மாறன் சகோதரர்களும் மானநஷ்ட வழக்கும் …..

 

kalaignar_orbit

முதலில் செய்தித்தளங்களில் வெளிவந்துள்ள
ஒரு செய்தியிலிருந்து –

————–

சென்னை: குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் தி நியூ இந்தியன்
எக்ஸ்பிரஸ், மாலை முரசு ஆகிய பத்திரிகைகள் மீது திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த அவதூறு வழக்கில் தயாநிதி மாறன் சார்பில்
கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், மாலை முரசு மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிகைகள் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன.

தன் மீது மத்திய புலனாய்வுத் துறையினரால் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ரூ.1 கோடியே 20 லட்சம் இழப்பு என்று குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டு, முழுக்க முழுக்க தவறானது, ஆதாரம் அற்றது என்பதை சட்ட ரீதியாக நிரூபிப்பேன் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள இந்த பத்திரிகைகள்,
தயாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும், எவராலும் தொடர்பு கொள்ள
இயலவில்லை எனவும், வழக்கு விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாகவும் வேண்டுமென்றே இட்டுக்கட்டி, அவரது பெயருக்கும், அவரது குடும்பத்தினர் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு பொய்யான அவதூறு செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தன.

மேலும், அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரைகளில் வழக்கு பற்றி எதுவுமே எழுதாமல், சமூகத்திலும், நியாயமாக சிந்திப்பவர்கள் மத்தியிலும் தயாநிதி மாறன் மீதும், அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீதும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில்
அவதூறு சேற்றை வாரி வீசியிருக்கிறார்கள்.
இது போன்ற விஷமப் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை சார்ந்த
ஜுன்ஜுன்வாலா மற்றும் எடிட்டர் சுதர்சன், மாலை முரசு நாளிதழின் ஆசிரியர் செல்வம் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர் கோசல்ராம், வெளியீட்டாளர் பா.வரதராஜன் ஆகியோர் மீது தயாநிதி மாறன்
கிரிமினல் அவதூறு வழக்கினை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட சைதாப்பேட்டை
23ம் பெருநகர குற்றவியல் நீதிபதி,
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் வருகிற  ஜூலை 15ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

———————

முதலிலேயே ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேன் –
என்னை அடித்துப் போட்டாலும் 5 பைசா கூட தேறாது.  எனவே, யாராவது தனக்கு ஏற்கெனவே “மானம்” இருந்தது என்றும்

என் எழுத்தினால் “அது” போய் விட்டது என்றும்
வழக்குப் போட்டால் – “மானநஷ்ட ஈடு” என்றெல்லாம் கொடுக்க எனக்கு வக்கில்லை.

மேலும் – ‘நியாயமாகச் சிந்திப்பவர்கள்
மத்தியில் மாறன் குடும்பத்தினரைப் பற்றி
அவதூறுச் சேற்றை அள்ளி வீசவும்’ – நான் தயாரில்லை…

எனவே, என் நோக்கம் யாரையும் அவதூறு செய்வது இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்தி விடுகிறேன்.

——————

நான் மாறன் சகோதரர்களின் பக்கம் தான்…..!!……..ஏன் …?

மாறன் அவர்களின் புகார் முற்றிலும் நியாயமானது தானே ….?

பாராளுமன்றத்திலும், செய்தி ஊடகங்களிலும் பல தடவை, அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும்,
அவர் மீது எத்தகைய வழக்கும் பல ஆண்டுகள் வரை
பதியப்படவே இல்லை என்பதும், அவர் தொடர்ந்து அதே தொலை தொடர்பு அமைச்சராகவே நீடித்து வந்தார் என்பதும் அவரது வாதத்தை உறுதி செய்கின்றன அல்லவா …?

பின்னர், பல தரப்பிலிருந்தும் வந்த அழுத்தம்
காரணமாக, கடைசியில் வழக்கு பதிவு
செய்யப்பட்டாலும், அவருக்கு பாதகமாகவோ அல்லது
அவரைக் குற்றம் சாட்டும் வகையிலோ
எந்த செய்தியும் புலனாய்வு நிறுவனங்களால்
அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதும்
அவரது வாதத்தை உறுதி செய்கின்றன அல்லவா …?

பல ஆண்டுகள் அவர்களது தந்தை மத்திய அமைச்சராக பலத்த அதிகாரங்களோடு இருந்தது அவர்களது குற்றமாகுமா …?

பல ஆண்டுகள் அவரது தாத்தா மாநில முதலமைச்சராக இருந்ததும், ஆளும் கட்சியின் தலைவராக இருந்ததும்
இந்த குற்றச்சாட்டிற்கு எந்தவிதத்தில் சம்பந்தப்படும்….?

மத்தியில் ஆண்ட மைனாரிட்டி கூட்டணியின்
தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக அவரது தாத்தா இருந்தாலென்ன …?
அதற்காக இவர் ஊழல் பண்ணிவிட முடியுமா ….?
பண்ணினால் கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார்களா …?

மத்திய கூட்டணியில் 9 ஆண்டுகள் செல்வாக்குடன் விளங்கிய கட்சியின் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவி வகித்தால்,
அதைப்பயன்படுத்தி ஊழல் புரிந்தார் என்று
சகட்டு மேனிக்கு சொல்லி விடுவதா …?

யாராவது நிரூபிக்க முடியுமா …?
“ஆவணங்கள் தொலைந்து போயின” என்று சாக்குபோக்கு சொல்லாமல் யாராலாவது ஆதாரம் காட்ட முடியுமா ?

தந்தையின் மத்திய அமைச்சர் பதவியையும்,
தாத்தாவின் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி எவராவது
இந்த அளவுக்கு முன்னுக்கு வந்து விட முடியுமா …?
அப்படி முன்னுக்கு வந்ததாக எவரையாவது உதாரணம் காட்ட முடியுமா …?

ஒத்தை ரூபா பணம் இல்லாமல்,
முழுக்க முழுக்க “சுய உழைப்பு”
ஒன்றையே முதலீடாகப் போட்டு, இத்தனை சிறிய வயதில், வாழ்க்கையில் முன்னேறியவர்களை, பல்லாயிரம் கோடி சம்பாதித்து
விட்டார்கள் என்று கண்டபடி குற்றம் சாட்டுவது
என்ன நியாயம் …?

ஊழலுக்கும் சகோதரர்களுக்கும் எவ்வளவு தூரம் என்பது குற்றம் சாட்டுபவர்கள் யாருக்காவது தெரியுமா ..?

அடையாறு போட் க்ளப்புக்கும் சன் டிவி அலுவலகத்துக்கும் எவ்வளவு தூரம் என்றாவது இவர்கள் யாருக்காவது தெரியுமா …? 

விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடிவிட்டதாக
இட்டுக்கட்டி கூறியவர்களுக்கு – இவர்கள் பின்னணியைப்பற்றி என்ன தெரியும் ….? இவர்களிடம் எவ்வளவு விமானங்கள் இருக்கின்றன என்று யாருக்காவது தெரியுமா …?

எவராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று
எழுதி இருக்கிறார்களே.. யாராவது முயற்சி செய்தார்களா ..?
அவர்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் …..
வெளியிலே, வாசலிலே போகிறவர்கள் – இவர்களிடம் தொடர்பு  விலாசத்தை கொடுத்து விட்டா செல்ல முடியும் …?

தொடர்ந்து வருடக்கணக்கில் பாராளுமன்றத்திலும், மீடியாவிலும் புகார் கூறப்பட்டதே, அதற்கு பயந்து இவர்கள் ஓடியதுண்டா ?

பல ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டு  விசாரணை துவங்கியதே, அப்போது பயந்து ஓடியதுண்டா…?

சென்னை வரை புலனாய்வுக்குழு வந்து விசாரணை
நடவடிக்கைகள் தொடர்ந்தனவே அப்போது பயந்து ஓடியதுண்டா..?

அவர்களை கைது செய்யப்போகிறார்கள் என்று
தகவல் எதாவது வெளிவந்ததா …?
அப்படி எதாவது உத்தேசம் இருந்தால் –
அது அவர்களுக்குத் தெரியாமல் போய் விடுமா …?

பின் வெளிநாட்டுக்கு ஓட வேண்டிய
அவசியம் இப்போது எப்படி வரும் ..?
அது கூட தெரியாமல் இவர்கள் ஏன் அப்படி எழுதினார்கள்…?

ஒரு வேளை கைது செய்வதாக எதாவது உத்தேசமிருந்து, அப்படி எதாவது தகவல் வெளிவந்தாலும் கூட வெளிநாட்டுக்கு
ஓட வேண்டிய அவசியமென்ன …?-
கைதிலிருந்து விடுவித்துக் கொள்ள, தவிர்த்துக்கொள்ள எவ்வளவோ வழிகள் உள்ளன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்
தெரியாதா …?

பணம் என்றால் என்ன ?
பணத்தின் சக்தி என்ன ?
“பணம் பாதாளம் வரை பாயும்” என்றால் என்ன அர்த்தம் என்பது பற்றி எல்லாம் குறை கூறும் குறுமதி
படைத்தவர்களுக்கு தெரியுமா ….?

எழுத்து சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டு,
அசட்டுத்தனமாக எதையாவது எழுதினால் – இப்படி அவதூறு வழக்கை சந்திக்க வேண்டியது தான் என்பதை வெளிப்படையாக
கற்றுக் கொடுக்கும் சகோதரர்கள் உண்மையில் –
பாராட்டப்பட வேண்டியவர்கள் தானே … ???

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to மாறன் சகோதரர்களும் மானநஷ்ட வழக்கும் …..

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  அப்படி போடுங்க அருவாள!
  (பட்டைய கிளப்புறீங்க காவிரிமைந்தன் சார்)

 2. kinarruthavalai சொல்கிறார்:

  ஹும்..எந்த திருடனாவது தன்னை ஒரு திருடன் என என்றைக்காவது ஒத்துக் கொண்டுள்ளானா? அப்படியே தான் வழக்கு பாய்ந்துவிட்டாலும், எவனாவது அரசியல்வியாதி இதுவரை சிறை தண்டனை அடைந்திருக்கிரானா? பாதாளம் வரை பாயும் பணம் கோர்ட் வரை பாய்வதா சிரமம்? இதெல்லாம் நமக்கு நேரம் வேஸ்ட்தான். அவர்களுக்கு பொழுது போக்கு. ஐயோ… இப்படி பித்து பிடித்து உளற வைத்துவிட்டன்களே நம்ப அரசியல் வியாதிகள். இதிலே நம்ப ஆட்கள் சோம்பு அது இது என்று வேறு அறிவுப்பூர்வமாக யோசிப்பார்கள். அல்லது தயாநிதிக்கும் சிலர் டப்பிங் வாய்ஸ் கொடுப்பார்கள்.

 3. Srini சொல்கிறார்:

  sssuuuuuuuuuuuuuppppppppppppppppper KM sir. I couldn’t control my laugh by reading this sarcastic post.

  BTW, did u get any reply from Mr. Kamal Hassan?

  regards
  Srini

 4. gopalasamy சொல்கிறார்:

  I am also with Maran brothers K & D. they are the ideal example for entire tamil community. entire tamilnadu is with them.
  If M/S chandra gives details, how many officers got extension since 1967, for a change, we also can discuss about it. Regarding IT dept, if he gives the anomalies in last 20 years, we can discuss that also.

 5. barari சொல்கிறார்:

  வஞ்சக புகழ்ச்சி என்பது இது தானா ?

 6. nparamasivam1951 சொல்கிறார்:

  ஆமாம் சார். நீங்கள் கூறுவது போல், உண்மையாக உழைக்கும் சகோதர்ர்களைப்பற்றி தவறுதலாக எழுதினால், விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும்.

 7. Ganpat சொல்கிறார்:

  நீங்கள் வஞ்சபுகழ்ச்சியாக எழுதியிருந்தாலும் உண்மையும் அதுதான்.தற்போதைய மாநில அரசு aunty மாறன்; மய்ய அரசு anti மாறன் ஆனாலும் மாறன் சகோதரர்கள் மேல் கை வைக்க வழியில்லை.யாரை யார் ஏமாற்றுகிறார்கள்?.எதுக்கு சார் நீங்க ஒங்க சக்தியை அனாவசியமாக வீணடிக்கிறீங்க?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   நிஜமாகவே என்னை எழுத வேண்டாமென்று
   சொல்கிறீர்களா …..?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    இது ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு.இவ்வளவு விவரமாக ஒரு பதிவு இட எவ்வளவு உழைப்பு தேவை என்பதை நான் அறிவேன்.இன்னும் எத்தனை நாட்களுக்கு கைப்புண்ணிற்கு கண்ணாடி கேட்கப்போகிறோம் என்ற ஒரு கோபம்தான் என்னை இப்படி எழுத வைத்தது.என்னைப்பொருத்தவரை நான் மிக தெளிவாக இருக்கிறேன்.இந்திய அரசியலில் நடப்பது மிகப்பெரிய நாடகம்.இதை சமாளிக்க இந்திய சாமானியர்களுக்கு(அதாவது குடிமக்களுக்கு) திறமை போதாது.களை எடுக்கப்படாத வரை விவசாயம் வெற்றி பெறாது.எந்த கட்சியும் களை எடுக்க தயாராக இல்லை.ஏனெனில் அவரவர் கட்சிகளிலேயே எடுக்க எக்கச்சக்கமான களைகள் உள்ளன.உங்கள் உடல்நலனிற்கு குறை ஏற்படாமல் எழுதவும் என்பதே என் வேண்டுகோள்

 8. visujjm சொல்கிறார்:

  கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? ஐயா விவரம்.,விவேகத்தோடு கூடிய வேகம் அருமை….. அஞ்சா நெஞ்சம் இன்றைய தலைமுறைக்கு மிக மிக தேவை., என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்…. நன்றி கலந்த வாழ்த்துக்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.