மோடி எடுத்த முடிவா இது ….?

 

நரேந்திர மோடி இன்னும் பிரதமர் பொறுப்பை ஏற்கவில்லை.
– காத்திருக்கும் பிரதமர் அவர் ( He is Prime Minister -in waiting.)

இந்த நிலையில், கட்சியின் சார்பாகவும், அரசின் சார்பாகவும் –
மோடியின் தரப்பில், பெரும்பாலான விஷயங்களை கோர் க்ரூப்
(core group) என்று சொல்லப்படும் மூத்த பாஜக தலைவர்களான
அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் ஆகியோரைக்
கொண்ட ஒரு குழு கவனித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதைத்தவிர, மத்திய அரசில் – பிரதமர் அலுவலகத்திலும் சரி,
வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் சரி – இதற்கு முன் காங்கிரஸ்
ஆட்சியில் பணியாற்றி வந்த அதே மலையாள கூட்டம் தான்
இன்னமும் செயல்பட்டு வருகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இது வரை, இந்தியாவில்
ஒரு புதிய அரசோ, பிரதமரோ பதவி ஏற்கும்போது வெளிநாட்டுத்
தலைவர்கள் யாரையும் அழைத்தது இல்லை.

இந்த நிலையில், பழக்கத்தில் இல்லாத வழக்கமாக இப்போது
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ஷார்க் நாடுகளின்
தலைவர்களை அழைக்க வேண்டும் என்று ஏன் முடிவு செய்யப்பட்டது..?
இத்தகைய யோசனையை முதலில் கூறியவர் யார் …?

நரேந்திர மோடியா …?
அவரது கோர் க்ரூப்பா …?
இல்லை அந்த மலையாள அதிகாரிகளா …?
வெறும் “பந்தா” என்பதைத்தவிர, உருப்படியாக இதனால்
விளையப்போவது என்ன …? அண்டை நாடுகளுடன் உறவை
மேம்படுத்த வேண்டுமானால், பேச்சு வார்த்த இந்த விழாவா
கிடைத்தது…? ஒவ்வொரு நாட்டுக்கும், நமக்கும் உள்ள உறவுகள்
பிரத்தியேகமானது -தனித்தனியானது. அனைவரையும் ஒன்றாகப் பார்க்க
முடியாது. ஆப்கானிஸ்தான் அதிபரையும், இலங்கை அதிபரையும் ஒரே
தட்டில் வைத்துப் பார்க்க முடியுமா ..? ஒரே மாதிரி நடத்த முடியுமா ..?
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக கவனிக்க வேண்டும்.
எனவே அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இது நேரமல்ல…..
ஒருவேளை பாஜக விற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று,
ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ, மன்மோகன் சிங்கோ
பிரதமராகப் பொறுப்பேற்கும் நிலை வந்து, ராஜபக்சே யையும்,
பாகிஸ்தான் பிரதமரையும் பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருந்தால்,
பாஜகவின் நிலை என்னவாக இருந்திருக்கும்….?
அவர்கள் அதை வரவேற்றிருப்பார்களா ….?

என்னுடைய முந்திய இடுகைக்கு, சில நண்பர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மோடியின் முடிவை குறை கூறுவது சரியா – என்கிற தொனியில்
பின்னூட்டம் எழுதி இருந்தார்கள்.

(24 மணிநேரத்தில் சுமார் 2100 பேர் பார்வையிட்டு,
41 பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறது இந்த இடுகை )

நரேந்திர மோடி தேர்தலில் பெற்ற பிரம்மாண்டமான வெற்றி,
அவரை ஒரு விஸ்வரூப நாயகனாக்கி இருக்கிறது. பலர் பரவசப்பட்டு,
அவரை அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கிறார்கள்.
எனவே, இந்த விஷயத்தில் நான் கோபம் கொள்வதோ, குறைகூறுவதோ,  வருத்தப்படுவதோ – அவர்களால்

ஏற்க முடியாத ஒரு விஷயமாக
இருக்கிறது. மோடியை குறை சொல்ல வேண்டும் என்பது
என் விருப்பமல்ல. ஆனால் – நிச்சயமாக மிகப்பெரிய தவறு ஒன்று
நிகழ்கிறது. அதைச்சொல்ல எனக்கு எந்தவித தயக்கமோ,
மயக்கமோ இல்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கையில்
நிகழ்ந்த படுகொலைகளைக் கண்டித்திருக்கிறது. ஐ.நா. சபையின்
மூலம் நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இலங்கை – ஜனாதிபதி ராஜபக்சே, யார் சொன்னாலும் சரி,
என்ன வந்தாலும் சரி – இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள
முடியாது என்று கொக்கரிக்கிறார்.

srilankan tamils

இன்னமும் தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவத்தின் கொடுமைகள்
தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்ப்பெண்களுக்கு எதிரான
பாலியல் கொடுமைகளும், வன்புணர்ச்சிகளும் தொடர்கின்றன.
தமிழர்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. குடியிருப்பு
பகுதிகளின் நடுவே ராணுவம் குடியிருந்து கொண்டிருக்கிறது.

இதெல்லாம் அந்த நாட்டின் உள்விவகாரம் என்று கூட
சில நண்பர்கள் வாதிக்கலாம்.

தமிழக மீனவர்கள் 600 பேர் இதுவரை இலங்கை ராணுவத்தால்
கொல்லப்பட்டுள்ளார்கள்.
இன்றைய தினம் கூட,
மோடி பதவியேற்கும் நாளில் கூட,
ராஜபக்சேக்கு இங்கு விருந்து நடத்தும் வேளையில் கூட
நூற்றுக்கணக்கில் தமிழ் மீனவர்கள் இலங்கைச் சிறைகளில்
வாடிக்கொண்டிருக்கிறார்கள் – வாடிக்கொண்டிருப்பார்கள்.

attack on fishermen-1

aattack on fishermen-2

attack on fishermen-3

காங்கிரஸ் ஆட்சியில்,
சோனியாவின் – மன்மோகன் சிங்கின் ஆட்சியில் தான்
தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்களாக
கருதப்படவே இல்லை யென்றால்,
நாட்டுப்பற்று மிக்க நரேந்திர மோடியின்
ஆட்சியிலும் அப்படியேயா ….?
பிறகு ஆட்சி மாற்றத்தின் அடையாளம் தானென்ன …?

இந்த பின்னணி எல்லாம் –
தமிழக மக்களின் உணர்வுகள் எல்லாம் –
மீனவர்களின் வதைகள் எல்லாம் –

நரேந்திர மோடிக்கோ, அந்த கோர் க்ரூப்புக்கோ -தெரியாதா …?
தெரியாது என்றால் – அவர்கள் அந்த பொறுப்புகளுக்கு
அருகதை அற்றவர்கள் என்று அர்த்தம்.
தெரிந்தே செய்கிறார்கள் என்றால் – அவர்கள் தமிழ்நாட்டையும்,
தமிழர்களைப் பற்றியும் எந்தவித கவலையும் இல்லாதவர்கள்
என்று அர்த்தம்.

குறைந்த பட்சம், இந்த முடிவுக்கு யார் பொறுப்பு என்பதையாவது
தெரிந்து கொள்ளும் உரிமை நமக்கு உண்டல்லவா …?
அதை நண்பர்கள் யாரும் மறுக்க மாட்டீர்களே ….?

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to மோடி எடுத்த முடிவா இது ….?

 1. ரிஷி சொல்கிறார்:

  கா.மை. அவர்களே,

  //குறைந்த பட்சம், இந்த முடிவுக்கு யார் பொறுப்பு என்பதையாவது
  தெரிந்து கொள்ளும் உரிமை நமக்கு உண்டல்லவா …?
  அதை நண்பர்கள் யாரும் மறுக்க மாட்டீர்களே ….?//

  இந்த முடிவுக்கு யார் பொறுப்பு என்பதை தெரிந்து கொண்டு நமக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை. மாறாக, நண்பர்களுக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அதைப் பற்றி விவாதித்து அவரவர் தங்களுக்குள் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

  அதாவது விவாதம் எப்படி அமைய வேண்டுமென்றால்..
  1) இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலை எவ்வாறு அமைய வேண்டும்?
  2) இலங்கைத் தமிழர் விஷயத்தில் இலங்கை என்ன செய்ய வேண்டுமென இந்தியா நினைக்க வேண்டும்?
  3) தமிழக மீனவர்கள் விஷயத்தில் இந்தியா இலங்கையுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

  இதற்குத் தீர்வாக பின்வருவனவற்றைத் தவிர வேறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  1) இலங்கையுடன் நேரடிப் பேச்சுவார்த்தை
  2) அது தோல்வியடையும் பட்சத்தில் மூன்றாம் நாடுகளுடன் பஞ்சாயத்து வைத்துப் பேசலாமா?
  3) அது தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை மீது போர் தொடுத்து அதனை இந்தியா வசம் கொண்டு வரலாமா?

  இக்கேள்விகளுக்கு என்னுடைய பதில் இப்போதே :
  1) நிச்சயம் தோல்வியில் முடியும்
  2) நிச்சயம் தோல்வியில் முடியும்
  3) போர் தொடுத்தால் அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் முன்னரே ஆட்சி கவிழ நேரிடலாம்!!

  இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?

 2. கொம்பன் சொல்கிறார்:

  மோடியின் குருநாதர் என்று கருதப்படும் அத்வானி கூட மிக தீவிரமான சிங்கள ஆதரவாளர் தான். சு.சுவாமி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் ராஜபக்சேவுக்கு கொடி பிடிப்பவர்கள். இவர்கள் சூழ இருக்கும் மோடிக்கு இந்த விஷயத்தில் தனித்து முடிவு எடுக்கும் அளவுக்கு விஷய ஞானம் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது

 3. ரிஷி சொல்கிறார்:

  மற்றுமொரு விஷயமும் இங்கு இருக்கிறது. ஆர் எஸ் எஸ்ஸின் அஜெண்டாவில் அகண்ட பாரதக் கனவும் இருக்கிறது. பாரதமாதாவின் கனவை நனவாக்க பிஜெபி நிச்சயம் முயலவே செய்யும். அதனால்தான் அகண்ட பாரதத்தின் சில பகுதிகளான ஆப்கன், பாக், லங்கா, வங்க தேச ஆகியவற்றின் குறுநில மன்னர்களுக்கு முதற்கட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேரரசின் அழைப்பு அல்லவா!

  இலங்கை இந்தியாவுடன் இணைந்து விட்டபின் இலங்கை மாநிலத்தின் பிஜெபி முதல்வராக ராஜபக்சே செயல்பட்டாலும் யாரும் ஆச்சரியப்படக்கூடாது!!

  • reader சொல்கிறார்:

   அகண்ட பாரதத்தில் தமிழகத்தையும் அடக்கிவிடவேண்டும் என்ற பேரவா சங்க பரிவாரத்துக்கு உண்டு. எங்கள விடுங்கடா, நாங்க தனி வழியப் பாத்துக்கறோன்னாலும் கேக்க மாட்டானுக.

   அகண்ட பாரதத்தில் தென்னிலங்கையை சேர்க்க முடியாத பட்சத்தில், ஈழத்தை மட்டுமே பிய்த்து சேர்க்கும் நிலை வருமாயின், ஒரு வேளை ஈழம் பிறக்கலாம்.

  • Srinivasanmurugesan சொல்கிறார்:

   ஹஹஹஹா….. உதவாத/தேவையில்லாத கற்பனை

   • ரிஷி சொல்கிறார்:

    ஆம் சீனிவாசன். வெறும் கற்பனைதான். ஆனால் ஒருக்கால் உண்மையாக நடந்துவிட்டால் யாரும் திடுமென அதிர்ச்சியடைக் கூடாதுன்னுதான் இப்பவே கொஞ்சம் அலர்ட் பண்ணி வைக்கிறோம் 🙂

 4. Srinivasanmurugesan சொல்கிறார்:

  நிச்சயமாக தமிழர்களின் உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.திரு. மோடிக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ சார்க் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தாகி விட்டது. இனி பின்வாங்க முடியாது. இனி என்ன செய்யலாம்?தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதா வேண்டாமா? எனது கருத்துப்படி புதிய அரசிற்கு ஆறு மாத காலம் அவகாசம் அளிக்கலாம்.தற்போது மத்திய அரசுடன் சுமூகமான நிலை ஏற்படவும் தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்படவும் நமது முதலமைச்சர் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றேன்.அப்பொழது தான் எதிர்காலத்திலாவது நமது நலன்களை மத்திய அரசிற்கு எடுத்து கூற வாய்ப்புகளாவது கிடைக்கும்.தவறின் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழதியதை போல எழுதிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

 5. Thiruvengadam சொல்கிறார்:

  First of all any new govt need to be given a little time for settling.Why can`t this be consider in other way. May be the Srilanka administration have an idea about the policy of the new govt.by this visit. We may have a memory of the treatment of Indian Origin people by Eelam Tamil people. They never gave respect, which we try for them, just because Language link.Secondly the Fisher mans troubles. Actually many of them are working under big politicians who insist them to cross the limits for their benefits. Tamil enthusiactics may also help the present repartiates in Tamilnadu to get all their needs atleast sanctioned without any leakages.Pressure may given to the Modi Govt to post aTamil or Tamil knowing person as an envoy at Srilanka. A periodical visit therer our help oriented projects there may be considered. .

 6. LVISS சொல்கிறார்:

  It is a mistake — BJP will not expand in Tamil Nadu THis is certain– As they say “Mudhal Konal ” “

 7. Ganpat சொல்கிறார்:

  ராஜபக்சேவை பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பது தவறு என்று பலர் குறை கூறுவது எனக்கு வியப்பைத்தருகிறது.அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
  மோடி இனிமேல் என்ன செய்வார் என பார்த்து அவரை எடை போடுங்கள்..என்னைப்பொறுத்தவரை நான் மோடியை பற்றி அறிந்துகொள்ள முக்கிய பொருளாக வைத்திருப்பது காவிரி நீர் பிரச்சினை.உச்ச நீதி மன்றம் மற்றும் நடுவர் ஆணையம் அளித்த தீர்ப்பை அவர் எப்படி கர்நாடக அரசை நடைமுறை படுத்த வைக்கப்போகிறார் என்பதை நான் கவனிப்பேன்,அதில் அவர் தோல்வி அடைந்தால் என்னைப்பொருத்தவரை அவர் ஒரு “பேசும் மன்மோகன் சிங்” தான்.ஆமாம்,முல்லை பெரியாறுக்கு கொத்தனார் மேஸ்த்திரி எல்லாரைம் அம்மா அனுப்பிச்சுட்டரா?தீர்ப்பு வந்து ரெண்டு வாரம் ஆகியும் விஷயம் அணையில் போட்ட கல்லா இருக்கே!

  • todayandme சொல்கிறார்:

   என்ன இருந்தாலும் பிஎம் செய்தா மாமியார் செய்ஞ்சா மாதிரி.
   சிஎம் செய்ஞ்சாலும் செய்யாட்டாலும் மருமக செய்யாத மாதிரியா.

   இரண்டு நாட்களுக்கு முன் டைம்ஸ்ஆப்இந்தியா இதழில் வந்த செய்தி. திரு கண்பத் அவர்களின் பார்வைக்கு.

   http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-starts-work-on-increasing-Mullaperiyar-dam-level-to-142-feet/articleshow/35392050.cms

   • Ganpat சொல்கிறார்:

    மிக்க நன்றி todayandme,இதே செய்தியை நான் தமிழ் நாளிதழில் (தினகரன் என்று நினைக்கிறேன்) வேறு விதமாக படித்தேன்.அதாவது இந்த ஆய்வுக்குழு அணையின் ஷட்டர்களை பரிசோதிக்க மட்டும் சென்றுள்ளது.முடிவு தெரிய ஒரு மாதம் ஆகும் என…நீங்கள் கொடுத்துள்ள சுட்டி தெளிவாக்குகிறது.பிழைக்கு மன்னிக்கவும்.வேலை முடிந்தால் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.மேலும் முதலில் வந்தவர்தான் மாமியார் என்ற அடிப்படையில் CM தான் மாமியார் ,PM தான் மருமகள்.புதிதாக வந்த மருமகளுக்கு சில மாதங்களாவது வீடு பழக நேரம் கொடுங்கள்.படுத்துவதை பிறகு வைத்துக்கொள்ளலாம். 🙂 🙂

 8. D. Chandramouli சொல்கிறார்:

  I agree with Mr Ganpat – ராஜபக்சேவை பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பது தவறு என்று பலர் குறை கூறுவது எனக்கு வியப்பைத்தருகிறது.அதில் எனக்கு உடன்பாடு இல்லை. I wonder if we are over-reacting emotionally on symbolic issues. Modi is a seasoned politician. He would have grasped the reading on the wall that all Tamils have totally rejected both Congress and BJP, and on SL Tamil issue, all political parties in TN would not sing a different tune than what the majority feels – that SL Tamils must get their due rights and safe living. Right now, Modi must be allowed to settle down and he should be given time to understand the SL Tamil issue with a fresh mind and approach.

 9. Gopalasamy சொல்கிறார்:

  There is no protocal. But, fist time an opposition party is taking charge with absolute majority.
  We dont know how many countries Modi visited in last 12 years. If he thinks it is an opportunity to interact with neighbours, it is a correct move. We need not read too much in between lines.

  • todayandme சொல்கிறார்:

   Thanks to confirm that there is no protocol.

   We, Tamilnadu the last and small part of India, off course have the victims of Srilanka. In our legislative assembly we passed resolutions against the then Central MMS govt’s thoughts and request a trial by UN on SL. In this situation, Why should not read too much in between lines.

   Oh. Now I got the point. We, Tamilnadu didn’t elect any BJP MPs except Pon.Raa. So do you think we have no right to even think about the issues against Tamil.

 10. The Indian சொல்கிறார்:

  This is an executive proposal endorsed by BJP politicians and shown as political decision. Those decided this move to invite so called SAARC leaders know the following facts very well.
  1. Nawaz Sharif – 50/50 chance of coming.
  2. Sheik Hasina – 100% will not come
  3. Nepal and Bhutan – They are technically vassal states of India. Will Come.
  4.Afghan – 100% will come
  5.Maldives – Will Come.
  6. Srilanka – Has to Come

  Here the most important nations are Pak, Bangla and Srilanka. Among them, only Mahinda has high stakes in visiting the swearing-in ceremony. Because at this precise moment, he craves for some form of international acceptance/ recognition other than China and Pakistan. Recently Canadian High Commission stayed away from the Victory Day Parade of Mahinda.
  No need to forget the recent recommendation of UNHRC for an international enquiry.

  Hence the agenda is to invite Mahinda and invitation extended to SAARC leaders is a cover so that it can be justified as a goodwill gesture towards neighbors. Stakes are very high for Mahinda if he attends the function. For any other SAARC leader, it is just ceremonial.

  The plot may be hatched by officials with directions from Dr. Swamy a die-hard friend of Mahinda….

  Naturally, Modi will not backtrack at his stage (whether he is willing to host Mahinda or not) whatever the opposition may be, since he had always projected him as a strong leader.

 11. Kandasamy Kannan சொல்கிறார்:

  Modi is known to transform threats to oppurtunities. I hope he will transform the threat ( Tamilnadus anger at this moment) to the oppurtunity by releasing Perarivalan and others after the swearing in ceremony. By this he may show the solidarity with TN Govt and the sentiments of our people.

 12. MAHESH சொல்கிறார்:

  INDIA ARSU EDKKUM MUDU ENBATHU INDIYAVIL ULLA TAMILARKALIN SERTHUTHAN ENVE RAJAPATCHRVAI ALAIPATHHU ENUM MODUE TMAILARKALUM SERTHUTHAN ALAIPATHGA ARTHAM UNMAIYANA TAMILARAL YARAVATHU RARAJPATCVAI VARAVERPARKALA … PUTHIYA ARSU SINTHTHU MODUKAI EDTHU ERKKA VENDUM. EINI INDIAVIL TAMILARGAL ENNUM ENNAM ULLATHU ENPATHI YOSITH MODDUKAL EDKKA VENDU

 13. Gopalasamy சொல்கிறார்:

  Please read today;s editorial of dinamani. (24-05-2014).I accept their view point.
  Bangladesh pm is already scheduled for japan visit. All SAARK countries heads except bangladesh are coming. Bangladesh speaker will attend. Absolutely it is a correct move.
  I want to know the proposals put forward by our readers to address the grievances of srilankan tamils.

 14. எழில் சொல்கிறார்:

  சுருக்கமாக சொல்வதானால் மோடி தன்னுடைய ‘இண்டர்நஷனல் இமேஜ் மேக்ஓவர்’ செய்வதற்கு எடுத்த முயற்சி தான் சார்க் தலைவர்கள் அழைப்பு. அவருக்கு தன்னுடைய இமேஜை தூக்கி நிறுத்துவதற்கு செய்யப்படும் முயற்சி அளவுக்கு தமிழர் பிரச்சனை ஒன்றும் முக்கியமானதல்ல. இப்போது தமிழக அழுத்தத்தால் ஓரளவு உணர்ந்தாலும் கொடுத்த அழைப்பை ரத்து செய்ய முடியாது. தமிழ் தலைவர்களும், எம் பிக்களும் பதவி ஏற்பை புறக்கணித்து விட்டு திருமதி சீதாராமன் வழியில் புறக்கணிப்பை மோடிக்கு எதிர் என்று கொள்ள கூடாது. கொள்கை வழியில் எதிர்ப்பு என்று ஒரு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டியது தான் இப்போது செய்ய கூடிய ஒன்று.

 15. புது வசந்தம் சொல்கிறார்:

  /ஒருவேளை பாஜக விற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று,
  ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ, மன்மோகன் சிங்கோ
  பிரதமராகப் பொறுப்பேற்கும் நிலை வந்து, ராஜபக்சே யையும்,
  பாகிஸ்தான் பிரதமரையும் பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருந்தால்,
  பாஜகவின் நிலை என்னவாக இருந்திருக்கும்….?
  அவர்கள் அதை வரவேற்றிருப்பார்களா ….?/ தேவைக்கு ஏற்றார் போல வேஷம் போட வேண்டியதுதான். அவர்கள் செய்திருந்தால் தேச பக்தி பொங்கி இருக்கும். மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.