வித்தியாசக் கவிஞர் வைரமுத்து தனக்குத் தானே எடுக்கும் விழா…..!!!

வித்தியாசமானதொரு விழா கோவையில் ஜூலை 12 மற்றும் 13 தேதிகளில் நிகழவிருக்கிறது…

யார் கூறினார்கள் …? அது என்ன விழா …?

vairamuthu in kovai press meet

சென்ற ஞாயிறு அன்று கோவையில் செய்தியாளர்களை அழைத்து திரு. வைரமுத்து அவர்களே அறிவித்திருக்கிறார்கள்.
கோவையில் வைரமுத்து அவர்களின் மணிவிழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

( குறிப்பு – “இந்த விழாவானது தமிழின் தொன்மையை உயர்த்திப் பிடிக்கின்றதாக இருக்கும். தனி நபர் புகழ்பாடும் வகையில் இருக்காது என்று வேறு வைரமுத்து செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார்….).

சரி – அதில் அப்படி என்ன வித்தியாசம் ….?

ஒன்றா….. இரண்டா …
ஏகப்பட்ட வித்தியாசங்கள்…!
விசேஷங்கள் ….!

முதலாவது, கடந்த 2013 ஜூல 13, லேயே அறுபது வயதை முடித்து இப்போது 61 நடந்து கொண்டு, வரும் ஞாயிறு அன்று 62 துவங்கும் நாளைத் தான் மணிவிழா என்று அறிவித்திருக்கிறார்கள்.

அடுத்தது – விழாவை ஏற்பாடு செய்வது வெற்றித்தமிழர் பேரவை என்கிற அமைப்பு. (இதன் நிறுவனத்தலைவர் திருவாளர் வைரமுத்து அவர்களே தான்…!)

அடுத்தது – தனக்கான பாராட்டு விழாவில் என்னென்ன
நிகழ்ச்சிகள், அதில் பாராட்டிப் பேச வேண்டியவர்கள் யார், யார் என்பதையும் முடிவு செய்து ஏற்பாடு செய்ததும் திருவாளர் வைரமுத்து அவர்களே தான்…!

அடுத்தது – வைரமுத்து அவர்களின் பிறந்த நாளை (ஏற்கெனவே) “கவிஞர் திருநாள்” என்று அவரே அறிவித்திருப்பது….!!

விழா விவரங்கள் – சுருக்கமாக –

முதல் நாள் 3 கோரிக்கைகளை முன்வைத்து
“தமிழ் நடை” – ( பேரணி )
தலைமை தாங்குவது கவிஞரே..!

(கோரிக்கைகள் –
தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாக ஒரு பாடமாக்க வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், நீதி மன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்….)

பொன்னேகவுண்டன் புதூர் கிராமத்தில், சில சமுதாய
அமைப்புகளுடன் சேர்ந்து ஓராண்டுக்குள் 6000 மரக்கன்றுகள் நட்டு (பெயர் – ‘வைர’ வனம் ) உருவாக்கும் திட்டத்தின் தொடக்க விழா…!

2ம் நாள் –

வைரமுத்து அவர்கள் “பத்மவிபூஷன்”
பட்டம் பெற்றதற்கான பாராட்டு விழா …

“மணிவிழா” விற்கான பாராட்டு விழா …

பின்னர் – கலை, இலக்கிய கருத்தரங்கு –

விவாதிக்கப்பட இருப்பவை –
“கள்ளிக்காட்டு இதிகாசம்” –
“கருவாச்சி காவியம்” –
“3-ஆம் உலகப் போர்”
“ஆயிரம் பாடல்கள்” –

பின்னர் – 4 தலைமுறை (?) திரையுலக
பிரமுகர்களின் வாழ்த்து –
திருவாளர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம்,
கே.எஸ்.ரவிக்குமார் (இவர்களை தீர்மானித்ததும் கவிஞரே )

பின்னர் – உலகத் தமிழர் வாழ்த்தரங்கம்…!

பின்னர் – “வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்’ என்கிற நூல் வெளியீடு…

( மறக்க வேண்டாம் – – “இந்த விழாவானது தமிழின்  தொன்மையை உயர்த்திப் பிடிக்கின்றதாக இருக்கும்.  தனி நபர் புகழ்பாடும் வகையில் இருக்காது என்று வைரமுத்து செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார்….).

சிறப்புரை – ஏற்புரை – கவிஞர் வைரமுத்து அவர்கள்…

கடைசி விசேஷத்தைச் சொன்னால் அசந்தே போவீர்கள் …

சென்னையில் நடத்தாமல், விழாவை கோவையில் நடத்த என்ன காரணம் …? யோசிப்போம் – கவிஞர் மூளை லேசுப்பட்டதல்ல …
சென்னையில் நடத்தினால், கலைஞர் கருணாநிதியை
தலைமை தாங்க அழைத்தாக வேண்டும். நிகழ்காலத்திலோ, கண்ணுக்குத் தெரிந்த வரையுள்ள எதிர்காலத்திலோ கலைஞர் ஆட்சி அதிகாரத்திற்கு வர வாய்ப்பில்லை என்கிற நிலையில் அவரிடம் நெருக்கமாக இருப்பது எந்த விதத்தில் புத்திசாலித்தனம் ….?
மேலும்,கலைஞரைத் தவிர்ப்பது, சிலரின் எரிச்சலையும்,  கோபத்தையும் தவிர்க்க கூட உதவலாம்…!

மேலும் – கலைஞர் தலைமையில் விழா
நடப்பதாக இருந்தால் இப்போது பேச அழைக்கப்பட்டிருக்கும்
பெரியவர்களில் பாதி பேர் வரவே மாட்டார்களே….!
( தமிழ் நாட்டின் அரசியல் சூழ்நிலை….!!)

இது மட்டுமா …? கலைஞர் மேடையில் இருந்தால்,
பேச்சாளர்கள் கலைஞரைப் பற்றி
பேசுவார்களா அல்லது கவிஞரைப் பற்றியா …?

ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போகக்கூடியவர்
இல்லையே கவிஞர் ….!!
வைரமுத்து அவர்கள் கலைஞரோ, கலைஞர் குடும்பத்திலிருந்து வேறு யாருமோ இல்லாமல் இப்படி ஒரு வித்தியாசமான,
விசேஷமான விழாவை, நடத்துவதற்கு காரணங்கள்
இல்லாமலா போகும் ….?

கொஞ்சம் பொறுத்திருப்போமே ….!

பின் குறிப்பு – வைரமுத்து அவர்கள் அற்புதமான
ஒரு கவிஞர். அவரது கற்பனை வளமும்,
தமிழ் மொழி மீது அவருக்கு இருக்கும் ஆளுமையும்,
அளப்பரியவை. எழுத்தைப் போலவே,
சிறந்த பேச்சாற்றலும், வித்தியாசமான, நல்ல
குரல் வளமும் கூட உடையவர் அவர்.
அவரைப் பற்றிய எனது இந்த கருத்து இன்னமும்
தொடர்கிறது. இந்த இடுகைக்கும் அதற்கும்
சம்பந்தமில்லை.

என்ன …. என் வருத்தமெல்லாம் – தமிழும், தமிழரும்
தான் அவர் வாழ்வில் வளம் பெற, ஏற்றம் பெற,
புகழ் பெற – உதவியவை. ஆனால், பதிலுக்கு
அவர் செய்தது ……??? லட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள்
கொன்று குவிக்கப்படும்போது அவரது வெற்றித் தமிழர்
அமைப்பு எங்கே இருந்தது – என்ன செய்து கொண்டிருந்தது
என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை 3 மணி
நேரம் உண்ணாவிரதம் இருந்த கலைஞர் பக்கத்தில்
இருந்ததால் – இதெல்லாம் அவர் கண்ணுக்குத்
தெரியவில்லையோ ….?
என் எரிச்சலுக்கு, இந்த இடுகைக்கு காரணம் –
அவரது கலப்படமில்லாத சுயநலம்,
பொது வாழ்வில் அரிதாரம் ….ஆகியவை தான்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to வித்தியாசக் கவிஞர் வைரமுத்து தனக்குத் தானே எடுக்கும் விழா…..!!!

  1. Ganpat சொல்கிறார்:

    வைரம் நிதியை விட்டு விலகி பல காலம் ஆகிறது.

  2. reader சொல்கிறார்:

    //சென்னையில் நடத்தாமல், விழாவை கோவையில் நடத்த என்ன காரணம் …? யோசிப்போம் – கவிஞர் மூளை லேசுப்பட்டதல்ல …//
    அவரு வெவரமானவரு..
    விழா மேடையில கிருஷ்ணா ஸ்வீட்ஸ், கேஜி அப்படின்னு பதாகைகள் படபடக்கும் பாருங்க..

    //ஒரு வேளை 3 மணி
    நேரம் உண்ணாவிரதம் இருந்த கலைஞர் பக்கத்தில்
    இருந்ததால் – இதெல்லாம் அவர் கண்ணுக்குத்
    தெரியவில்லையோ ….?//

    அவருதான் ஈழம் விடுதலையடையும்போது தேசியகீதம் வடித்துத் தருகிறேன்னு வாக்கு கொடுத்திருக்காரே! இதுக்கு மேல என்ன வேணும்?

  3. chandraa சொல்கிறார்:

    vairamuthu knows very well that a case may be pursued against him any time for his involvment against a govt tender of very huge value. his sons direct appoiuntment in anna university though he resigned later vairamuthus very close relative was already suspended in a govt post. he knows better,,,

  4. chandraa சொல்கிறார்:

    vairamuthuv igorously had interfered in the functioning of all govt departments when dmk was in power since karuna was close to him. karuna knows it too. he even threatened film makers to allot all songs in a film to him only… it is evident knowledge and cultured behaviour are different . vaira is a widely read man but his behaviour culture ……..

  5. nparamasivam1951 சொல்கிறார்:

    கவிஞர் வைரமுத்து கழக கண்மணி அல்லவே. அனுதாபியும் அல்ல இப்போது. வாழ்த்த விரும்புபவர்கள் கோவை சென்று வாழ்த்தலாம். இங்கிருந்தும் வாழ்த்தலாம்.

  6. gopalasamy சொல்கிறார்:

    Because of kavi perarsu vairamuthu only, tamil is still alive. All eight crore people should be grateful to v muthu. I expect whole world will celebrate his birthday hereafter. ( Any news about granite case?)

  7. rathnavelnatarajan சொல்கிறார்:

    என் எரிச்சலுக்கு, இந்த இடுகைக்கு காரணம் –
    அவரது கலப்படமில்லாத சுயநலம்,
    பொது வாழ்வில் அரிதாரம் ….ஆகியவை தான். = நிஜம் தான். அருமை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.