறேனே…….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to கோட்டை, கொத்தளங்கள் – அரண்மனைகள்…..

 1. ramanans சொல்கிறார்:

  எழுத்தாளர் விட்டல் ராவ் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோட்டை, கொத்தளங்கள் பற்றி ஓர் அற்புதமான நூல் எழுதியுள்ளார். நூலின் பெயர் “தமிழகக் கோட்டைகள்” அம்ருதா பதிப்பகம் வெளியீடு.

  நிறைய சுவாரஸ்யமான பல செய்திகள் அதில் உள்ளன.

  பொறுப்பின்மையாலும், அலட்சியத்தாலும், விஷக்கிருமிகளின் நுழைவுக் கலாசாரத்தாலும் நாம் இழந்தவை மிக மிக மிக அதிகம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ரமணன்.

   நீங்கள் கூறுவது உண்மை. மிகச்சிறப்பான தொன்மைகள்
   பலவற்றை நாம் அலட்சியம், பொறுப்பின்மை காரணமாக
   இழந்து விட்டோம்.

   வலைத்தளத்தில் தமிழில் எங்காவது இது பற்றி கிடைக்குமா …?
   நான் இன்னும் விவரமாக ஆராய்ந்து எழுத வேண்டும் என்று தான்
   நினைத்தேன் …. முடியவில்லை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. D. Chandramouli சொல்கிறார்:

  In Chingleput (pardon me for old spelling), in my teen age, I had come across some dilapidated remnants of a fort around the Kolavai Eri. I don’t know if anything is still left of it. Btw, is there is no old fort in Thanjavur?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சந்திரமௌலி,

   தமிழ்நாட்டில் சிறியதாக கிட்டத்தட்ட 25 கோட்டைகள்
   இருக்கின்றன. ஆனால் ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லை.

   தஞ்சாவூர் கோட்டை இன்றும் இருக்கிறது.
   ஆனால், இது பழந்தமிழர் கோட்டை அல்ல.
   மராட்டிய மன்னர்கள் காலத்தில் எழுப்பப்பெற்றது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  கோட்டை, கொத்தளங்கள் – அரண்மனைகள்…..= vimarisanam – kavirimainthan = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு vimarisanam – kavirimainthan

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  கோட்டை, கொத்தளங்கள் – அரண்மனைகள்…..= vimarisanam – kavirimainthan = எனது
  பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு vimarisanam – kavirimainthan

  2014-08-20 14:29 GMT+05:30 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :

  > vimarisanam – kavirimainthan posted: “நாலைந்து நாட்களுக்கு முன்னர்
  > தொலைக்காட்சியில் ‘ஜோதா-அக்பர்’ ஹிந்தி திரைப்படம் பார்த்தேன். மொகலாய
  > சக்கரவர்த்தி அக்பரின் திருமண வாழ்க்கையை பிரதானமாகச் சித்தரிக்கும் படம்.
  > இந்தப் படத்தின் பல காட்சிகள் உதய்பூரில், பிச்சோலா ஏரியுள்ளும், ஏரிக்கரையை
  > ஒட்டியும் “

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.