நண்பர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து அனுப்பிய ஒரு செய்தித் துணுக்கு தான் இந்த இடுகைக்கான அடிப்படை.
கவலை வேண்டாம் – இதில் மத விரோதமாக ஏதுமில்லை. நான் எந்த மதத்திற்கும் எதிராக எழுத மாட்டேன்.
இது எல்லா மதங்களுக்கும் பொருந்தக்கூடிய
ஒரு அடிப்படையான விஷயம் தான்…..
படித்தால் உங்களுக்கே புரியப்போகிறது …..
இந்த வழக்கைப் பற்றி நான் இங்கு சொல்லாத
இன்னும் ஒரு விஷயமும் இருக்கிறது. அதை இப்போதே சொல்லி விட்டால், இந்த இடுகையின் மீதான விவாதத்தின் சுவாரஸ்யம் குறைந்து விடும். எனவே ஓரளவு விவாதம் நடக்கட்டும்….பின்னர் அந்த செய்தியையும் கூறி விடுகிறேன்.
———
அமெரிக்காவில் மிகச்சிறிய ஊர் ஒன்று.
அங்கு வாழும் மக்களுக்கென்றே ஒரு சர்ச்.
அந்த ஊரில் ஏற்கெனவே சிறிய, சாதாரணமான
( bar attached brothel )
‘பாருடன் இணைந்த ப்ராதெல்’ ஒன்று இருக்கிறது.
(அந்த மாகாணத்தில் இது சட்டபூர்வமாக
அனுமதிக்கப்பட்டிருக்கிறது …! )
அந்த ‘ப்ராதெல்’லை சகல சவுகரியங்களும் உள்ளதாகவும், இன்னும் கவர்ச்சிகரமாகவும்
பெரிய அளவில் விரிவாக்கம் செய்து நடத்த
விரும்புகிறார் அதன் முதலாளி.
வியாபாரத்தைப் பெருக்க, கட்டிடத்தை இன்னும்
சிறப்பாக விரிவுபடுத்தும் வேலைகளைச் செய்து
கொண்டிருக்கிறார்….
உள்ளூரில் உள்ள சர்ச்சில் வழக்கமாக பிரார்த்தனைகள்
நடைபெறுவது வழக்கம். இந்த பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளும் மக்களுக்கும், நடத்தி வைக்கும் பாதிரியாருக்கும் ஏற்கெனவே இந்த ‘பார்-ப்ராதெல்’ குறித்து மிகவும் வருத்தம்.
இந்த நிலையில் அதனை இன்னும் பெரிதாக, பளபளப்பாக விரிவுபடுத்தும் வேலைகள் அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுக்கிறது.
எனவே சர்ச்சில் தினமும் நிகழும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கடவுளிடம் கூடுதலாக ஒரு வேண்டுகோள் சேர்க்கப்படுகிறது…
“அந்த ப்ராதெல் திறக்கப்படக்கூடாது – அதை நடத்துபவரின் திட்டம் நாசமாகப் போக வேண்டும் “- என்றெல்லாம். ஒவ்வொரு நாளும் நிகழும் பிரார்த்தனை கூட்டத்தில்
இதற்காக விசேஷமாக ‘ஜெபம்’ செய்யப்படுகிறது…..
‘ப்ராதெல்’ பிரமாதமாக கட்டி முடிக்கப்பட்டு,
திறப்பு விழாவிற்கான நாளும் குறிக்கப்படுகிறது.
உற்சாகமாக அதற்கான வேலைகளைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார் அதன் முதலாளி…
திறப்பு விழாவிற்கு முதல் நாளிரவு திடீரென்று
இடி மின்னலுடன் கூடிய பேய் மழை…
புதிய ப்ராதெல் கட்டிடத்தின் மீது இடியும் மின்னலும்
தாக்கி அதை தீப்பற்றி எரியச்செய்கின்றன……
கட்டிடம் தீப்பிடித்து எரிகிறது – இடிந்து சரிந்து விழுகிறது.
‘ப்ராதெல் ப்ளான்’ பணால்….
சர்ச் மக்களுக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி.
சர்ச்சில் கூடியவர்கள் எல்லாரும் அந்த நிகழ்வை
கொண்டாடுகிறார்கள். அன்றைய பிரார்த்தனையில்,
தங்கள் பிரார்த்தனையை ஏற்று கோரிக்கையை நிறைவேற்றிய கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள்……
கடுப்பான ப்ராதெல் முதலாளி சர்ச் மீதும், அதன் மக்கள் மீதும் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கிறார்….
அந்த சர்ச்சின் பாதிரியார் மற்றும் மக்கள் – கடவுளிடம் விடுத்த வேண்டுகோளினால் தான் இடியும், மழையும் வந்து தன் கட்டிடங்கள் சேதமடைந்து போயின.
எனவே தன் நஷ்டத்திற்கு காரணமான அந்த சர்ச் மக்கள் அதற்கான தகுந்த நஷ்டஈடைத் தர வேண்டுமென்று….
வழக்கு நீதிபதி முன் விசாரணக்கு வருகிறது…
‘ப்ராதெல்’ முதலாளியின் குற்றச்சாட்டை மறுத்த சர்ச் மக்கள் – இடியும் மழையும் வந்து, கட்டிடம் இடிந்தது இயற்கையான ஒரு தற்செயல் என்றும்,
தாங்கள் பிரார்த்தனை செய்தது உண்மைதான் என்றாலும் – தங்கள் பிரார்த்தனையை ஏற்று கடவுள் இதைச்செய்தார் என்பது நம்ப முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்
என்றும் எனவே தங்களுக்கும் ப்ராதல் முதலாளிக்கு
ஏற்பட்ட நஷ்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
என்றும் வாதாடினார்கள்….
பரிதாபமான நிலையில் ஜட்ஜ்…!
கடவுளையும், பிரார்த்தனையும் பலமாக நம்பும்
“ப்ராதெல்” முதலாளி ஒரு பக்கம் –
” எங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொண்டார்
என்றும் அதனாலேயே இடி, மின்னல் தாக்கி
அந்த கட்டிடம் நாசமானது என்பதும்
சற்றும் நம்ப முடியாத வாதம்” –
என்று தங்கள் பிரார்த்தனையின் மீதே நம்பிக்கை
இல்லாமல் வாதிடும் சர்ச் பாதிரியாரும், மக்களும்
இன்னொரு பக்கம் –
“நான் இந்த வழக்கில் எப்படித் தீர்ப்பு அளிப்பேன் ….?
என்று புலம்புகிறார் ஜட்ஜ்.
ஜட்ஜுக்கு உதவியாக உங்களை இந்த வழக்கில்
ஒரு ஜூரியாக சேர்க்கிறார்கள்
என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது உங்கள் கருத்து
என்னவாக இருக்கும்….?
யார் பக்கம் இருக்கும்…? ஏன் ….?
Simple. i support bar owner. Because, the othrt party believes in prayer.
கடவுளையும், கடவுளிடம் கேட்கும் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொண்டு பதிலளிக்கப்படும் என்பதையும் நம்பும் பார் முதலாளியே,, பின் எதற்கு நீதிமன்றத்திற்கு சென்றீர்கள்? அதே கடவுளிடம் ஒரு கோரிக்கையை வைத்துவிட வேண்டியதுதானே…. நஷ்டஈடு வழங்கவேண்டுமென்று!!!!
சட்டம் வேறு தார்மீகம் வேறு.ஒருவர் அழிய வேண்டும் என பிரார்த்திப்பது தார்மீகப்படி குற்றம் ஆனால் சட்டப்படி இது குற்றமில்லை.எனவே தீர்ப்பு சர்ச் பக்கமே!ஆனால் இதில் ஒரு சுவையான விடயம் இரண்டு பிரிவினருக்கும் பணத்தின் மீது இருக்கும் அளவிற்கு கடவுள் மீது ஈடுபாடு கிடையாது.
I believe in corruptions by government officials. I could not find any difference between ours and the American officials. But I know this as a joke.
OH MY GOD. HINDI MOVIE
இதில் நடந்த நிகழ்வுகளுக்கு ‘கடவுள் காரணம்’ என்றும், ‘கடவுள் பிராத்தனையை ஏற்று கொண்டிருக்க நியாயமில்லை” என்று வாதமும் பிரதி வாதாமும் இருப்பதால் கடவுளை கூண்டில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்தால் தான் தீர்ப்பு சொல்ல முடியும்.
ஒரு வேளை கடவுளை பிடிக்க முடியாது என சம்பந்தபட்ட அரச துறை கோர்டில் சொன்னால், trial in absentia ஆக கேசை நடத்தி பிரார்த்தித்த பாதிரியார், பாதிரியாருக்கு மெழுகுவர்த்தி வாங்கி கொடுத்தோர் அதிலும் முக்கியமாக மெழுகுவர்த்தி கொழுத்த தீப்பெட்டி கடையில் வாங்கி கொடுத்தவர் என்று அத்தனை போரையும் தூக்கில் போடலாம். அப்புறம் சுற்று வட்டராத்தில இருக்கிற அப்பாவி பாப்டிஸ்ட் சர்ச் அங்கத்தவர்கள் ஒரு லட்சம் பேரை கொல்லலாம். ஏனென்றால் அழிந்தது… Brothel ஆயிற்றே!!
நான் சொல்ல வந்தது நண்பர்களை சென்றடையவில்லை என நினைக்கிறேன்.
அதாவது
ஒருபக்கம்
பணம் வரும் என்றால்
//அந்த சர்ச்சின் பாதிரியார் மற்றும் மக்கள் – கடவுளிடம் விடுத்த வேண்டுகோளினால் தான் இடியும், மழையும் வந்து தன் கட்டிடங்கள் சேதமடைந்து போயின.எனவே தன் நஷ்டத்திற்கு காரணமான அந்த சர்ச் மக்கள் அதற்கான தகுந்த நஷ்டஈடைத் தர வேண்டுமென்று…//.
என்று சொல்லவும் தயங்காத ப்ராதெல் முதலாளி
இன்னொரு பக்கம்
பணம் போகும் என்றால்,
//தாங்கள் பிரார்த்தனை செய்தது உண்மைதான் என்றாலும் – தங்கள் பிரார்த்தனையை ஏற்று கடவுள் இதைச்செய்தார் என்பது நம்ப முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்..// என்று சொல்லவும் கூசாத சர்ச் பாதிரியாரும், மக்களும்..
ஆக மொத்தம் இங்கு இருபாலாருக்கும்
கடவுள் என்பது
பணமே..
அதாவது தற்கால இந்தியர்கள் மனோபாவம்
நண்பர் கண்பத் சொல்வதை
(கடைசி வார்த்தையைத் தவிர)
நான் வழிமொழிகிறேன்.
கடைசி வார்த்தையை நான் ஏற்காமல் இருக்க
காரணம் –
பணம் தான் பிரதானம் என்பது “இந்தியர்களின்
மனோபாவம்” என்று ஏன் வகைப்படுத்தப்பட வேண்டும்…?
பொதுவாகவே உலக மாந்தர்கள் அனைவரின்
இயல்பும் அது தானே ….?
உண்மையில், இந்தியர்களின் மனோபாவம்
உலகின் மற்ற பகுதியினரை விட much far better…!
இந்தியாவில் தர்மத்திற்கும், மனசாட்சிக்கும்
மதிப்பு கொடுப்பவர்கள் ( எல்லா மதத்திலும் )
இன்னமும் நிறைய பேர் இருக்கிறார்கள்…
ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் கண்பத்..
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நன்றி கா.மை.ஜி.
நான் சொன்னது முக்கால இந்தியர்களையும் அல்ல.தற்கால இந்தியர்களை.
I strongly believe that no other nation in the world had undergone such a quantum of deterioration in their ethical and cultural values as we Indians have,in the seventy years after independence.By this I emphasis the level in which we were then and now.True there may be nations worse than us as of now but they were like that all along.I rest my case.Thanks.
Dear Ganpat,
I agree with your views and sincerely share your concerns.
with all best wishes,
Kavirimainthan
One’s belief system is personal and the law cannot side with either believers or non-believers. After all, the law is a donkey, as someone said. Although the Church-goers resort to same-side goal, I expect the Judge should rule against the brothel owner.
1. Church goers and the Father can justify, why they are against the legally availed Brothel. What are the complications and problems it will create to the Judge.
2. Meantime, the Brothel owner could have definitely insured the assets being its legally allowed, and so he can claim the insurance saying natural calamity and close the issue.
3. If the judge / court feels the Church persons issues are convincing they can speak to the Brothel owner to shift it to some other location and close the issue.
Note:
People may not go if the church is shifted to other location, but they will definitely if this brothel gets shifted.
சத்தியமா எவனும் திருந்த மாட்டானுங்க
sorry. a small correction.
in 1st point take a gap after “it will create” or it will confuse and create a new discussion LOL
நண்பர்களே –
இடுகையில், பின்னர் எழுதுகிறேன் என்று
நான் சொன்னது இதைத்தான் –
————
இது அமெரிக்காவில் ஒரு செய்தித் தளத்தில்
ஒரு செய்திக் கட்டுரையாக முதலில்
வெளிவந்தது. Texas மாநிலத்தில், Mt Vernon
என்கிற ஊரில் Drummond’s என்கிற bar-ஐ
தொடர்பு படுத்தி ….
சில ஆர்வலர்கள் இதைத் தீவிரமாக தேட ஆரம்பிக்கவும்,
Texas மாநிலத்தில், Mt Vernon என்பது வெறும்
2,662 மக்கள் மட்டுமே வசிக்கும் ஒரு மிகச்சிறிய கிராமம்
என்றும், அங்கு இத்தகைய சம்பவங்கள் எதுவும்
நடைபெறவில்லை என்பதும் தெரிய வந்தது.
சிலரின் மனசாட்சியைக் கிளறிவிட்டு,
பின்வரும் விஷயங்கள்
குறித்து யோசிக்கச் செய்யவே
இந்த கட்டுரை வெளியிடப்பட்டதாக பின்னர்
தெரிய வந்தது.
——-
பகைவனிடமும் கருணை கொண்டு,
அவன் திருந்த வேண்டும் என்று கடவுளிடம்
மனமாற வேண்டுவது தான்
உண்மையான பக்தனின் வேண்டுகோளாக
இருக்க முடியுமேயன்றி,
பிரார்த்தனையில் அடுத்தவரின் அழிவை
வேண்டுவது சரியான செயலா …?
நல்லது வெற்றி பெறவும், தீயது அழியவும் என்று
பொதுவான சமுதாய நலன்களைக் குறித்து தான்
பிரார்த்தனைகள் அமைய வேண்டுமேயன்றி,
குறிப்பிட்ட செயல்களைக் குறித்து இருக்கலாமா …?
பிரார்த்தனை நிறைவேறும் என்கிற நம்பிக்கையே
இல்லாமல், பிரார்த்தனையில் ஈடுபடுவது
கடவுளுக்கு உண்மையாக இருப்பவர்களின்
செயலாகுமா…?
தன் செயலின் விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்க
ஒருவர் மறுப்பது சரியாகுமா …?
———————
இந்த விஷயங்கள் குறித்து மக்களை சிந்தனை செய்ய
வைப்பதற்காக கற்பனையாக எழுதப்பட்டதாம்
அந்த செய்திக் கட்டுரை…..
– நம்மைப் பொறுத்த வரையில், இந்த கேள்விகள்
கிறிஸ்தவர்களுக்கோ, சர்ச்சுக்கோ
மட்டும் தான் பொருந்தும் என்பதில்லை. அனைத்து
நம்பிக்கையாளர்களுக்கும், அனைத்து மதங்களுக்கும்
பொருந்தும் …………… அல்லவா …?
விவாதத்தில் ஆர்வத்துடன் கருத்து கூறிய அனைத்து
நண்பர்களுக்கும் நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஐயா காவிரிமைந்தன் அவர்களே,
தங்கள் அறிவை பல இடங்களில் மேயச்செய்து, எங்களின் அறிவை கூரு பார்க்க வாய்ப்பு கொடுப்பதற்கு மிக்க நன்றி. அதுவும் எல்லாம் சமுதாயத்திற்கு தேவையானவை மட்டுமே அல்லது நமது பொது அறிவையும் சிந்தனையையும் நல்வழியில் செலுத்த மட்டுமே.
Thanks sir.