வட மாகாண முதல்வர் சிவி.விக்னேஸ்வரன் வருகிறாரா …?

 

c.v.vigneswaran

இன்று ( 23/05/2014 ) மதியம் ஒரு மணிக்கு இலங்கையிலிருந்து
வெளிவந்துள்ள செய்தி இது –

——————-

திரு.நரேந்திர மோடி பதவியேற்பு விழாவையொட்டி,
இந்தியா செல்லவிருக்கும் தன் குழுவில்
சேர்ந்துக்கொள்ளும்படி, ஜனாதிபதி ராஜபக்சே –
வட மாகாண முதல்வர் சிவி.விக்னேஸ்வரனுக்கு
அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பு குறித்து சற்று நேரத்திற்கு
முன்னர் தான் வெளிவிவகார அமைச்சர்
ஜீ.எல்.பீரிஸ் மூலம் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக
விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.

வட மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுடன்கலந்துரையாடிய பின்னரே தனது முடிவை அறிவிக்க முடியும்  என்று திரு சிவி.விக்னேஸ்வரன் சற்றுமுன்னர்செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

———————————-

இது யாருடைய மூளையில் உதித்த யோசனையாக இருக்கும் ?
இதன் மூலம் என்ன விளைவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன …?
இந்த ஆலோசனை நடைமுறைப்படுத்தப் படுமா ….?

—- விவாதத்திற்குறிய ஒரு திருப்பம் …….!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to வட மாகாண முதல்வர் சிவி.விக்னேஸ்வரன் வருகிறாரா …?

 1. kuttipisasu சொல்கிறார்:

  விக்னேஸ்வர்ன் பரவாயில்லை. டக்ள்ஸை கூப்பிடாமல் போனார்களே!

 2. kuttipisasu சொல்கிறார்:

  தற்போதைய செய்தி, விக்னேஸ்வரன் வரவில்லை.

 3. ரிஷி சொல்கிறார்:

  என்னமோ போடா மாதவா! (ஜனகராஜ் ஸ்டைலில் படிக்கவும் 🙂

 4. todayandme சொல்கிறார்:

  //உங்களுடைய அன்பான அழைப்பை ஏற்க முடியாதிருப்பதற்காக வருந்துகின்றேன். முக்கியமாக அவ்வாறு ஏற்காததற்குக் காரணம் மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக்காட்டக் கூடும் என்பதேயாகும். எனினும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடன் வாழவே செய்து வருகின்றார்கள் என்பதும் வடமாகாணசபையைப் பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுமே உண்மை நிலையாகும்.
  இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும். – விக்னேஷ்வரன் // தினமணி 23/5/2014.

  நரித்தனத்தைப் புரிந்துகொண்ட புத்திக்கூர்மை, குடியரசுத் தலைவரை மறுக்கும் மனோதைரியம், உண்மையை மறக்காத – தன் மக்களின் நம்பிக்கையைக் குலைக்க விரும்பாத நேர்மை – ராயல் சல்யுட் விக்னேஷ்வரன் அவர்களுக்கு.

  * * *

  இதன் மூலம் என்ன விளைவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன …?
  உலகத்தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்துவிட்டு, உலகநாடுகளிடம் நாங்கள் நல்லவர்கள்தான் – நீங்கள்தான் எங்களை தப்பாகப்புரிந்துகொண்டிருக்கீறீர்கள் என்று பறைசாற்றும் முயற்சி. – இலங்கைத் தரப்பிலிருந்து.

  தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்துவிட்டு, தமிழ்மாநிலக்கட்சிகளிடம் மற்றும் மக்களிடம் “இலங்கையில் அமைதி நிலவுகிறது. அங்கு மானும் சிங்கமும் ஒன்றாக உலவுகின்றன. எனவே இந்தப் பாழாய்ப்போன இலங்கைத்தமிழர் பிரச்சினையை மறந்துவிட்டு- மானாடமயிலாட பார்த்து, ஸ்டார் பட ரிலீசுக்கு பதறி ஓடி, எலக்சன் வரும்போது இலங்கை அதிபரையும் தமிழ்மாகாணமுதல்வரையும் ஒன்றாக இங்கு வரவழைத்த எங்கள் சாதனையை” நினைவுகூர்ந்து எங்களுக்கே பாஐக வுக்கே உங்கள் பொன்னான ஓட்டுக்களைப் போடுங்கள்; – வேறு எவராலும் முடியாத சாதனையைச் செய்தோம் என்று பொய்யாய்ப் பறைசாற்றும் முயற்சி. – இந்தியத் தரப்பிலிருந்து.

  இந்த ஆலோசனை நடைமுறைப்படுத்தப் படுமா ….?
  விக்னேஷ்வரன் முயற்சியை முறியடித்துவிட்டார். வாழ்க.

  இது யாருடைய மூளையில் உதித்த யோசனையாக இருக்கும் ?
  யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
  மற்ற நண்பர்களின் பின்னூட்டங்களின் வழி அறிய ஆவலாயிருக்கிறேன்.

  கா.மை. ஐயா!
  விடை தெரிந்தால் புதிரை அவிழ்த்துவிடுங்களேன்.
  சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை

  • நிழல் சொல்கிறார்:

   //இது யாருடைய மூளையில் உதித்த யோசனையாக இருக்கும் ?
   யோசித்துக்கொண்டிருக்கிறேன்.//

   வேற யாரு பொன்னாரா தான் இருக்கும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அநேகமாக அப்படித்தான் இருக்குமென்று நானும் நினைக்கிறேன்..!

    ஆமாம் – அதென்ன குட்டிப்பிசாசு திடீரென்று நிழலாகி விட்டது …!!
    (எங்கிருந்து கண்டு பிடிக்கிறீர்கள் இந்த புனைப்பெயர்களை எல்லாம் ..?)

    – வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   எனக்கும் தெரியவில்லை….
   யூகம் தான்.
   நிழல் சொல்வது போல் “பொன்னார்” ஆக இருக்கலாம்.

   இதுவரை இல்லாத புதுவிதமான அணுகுமுறை (அப்ரோச்…!!).
   எனவே உதித்தது புதிய மூளையிலிருந்து தான்..!
   திங்கட்கிழமை மந்திரி ஆகப்போகிறாரே –
   வரும்போதும் -போகும்போதுமெல்லாம் சென்னை ஏர்போர்ட்டில்
   பேட்டி கொடுக்க வேண்டி இருக்குமே.(தமிழ்நாட்டுக்கு
   அடுத்த நாராயணசாமி அவர் தானே..!)
   எனவே, தலை தப்ப முயற்சி நடந்திருக்கிறது..

   நீங்கள் சொன்னது போல் – முயற்சியை அழகாக முறியடித்த
   விக்னேஷ்வரன் அவர்களுக்கு நம் அனைவரின் தரப்பிலும்
   ஒரு ராயல் சல்யூட்…

   அடுத்து வைகோவை என்ன சொல்லி சமாளிக்கப்போகிறார்களோ –
   பார்ப்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • எழில் சொல்கிறார்:

    இது போன்ற நேரங்களில் வைகோவுக்கு ஒரு எம் பி சீட்டு இல்லையே என்பது தான் வருத்தமளிக்கிறது.

 5. எழில் சொல்கிறார்:

  இது ராஜபக்சேவின் அடிபொடிகளின் (உதாரணம்: இந்தியாவில் உள்ள இலங்கை தூதர் காரியவசம்) யோசனையாக தான் இருக்கும். இல்லையென்றால் ராஜபக்சேவின் அன்- ஆபிசியல் அட்வைசர் சு சாமி அன்- ஆபிசியலாக சொல்லி கொடுத்திருக்கலாம்.

  இங்கிருந்து அரசு சார்பில் விக்னேஸ்வரனுக்கு நேரடியாக அழைப்பிதழ் செல்லவில்லை. எனவே பொன்னாராக இருக்க வாய்ப்பு குறைவு. ராஜபக்சே தான் தன்னுடன் வரும் கோஷ்டியில் விக்னேஸ்வரனை இடம் பெற வைக்க முயற்சித்திருக்கிறார். முக்கியமாக இது தமிழக கட்சியினர் அவருக்கு எதிராக நடத்த உள்ள ஆர்ப்பாட்டங்களை மழுங்கடிக்க. ஆனால் விக்னேஸ்வரன் புத்திசாலி. வெளிபடையாகவே காரணங்களை சொல்லி ஒதுங்கி கொண்டார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.