கல்கியின் “பொன்னியின் செல்வன்” குறித்து ……

kalki plus ponniyin selvan-1

ponniyin selvan image

 

ஆசிரியர் கல்கி அவர்களின் அமர காவியம் “பொன்னியின் செல்வன்” 5-வது முறையாக ‘கல்கி’ வார இதழில், 03/08/2014 முதல் மீண்டும்தொடர்கதையாக வெளிவருகிறது. ஒரே தொடர் இது போல் மீண்டும் மீண்டும் வெளிவருவது
ஒரு உலக சாதனை.
வேறெந்த மொழியிலும்,
வேறெந்த எழுத்தாளருக்கும்
கிடைக்காத ஒரு பெருமை…!

இந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் குறித்து
எனக்கு பார்க்கக் கிடைத்த சில பெருமையான
தகவல்களை இங்கு பதிவிட்டு,
உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

( விமரிசனம் வலைத்தளத்தை துவங்கும்போது
எனக்கான புனைப்பெயராக ‘பொன்னியின் செல்வன்’
இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன்.

அந்தப் பெயரின் மீது,
பாத்திரங்களின் மீது, கதாசிரியர் மீது
சிறுவயது முதலே எனக்குஅந்த அளவு ஈடுபாடு….!
ஆனால் எழுத்துக்களை எவ்வளவு மாற்றிப்போட்டும் எனக்கு அந்தப்பெயரில் ஈமெயில் ஐடி
(e-mail ID )கிடைக்கவில்லை. ….

ஏற்கெனவே அந்த பெயருக்கு அவ்வளவு டிமாண்ட் …..!
அதற்குப் பிறகு அதற்கு மாற்றாக, அதே அர்த்தத்தில்
தேர்ந்தெடுத்த பெயர் தான் “காவிரிமைந்தன்”..! !)

இனி – பொன்னியின் செல்வன் குறித்து –

1) தமிழகத்தின் 10ஆம் நூற்றாண்டு கால
வாழ்க்கைமுறையை, சமூகம், கலை, கலாச்சாரம்,
இயற்கை வளம், போர் முறைகள்
அனைத்தையும் பிரதிபலிக்கும் – சரித்திரமும், கற்பனையும் சேர்ந்து, பின்னிப்பிணைந்து உருவான ஒரு தொடர்.

2) தமிழில், வார இதழ்களில் இது வரை வெளிவந்ததிலேயே மிக அதிக காலத்திற்கு – சுமார் 4 ஆண்டுகள் வரை தொடர்ந்து வெளிவந்த ஒரே சரித்திரக்கதை.

3) இது வரை 4 முறை கல்கி வார இதழிலேயே
தொடர்கதையாக வெளிவந்திருக்கிறது.

அக்டோபர் 29, 1950 முதல் 1954 வரை முதல் தடவையாகவும்,
1968 முதல் 1972 வரை இரண்டாவது தடவையாகவும்,
1978 முதல் 1982 வரை மூன்றாவது தடவையாகவும்,
1998 முதல் 2002 வரை நான்காவது தடவையாகவும்
அதே ‘கல்கி’ வார இதழில் வெளிவந்தது.

இப்போது 5வது தடவையாக ஆகஸ்ட் 3, 2014
இதழில் துவங்கி இருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையையும்
கவர்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறை தொடர் துவங்கும்போதும், கல்கியின் விற்பனை பல மடங்கு அதிகரிப்பதாக கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புதல்வர் கி.ராஜேந்திரன் கூறுகிறார்.

4)புத்தகக் கண்காட்சி துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகமாக விற்பனையான நாவல்களில் இதுவும் ஒன்று.

5) பொன்னியின் செல்வனில் – மிக அதிகமான அளவில்,
கதாபாத்திரங்கள் (42) உண்டு. மஹாபாரதம் போல்,
நிறைய கிளைக்கதைகள், அதற்கான உப-பாத்திரங்கள்,
அவற்றிற்கான திருப்பங்கள் உண்டு.
ஆனால், அனைத்தும் மிக நேர்த்தியாக,
அழகாக பின்னப்பட்டவை. எந்த பாத்திரமோ, நிகழ்வோ –
நாவலில் அந்தரத்தில் விடப்படவில்லை. அனைத்தும்
அற்புதமாக இணைக்கப்பட்டிருக்கும்.

6) தொடருக்கு படங்கள் வரைந்த ஓவியர் மணியம்
அவர்களுடன் ஒவ்வொரு வாரமும் கல்கியும் உட்காருவாராம். தன் கற்பனைப் பாத்திரங்கள் மணியனின் கைவண்ணத்தில் உயிர் பெறுவதை பார்த்து மகிழ….

7) ஒவ்வொரு வாரமும், குறைந்தது 16 பக்கங்களும்,
நிச்சயமாக இரண்டு அத்தியாயங்களும்,
ஐந்து அல்லது ஆறு ஓவியங்களும் இருக்குமாறு
பார்த்துக்கொள்வாராம் ஆசிரியர் கல்கி.
ஒவ்வொரு வாரத்திலும், ஒரு மர்மம் இருக்குமாறும் பார்த்துக் கொள்வாராம்.

8) பொன்னியின் செல்வன் 1954, டிசம்பர் 5 அன்று முதல்
தடவையாக புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. ஆனால் அதைக் காண ஆசிரியர் கல்கி இல்லை – மறைந்து விட்டார்.

9) 1958-ல் எம்ஜிஆர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க விரும்பி அதற்கான உரிமையை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். ஒப்பந்த காலமான 3 ஆண்டுகளுக்குள் வேலையைத் துவக்க இயலாததால், மீண்டும் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். ஆனால் – துரதிருஷ்டவசமாக அவரால் அதில் ஈடுபட முடியவில்லை.

அதற்குப் பின், கமலஹாசனும், மணிரத்னமும் கூட
முயற்சி செய்து – எப்படியோ கைகூடாமல் போய் விட்டது.

10) 1999-ல் கல்கி அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, மத்திய அரசு கல்கியின் படைப்புகள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது.

எனவே, 1999க்கு பின் யார் வேண்டுமானாலும், கல்கியின்
படைப்புகளை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும்
இலவசமாக பயன்படுத்தலாம் என்கிற வசதி ஏற்பட்டது.

11)  விளைவு – கல்கியின் “பொன்னியின் செல்வன்” பல
பதிப்பகங்களால், பலவித உருவங்களில், அளவுகளில்,
விலைகளில் – வெளியிடப்பட்டுள்ளன. ஐந்து பகுதிகளும்
சேர்ந்து – குறைந்த பட்சம் 190 ரூபாயிலிருந்து
அதிக பட்சம் 1350 ரூபாய் வரை
பல விலைகளில் கிடைக்கிறது…!!

12) வலைத்தளங்களில் முழுநாவலும் இலவசமாக
கிடைக்கிறது. படிக்க முடியாத நிலையில் இருப்பவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, உரைவடிவிலும் (கதை சொல்லியாக ) பொன்னியின் செல்வனை வெளியிட்டிருக்கிறார்கள் – அதுவும் வலையில் இலவசமாக…!

13) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன்
கதை நிகழ்ந்த இடங்களான தஞ்சாவூர், வீராணம் ஏரி,
கொடும்பாளூர், பழையாரை, கோடிக்கரை,
இலங்கை – போன்ற அத்தனை இடங்களிலும்
வரலாற்று சரித்திர சான்றுகள் இன்றும் உள்ளன…..

ஆசிரியர் கல்கி அவர்களின் பெருமையை,
பொன்னியின் செல்வன் நாவலின் பெருமையை,
பழந்தமிழர் வரலாற்றின் பெருமையை –
இங்கு உங்களுடன் சேர்ந்து நினைவு கொள்வதில்
நானும் மகிழ்கிறேன்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to கல்கியின் “பொன்னியின் செல்வன்” குறித்து ……

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  கல்கியின் “பொன்னியின் செல்வன்” குறித்து = வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். மகிழ்ச்சி திரு காவிரிமைந்தன்.

 2. Pingback: கல்கியின் “பொன்னியின் செல்வன்” குறித்து …… | rathnavelnatarajan

 3. Ganpat சொல்கிறார்:

  தமிழர்களில் மொத்தம் இரண்டே பிரிவு
  1.அதிர்ஷ்டசாலிகள்
  2.பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள்.

 4. gopalasamy சொல்கிறார்:

  Ponniyin selvan will remind Mahabaratham and Sivakamiyin selvan will remind Ramaayanam. Our historical evidences are less. With available information Kalki did a great service to tamil world.
  In kalki, i read it all the three times, when republished. But, i feel sad, when some critics say it is a novel for children.

 5. visujjm சொல்கிறார்:

  கல்கி அவர்களை தங்கள் நடையழகுடன் சொல்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்..,

 6. AaKuvan சொல்கிறார்:

  Thanks KM ji for re-kindling the memories….Ponniyin Selvan is a great epic in Tamil….

  I always wonder why we were not able to take this to entire world through visual media!

  Whenevr I see great English Movies like Benhur, Troy, Gladiato, 300 etc., I will be left in despair,that we were not able to make this as a movie and take across the world!

  Is this because it is a magnum opus or we are not technically/economically strong in doing such big projects?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஆக்குவன்,

   முந்தாநாள் இரவு தொலைக்காட்சியில்
   ‘Troy’ஆங்கிலப்படம் பார்த்தபோது நானும் கிட்டத்தட்ட
   இது போலத்தான் நினைத்தேன்.

   இத்தகைய வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு தான் –

   “பொன்னியின் செல்வன் –
   ஆனந்த விகடன் செய்யும் மிகப்பெரும் தவறு” ….
   ( vimarisanam article – dated 13/06/2014) இடுகை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  பத்து முறைக்கும் மேல் ‘பொன்னியின் செல்வ’னைச் சுவைத்தவன் நான். உங்களைப் போலவே வெகு தீவிர விசிறி. ‘பொன்னியின் செல்வன்’ பற்றிப் பல தகவல்கள் இதுவரை படித்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இங்கு கூறியுள்ள பல தகவல்கள் இதுவரை அறியாதவை. நன்றி!

  கல்கி இதழிலிருந்து எப்பொழுதெல்லாம் பெரிய ஓவியர் ஒருவர் உருவாகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் கைவண்ணத்தில் ஒருமுறை ‘பொன்னியின் செல்வ’னை வெளியிடுவது என்று அந்நிறுவனம் ஒரு வழக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பது என் கணிப்பு. மணியம் செல்வனின் கைவண்ணத்தில் ஒருமுறை, அதன் பின் பத்மவாசனின் ஓவியங்களோடு ஒருமுறை என்று வெளியிட்டவர்கள், அடுத்து வேதா அவர்களின் தூரிகையிலும் ஒருமுறை வெளியிடுவார்கள் என்று நான் எப்பொழுதோ எதிர்பார்த்தேன். எப்பொழுது…? திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் மகான் அரவிந்தர் பற்றிக் கல்கியில் ஒரு தொடர் எழுதினாரே, அப்பொழுதே! என் கணிப்பு இப்பொழுது பலித்திருப்பதாக எண்ணுகிறேன். மேலே நீங்கள் கொடுத்துள்ள படத்தைப் பார்த்தால் வேதா அவர்கள் வரைந்தது போலத்தான் இருக்கிறது.

  எப்படியோ, தகவலுக்கு நன்றி!

 8. kalakarthik சொல்கிறார்:

  என் கார்த்தியின் பெயர் பொன்னியின் செல்வன்.1999 ல் அவன் கொண்ட பெயர்.அப்போதே ”வரலாறு.com ” ஆரம்பித்தான்.ஆனால் எனக்கு வரலாறு குறைவாகத்தான் தெரிகிறது என்று வருத்தப்பட்டு நிறைய படித்தான்.இப்போது இருந்திருந்தால் உங்களுக்கு உற்ற வலை தோழனாக இருந்திருப்பான்.உங்களைப் போலவே முற்போக்கு வாதியும் அவன். அவனை இழந்து வாடும்
  கார்த்திக் அம்மா

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அன்புள்ள கார்த்திக் அம்மா அவர்களுக்கு,

   உங்கள் மகனைப் பற்றிய பிரிவுத் துயர்
   அறிய வருந்துகிறேன்.

   நானும் 16 வயதில் ஒரு பாசமுள்ள மகளைப்
   பறி கொடுத்தவன் தான். என்ன செய்வது…
   இதெல்லாம் நம் கையில் இல்லையே….

   மற்ற விஷயங்களில்
   உங்கள் கவனத்தை தீவிரமாக திருப்புங்கள்.
   …. காலம் உங்கள் துயரைக்
   குறைக்க வழி செய்யும்…

   -அன்புடன்,
   காவிரிமைந்தன்

  • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

   எனக்கு இந்தச் செய்தி உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. வரலாறு.காம் இன்றும் ஓர் அரிய கருவூலம்! அதை நிறுவியவர் மறைந்துவிட்டார் என்பது எனக்கு மிக மிக அதிர்ச்சியாக இருக்கிறது. நான் இணையத்துக்கு வந்த புதிதில் அடிக்கடி அந்தத் தளம் சென்று பார்ப்பதுண்டு. வெகுநாட்களாக இற்றைப்படுத்தப்படாமல் இருக்கவே ஆர்வம் குறைந்து விட்டது. அதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்தேன். இப்படியொரு காரணத்தை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அருஞ்செல்வனை இழந்து வாடும் தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் ஞானப்பிரகாசன்,

    அந்தத் தாய் எழுதும் வரையில் எனக்கும் ‘வரலாறு.காம்’
    வலைத்தளத்தில் அவர் மகனின் பங்கு பற்றியும் தெரியாது. அந்த தளம்
    டாக்டர் கலைக்கோவன் அவர்களின் குழுவின் பொறுப்பில்
    இயங்குகிறது என்பது வரை தான் தெரியும்.

    உங்கள் வலைத்தளம் பார்த்தேன்…
    உங்கள் தமிழ்ப்பற்றுக்குத் தலை வணங்குகிறேன்.
    உங்கள் தமிழ்ப்பணி இனிதே வளர வாழ்த்துக்கள்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • yogeswaran சொல்கிறார்:

   Dear Akkah,

   I am really sorry about your sons unexpected demise.May the god strengthen you and console you.

   yogeswaran

 9. yogeswaran சொல்கிறார்:

  Dear Sir,

  I have read this novel many times.

  Gifted to few.

  One question,

  What did Rajaraja achieve?

  As tamils are we paying back for the destructions he did in neighbouring countries such as Pandi naadu,sri lanka,chera naadu,kanga naadu etc.

  Is he the man behind our rigid caste system.

  I hear after completion of Brahathiswarar temple people suffered due to famines.

  Why pandiyans are described like villains by Kalki.

  • kalakarthik சொல்கிறார்:

   ஆம். நானும் இது போல் பல கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். நானும் கார்த்தியும் இது போல் நிறைய விவாதித்திருக்கிறோம்.பொன்னியின் செல்வனில் கல்கி நிறைய குழப்பியிருப்பார். கதை முடிந்ததும் (1970 களில் )
   வாசகர்கள் நிறைய கேள்விகள் எழுப்பினர். கல்கியால் சரியான பதில் கொடுக்க முடியவில்லை.இது ஒரு சரித்திர நாவல் என்பதாக கூற முடியாது.

   • yogeswaran சொல்கிறார்:

    I think not 1970s it was 1950s. Nandhini is a fictional character.Kalki answered 10 important questions. but he never answered, who murdered Aadhitha Karikaalan.By reading other literature i came to know that Rajaraja punished all the culprits.Few Brahmins were also involved.One of them was Paramechwaran.

    Because of the confusions(doubts) only, we still talk about the novel.. who murdered Karikalan is lingering question in all our minds.

    For me like all other characters manimekhalai also unforgetable.(kandhamarans sister)

    Rajaraja’s conquest of ganges was a disaster on tamils.
    As he did not belong to the main two Varnas he was rejected by the people and priests in the ganges areas.

    As a result, to cleanse and make himself a khshastriya he conducted a yaagam as per advise given by brahmin priests. That is to make a big golden cow enter through the mouth and come out through the back, so that all the theetu will vanish and he will become an aryan. all non sense.kundhavai also entered the cow.(gold had to be donated to Priests)

    He brought special dikshits from north.

    these were the starting points of stabilisation of the caste system.Even the regiments were based on caste.

    hope you remember the kaikolar padai-Part two of ponniyin selvan.

    he conquered keddah province of malaysia. built temples.what happened to the tamils and tamil language.

    1000 years ago we ruled that country.

    did he build at least a university there.

    today our tamils are going as labourers.

    we are called as kaling or kling for which different explanations.

    Nearly 1000 years ago vandiyath thevan went to sri lanka,captured the north.the king was mihindu ( i dont remember the rank,because there were so many).mihindu retreated to rohana which is the southern part of sri lanka. In a tricky manner vandhiyath thevan called him for peace talks and captured him.he was forcibly taken to madurai and remanded till death.

    These are the scars of history.

    is the history is repeating on us after 1000 years.

    all these facts are available in stone inscriptions of sri lanka in the hambanthota area, as per J.R.P.Suriyapperuma,a history scholar.

    Naana Desi sangams- (present day multi national companies) of cholas have left their stone inscriptions.

    As tamils we are proud of him for ruling so many countries.Bay of bengal was the lake of cholas.

    Question is,

    Why we could not sustain?

    is our claims of greatness is hollow.

    We have to do a soul searching.

    Where it went wrong to us????

    • M.Venkatesan சொல்கிறார்:

     திரு.காவிரிமைந்தன்,

     ஆனாலும் இது ரொம்ப கொடுமை சார்.
     All Cock and Bull stories.
     Why not you please filter
     the replies?

 10. gopalasamy சொல்கிறார்:

  PONNIYIN SELVAN WAS A FICTION WITH HISTORICAL BACK GROUND. SO MANY CHARACTERS ARE IMAGINARY ONE.
  RAJA RAJAN KAALAM PORKAALAMAA ? ABOUT THIS JEYAMOHAN WROTE ONE ARTICLE.
  I REQUEST TO GO THROUGH IT. I AM FULLY ENDORSING HIS VIEWS.
  I AM NOT AUTHENIC IN HISTORY. BUT WHAT I READ IS, THAT TAMIL KINGS NEVER RULED ANY OTHER COUNTRIES. TO CONQUER THE PIRATES ONLY THEY WENT UP TO FAR EAST. ONCE THEY WON THAT KINDGOMS, THEY GAVE IT BACK TO THEM ONLY. EVEN SRILANKA WAS NOT RULED BY CHOLA / PANDIYA KINGS.
  IF Mr. YOGESWARAN SAYS THAT WE RULED FAR EAST COUNTRIES FOR 1000 YEARS, IT IS A NEW INFORMATION.
  I THINK RAJA RAJAN DID NOT GO UPTO GANGES. HIS SON RAJENDRA CHOLAN ONLY WENT UPTO GANGES. WHETHER HE CONQURED ALL THE KINGDOMS ON HIS WAY?
  ANY RESEARCH WAS DONE ABOUT THAT?
  I READ IN ONE BLOG, THAT RAJA RAJAN AND KUNDHAVI WERE BROUGHT UP BY MUSLIM COUPLE AND ADITYA KARIKALAN WAS KILLED BECAUSE HE SUPPORTED MUSLIMS!.
  IF SOMEBODY SAYS THAT RAJA RAJAN DID NOT IMPLEMENT MARX-LENIN POLICIES, NO ANSWER!!

  • yogeswaran சொல்கிறார்:

   Dear Sir,

   I did not say they ruled for 1000 years.

   I said 1000 years ago.

   According to sri lankan history Cholas ruled Sri Lanka.

   MahaWamsa is the Chroncile.

   Their capital was Jananadha Purm- Present day Polon Naruwa.

   We have Two Siva devaalayams bulit by cholas stil remaining in Sri Lanka.

   Rgs

   yogesh

 11. kalakarthik சொல்கிறார்:

  Dear Yokeswaran,
  I read this novel when i was a school student.The second issue.in1970S.First published in 1950s .Happy to get feedbacks from you.
  kalakarthik (karthik amma )

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.